• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 31 அக்டோபர், 2010

  ஜேர்மனியில் தடம் பதிக்கும் தமிழர்கள்


                         ஜேர்மனியில் தடம் பதிக்கும் தமிழர்கள் 
                         நூல் வெளியீட்டு விழாவில் 
                         என்னால் வழங்கப்பட்ட உரை

                   இங்குள்ள எழுத்தாளர்களுக்கு நான் புதுமுகம். மண்சஞ்சிகையில் நான் அறிமுகம். இன்று வெளியிடப்பட்ட இந்நூலில் என் விரிமுகம். 10 வருடங்களாக மௌனமாக இருந்த என் குமுழ்முனைப் பேனா பேசத் தொடங்கியது, முதல்முதல் மண்சஞ்சிகையிலேயே அடுத்து என்னை அடையாளப்படுத்தி என்னை உறங்க விடாது விழித்திருக்கச் செய்த ஊடகம் இலண்டன் தமிழ் வானொலியே. எனவே இன்றைய பொழுதில் இவ்விரண்டிற்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். இன்று என் கையில் இந்த ஒலிவாங்கி தரப்பட்டுள்ளது. அதன் மூலம் சிறந்த ஓர்செய்தி சொல்ல என் மனம் பணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாவில் சிறு நடுக்கம் நாள் கடந்த பேச்சின் அச்சம். 
                     ஆன்றோர் எழுத்தாளராய் இருக்கலாம். ஆனால்  எழுத்தாளர் ஆன்றோராய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆன்றோரென்றால் அகன்றோர். சிறந்த பல அறிவுசார்ந்த நூல்களையும் இலக்கண இலக்கியங்களையும் துறை போகக் கற்று நுண்மான் நுழைபுலம் மிக்கவராய் அறிவால் அகன்றோரே ஆன்றோராவார். இந்த அறிவு சிறந்த பல கருத்துக்களைக் கூற எடுத்துக்காட்டுக்களை எடுத்து வர உதவியாய் இருக்கும். இவர்கள் பற்பல நூல்கள் கற்பதாலும் விரிவுபட்ட மனத்தாலும் எச்சிறு விடயத்தையும் ஆழ்ந்து நோக்கி அகலப் பார்த்து அடுத்தபடி எழுத்தில் வடிக்கும் ஆய்வாளர்கள். ஆன்றோர்கள். ஆனால், எழுத்தாளர்கள் எழுத்தை ஆள்பவர்கள். இவர்களால் இராமயணத்திற்கு ஒப்பான இல்லை அதனை விட மேலான ஒரு காவியத்தைப் படைக்க முடியும். யாப்பெருங்கலக்காரிகை கற்றிருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, விருத்தம் இவற்றையெல்லாம் விட சுவை ததும்பும் வாழ் உலகிற்கு  ஏற்ப காலத்திற்கு ஏற்ப கவியமுதம் பருகச் செய்ய முடியும். 
     
       ''சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
         சோற்புதிது, சோதிமிக்க 
         நவகவிதை, எந்நாளும் அழியாத
         மா கவிதை'

   என்று பாடினார் பாரதி.  எனவே ஓர் எழுத்தாளர், காலத்துக்கேற்ற கருத்துக்களைக் கூறுபவராய் தான் கூற வந்த கருத்தை ஆணித்தரமாகவும் ஆளுமையுடனும் கூறக் கூடிய வல்லமை மிக்கவராயும் புத்தம் புதிய இலக்கிய வடிவங்களைப் படைக்கக் கூடிய எழுத்தாற்றல் மிக்கவராயும் இருப்பார். அவ்வாறு எழுத்தை ஆளுபவரே எழுத்தாளராவார்.  
         அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
          ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
         வெந்து தணிந்தது காடு – தழல்
          வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
              தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
                        
  சிறிய அக்கினித் துகள் காட்டினையே எரித்து அழித்து விடுகின்றது.  அவ்வாறே ஒரு சிறு எழுத்தாளன் கைமுனைப் பேனா. ஒரு சமூகத்தை திருத்தி நல்வழிப்படுத்தக்கூடிய வல்லமைமிக்கது. அது வாசகர் உள்ளங்களை குத்திக் கிழிக்கும் கத்திமுனையாய் இருத்தல் கூடாது. வாசம் வீசும் மல்லிகையாய் இருத்தல் வேண்டும் சுகந்தம் வீசி மனதைச் சாந்தமாய் ஆற்றுப்படுத்தும் ஆற்றுப்படையாய் இருத்தல் வேண்டும். ''பாட்டினிலே எழுத்தினிலே அன்பு செய்' என்று பாரதி கூறுவார். ''ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்ய நான் பாட வேண்டும்' என்று வள்ளல் பெருமானார் சொல்வார். சமுதாயக் கீறல்கள், வாழ்க்கை அத்தியாயங்களில் எமது மக்களுக்கு ஏற்படும் வடுக்கள், வருங்கால வாரிசுக்களுக்கேற்ற அறிவுரைகள்,போன்ற இத்யாதி இத்யாதி எண்ணக்கருக்கள், எழுத்தில் அரங்கேறி வாசகர் நெஞசங்களில் இடம்பிடிக்கும் போது அவர்கள் உள்ளங்களில் ஒரு சிந்தனைத் தூண்டல் ஏற்படல் வேண்டும் ஏற்படுத்தல் வேண்டும். ''எழுதுகின்ற கலைஞன் யாருக்காக எழுதுகின்றோம் என்பதை மறந்து விடாமல் எழுத வேண்டும். அந்த எழுத்தில் உண்மையான அன்பு இருத்தல் வேண்டும்.' என்று சொல்வார் னுச.  இராதாகிருஸ்ணன். 
                          ஒரு படைப்பாளியின் படைப்புக்களில்  அப்படைப்பாளியின் உள்ளம் தெளிவாகப் புலப்படும். தன்னுடைய மனஓட்டய்களைத் தன் படைப்பிலுள்ள மாந்தர்களின் வாயிலாக நிகழ்ச்சிகளின் வாயிலாக வர்ணனை வாயிலாகப் புலப்படுத்துவார். மிகச் சாதாரணமான சொல்லைக்கூட இலக்கிய உருமாற்றம் செய்தோ இலக்கிய மொழிமாற்றம் செய்தோ வழங்குவது மரபு. இதனால், மக்களின் இயல்பான மொழி வழக்குகள் இலக்கியத்தில் இடம் பெறாமல் போகலாம். யதார்த்தம் எனப்படும் அந்த உண்மை நிலை இலக்கியத்தில் இடம் பெறாமல் போனால் அந்த இலக்கியமும் இலக்கிய கர்த்தாவும் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்படுவார்கள். கம்பர் ஓரிடத்தில்
         ''வெய்யோன் ஒளி தன்மேனியின் விரிசோதியில் விரிய
          பொய்யோ எனும் இடையாளுடன் இளையானுடன் போனான்
          மையோ! மரகதமோ! மறிகடலோ! மழைமுகிலோ!
          ஜயோ! இவன் வடிவென்பதோ அழியா அழகுடையான்! 

  என்று இராமனின் அழகை வர்ணிக்க வார்த்தையின்றி ஜயோ என்று இலக்கியச் செல்வாக்கற்ற ஒரு சாதாரண சொல்லைத் தன் பாடலில் செருகி இலக்கியத்தின் சுவையைக் கூட்டியுள்ளார். 
                               இந்த அந்நிய மண்ணிலே தமிழால் நாம் இணைந்துள்ளோம். பழந் தமிழ் இலக்கியங்கள் என்று எமது கரங்களுக்குக் கிடைக்கக் கூடிய சங்க நூல்கள், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் போன்றவை இலக்கண வரம்புக்குட்பட்டதாகவும் திருத்தமான இலக்கிய வடிவங்களாகவும் காணப்படுகின்றன. 2000 ஆண்டுளுக்கு முற்பட்டே இவ்வாறான திருத்தமான இலக்கியவடிவங்கள் எம்மிடையே இருக்கின்றதென்றால் எமது தமிழின் பழமை எவ்வாறு இருக்கும் என்று சொல்லத் தேவை இல்லை.                        எனவே எழுத்தை ஆள்பவர்களாகிய நாம் அத் தமிழ் அழிந்து விடாது போற்றிப் பாதுகாத்தல் வேண்டும். எமது பழந்தமிழ் புலவர்கள் தமிழில் எந்தளவில் ஈடுபாடுடையவர்களாக இருந்திருக்கின்றார்கள் சீத்தலைச்சாத்தனார் என்னும் ஒரு புலவர் தமிழ்க் குற்றம் கண்டாரேயானால் தன்னுடைய எழுத்தாணியால் தன்னுடைய தலையில் ஓங்கிக் குத்துவார். அதனால் சீத்தலைச் சாத்தனார் எனப் பெயர் பெற்றார். ஓட்டக்கூத்தரோ தமிழில் குற்றம் கண்டு பிடித்தாரேயானால் குற்றவாளியின் காதைக் கடித்து விடுவார். நல்லவேளை இப்போது ஒட்டக்கூத்தர் இங்கில்லை இருந்திருந்தால் பலர் காதில்லாமல் தான் இருந்திருப்போம். எனவே எப்படியெல்லாமோ கட்டிக்காத்த தமிழ் அழிந்து போகாது காக்க வேண்டியது எமது கடமையல்லவா.  சாலையிலே செல்லும் மாட்டுக்கு இருபறமும் மறைத்துக் கட்டியிருப்பார்கள். நேராகச் சாலையைப் பார்த்தே அந்த மாடு செல்லும் இவ்வாறே கட்டுப்பாட்டுடன் எழுதும் எழுத்தாளன் தன் எழுத்தை வடிப்பான். ஆனால் போருக்குச் செல்லும் குதிரை எந்தவித மறைப்பும் இன்றி அனைத்துப் பக்கங்களையும் பார்த்தே ஓடும். இதே போன்றே எந்தவித கட்டுப்பாட்டுக்குள்ளேயும் அடங்காத எழுத்தாளன் தன் எழுத்துக்களை அனைத்துப் பார்வையையும் அகல விரிதுதுத் தன்னுடைய எழுத்தை வடிப்பான். அவ்வாறே எழுத்தாளர்கள் எந்தவித கட்டுப்பாட்டுக்கும் உட்படாமல் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களை அழகு நடையில் வடித்துத் தமிழுக்கும். தமிழினத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று கூறி. இவ்வளவு நேரமும் என் எண்ணஓட்டத்தைச் செவிமடுத்துக் கொண்டிருந்த அனைவருக்கும் நன்றி கூறி எனது சிற்றுரையை முடித்துக் கொள்ளுகின்றேன்.
         
