• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 22 ஏப்ரல், 2011

    ஒரு குளவியின் அலறல்






    ஸ்... ஸ்.....இரவின் மடியில் துயிலும் துரையும் துடித்தெழுந்தார். தன் உறக்கம் துறக்கக் காரணமான அந்த ஒலியைக் காண மின் ஒளியை நாடினார். மீண்டும்   நிசப்தம். கையில் கிடைத்த துணியைச் சுழட்டிச் சுழட்டிப்பார்த்தார். எதுவும் இல்லை. மின் விளக்கை அணைத்துப் போர்வையை அணைத்தார். மீண்டும் ஸ்.....ஆத்திரங் கொண்டவர் உறங்கும் மகளைப் பார்த்தார். அவளும் உறக்கங் களைவாள். குளவி என்றறிந்து பயத்தில் அழுவாள். என்ற அக்கறையுடன் சாளரம் திறந்து சத்தத்தின் காரணியை வெளியே அடித்து விரட்ட சுற்றும் முற்றும் பார்த்தார். 

    பதுங்கியிருந்த குளவியும் துயருடனே, ''ஏ! மனிதா! செயற்கை ஒளியில் என் கண்களுக்குள் மின்னல் போன்றொரு தாக்கம். என்னால் அசைய முடியவில்லை. என் இறகுகள் சிறிது. அவற்றின் ஓசையோ பெரிது. நான் பறக்கும் போது பரவும் ஒலியைத் தடுக்கும் சக்தி எனக்கில்லை. இருக்கும் இடத்தைவிட்டு நகரத் துடிக்கும் என் உயிரைக் குடிக்க நீயும் துடிப்பதும் ஏனோ? என்னைத் தீண்டா எவரையும் நான் வேதனை செய்ததில்லை. உன்னை உன் தாய் வளர்த்தது போலவே உன் மகளையும் நீ வாழும் இந்த நாட்டிலும் வளர்க்கின்றாயே. குளவி குத்தும் என்று சொல்வதை விட்டுவிட்டு குளவியை அழிக்க நீ குறி பார்த்தால், தன்னைப் பாதுகாக்கவே தன் ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்று நீ சொல்லி வளர்த்திருந்தால், என்னை அழிக்க எத்தனம் எடுக்காது உன் பிள்ளையும். நீ மனிதன் அல்லவா! எதிரி என்று நினைத்து அப்பாவிகளையும் சந்தேகக் கண் கொண்டு சங்காரம் செய்யும் எமன் வர்க்கம் அல்லவா நீ. எங்கே என் கூக்குரல் உன் காதுகளுக்குக் கேட்கப் போகின்றது. மாரிக்குளிரில் மயங்கிக் கிடந்த யான், இன்று கோடைவெயிலின் குதூகலிப்பில் உன் கோட்டைக்குள் புகுந்து விட்டேன். புறப்பட வேண்டும். என் புத்திரர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.   சிறகு விரித்தது குளவியும். படார் என்று தலையில் ஏதோ அடித்தது போன்ற பிரமை. ஓ... என்ற அலறலுடன் விழுந்தது, அந்தக் குளவி. அதன் உயிர் ஓய்ந்தது. நிம்மதியுடன் படுக்கையில் சாய்ந்தார், துரை. தாயின் பாசத்திற்காய்த் தவித்தன குளவிக் குழந்தைகள்.
             
    எமது சந்தோஷத்திற்காய் எம்மை அறியாமலே எத்தனை எத்தனை உயிர்களைக் குடிக்கின்றோம். அந்த அந்த உயிர்களின் நிலையில் நின்று சிந்தித்துப்  பார்ப்போமேயானால் உயிர்களின் உன்னதமும் புரியும் உயிர் குடிக்கும் உக்கிரமமும் குறையும். 

    2 கருத்துகள்:

    1. அந்த அந்த உயிர்களின் நிலையில் நின்று சிந்தித்துப் பார்ப்போமேயானால் உயிர்களின் உன்னதமும் புரியும் உயிர் குடிக்கும் உக்கிரமமும் குறையும்.
      இப்படியெல்லாம் சிந்தித்தால்தான் உலகே நந்தவனமாகுமே!....ம்ம்.......மாறட்டும் உலகு......

      பதிலளிநீக்கு
    2. நன்றாக இருக்கிறது .வாசிப்பவர்கள் தலையில் ஓங்கி அடித்தது போல இருக்கும். இப்படி சில நேரங்களில் சிந்தித்தது உண்டு .

      "கோ" -திரைவிமர்சனம்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...