• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 19 ஏப்ரல், 2011


    என் வாசகங்கள் 20

          
    Flash Banner Generator    

    இலண்டன் தமிழ் வானொலியிலே வானொலிவாக்கு என்ற பெயரிலே வெளியான எனது படைப்புக்கள் இப்பக்கத்தில் வருகின்றன. பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்க

                                              
                              
                               பொறாமை 





    20. புகழடைந்தார் நிலை கண்டு பொறாமையில் புழுங்காது 
          புகழடையக் காரணத்தைப் புரிந்து கொண்டு – உங்கள் 
          புகழ் வாழ்வு காண புரிந்தொழுகல் சாலச் சிறந்தது.


    19. பொறாமைப்படுபவர் மனம் ஓர்நாள் வெளிப்படின் - அதுவே
          அவர் புகழைத் தொலைக்கும் கருவியாகும். 
                              
                                              
                                
                                         சந்தேகம் 


    18. சந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது
          சந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும்.
                                 
                                      
                           
                                         உழைப்பால் உயர்தல் 


    17. துங்கிக் கிடப்பான் துயர் காப்பான்
         சோம்பல் களைவான் உழைப்பால் உயர்வான்
    16. செய்யுந் தொழிலை மெய்ப்படக் காதலித்தால் 
         உய்யும் வாழ்வு உழைப்பும் உயரும்.


    15. மெய் வருத்தம் பாராது விடியலைத் தேடும் கண்கள்
        உள்மனதில் ஊக்கம் இவை மூன்றும்
        உழைப்பால் உயர்தலுக்கு உறுதுணையாம். 

                                          


                                                    நம்பிக்கை


    கஷ்டங்கள் வாட்டும் போது தளர்ந்துவிடாது அநுபவப்பாடம் கற்றுக் கொண்ட ஞானத்துடன் நிமிர்ந்து நடவுங்கள். பாதைதோறும் தொடர்ந்துவரும். துன்பங்களும் அநுபவங்களும் உங்களைப் பூரண மனிதனாகப் பிரகாசிக்கச் செய்யும். நம்பிக்கை கொண்டு நகரும் பயணம் எப்போதும் வெற்றிப் பாதைக்கே வழிசமைக்கும்.  கண்ணபரமாத்மாவிடம் நம்பிக்கை கொண்டு இரு கரங்களையும் நீட்டி அழைத்த போதுதான், ஆண்டவன் பாஞ்சாலிக்கு ஆடை கொடுத்தார். இது நம்பிக்கைக்கு ஆதாரமாகக் கூறப்படும் மகாபாரதக் கதையாகும். எனவே நம்பிக் கைவைக்கும் எக்காரியமும் தோற்றுப் போவதில்லை. தோற்றுப் போகவும் கூடாது.

                                                    
                                                              
                                                                   மகாத்மா



    போதனை புரியும் மனிதன், அப்போதனையின் ஆரம்பத்தில் தன்னை ஒருமுறை பரீசீலனை செய்து பார்க்க வேண்டியது அவசியமாகின்றது. அதனைச் செய்வதற்கு அடியேனாகிய யான் பொருத்தமானவனா இறைவா! என்று மனதினுள் ஒன்றுக்குப் பலதடவை சிந்தித்து, அதற்கேற்ப  ஒழுகி பிறருக்கு நல்லொழுக்கம் போதிக்க வேண்டியது அவசியம்.   மகாத்மாகாந்தியின் வாழ்வு இதற்கு எடுத்துக்காட்டாகும். இதன் மூலம் மதங்கள் தோன்றிய மகிமை புரியும். மனிதன் மாமனிதனாகப் பிரகாசிக்க முடியும். மகாத்மாவாக மாற முடியும

                                                    
                                           
                                                  மனைமாட்சி
    1.          குணம் கொண்டு தன் குலம் விளங்கச் செய்து
                 குணவதியாய் மிளிர்தலும் மனை மாட்சி 


    2.          சிக்கனம் பேணிக் கைப்பணம்தனை அளந்து – தன் 
                 புத்தியைக் கொண்டு மனைவிளங்கச் செய்தலும் மனைமாட்சி


    3.           சித்தத்துள் சினம் அடக்கி உத்தியைப் பூணாக்கி
                  நித்திய இன்பத்தை நிலைக்க வைப்பதும் மனைமாட்சி


                                       

                                              தியாகம் 


    4.            தம்வாழ்வைத் தீயாக்கி பிறர்வாழ்வுக்கு ஒளியேற்றல்
                   தியாகம் செய்வார்க்கு யாகமாம்.


    5.           அவதூறுகளும் அவமானங்களும் இடையூறுகளும் தாங்கி
                   இடையறாது பணி செய்தல் தியாகம்.