                 
          

  ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு  சூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான உலகாய் உருவெடுத்தது. இயற்கை மனிதனுக்குக் கிடைத்த அழகான கொடை ஆகும். இத்தனையும் இயற்கையிலிருந்து பெற்றுக் கொண்ட மனிதன், தன் முயற்சியைப் பயன்படுத்தி அழகான நவீன பூமியாக மாற்றியமைக்கின்றான். இப்பூமியைச் சிலர் ஆக்க நினைக்காது கொடிய ஆயுதங்கள் கொண்டு அழிக்க நினைக்கின்றார்கள். புதுமைகள் புதிய கண்டுபிடிப்புக்கள் உருவாக வேண்டுமானால், சிறப்பான கல்வியை இளைய தலைமுறையினர் காணவேண்டும். உலகம் அழிவை நோக்கிப் போகாமல் இருக்கவேண்டுமானால், ஒழுங்கான முறையில் பிள்ளைகள் வளர்க்கப்படல் வேண்டும். இதற்கு அடிப்படைக்கல்வி சிறப்பாக இருக்க வேண்டும். இன்றைய சிறுவர்கள் நாளைய பெரியவர்கள், மாதா, பிதா, குரு, தெய்வம், இவை நான்கும் ஒரு பிள்ளைக்கு அவசியம். பிள்ளை பிறந்தவுடன் அம்மாவைக் காண்கிறது. அம்மா சொல்லி அப்பாவைக் காண்கிறது. அப்பா, அம்மா பிள்ளைக்குக்குக் குருவைக் காட்டுகின்றார்கள். ஆசிரியர் கடவுளை வழிபட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றார்கள். எனவே ஒரு பிள்ளையை உருவாக்கும் பொறுப்பு முதலில் பெற்றோருக்கு இருக்கின்றது. அதன்பின் ஆசிரியர் கையிலே தான் தங்கியிருக்கிறது. தெய்வத்தைவிட முன்னிலையில் வைத்துப் பாராட்ட வேண்டியவர்கள் ஆசிரியர்களே. ''தாரமும் குருவும் தலைவிதிப்படி'' என்பார்கள். ஒரு பிள்ளைக்குக் கிடைக்கும்  ஆசிரியரைப் பொறுத்துத்தான் கல்வியில் அப்பிள்ளை காட்டும் ஆர்வமும் முன்னேற்றமும் வளர்ச்சியும் தங்கியிருக்கும். ஆசிரியர் கற்பித்தவை மாணவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருத்தல் வேண்டும். குரு நிந்தை செய்வோர், குரு நிறைவாய்க் கிடைக்காதவர்களாகத்தான் இருக்க வேண்டும். மாணவர் வகையை ''அன்னம், ஆவே, மண்ணொடு கிளியே, இல்லிக்குடம், ஆடு, எருமை, நெய்யெரி'' என தலை, இடை, கடை மாணாக்கராய்ப் பிரித்தல் போல நல்லாசிரியர்களுக்கும் இலக்கணம் கூறப்படுகின்றது. ''நிலம், மலை, நிறைகோல், மலர் நிகர் மாட்சியும் 
               உலகியல் அறிவோடு உயர் குணம் இயையவும்
               அமைவன நூலுரை ஆசிரியர்'' எனப்படுகிறது. 
  தன்மேலே இருக்கும் சுமையால் கலங்காது, தோண்டினாலும் துன்புறாது நிலம். அதேபோல் விவாதங்கள் செய்து வருத்துபவர்களைக் கண்டு கலங்காது பொறுமை காப்பவர் ஆசிரியர். பொருள்களின் அளவைச் சந்தேகம் இல்லாமல் காட்டும் தராசு போல, சந்தேகம் தீருவதற்காக கேட்கப்பட்ட வினாவின் பொருளை விளக்குவதாலும், நடுநிலைமை மாறாது நிற்பதனாலும் தராசு ஆசிரியர்களுக்கு உவமையாக்கப்பட்டது. எல்லோராலும் விரும்பப்படுகின்ற மலர் போல் எல்லோராலும் விரும்பப்படுபவராகவும் சரியான நேரத்திலே பூ மலர்வது போலே கற்பிக்கும் நேரத்திலே முக மலர்ச்சியுடன் கற்பிப்பவரே ஆசிரியர். ஆனால் கழற்குடம், மடற்பனை, பருத்திக்குண்டிகை, முடத்தெங்கு போன்ற ஆசிரியர்களும் இருக்கவே செய்கின்றனர். ஆயினும் ஒரு மாணவன் வளர்ச்சிக்கு பெற்றோரை ஊக்கப்படுத்தி அதற்கான அறிவுரை வழங்கி அம் மாணவனை நல்நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஆசிரியர் ஒத்துழைப்பு அவசியமாகின்றது.


            வீட்டுச்சூழல் தவிர்ந்து மற்றைய பொழுதுகளில் தமது பள்ளிப்பருவத்தில் கூடுதலான நேரத்தை பாடசாலையிலேயே ஒரு பிள்ளை கழிக்கின்றது. அந்நேரத்தில் அப்பிள்ளையைக் கண்காணிக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே ஒப்படைக்கப்படுகின்றது. குழந்தைகள் உலகத்திற்கு அவசியம். இவர்களே எதிர்கால உலகத்தை ஆளப் போகின்றவர்கள். எதிர்கால உலகை ஆளப் போகின்றவர்களை ஒழுங்கான முறையில் வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. தவறு செய்யாத மனிதன் உலகத்தில் இல்லை. அந்தத் தவறை அறிந்து அவன் திருந்தி நடக்கும் போது அவன் வாழ்க்கை சிறப்புப் பெறுகின்றது. அனைத்தும் அறிந்த பெரிய மனிதர்களே தவறுகள் செய்கின்ற போது சிறிய பிள்ளைகள் எப்படித் தவறு செய்யாமல் இருப்பார்கள். பிள்ளைகள் களிமண் போன்றவர்கள். அவர்களை எப்படியும் நாம் வடிவமைக்கலாம். முறையானவர்கள் கைகளில் வளர்க்கப்படும் பிள்ளைகள் முறையாக வாளர்வார்கள். தவறானவர்கள் கைகளில் வளர்க்கப்படும் பிள்ளைகள் முறைகேடாக வளர்வார்கள். பிள்ளைகளில் மட்டும் தவறை நாம் காணமுடியாது. ஏனெனில் அவர்கள் பூமியில் பிறப்பெடுக்கும் போது வெற்றுப் பத்திரிகைளாகவே வந்து பிறந்தார்கள். பெற்றோரும் சூழலுமே அவர்களில் பதிவுகளை ஏற்படுத்தக் காரணங்களாகின்றன. 


                        ஆசிரியர் தொழில் மற்றைய தொழில்களைவிடப் பொறுப்பான தொழில். ஒரு சமூகத்தை உருவாக்கும் தொழில். பிள்ளைகளில் அவதானமும் அவர்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள தொழில். இத்தொழிலுள்ள ஆசிரியர்கள் தமது தொழிலை ஒரு சேவை மனப்பாங்குடன் செய்தல் வேண்டும். பொறுப்பில்லாது பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்தலே எமது கடமை. அவர்கள் ஒழுக்க நடத்தைகளுக்கு நாம் காரணம் இல்லை. என்று ஒரு ஆசிரியர் சொல்ல முடியாது. ஒரு கடமையில் ஒருவர் ஈடுபடும்போது அக்கடமையில் முழுக்கவனமும்; எடுத்தல் வேண்டும். அக்கடமையில் வருகின்ற நன்மை தீமைகளுக்கு அவர்களே காரணங்களாகும். ஒரு மாணவனுக்குக் கல்வி கற்பிக்கும் போது அம்மாணவனைப் பற்றிய பூரண அறிவு அவனைக் கற்பிக்கும் ஆசிரியருக்கு இருக்க வேணடும். அரசாங்கப் பணத்தில் வாழ்ந்து கொண்டு தாமும் சோம்பேறிகளாக இருந்து கொண்டு தமது பிள்ளைகளையும் சோம்பேறிகளாக வளர்க்கும் பெற்றோர்களால் சீரற்ற பழக்கவழக்கங்களுள்ள பிள்ளைகள் உருவாகுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாமும் தொழிலுக்குப் போகாமல், மதுபானங்களுக்கு அடிமையாகி வீட்டிலே அடைந்து கிடக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமைகளாவதாகவும் அப்பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் இவையெல்லாம் எம்மால் அவதானித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சலிப்படைகின்ற எத்தனையோ ஆசிரியர்கள் நம் மத்தியில் வாழ்கின்றாhகள். பொறுப்பான பதவி வகுத்துக் கொண்டு பொறுப்பில்லாத வார்த்தைகளை நாக்கூசாது சொல்பவர்களாக இவர்கள் காணப்படுகின்றார்கள். மருத்துவர் ஒரு உயிருக்கு எப்படி உத்தரவாதமோ அதேபோல் ஒரு ஆசிரியர் ஒரு உயிரின் வாழ்வியலுக்கு அவசியமானவர். பணம் ஒன்றே குறிக்கோளாகப் பதவி வகிப்பவர்கள், இந்த நாட்டிற்குப் பாவம் செய்பவர்களாகக் கருதப்படுவார்கள். ஏனென்றால், ஒழுக்கம் மீறிய ஒரு பிள்ளை வளர்ந்து பெரியவனாக வரும்போது அப்பிள்ளை அந்நாட்டைச் சீரழிக்கும் ஒரு குடிமகனாக உருவெடுப்பான். இப்படி ஒவ்வொரு பிள்ளைகளும் வளருகின்ற போது, அந்நாட்டில் குற்றம் செய்பவர்களும், சட்டத்தை மதிக்காதவர்களும், ஒழுக்க நடவடிக்கைகளை மீறுபவர்களும் போதைவஸ்துகளுக்கு அடிமைகளாபவர்களும் அதிகரித்துக் காணப்படுவார்கள். அதன்பின் அந்நாட்டின் வீழ்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பாரதூரமானதாக இருக்கும். ''ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது'' ''இளமையில் கல்வி சிலையில் எழுத்து'' என்றெல்லாம் பழமொழிகள் உண்டு. பள்ளிப்பருவத்தில் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்படும் பிள்ளை எதிர்காலத்தில் சிறந்த ஒரு பிரஜையாக உருவெடுக்கும் என்பது திண்ணம். 
                     எனவே ஒரு நாட்டின் உயர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஒரு ஆசிரியரின் பங்கு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அதனால், ஆசிரியர்கள் பல்வேறு கலாசாரம் மத்தியில் தமது பணியை மேற்கொள்ளும் போது பொறுப்புள்ளவர்களாக நடந்து தாம் வாழும் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது அவர்கள் கடமையாகின்றது. 


