• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 12 ஏப்ரல், 2011

    என் படைப்புக்கள்


    எனது எழுதுகோல் செதுக்கிய சிற்பங்கள்
    கணனித் துணையுடன் பிரசவித்த குழந்தை
    இணையங்கள் அணைத்த வாரிசு
    இனிப்புத் தடவாத எலுமிச்சை
    மகரந்தம் சிறிதளவே சிந்துகின்ற மலர்
    உருண்டு கொண்டிருக்கும் பூமியிலே
    சிரித்துக் கொண்டிருக்கும் சின்னக்கரு
    என் அநுபவத்தைப் பிறருக்குக்
    காட்டுகின்ற புகைப்படம்
    பிறர் என்னை நேசிக்கத் துணைப் போகும்
    இணைப்போலை
    என் மனதில் தொடராய் ஊற்றெடுக்கும்
    எண்ண அருவி
    பதிக்கின்ற இடமெல்லாம் - என்
    பண்பான இதயம் படிந்திருக்கும்
    என்னைப் பாதித்தவை பல
    என்னுள் பதிந்தவை சில
    நீர்க் குமிழி போல் மறைந்தவை இன்னும் சில
    யாப்பையுடைத்து வெளிவந்தவை சிற்சில
    என் மனச்செடிக்குள் பூத்தாலும்
    மாற்றான் பயன் பெறப் பூக்கும் ரோஜா!

    முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது

    6 கருத்துகள்:

    1. நல்லாயிருக்கு , ஒரு கேள்வி கடைசியில ஏன் ரோஜானு முடிச்சியிருக்கிங்க

      பதிலளிநீக்கு
    2. யாப்பையுடைத்து வெளிவந்தவை சிற்சில

      கம்பீரமான வரி எனக்கு பிடிச்சிருக்கு

      பதிலளிநீக்கு
    3. கோவைக்கவிக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      பதிலளிநீக்கு
    4. முள்ளுக்குள்ளே இருந்தாலும் பலர் மனம் விரும்பும் மலர். மணம் பரப்பும் மலர். கவிவரிகள் கூட அனைவரையும் கவர்ந்திருக்கக் கூடியதே. கேசுவர் அவர்களுக்கு வரிகளை விட்டுச் சென்றமைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...