    6.            உறுதியும் உழைப்பும் உயர்வாய் நோக்கித் - தன்
                   உடல்வலி நோக்காத் தன்மைத்து தியாகம்.
                                                
                              உயர்ந்தோர் உள்ளம் 
    7.         பெருக்கத்துப் பணிவும் தாழ்வுவரின் தளராமையும்
                உயர்ந்தோர் உள்ளத்தின் பண்பாகும். 
    8.        அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தோர் உயர்ந்தோராகார்
                உள்ளத்தால் உயர்ந்தோர் உயர்ந்தோராவார்.
    9.        மனிதரில் தரம் பார்க்காது குணம் சேர்க்கும் 
               உயர்ந்தோர் உள்ளம்.
                              
                                    
                                                            நன்றி நவிலல்
    10.      நன்றிநவில விதிமுறை இல்லை
                நாவின் முனைப்பில் நடைமுறைப்படுத்தப்படும்.
    11.       வலிந்து கேட்பதன்று நன்றி 
                நன்றி பெற்றார் மனத்தின்கண்
                விரும்பிக்கொடுப்பது.
    12.      நன்றிநவில சிந்திப்பதில்லை நாநுனி
                நவிலத் துடிப்போடு வெளிப்படும்.

                                                    

                                              பொறாமை


    13.     அகத்தில் பொறாமை புறத்தில் வேஷம் - அதுவே
               அழிவைத் தரும் அடையாளம்


    14.     அடுத்தவன் வாழ்வின் உயர்வு – உன்
              அயராத உழைப்புக்கு வழிகாட்டி
              கெடுத்து அவன் வாழ்வைச் சிதைக்க நினைப்பது – உன்
              பொறாமைக் குணத்தை வெளிக்காட்டும்

    20. புகழடைந்தார் நிலை கண்டு பொறாமையில் புழுங்காது 
          புகழடையக் காரணத்தைப் புரிந்து கொண்டு – உங்கள் 
          புகழ் வாழ்வு காண புரிந்தொழுகல் சாலச் சிறந்தது.

    19. பொறாமைப்படுபவர் மனம் ஓர்நாள் வெளிப்படின் - அதுவே
          அவர் புகழைத் தொலைக்கும் கருவியாகும். 
                                          
                                          
                                         சந்தேகம் 

    18. சந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது
          சந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும்.
                                   
                                      
                         
                                   உழைப்பால் உயர்தல் 


    17. துங்கிக் கிடப்பான் துயர் காப்பான்
         சோம்பல் களைவான் உழைப்பால் உயர்வான்


    16. செய்யுந் தொழிலை மெய்ப்படக் காதலித்தால் 
         உய்யும் வாழ்வு உழைப்பும் உயரும்.


    15. மெய் வருத்தம் பாராது விடியலைத் தேடும் கண்கள்
        உள்மனதில் ஊக்கம் இவை மூன்றும்
        உழைப்பால் உயர்தலுக்கு உறுதுணையாம். 

                                         

                            

    9 கருத்துகள்:

    1. vaanoli vaakkukal sirappu. vaalththukal..

      பதிலளிநீக்கு
    2. vaanoli vaakkukal sirappu. nal vaalthukal.
      Vetha. Elangathilakam.
      Denmark.

      பதிலளிநீக்கு
    3. இரு வரிக்கவிதை ஒரு பொருள் தருகிறதே திருக்குறள் போல

      பதிலளிநீக்கு
    4. வேதா அவர்களே! உங்கள் வாழ்த்துக்கள் என்றும் என் எழுத்து உழைப்புக்குத் தீனி போடும். தொடருங்கள் நன்றி

      பதிலளிநீக்கு
    5. நன்றி யாதவன். உங்களாலும் முடியும்.

      பதிலளிநீக்கு
    6. //கண்ணபரமாத்மாவிடம் நம்பிக்கை கொண்டு இரு கரங்களையும் நீட்டி அழைத்த போதுதான், ஆண்டவன் பாஞ்சாலிக்கு ஆடை கொடுத்தார். இது நம்பிக்கைக்கு ஆதாரமாகக் கூறப்படும் மகாபாரதக் கதையாகும். எனவே நம்பிக் கைவைக்கும் எக்காரியமும் தோற்றுப் போவதில்லை. தோற்றுப் போகவும் கூடாது.//

      வள்ளுவன் வார்த்தைகளில் கஞ்சனாக இருந்ததால் ,அவன் குறைத்துத் தந்த வரிகள்தான் வாழ்க்கையைச் சொன்ன,சொல்கின்ற
      சொல்லப்போகின்ற வள்ளலாக இருக்கிறன்றன...
      உங்கள் வரிகளும் கடுகு போல சொற்கள் கோர்க்கப்பட்டு கருத்து மனம் வீசுகிறது..
      தொடரட்டும் உங்கள் சொற்காலம் கௌரி அவர்களே!

      பதிலளிநீக்கு
    7. நம்பிக் கைவைத்த சொற்காலம் தொடரட்டும் என்ற உங்கள் வார்த்தைகளும் வலு சேர்க்கட்டும் நன்றி நடராஜன் அவர்களே!

      பதிலளிநீக்கு
    8. ஒரு இனிய காலையில் இப்படி கேட்டு தொடங்கினால்
      மிகவும் அருமையாகத்தான் இருக்கும்#
      வானொலியும் வாசகமும் -சுகம் சுகம்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...