  பதிவுகள் இணையத்தளத்தில் 20.11.10 வெளியானது.


  புதன், 27 அக்டோபர், 2010

            சித்திரா பௌர்ணமி ( சிந்திக்கத் தெரிந்தவர்க்கு மட்டும்)
            

             சித்திரையில் வரும் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு - அது
             தாய்மார்கள் ஆன்மா ஈடேற்றம் காணும் சிறப்பு.
             கற்றவர்கள் கூட அதற்கு தரும் மதிப்பு
             எப்படியோ ஆகட்டும் என்ற ஒரு போக்கு

  அன்று தாய்மார்களின் ஆன்மாக்கள் உலகில் இருந்து பிரிக்கப்பட்டு ஈடேற்றம் காணும் நாள். அவ்வுலகிலும்  ஒரு இறப்புநாள்  என்றே நான் கருதுகின்றேன். அதுவும் பூமியில் வாழும் தமது பிள்ளைகள், அன்றைய நாள் விரதம் இருந்து, பூசை புரிந்த ஆன்மாக்கள் மட்டுமே ஈடேற்றம் காணும் நாள். அந்த ஆன்மாக்கள், பூமியில் வாழும் போது எப்படி நன்மைகள் செய்திருந்தாலும் பிள்ளைகள் அன்றைய நாள் விரதம் அநுஷ்டிக்க வேண்டும். அப்போதுதான் தாய்மார் ஆன்மாக்குள் ஈடேற்றம் காணும் என்ற ஒரு நம்பிக்கை நம்மவர் மத்தியில் புகுந்துள்ளது. தந்தையர்  ஆன்மாக்கள் அங்கு தரித்து வைக்கப்படும். மற்றைய உறவுகள் எல்லாம் உலாவித் திரியும். ஆடி அமாவாசை வந்தால், மீண்டும் ஒரு பிரிவு. தந்தையர் ஆன்மாக்கள் எல்லாம் ஆன்மாக்கள் உலகில் இருந்து விடைபெற்று ஈடேற்றம் காணும் நாள். அதுவும் ,பூமியில் வாழும் பிள்ளைகள் ஆடி அமாவாசை விரதம் இருக்க வேண்டும். தாய் பௌர்ணமியில் ஆண்டவன் காலடி நாடுவாள். தந்தை அமாவாசையில் ஆண்டவன் காலடி நாடுவார். ஆனால் திருமணபந்தத்தில் நுழையாத சகோதரர், பிள்ளைகள் இறந்தால், அவர்கள் ஆன்மாக்கள் ஈடேற்றம் காண எந்த நாளில் விரதம் இருக்க வேண்டும். அது பற்றி வினா எழவில்லையா? இவர்களின் ஆன்மாக்களின் நிலை தான் என்ன? மனதினுள் எழுந்த வினாக்களின் சிந்தனைகள் விரிந்தவளாய் யான், வழமைபோல் அன்றும் சிந்திரா பௌர்ணமி அன்று எனது பெற்றோர் படத்திற்கு விளக்கேற்றினேன். மனக்கவலைகள் யாரிடமும் கூறினால் அரைவாசியாகக் குறையும் மனமகிழ்ச்சிகள் யாரிடமும் கூறினால் இரு மடங்கு அதிகரிக்கும். இவ்வாறே மகிழ்ச்சியோ கவலையோ எனது பெற்றோர் படங்களின் முன் பகர்வது எனது வழக்கம். அன்றும் அவ்வாறே.

                          அன்று சித்திரா பௌர்ணமி அடுத்த வீட்டில் இருந்து வந்த அழைப்புக் கூட இருந்தது. நேரம் போதாமையால், வேலைக்குப் போகுமுன் அடுத்த வீட்டார்க்குச் சிறிது கையுதவி செய்துவிட்டு வரலாம் என்று அங்கு சென்றிருந்தேன். வீட்டுக்குள் சென்ற போது வாசனை மூக்கைத் துளைத்தது. அவர் தாயாரின் உருவப்படம் ஒரு மேசைமேல் வைக்கப்பட்டிருந்தது. அழகான பூக்கள் தாயாரின் படத்திற்கு வைப்பதற்காக, அன்றே வாழத்துடித்து மலர்ந்த மலர்களை அது வாழும் போதே பறித்து எடுத்து வைக்கப்பட்டிருந்தது. பூஜைக்குரிய ஆராத்தித் தட்டுக்கள், கற்பூரம், சந்தனக்குச்சி, சாம்புராணி இப்படியெல்லாம் ஒரு சுவாமி படத்திற்கு அலங்கரிப்பது போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சமையலறையினுள் அமர்க்களம். 3,4 குடும்பங்களை விருந்துக்கு அழைத்ததனால், பெண்களின் கலகலப்புப் பேச்சுக்களும் சிரிப்புக்களும் தாளித வாசனையுடன் கலந்து கொண்டு வீடெங்கும் பரவியிருந்தது. தாய்மண்ணிலே உணவுக்காக ஏங்கும் ஏழைகளுக்கு இப்படியான சந்தர்ப்பங்களில் இப்படியாகச் சமைத்துக் கொடுப்பது வழக்கம். இதுவும் இப்படியான நாள்கள் செய்வதன் அவசியமும் கூட. ஆனால், இங்கு........ ஐரோப்பிய நாடுகளில் ..........கலகலப்பில் நானும் கலந்து கொண்டேன். சிறிது கையுதவியும் செய்தேன். சமையலும் முடிவடைந்தது. தாயாரின் படத்தின் முன் 15 கறிகளுடன் சோறும் வடை பாயாசங்களும் படைக்கப்பட்டன. பூஜை ஆரம்பமானது. தேவாரங்கள் பாடப்பட்டன. கற்பூர ஆராத்தி காட்டப்பட்டது, சாம்புராணி தீபம் போடப்பட்டது. முடிந்தவுடன் எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டது. பின் விஜய் நடித்த சுறா படம் போடப்பட்டது. உணவருந்தி படம் பார்த்து விருந்தினர் விடை பெற்றனர்.

                                                  ஒரு மணி நேரம் வேலைக்குத் தாமதமானாலும் கூறவேண்டியவற்றைச் சரியான நேரத்தில் எடுத்துக் கூறாவிட்டால், அது கூறாமலே மறைந்து போய்விடும் அல்லவா! அதனால், அந்தத் தாயின் மகளை அருகே அழைத்தேன். இந்த 4 குடும்பங்களில் ஒருத்தியாக உணவு பிரமாதம் என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டு விடைபெற்றுச் செல்லும் ஒரு சாதாரணமான பெண் நான் இல்லை. என்றும் எதையும் சிந்தித்துக் கொண்டிருக்கும் நான், இன்று இந்த சித்திராபௌர்ணமி பற்றிச் சிந்தித்தேன். உங்கள் தாயில் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் விருப்பும் புரிகின்றது. ஆனால், ஏன் இது செய்யப்படுகின்றது என்று சிந்தித்தீர்களா?

  எதற்காக படத்தின் முன் படையல்கள் படைக்கப்படுகின்றது? உங்கள் தாயின் ஆன்மா இங்கு வந்து உணவு அருந்திவிட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகவா? அது திவசத்தில் அல்லவா செய்கின்றார்கள். இன்றைய நாள் விரதம் இருந்து தாயாரின் ஆன்மா இறைவன் காலடியைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவல்லவா செய்யப்படுவது. நீங்கள் படையல்கள் படைத்து அழைத்தால், உங்கள் தாயாரின் ஆன்மா இங்கு வந்து உணவு அருந்துவதா? இல்லை ஈடேற்றம் காண்பதா? சிந்தித்துப் பாருங்கள்.
  உங்கள் தாயின் படத்தின் முன் பூஜைப் பொருட்கள் வைத்திருக்கின்றீர்கள். அதன் அர்த்தம் தான் என்ன? உங்கள் தாயார் இறையென்னும் நிலையடைந்துவிட்டார் என்று உறுதியான மனநிலை நீங்கள் கொண்டதனாலே தானே! அதனாலே தானே கற்பூh ஆராத்தி எடுத்தீர்கள். பின் ஏன் ஈடேற்றம் கருதி விரதம் இருக்கின்றீர்கள்? திடமான நம்பிக்கை கொள்ளாத எதுவுமே மனிதர்;கள் செய்வது தவறு, என்றே நான் கருதுகின்றேன். சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

  இங்கு தேவாரம் பாடப்பட்டதே! தோடுடைய செவியன் என்பது சிவபெருமானைக் குறித்துத் திருஞானசம்பந்தர் பாடிய பாடல் அல்லவா! இங்கு வைக்கப்பட்டிருக்கும் உருவப்படமானது உங்கள் தாயாரினுடையதல்லவா! தாயாரின் உருவப்படத்தின் முன் இறைவனை நினைத்துப் பாடினீர்கள் என்றால், தேவாரங்கள் கரும்பின் சக்கையைச் சப்பித் துப்பியதைப் போன்றவை. உதாரணத்திற்கு திருஞானசம்பந்தர் ''தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடி'' என்ற தேவாரத்தைப் பாடி உமையம்மையாரால் பாலூட்டப் பெற்றவர். அந்த கரும்பின் சாற்றை அவர் அருந்தி விட்டார். அதன் சக்கையை நாம் பாடுவதில் என்ன இருக்கின்றது? இறைவனை எண்ணி நீங்கள் பாட வேண்டுமானால், நீங்களாகவே நினைத்துப் பாடுங்கள். அதில் பொருள் இருந்தால் போதுமானது. அதை எதிர்பார்த்தால் அவர்கள் கடவுளர்களும் இல்லை. பாடல்களில் கவித்துவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொருள் விளங்காது பாடப்படும் பாடல்களும் பலன் தராது, மந்திரங்களும் பலனளிக்காது. ஏனென்றால், அவை மனதில் பதியப்படுவதில்லை. மூளை ஏற்றுக்கொள்வதில்லை. சற்று சிந்தித்துப் பாருங்கள்.

  இறந்தவுடன் உயிரென்னும் ஆத்மாவானது வேறு ஒரு உடலினுள் ஐக்கியமாகின்றது என்பது கர்மக்கோட்பாடாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அப்படியெனில், எங்கோ ஒரு உடலினுள் ஐக்கியமாகிவிட்ட அந்த ஆத்மாவிற்கு மீண்டும் ஈடேற்றம் காண நீங்கள் விரதம் இருப்பது பெரிய பாவம் இல்லையா! இது நியாயமாகிவிடுமா! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

  இல்லை உங்கள் தாயாரின் ஆத்மா இன்னும் அலைந்து திரிகின்றது என்றால், 30 வருடங்கள் கழிந்த நிலையிலும் அந்த ஆன்மா அலைந்துதான் திரிகின்றதா! இத்தனை வருடங்களும் நீங்கள் விரதம் இருந்தது பலன் அளித்திருக்காது என்ற நம்பிக்கையீனம் உங்களிடம் குடிகொண்டிருக்கின்றதா! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

  உலகில் நன்மைகள் பல செய்து வாழும் மனிதன் இறந்துவிட்டால், அவனது ஆன்மா பிள்ளைகள் சித்திராபௌர்ணமி விரதம் இருந்தாலேயே ஈடேற்றம் காணும் என்றால், உலகில் வாழும் வரை தீமை செய்பவர்கள். பிள்ளைகள் மூலம் ஈடேற்றம் கிடைக்குமென்று கருதியவர்களாக நிம்மதியாக இறக்கலாமே! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.


  உயிரற்ற உடலால் என்ன பயன் என்று அந்த உடலைத்  தீக்கிரையாக்கி விடுகின்றோமே. உடலற்ற அந்த உயிரால் என்ன பயன்! ஆன்மா என்பது உடலுள் இருக்குமானால், சத்திரசிகிச்சையின் போது அது எங்கே செல்கின்றது? ஆழ்ந்த மயக்கம் கழிந்து எழுந்தபின் சத்திரசிகிச்சையின் போது நடந்த நிகழ்ச்சிகளை எமது ஆன்மா தெரியப்படுத்தியிருக்குமே. அந்த மூளைதான் ஆன்மா என்று, அந்த மூளை கொண்ட மனிதன் சிந்திக்கத் தவறுவதுதான்
  ஏன்? ஆன்மா என்று அலட்டிக் கொண்டு அதன் மூலம் வருமானம் தேடுபவர்களுக்கு அது தொழிலுக்கு ஆதாரம். ஆனால், அனைவரையும் அறிவற்றவர்களாய்க் கருதுவது தவறு அல்லவா! எனவே வாழும் போதே நன்றிக் கடன் செய்வதாக இருந்தால், செய்ய நினைப்பவர்களுக்கு மனத் திருப்தியுடன் செய்து முடித்துவிட வேண்டும்.;; வாழ்ந்து இறந்து எரிந்துவிட்ட, புழுபூச்சிகளுக்கு இரையாகிவிட்ட உடலுக்குச் செய்கின்றவை எல்லாம் வெறும் போலியாக பிறருக்குக்  காட்டுகின்ற வெளிக்காட்டுகை என்பதையும்; புரிந்து கொள்ளுங்கள். இந்தக்  கிரியைகள் எல்லாம் எமது தாயார்; தினம் (ஆழவாநச'ள னயல)  போல் பெற்றோர்க்கு நன்றி செலுத்துவதற்காகவும் இறந்த அவர்களை நினைப்பதற்காகவுமே செய்யப்பட்டவை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

                       இது உங்களுக்கும் உலகுக்கும் சொல்லும் சிந்தனை. நான் வருகின்றேன் என்று ஒருவரைச் சிந்திக்கத் தூண்டிய மனதுடன் விடைபெற்றேன். அவள் சிந்தித்தாளோ இல்லையோ, உலகு சிந்திக்கட்டும். உலகத்து மாயையை.
                      

  நிலாவும் யாழ்நூலும்

                                           

                                 நெடிதுயர்ந்த மாடங்கள்
                                 கடிதென விரையும் சாலை
                                 கொட்டும் பனி வாட்டியெடுக்கும் குளிர்
                                 வாழ்கிறோம் வந்த நாட்டில்

  உணவு தொட்டு அத்தனையும் இரசாயணம் கலந்த வாழ்வு. இயற்கை அழகை எங்கே நாம் இரசிக்க முடியும். இயற்கையை இரசிக்க இடம் தருகின்றதா இவ்வாழ்க்கை. வாகனத்தின் போக்கில் நிலாவின் புதுப்பொலிவைக் காண்கிறேன். காண்போர் கண்களுக்கு விருந்தாகும் நிலா, எட்ட நின்று என் கருத்தைக் கவர்கின்றது. நான் பிறந்த போதும் இப்டியே நின்றது. நான் வளர்ந்த போதும் இப்படியே நின்கின்றது. கால மாற்றங்கள் உடலிலும் உள்ளத்திலும் வாழ்விலும் பல மாற்றங்களைக் காட்டி நிற்கின்றன. இந்த வட்ட நிலா மட்டும் நான் கண்ட அதே கோலத்தில். 
       சின்ன வயதில் மட்டக்களப்பு வாவியிலே, பூரணநிலா பொங்கிப் பூரிக்கும் அழகை நினைத்துப் பார்க்கின்றேன். அவ்வேளை அவ்வாவியிலிருந்து தோன்றும் ஒரு இனியஓசை இன்றும் என் காதுகளுக்குள் கானமிசைக்கின்றது. உலகில் எங்கும் கேட்கமுடியாத அந்தப் பாடும் மீன்களின் பரவச கானம் பலர் இதயங்களைக் கொள்ளை கொண்டது.  இவ் இனிய ஓசை பற்றி விபுலானந்த அடிகளார் நீரர மகளிரின் காந்தர்வ இசை எனக் களிப்பின்புற்றுக் கூறியுள்ளார். 


  ''நீல வானிலே நிலவு வீசவே மாலைவேளையே மலைவி தீருவோம்
  சாலை நாடியே சலவி நீருளே ஆலைபாடியே பலரொடு ஆடுவோம்
  நிலவு வீசவே மலவு தீருவோம் சலவி நீருளே பலரோடாடுவோம்
  நீசரி காகம மாபத நீசா கரிகம மாபவ பதளி சாசரி''


  விபுலானந்த அடிகளாரின் ஆராய்ச்சித் திறமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகப்படுகின்றது. பூரணநிலவியே பொங்கியெழும் ஓசையும் ஆண்டுதோறும் ஆனித்திங்களில் மட்டக்களப்பு மாநிலம் எங்கும் காணப்படும் கண்ணகி அம்மன் ஆலயங்களில் பாடப்படும் பாடல்களும், சிலப்பதிகாரக் கவிதைகளின் சிலம்பொலிகளும் விபுலானந்த அடிகளாரை இசை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என்று கருதுகின்றேன்


   ''அஞ்சிறையும் புள்ளொளியும் ஆன்கன்றும் கழுத்தில் 
     அணிமணியின் இன்னொலியும் அடங்கியபின் நகரார்
     பஞ்சியைந்த அணிசேரும் இடையாமப் பொழுதில் 
     பாணனொடும் தோணியிசை படர்ந்திரனோர் புலவன் 
    தேனிலவு மலர்பொழில் சிறைவந்து துயில
    செழுந்தரங்கத் தீம்புனலில் நண்டினங்கள் துயில
    மீனலவன் சிலவந்து விண்ணிலவன் துயில
    விளங்கு மட்டு நீர்நிலையில் எழுந்ததொரு நாதம்''  


  எனப் பாடும் மீன் நாதம் கேட்டுப் பரவசமுற்றுப் பாடினார் விபுலானந்த அடிகளார். 


                எனவே மீனினம் இசை பொழிய இடந்தந்த வெண்ணிலாவே யாழிசை நரம்புகள் எல்லாம் தெளிவாக ஆராய்ந்து யாழ்நூழை ஆக்கி அந்நூலுக்கு ஏற்ப யாழினையும் உருவாக்கித் தந்த விபுலானந்த அடிகளார் உள்ளத் தூண்டலுக்கு நீயும் காரணமோ!


  யாழ் பற்றிச் சில வார்த்தைகள் (1936)விபுலானந்த அடிகளார் சொற்பொழிவிலிருந்து
  சங்ககாலத்திலே மன்னர்களைப் புகழ்ந்து பாடி பரிசில்கள் பெறுவது புலவர்கள் வழக்கமாய் இருந்தது. அதேபோல் பாணர்கள் யாழ் மீட்டிப் பரிசில்கள் பெறுவர். பாணர்கள் யாழ் மீட்டிப் பாடும்போது அவர்கள் மனைவியர் பாடினிகள் நடனம் ஆடுவர். இக்காலத்தில் இருவகை யாழ்கள் வழக்கத்தில் இருந்தன. அவை 7 தந்திகளுடைய செங்கோட்டி யாழும் 21 தந்திகளுடைய பேரியாழும் ஆகும். இவை பற்றிப் பத்துப்பாட்டு அழகாக எடுத்துக்காட்டுகின்றது. அதன்பின் சிலப்பதிகார காலத்தில் 14 தந்திகளுடைய சகடயாழும் 17 தந்திகளுடைய மகரயாழும் வழக்கத்திற்கு வந்தன. அதன்பின் 1 தந்தியுடைய மருத்துவயாழும், 1000 தந்திகளுடைய நாரத பேரியாழும் 100 தந்திகளுடைய கீசகயாழும், 9 தந்திகளுடைய தும்புருயாழும் வழக்கத்திற்கு வந்தன. அழகான வேலைப்பாடுகளுடனும் இரத்தினக்கற்கள் பதித்தும் இவ் யாழ்வகைகள் காணப்பட்ட எனவும். மேலும் அவை பற்றிய விளக்கங்களும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், சிலப்பதிகாரம், கல்லாடம் ஆகிய நூல்களில் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.

  திங்கள், 25 அக்டோபர், 2010

  புலம்பெயர்வில் பெற்றோர் தமது பிள்ளைகளின் திருமணத்தின் பின் அவர்களுடன் இணைந்து வாழ்தல் சிறப்பைத் தருமா? பின்

             புலம்பெயர் வாழ்வில் பெற்றோர் பிள்ளைகளின் திருமணத்தின் பின் அவர்களுடன் சேர்ந்து வாழ்தல் சிறப்பைத் தருமா சிரமங்களைத் தருமா இந்த கேள்விக்குரிய முக்கிய கதாபாத்திரங்கள் பெற்றோர்களே. பெற்றோர்கள் ஒவ்வொருவருடைய அநுபவங்களுமே, பிள்ளைகள் எடுக்கும் தீர்மானங்களிற்கு வழிகாட்டியாக அமைகின்றன. 
          ஒரு உயிர் உலகத்தில் பிறப்பெடுக்கும் முன் ஒரு வீட்டில் வாடகை செலுத்தாமல் குடியிருந்ததே. அந்த வீடு பூமியைத் தாங்கும் ஓஸோன் படைபோல் தன்குழந்தையைத் தாங்கிக் கொண்டு பத்தியம் காத்துப் பகல் இரவாய்க் கண்விழித்து பிள்ளையைப் பெற்றெடுத்ததே அந்தத் தாயுடன் சேர்ந்து வாழ்தல் சிறப்பைத் தருமா சிரமத்தைத் தருமா? 
            ''பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
            எல்லோருக்கும் தந்தை இறைவன் - நீ 
            ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை 
            இறைவனை நம்பி வந்தாயோ|'' என்று கண்ணதாசன் பாடிவைத்தார். அந்தத் தந்தையைத் தான் தெரிந்தோ தெரியாமலோ நம்பி ஒருவன் இந்த பூமிக்கு வந்து பிறக்கின்றான். திருமணவயது வரை ஒரு பிள்ளையை உருவாக்கப் பெற்றோர் செலவழிக்கும் நேரம், பணம், செலவு, பிரயாணம் போன்றவைக்கு எத்தனை கோடி அள்ளிக் கொடுத்தாலும் மீளச் செலுத்த முடியாது. இந்தப் பெற்றோர் பிள்ளைகளுக்குச் சிரமமாக இருப்பார்கள் என்று பிள்ளைகள் நினைப்பது எந்தவகையில் சரியாகும். 
          நவீன உலகிலே மேலைநாட்டு வாழ்விலே ஒரு வருடத்தில் மூன்றில் ஒரு திருமணம் விவாகரத்தில் முடிகிறது. இந்தத் திருமண முறிவுக்கு அடிப்படைக் காரணம் தனிக் குடித்தனமாகவே இருக்கின்றது. உலகரீதியாக கூட்டுக்குடும்ப வாழ்க்கை அருகியதுதான் விவாகரத்துக்கு முக்கிய காரணம் என உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். பெற்றோர் ஒன்றாய் வீட்டில் இருந்தால் பிள்ளைகளுக்கு அறிவுரைகள் புத்திகள் கூறி அவர்களை நல்ல வழியில் ஒற்றுமைப்படுத்தி விடுவார்கள். அநுபவம் என்பது தலைசிறந்த ஆசான். தாம் பெற்ற அநுபவங்கள், தமது பிள்ளைகளை நல்வழிப்படுத்த பெற்றோருக்கு உதவுகின்றது. அவசரத்தில் எடுக்கின்ற முடிவுகளை ஆறுதலாக எடுத்துக் கூறும் போது எடுத்த முடிவு பைத்தியக்காரத்தனம் போல் தோன்றும். அவசர உலகில் நின்று நிதானமாகச் சிந்திக்க இளந்தலைமுறை விரும்புவதில்லை.
                               இரு நண்பர்கள் சந்தித்தார்கள். ஒருவர் மற்றவரிடம் கூறினார், 'எனக்கும் என்னுடைய மனைவிக்கும் ஒரேஒரு முறைதான் சண்டை வந்தது'' என்றார். ''ஏன் அதற்குப் பின் நீங்கள் இருவரும் சண்டையே பிடிக்கவில்லையா'' என்று கேட்டாராம் மற்றையவர். அதற்கு அவர் சொன்னார் ''ஒரு தரம் பிடித்த சண்டையே இன்னும் முடியவில்லை இன்னும் என்றால் தாங்குமா இந்தமனம்'' என்றாராம். இதற்குக் காரணம் என்ன சண்டையானது வளர்ந்து வர பெற்றோர் இடந்தருவார்களா? குடும்பவாழ்வின் சக்தி, வலிமை பற்றி இளையவர்களுக்குத் தெரியாது. அன்பை அறியாது பணத்தை மட்டம் குறியாகக் கொண்டு வாழ்கின்றார்கள். இவர்களுக்குக் குடும்பத்தைப் பாதுகாக்கும் பெற்றோர் சேர்ந்து வாழ்ந்தால், சுகமாக இருக்கும் சுமையாக இருக்கு மாட்டாது. ஒரு நாட்டின் அரசியலுக்கு ஆலோசகர் தேவை. அதே போல் ஒரு வீட்டின் அரசியலுக்கும் ஆலோசகர் தேவை அல்லவா? அது ஏன் உரிமையும் பாசமும் உள்ள பெற்றோர்களாக இருக்குக் கூடாது. உவ்வொரு குடும்பமும்தான் ஒரு நாடு. அந்த நாடு சீரழிய அந்த நாட்டிலுள்ள குடும்பங்கள் காரணமாக இருக்கக் கூடாது. நான் சிறுமியாக இருந்தேன் எனக்கு விளையாட்டு பொம்மைகளில் அநுபவம் ஏற்பட்டது. நான் பெண்ணாக வளர்ந்தேன். பெண்மையில் அநுபவம் ஏற்பட்டது. நான் தாயானேன். தாய்மையில் அநுபவம் ஏற்பட்டது. நான் பாட்டியானேன் எனக்கு உலக அநுபவம் அனைத்தும்  வந்தது. அநுபவம் தருகின்ற புத்தியை அறிவு தருவதில்லை. 
      ஒரு பாட்டி தான் பெற்ற அநுபவப் பாடத்தைத் தன் பிள்ளைக்குப் போதிப்பாள். பிள்ளையின் பிள்ளைக்கும் போதிப்பாள். இதனால், அப்பாட்டி தலைசிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவாள்.  எனவே சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்கவும் அநுபவப்பாடம் கற்ற பெற்றோர் சேர்ந்திருப்பது சிறப்பைத் தரும். இதனையே ஒரு முதியவர் இறந்தால் ஒரு பெரிய நூலகமே எரிகிறது. என்று ஒரு ஆபிரிக்கநாட்டு முதுமொழி கூறுகின்றது. 
                இத்துடன் 120க்கும் அதிகமான நாடுகள் கலந்து கொண்ட ஐக்கியநாடுகள் வயோதிபப்பேரவை முதியவரை சுதந்திரமான இயல்பான குடும்ப சூழலில் வாழவிடுதல் சமூகநீதி எனத்தீர்மானித்தார்கள். ஒருமனிதன் தனித்தீவல்ல அவன் சமுதாயத்துடனே இணைந்து வாழ வேண்டும். ஒரு சமுதாயத்துடன் இணைந்து வாழாத மனிதன் ஒரு மனநோயாளி போலாவான். அவன் சமூகத்துடன் இணைந்து வாழவேண்டுமானால், குடும்பத்துடன் சேர்ந்து வாழவேண்டும். சமூகநெறி விழுமியங்களைச் சொல்லிக் கொடுக்கும்போதே சமூகத்தடன் சேர்ந்து வாழப் சிறியவர்களும் பழகுகின்றார்கள்
          இதைவிட பெற்றோர் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழும் போது அவர்கள் பிள்ளைகளின் பொருளாதாரப் பெருக்கம், பிள்ளை வளர்ப்பு போன்றவற்றிற்கு ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளுக்கு நோய் ஏற்படும் போது பெற்றோர் வீட்டுக்கடமைகளைச் செய்வார்கள். சென்ற வாரம் எனக்கேற்பட்ட அநுபவத்தைக் கூறுகின்றேன். விழுந்தேன் நோயில் எழுந்திருக்கமுடியாத நோய். ஆனால், படுத்திருக்கவில்லை. ஒரு கிழமையில் சுகம் வர வேண்டிய நோயானது, சுகம் வருவதற்கு 3 கிழமைகள் எடுத்தது.. டொக்டர் படுக்கையில் இருக்க வேண்டுமென்று சொன்னார். எப்படி முடியும? உதவிக்கு யாருமில்லாத காரணத்தினால், நானேதானே எல்லாம் செய்ய வேண்டும். நோய் சுகமானதுதான். ஆனால், என் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு மனத்தாங்கல். இவையெல்லாம் ஏன்? இந்த அநுபவம் எல்லோருக்கும்; ஏற்பட்டிருக்கும். எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் அம்மா பிள்ளையைத் தொட்டிலில் போட்டுவிட்டு தொலைகாட்சியையும் போட்டுவிட்டுக் கார் பழகப் போவார். பிள்ளைகளோ தொலைக்காட்சியுடன் வளரும். இதைவிட கணவனும் மனைவியும் வேலைக்குப் போகும் குடும்பத்தில், பிள்ளை. அப்பா வேலைக்குப் போகும்போது அம்மாவிடம் பிள்ளை எறியப்படும். அம்மா வேலைக்குப் போகும்போது பிள்ளை அப்பாவிடம் எறியப்படும். இப்போது பந்தாகப் பிள்ளை ஒவ்வொருவரிடமும் எறியப்படுகின்றது. மனைவி வீட்டுக்கு வருகின்றாள். பிள்ளை வீறிட்டுக் கத்துகின்றது. ''பிள்ளை அழுகிறதே ஏதாவது ஒரு தாலாட்டுப் பாடலாமே என்று கணவனிடம் கேட்கின்றாள்'' அதற்கு கணவனோ, ''நீ ஒரு பக்கம் நான் பாடத் தொடங்கத் தான் சும்மா இருந்த பிள்ளை வீறிட்டுக் கத்துகின்றது'' என்கிறார். இதேவேளை அம்மம்மா இருந்தால், மடியில் போட்டுத் தாலாட்டுப் பாடித் தூங்கவைக்க மாட்டாளா?  அன்புடனும் ஆதரவுடனும் அரவணைப்புடனும் வளரும் பிள்ளையே எதிர்காலத்தில் ஆளுமையுள்ள பிள்ளையாக வருகின்றது. ரேப்ரெகோடரில் தாலாட்டுப் பாட்டுக் கேட்டு வளரும் பிள்ளைக்கும் இதற்குமிடையே பாரிய வேறுபாடு இருக்கின்றது. 
                  புரட்டஸ்தாந்து கத்தோலிக்க மதத்தவரிடையே ஆராய்ச்சி நடாத்திய எமில்தூக்கேம் என்பவர் குடும்ப ஆதரவு குறைவாகவுள்ள புரட்டஸ்தாந்து மதத்தவரிடம் தற்கொலை அதிகமாகவும் குடும்ப ஆதரவு மிகுதியாகவுள்ள கத்தோலிக்க மதத்தவரிடையே தற்கொலை குறைவாகவும் உள்ளதாகக் கண்டறிந்து சமூகஒருமைப்பாடு என்னும் ஒரு கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். எனவே குடும்ப அமைப்புச் சரியான முறையில் செயற்படாமல் விட்டால் மனிதநாகரிகத்தின் பிழைப்பே கேள்விக்குறியாகிவிடும். 
               மேற்குலக நாடுகளில் இளங்குற்றவாளிகளின் புள்ளிவிபரங்களைக் கணிப்பிட்ட போது 70 வீத அமெரிக்கக் குற்றவாளிகள் பெற்றோரின் சரியான பராமரிப்பும் ஆலோசனையும் இல்லாமல் வளர்க்கப்பட்டவர்கள் எனவும் 75 வீத ஜேர்மனிய இளங்குற்றவாளிகள் தாய் ஒன்று தகப்பன் இரண்டு எனவும் தாய் இரண்டு தகப்பன் ஒன்று எனவும்; வளர்ந்த பிள்ளைகளே எனக் கண்டறிந்தார்கள். இந்தத் திருமண முறிவெல்லாம் ஏன் ஏற்படுகின்றது. சரியான அறிவுரைகள் பெற்றோர்கள் அருகேயிருந்து வழங்காதமையே தானே. எனவே இளங்குற்றவாளிகளைத் தவிர்ப்பதற்கும்  பெற்றோர் சேர்ந்து வாழ்தல் அவசியமாகப்படுகிறது.
                உழைப்பால் மனிதன் உயரவேண்டுமானால் உதவிக்கு ஆள் வேண்டும். அதற்கு எடுத்துக்காட்டு இந்த ஐரோப்பிய ஒன்றியம். எனவே உழைப்பால் உயர பெற்றோரைக்கூடவே வைத்திருங்கள். உலகத்திலேயே ஒருவனின் வளர்ச்சி கண்டு பொறாமைப்படாது பெருமைப்படுபவர் பெற்றோர் மட்டுமே. எனவேதான் ''ஈன்ற பொழுதில் பெருதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டதாய்'' என்று வள்ளுவப் பெருந்தகை கூறினார் 
              இரண்டு வாயுக்கள் ஒன்றிணைந்தால்த்தான் தண்ணீர் கிடைக்கும் நமது உடம்பில் பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும்; சரியான சதவீதத்தில் இணைந்து போனால்த்தான்; உடல்நிலை சரியாகும். எனவே மழலை தொட்டு முதியவர்வரை இன்பம் அநுபவிக்க ஒருவீட்டில் கண்டு கேட்டு உண்டு உற்றறியும் உறவு கடவுள் நமக்குக் கொடுத்த பரிசு. அதை ஏற்றுக்கொள்வோம். 
                சேர்ந்து வாழ்வதா இல்லையா என்று தீர்மானம் எடுக்க வேண்டியவர்கள் இளைய தலைமுறை. ஆனால், பெற்றோர் பெறுமதிமிக்கவர்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ்தல் சிறப்பைத்தரும். என்பதை எவரும் எதிர்க்க முடியாது. 

  திங்கள், 18 அக்டோபர், 2010

  தமிழர் கலாசாரமும் புலம்பெயர் நாடுகளில் பெற்றோர் பங்கும்

  இவ்வுலகம் உருவாகி இலட்சக்கணக்கான ஆண்டுகளாகி விட்டன. உயிரினங்கள் உருவாகி பல ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டன. அன்று தோன்றிய நாள் முதல் மனிதஇனம் பிறந்து இறந்து பின் புதிதாய்ப் பிறந்து எனத் தொடர்ந்து வாழ்ந்துவருகின்றது. இவ்வாறே மனிதஇனம் தொடர்ச்சியாக வாழ்ந்து வருவதற்கு அம்மக்களிடம் இருந்துவந்த உறவுமுறைகளே காரணமாக இருந்திருக்கின்றன. ஆரம்பகாலம் உண்ணவும் உறங்கவும் வாழ்ந்த மனிதனின் சிந்தனை வளர்ச்சியுற்றதன் காரணத்தால், இன்று சிறந்த கலாசாரப் பண்புகளைக் கொண்ட மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில் புலம்பெயர்வில் எமது இளந்தலைமுறையினர், கலாசாரம் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பது கேள்விக்குறியாக இருக்கின்ற போதும் அதைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு பெற்றோராகிய எம்மைச் சார்ந்தே இருக்கின்றது.

  முதலில் கலாசாரம் என்றால் என்ன என்கின்ற தெளிவு எம்மத்தியில் ஏற்பட வேண்டும். கலாசாரம் என்பது வாழுகின்ற காலநிலை பௌதிகசூழலுக்கேற்ப மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கால ஆச்சாரமே கலாசாரம் எனப்படுகின்றது. இது ஒரு எழுதப்படாத சட்டமாக இருக்கின்றது. சுவாமி விவேகானந்தர் கருத்தும் இதுவேயாக இருக்கின்றது. கலாசாரம் என்னும் சொல்லானது பழந்தமிழ் இலக்கியங்கள் எதிலுமே காணப்படவில்லை. கல்சர் என்னும் சொல்லானது ஆங்கிலத்திலே வரலாற்றுத் துறையில் ஒரு பொருளிலும் மானிடஇயல் துறையில் வேறுஒரு பொருளிலும் கையாளப்படுகின்றது. கிரேக்கர் உயர் பண்புடமையை பண்பாடு என்கின்றார்கள். Mathew Arnold என்ற மொழி ஆய்வாளர் கூறும் கல்சர் என்ற சொல்லுக்குரிய விளக்கமானது பண்பாடு என்ற சொல்லுடன் பொருந்திவருகின்றது. இதே பொருளில் எமது பழந்தமிழ் இலக்கியங்களில் சொற்கள் கையாளப்பட்டிருக்கின்றன. உதாரணமாக 'பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்'' என நெய்தற்கலி 16 இலேயும்; வள்ளுவர் திருக்குறளிலே பண்புடைமை என்ற தலைப்பில் ஒரு அதிகாரத்தையும் கையாண்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. எனவே கலாசாரம் என்பது பண்பாட்டுடன் பொருந்தி வருவதாக உள்ளது. பண்பூபடுதல், பண்பாடு எனப்படுகின்றது. எனவே மனிதனின் பண்பட்ட நிலையே கலாசாரமாகின்றது.

  சிந்துவெளிநாகரிக காலத்துக் கலாசாரமானது அக்காலச் சூழலுக்கமைய அமைந்திருந்தது. சங்கம் தொட்டு இன்று வரை கலாசாரத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டுக் கொண்டுதான் வந்திருக்கின்றன. சங்ககாலத்தில் கள்ளுக் குடித்தல் ஒரு கூறாக இருந்தபோது அது குற்றமாகக் கருதப்படவில்லை. சமணர் வருகை அதைக் குற்றமாகக் காட்டியது. பெண்டீர் பலரை மணக்கும் வாய்ப்பு இருந்த போது அது பண்பாட்டுக் குறையாகச் சொல்லப்படவில்லை. எனவே காலத்துக்குக் காலம் மாறுபாடுகள் ஏற்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. Pயளஉயட புளைடிநசன என்னும் அறிஞர் தன்னுடைய ஆய்விலே சூழ்நிலை சமூகநிலைக்கேற்ப உளம் சார்ந்து உருவாவதே கலாசாரம் என்கிறார். நிலத்தின் பண்பட்டநிலை அக்ரிகல்சர் ( Agriculture) போல் மனதின் பண்பட்டநிலை கலாசாரம். எனவே மக்களது அறிவுநலம், கொள்கைநலம், ஒழுக்கநலம், வாழ்க்கைநலம் போன்றவை பண்பட்டநிலையே கலாசாரம் என்று முடிவுக்கு வரவேண்டியுள்ளது. இந்நலங்கள் எல்லாவற்றையும் எமது வளரும் தலைமுறையினர் அவர்கள் வாழுகின்ற சூழ்நிலையிலே பெறக்கூடியதாக இருக்கின்றது. இதற்குப் பெற்றோரின் கண்காணிப்பும் அவசியமாகின்றது.

  ஒரு இனத்தின் குணநலன்கள் பிறப்பிலேயே வருவதில்லை. பிறந்தசூழல், வளரும், வாழும் சூழலுக்கேற்பவே அமையும். தொடக்கத்தில் இருந்த குணங்கள் பரிணாமவளர்ச்சி, அறிவுவளர்ச்சி மேம்பட விரிவடையும். வௌ;வேறு இனங்களாகப் பிரிந்து மாறுதலடையும் இல்லை மறைந்த போகும். இதுவே இன்றைய எமது இளந்தலைமுறையினர் நிலையாக இருக்கின்றது. எங்கள் இளந்தலைமுறையினர் சூழல் சுற்றம் நோக்கியே தம் வாழ்க்கைப் பாதையைக் கடக்கின்றனர் என்பது கண்கூடு. ஆனால் அவர்கள் காலில் சக்கரம் பூட்டப்பட்டிருக்கின்றது. கையில் மௌசை வைத்துக் கொண்டு உலகத்தையே காலடிக்குக் கொண்டுவருகின்றனர். அவர்கள் வெற்றிப்போக்கில் கலாசாரம் கண்ணுக்குத் தெரிவதில்லை. தாம் வாழுகின்ற சூழலுக்கேற்பத் தம்மை மாற்றிக் கொள்வார்கள். 1871ம் ஆண்டு ஆராய்ச்சியில், ஒரு ஓநாயுடன் சேர்ந்தே வளருகின்ற ஒரு மனிதக் குழந்தையானது ஓநாயுடைய இயல்புகளைப் பெற்றிருப்பதாக டார்வின் எடுத்துக்காட்டுகின்றார். சுற்றுச் சூழலில் இருந்து அகற்றப்படுகின்ற குழந்தை தண்ணீரிலிருந்து அகற்றப்பட்ட மீன் போலாகும் என்று கருதப்படுகின்றது. எனவே வாழும் சூழலிலுள்ள தவறான போக்குகள், அவர்கள் பாதையில் பங்கம் விளைவிக்கா வகையில் பெற்றோர் பார்வை நீருக்குள்ளும் நின்றபடி நீரின் சிறந்த அம்சங்களை பெற்றுக் கொண்டு வாழும் பக்குவநிலை போதிக்கப்பட வாழும் சூழலைக் கற்றிருக்க வேண்டியது அவசியமாகின்றது. சமுதாயவளர்ச்சிக்கேற்பத் தாமும் வளர்ந்திருக்க வேண்டியதும் கடமையாகின்றது.

  கலாசாரம் என்பது தனிமனிதனைச் சார்ந்து நிற்பதன்று தனி மனிதர் பலர் சேர்ந்தது தான் இனம். இனம் பல சேர்ந்ததுதான் சமூகம். எனவே கலாசாரம் என்பது இனவழி சமூகத்தின் போக்கைத் தாங்கி நிற்கின்றது. காலங்காலமாக சிறந்த பல நற்பண்புகளைக் கொண்டதாகக் கருதப்படும் நமது தமிழ் கலாசாரமானது, புலம்பெயர்விலும் போற்றிப் பாதுகாக்கப்படல் அவசியமாகின்றது. ஒரு கலாசாரத்தின் மூலவேர்கள் மொழியும் திருமணமுமாகும்.

  இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உலகில் ஏதோ ஒருமூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள். ஒரு மொழி அழிகின்ற போது அதன் பண்பாட்டு அம்சங்களும் அழிந்துவிடுகின்றன. உலகிலுள்ள 600 கோடி மக்கள் 6000 மொழிகளைப் பேசுகின்றார்கள். 3000 மொழிகள் ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் பேசுகின்றார்கள். அதிகமான மக்கள் பேசுகின்ற 20 மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இவ்வாறான தமிழ்மொழி எமது கலாசாரத்தைச் சுமந்து செல்கின்ற வண்டியாகக் காணப்படுகின்றது. இப்புலம்பெயர்வில் தமது பிள்ளைகளுக்கு தமிழ்மொழியைக் கற்பிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படுவோர் குறைவாகவே இருக்கின்றார்கள். அந்தப் பெற்றோர்களுடைய பிள்ளைகள் கூட 500, 1000 அந்நியநாட்டுப் பிள்ளைகள் படிக்கின்ற பாடசாலையில் 4, 5 பிள்ளைகளாகவே படிக்கின்றார்கள். அவர்கள் கூட ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தமது கல்விமொழியையே பேசுகின்றார்கள். அதைவிடக் கூடிய நேரத்தை அந்நியமொழிக்காரருடன் செலவுசெய்யும் இவர்கள் வீட்டில் பெற்றோருடன் தமிழ்மொழியில் உரையாடுவார்கள் என்று பார்த்தால், வீட்டில் தொலைக்காட்சியுடனும் கணனியுடனும் தமது பொழுதைக் கழிக்கின்றனர். மொழி கற்பதற்காகத் தொலைக்காட்சித் தொடர்பை ஏற்படுத்தினோமேயானால், அதில் கலாசார சீர்கேடுகள் நிறைந்தே காணப்படுகின்றன. எனவே மொழியின் முக்கியத்துவம் நோக்கிப் பெற்றோர் தமது பிள்ளைகளின் மொழியறிவை அதிகரிக்கச் செய்யும் வகையில், மொழியில் கவர்ச்சியை ஏற்படுத்தவல்ல கலைகளைத் தமிழ்மொழியில் கற்பிப்பதன் மூலம் தமிழ்மொழியில் நாட்டம் கொள்ளச்செய்ய வேண்டியது அவசியமாகின்றது.

  புலம்பெயர் மக்களுடன் தொடர்பு கொள்வதிலுள்ள இலகுத் தன்மையும் பண்பனுபவமும் நமது மக்களிடம் கிடைப்பதில்லை. ஆசிரியர் தொட்டு வைத்தியர் வரையுள்ள அந்நியோன்யப் போக்கு எம்மவருடன் பழகுவதில் எமது தலைமுறையினருக்குக் கிடைப்பதில்லை. மதிப்பு என்ற பெயரில் கண்டிப்பும், வரதட்சணை, தாலிகட்டல் என்ற பெயரில் பெண் அடக்குமுறையும் எமது கலாசாரத்தில் எம் இளஞ்சந்ததியினருக்கு வெறுப்பை ஏற்படுத்துகின்றது. இதுவே இலகுவாக நட்புரிமையுடன் பழகக் கூடிய புலம்பெயர் கலாசாரதில் விருப்பை ஏற்படுத்துகின்றது. முற்காலம் சமூகம் என்ற அமைப்பு சிறிய அளவில் கூட உருவம் கொள்ளாத காலம் அது. சமூகம் என்ற அமைப்பு உருவான காலத்தில், ஒரு சிலரே சேர்ந்து வாழ்ந்தனர். இச்சேர்க்கை ஒரு அமைப்பாக உருவாகும் வரைத் திருமணம் என்ற சமூக அமைப்புமுறை உருவாகவில்லை. ஊரை ஆளும் முறை வர தலைமுறைச் சொத்தாகச் சிலர் அநுபவிக்க விரும்பியபோது திருமணமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. எந்த உடைமையும் தேவையில்லையென இஷ்டம் போல் அலைந்து திரிந்தநிலை மிகப்பழையநிலை, பின் கால்நடைகள், ஆடவர் உரிமைகள், உடைமைகள் ஆயின, அதன் பின் நிலம் பெண்களின் முதல் உடமைகள் ஆயிற்று. நிலம் உடைமையாக அந்நிலங்களில் பயிர்ச் செய்ய ஆள்த் துணை தேவைப்பட்டது. ஆளைப் பெற்றுப் பெருக்க ஆண் துணை நிரந்தர தேவையாயிற்று. நிலத்தை நிரந்தர உடைமையாகக் காக்கவும் மற்றவர் இடையூற்றிலிருந்து மீட்கவும் பெண்ணுக்கு ஆண்துணை நிரந்தர முதன்மையாயிற்று. இதன் மூலமே திருமணம் என்ற அமைப்பு உருவாயிற்று என க.ப. அறவாணன் ஆய்ந்து தெரிவிக்கின்றார். திருமணம் ஒருவருக்கு ஒருவர் என்ற நிலையான உளநிலையிலிருந்து தவறி உடல்நிலைக்கு மாற்றப்படும் போது விவாகரத்து மலிவாகப் போகின்றது. இந்தத் திருமணமுறிவுகளுக்கு அடிப்படைக் காரணம் தனிக்குடித்தனமே என உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். நாட்டின் அரசியலுக்கு ஆலோசகர் தேவைபோல் வீட்டின் அரசியலுக்கும் ஆலோசகர் தேவையே. இதற்கு அநுபவ பலம் மிக்க பெற்றோர் அருகிருப்பது அவசியமாகின்றது.

  இப்போதுள்ள வரதட்சணை முறை ஆரியர் சார்பில் தமிழர்களிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். பண்டைக் காலத்தில் காதல்மணம் பெருவழக்காய் இருந்தது. காலப்போக்கில் கற்புமணம் முதன்மை பெற்றது. அக்காலப்பகுதியில், பெண்ணைப் பெற்றோர்கள் மணமகனுக்கோ மணமகன் பெற்றோர்க்கோ எதுவுமே கொடுத்ததில்லை. பெற்று, வளர்த்து, ஆளாக்கி நல்வழியில் நெறிப்படுத்திய பெண்ணை ஆண்மகனுக்குக் கொடுத்த பெற்றோர், வேறு யாது கொடுத்தல் வேண்டும். ஆனால் பெண்ணைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் ஆண்மகன் பெண்ணின் தாய்க்குப் பால்க்கூலி அல்லது முலைக்கூலி அன்பளிப்பாக அளிக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. பழங்குடிகளிடம் ஆடு, மாடு, நிலம், பொருள் ஆகியவற்றைப் பெண்ணின் பெற்றோருக்குக் கொடுத்துப் பெண்ணை எடுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இன்றுள்ள நிலை பெண்பிள்ளையைப் பெற்றோர் ஆண்மகனுக்கு வரதட்சணை கொடுத்தலாக ஆரியமுறைப்படி புலம்பெயர்ந்தும் தொடர்கின்றது. இந்நிலையில் வெறுப்புக் கொள்ளும் எமது இளந்தலைமுறையினரின் வெறுப்புக்குப் பெற்றோர் ஆளாகாமல் இருப்பதும் அவசியமாகப்படுகின்றது.

  இவ்வாறு எமது மக்களிடம் காணப்படும் சில தவறுகளைக் கூர்ந்து நோக்கும் எமது இளஞ்சந்தியினர் அந்நிய கலாசாரத்தை நாடிச் செல்வது தவிர்க்க முடியாது போகின்றது. இன்று இளஞ்சந்ததியினரிடம் அடித்தளமாய்க் காணப்படுவது மொழிக்கல்வி, அறிவு, பொது அறிவு, மனவளர்ச்சி, வாழ்க்கை வசதி போன்றவையே. இவற்றில் நாட்டம் கொள்கையிலே கலாசாரம் தவறிவிடுகின்றது. முற்றுமுழுதாக அந்நிய கலாசாரத்தின் மத்தியில் வாழும் எமது இளந்தலைமுறையினர் பெரும் இக்கட்டான சூழ்நிலையிலே தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைக் குறை கூறமுடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். நாம் முற்றுமுழுதாக தமிழ்கலாசாரம், தமிழ்மொழி, தமிழ் உறவினர் என்று ஒன்றாக வாழ்ந்தோம். ஆனால், எங்கள் பிள்ளைகள் அப்படியல்ல. முழக்கமுழுக்க அந்நிய கலாசாரத்தில் பல்வேறுபட்ட கலப்புச் சூழலில் தம் வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றனர். வாழ்நாள் முழுவதும் பார்த்துப் பழகிய எமது வாழ்க்கை வேறு. ஓரிரு நிகழ்ச்சிகளில் மட்டும் கண்டு கலந்து வாழும் எங்கள் பிள்ளைகளின் நிலை வேறு. எனவே அவர்கள் மனநிலையைப் புரிந்து விட்டுக் கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுத்து, அவர்கள் அருகிருந்து நாட்டைக்கற்று, சூழலைக்கற்று, நமது எதிர்கால சந்ததியினரை எமது கலாசாரத்துடன் வாழவைத்து, அவர் தம் பெருமையினை உலகறியச் செய்ய வேண்டிய பெரும்பணி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம் எம்மால் முடியாது என பெற்றோர் ஒதுங்கும் பொழுது பிள்ளைகள் குறைநிறைகளை அவதானிக்க முடியாமல் போகின்றது. நல்ல ஒரு சமுதாயத்தை நல்ல ஒரு கலாசாரத்தைப் புலம்பெயர்வில் கட்டிக்காக்க முடியாது போன பெரும் பழி பெற்றோர்களிடம் வந்து சேர்கின்றது.


  தமிழ் நற்பணிமன்றம் ஜேர்மனி 25ம் ஆண்டு மலருக்காக எழுதப்பட்டது.

  வெள்ளி, 15 அக்டோபர், 2010

  வாசித்தலின் நன்மைகள்    tpyq;nfhL kf;f sidaH ,yq;F E}y;
    fw;whNuhL Vid atH

  fy;tpawpTilNahNu kdpjnud;Wk; m/jpyhNjhH tpyq;FfnsdTk; jpUts;StH vLj;jpak;Gfpd;whH. ePl;Nlhiy thrpahd; epd;whd; Fwpg;gwpa khl;lhd; fhl;by; ed;kuk; vd;W nrhd;dhH xsitg;gpuhl;bahH. gue;Jgl;l mf;fy;tpawpit rpe;ijapy; epWj;jp;> mwpTr; nry;tj;ij rpuj;ijAld; NjLk; NghJ kdpjtho;T rpwg;gilfpd;wJ. mf;fy;tpapd; MzpNtuhf thrpj;jNy mikfpd;wJ. ,sikapw; fy;tp rpiyapy; vOj;J vd;gJ KJnkhop. kdtprhuq;fSk;> kdtpfhuq;fSkw;w ,sikg;gUtf;fy;tp rpe;jhJ> rpijahJ> rpjwhJkdjpy; ed;whfg; gjpAk;. vdNt fy;tpf;F mbj;jskhd thrpg;G ,sikapNyNa mUk;gp tUjy; Ntz;Lk;. thrpg;G vd;gJ NkNyhl;lkha; thrpj;jy;> Mokha; thrpj;jwpjy; vd;W tifg;gLfpd;wd. rQ;rpiffs; NkNyhl;lkha; thrpj;jhYk;$l %isapd; VNjh xU %iyapy; gjpag;gl;L mt;tg;NghJ vkJ Njitf;F ntspf; nfhz;L tug;gLfpd;wJ.
                     fy;tpiag; ngWtjw;F fhl;rp> mDgtk;> Nfs;tp Kjypa gytopfs; csNtDk;> mtw;Ws; jiyrpwe;jJ fhl;rpg;gLj;jy; %yk; fpilf;Fk; thrpj;jNy. nra;jpj;jhspNy> MrphpaHFwpg;G> cyfr;nra;jpfs;> tpisahl;Lj;Jiw> nghJmwpT> ,yf;fpak;> FWf;nfOj;Jg; Nghl;b Nghd;w gytplaq;fs; mlq;fpf; fhzg;gLtjdhy;> xt;nthUj;jUk; jkf;F tpUg;gkhd Jiwiaj; njhpTnra;J thrpf;ff;$bajhf ,Uf;Fk;. nra;jp> fl;Liu> tpkHrdk;> mwpf;if Nghd;wit nra;jpj;jhspy; ,lk;ngWtjhy; ,it xt;nthd;wpd; NtWghLfis mwpe;J nfhs;sf;$bajhfTk; ,Uf;fpd;wJ. ,d;W fzdpj;Jiw cyfnky;yhk; kpfr;rpwe;j Jiwahff; fUjg;gLfpd;wJ. thrpj;jYf;F ,yFthdjhfTk; cyfk; KOtJk; ,Uf;Fk; tplaq;fisj; Njb tPl;bDs;Ns ,Ue;jgb Njbg; ngw Kbahj gy Gj;jfq;fis tpuy; jl;lypd; %yk; fz; Kd;Nd nfhz;Lte;Jtpl Kbfpd;wJ. ,g;NghJ iff;flf;fkhd kpd;rhug;Gj;jfk; (Electronic Book) gyH iffspy; jtOfpd;wJ. Njitahd Gj;jfj;ijf; fzdpapypUe;J gjptpwf;Fk; nra;J NghFk; ,lq;fSf;nfy;yhk; nfhz;L nrd;W thrpf;ff; $baepiy Vw;gl;bUf;fpd;wJ. ,t;thW thrpj;jy; kdpjHfspilNa NkYk; NkYk; tsHf;fg;gLfpd;wJ.  rQ;rpifapNy tUfpd;w njhlHfijahdJ kf;fspilNa njhlHe;J thrpf;Fk; gof;fj;ijj; J}z;Ltjhf ,Uf;fpd;wJ. rphpg;gjdhy; Neha; jPUk;. eifr;Rit JZf;Ff;fs;  thrfiur; rphpf;fitj;J mtHfs; kdjpNy kfpo;r;rpia Vw;gLj;Jfpd;wJ. kfpo;r;rpia Vw;gLj;jf;$ba XNkhd;fs; Ruf;fg;gl thrpj;jYk; xU fhuzkhf mikfpd;wJ.
              fzpjk;> tpQ;Qhdk;> nkhop Kjypa ghlq;fisf; fw;Fk; khztd; xU tpNtfpahf ,Ue;jhYk; nghJ mwpT ,ydhapd; mtDila tpNtfj;jhy; KOg;gad; ngwKbahky; Ngha;tpLk;. ghlE}y;fNshL gw;gy cyfr;nra;jpfs; mwpAk; NghNj gue;Jgl;l cyf mwpT ngw;W cyFf;Nfw;g thog;gofpf; nfhs;thd;. gy;NtWgl;l fyhr;rhutpOkpaq;fis thrpg;gpd; %yk; mwpe;J nfhs;tJld; ey;yd jPad vitnadg; gFj;JzUk; gz;igg; ngWk; mtDs;sk;> tphptilfpd;wJ. vjpHfhy tho;Tf;Fj; jk;ik Maj;jQ;nra;J nfhs;Sk; cd;djepiy cz;lhfpd;wJ. thrpj;jiyg; nghOJNghf;fhff; nfhz;bUf;Fk; xU kdpjd; NtW Njitaw;w vz;zq;fSf;Fs; jd;id vjpHfhyr;rpw;gpfs; mwpthspfshfTk; cs;sj;jhy; caHe;jth;fshfTk; tsu Ntz;Lkhdhy;> fz;lJ fw;fg; gz;bjdhthd; vd;gjw;fpzq;f> xt;nthUtUk; ey;ydntd fz;ltw;iw thrpj;Jf; fw;Wf; nfhs;Sjy; Ntz;Lk;. mJNt mtid tho;tpd;  cr;rpf;F ,l;lr; nry;Yk;.

                              

  வியாழன், 14 அக்டோபர், 2010

  பெண்ணின் பெருந்தக்க யாவுள

                                                   G+kpiag; ghJfhf;Fk; XN]hd; gilNghy; cyifg; fhf;Fk; Foe;ijiag; ghJfhf;Fk; fUtiwapDs;> G+kpiaf; Fspur; nra;Ak; fly; Nghd;w fUg;igj; jputj;jpDs; kpje;J tho;e;J fU ,Uspy; fspj;Jwq;fpa fUKfpy; ngz;zhs;> fUtpwq;fp cyfpd; FspHikf;fha;f; fz;tpopj;jhs;. cyfpd; xsp G+kpj; jhapd; kbapy; Gfyplk; GFe;jJ. ngz;zha;g; gpwe;J fs;spg; ghYf;F ,iuahfpa fhyk; fiue;Njhb> mts; nrhy;Yf;fha; ehL tpopj;jpUf;Fk; fhyk; fhl;rpf;F te;J tpl;lJ. ,d;W tpz;ntspapy; cyhte;j ngz; ijhpaj;jpd; KOtbtk;> ,d;gk; Ritf;Fk; Rje;jpug; gwit.
                ngz; vd;Wk; mbikapy;iy. mtis ahUk; mlf;fTkpy;iy. mtNs mlq;fp tho;e;jhs;. mtspd; nkd;ik mlf;fj;ij mzpfsdhf;fpaJ. md;Wk; ,d;Wk; ngz;fisg; ghLk; ftpQHfNs mjpfk;. nfhbnadf; fztd; Njhspy; rha;e;jhs;. nfhOnfhk;gha; mtd; ,Uf;f> mtidg; glHe;jhs;. funkd khkpahH cwtpy; ifNfhHj;jhs;. Mrhdha; Foe;ijfis Mw;Wg;gLj;jpdhs;. ehj;jdhH tho;tpy; eyd; tpUk;gpahdhs;. nkhj;jj;jpy; FLk;g nrhj;Nj mtshdhs;. gy tPLfspd; Ml;rpNa ehl;bd; Ml;rp. Gy tPLfs; ,ize;jNj> ehL. tPL tpsq;f ehL tpsq;Fk;. vdNt jhd; ngz;fs;> tPl;bd; xsp my;yJ ehl;bd; xsp vd;fpd;Nwhk;. ,e;j tPl;bw;F tpsf;Nfw;w xU ngz; Njit vd khkpahH ehLtjd; #l;Rkk;jhd; vd;d? tpsf;Nfw;w tpuy;fs; mw;wtHfsh tPl;bypUg;NghH. GFe;j tPl;bd; ngUik xspia cyfpw;F tpsf;fntd GFe;jtshjyhy; tpsf;nfhpf;f xU ngz; tuNtz;Lnkd;w thHj;ijiag; gpuNahfpj;jdH> nghpNahH. nkd;ikahd ,jo; gl;l CJFoy; ntWq;fhw;iw cs;nsLj;J ,irahf ntspNa gug;Gjy; Nghy fztd; kidapy; nkd;ikahfg; GFe;J rhjhuz FLk;gj;ijj; jukhd FLk;gkha; cyfpw;F czHj;jg; GFkidapy; fhy; itg;ghs;.
             clYWjp nfhz;l Miztpl kdTWjp nfhz;l ngz; rpwg;G kpf;fts;. ngz;Zf;Fg; gpurtk; vd;gJ kWgpwg;G vd;ghHfs;. xU Foe;ij gpwf;Fk; tiu  vj;jidNah Ntjidfisr; Rkf;fpd;whs;. jd; capiug; gzak; itj;J me;jf; Foe;ijiag; ngw;nwLf;fpd;whs;.  Foe;ij gpwe;J kW tUlNk mLj;j Foe;ijf;Fj; jahuhfp tpLfpd;whs;. ,JNt mtspd; ijhpaj;jpw;F XH vLj;Jf;fhl;L. fUizf;Fk; ,uf;fj;jpw;Fk; rfpg;Gj;jd;ikf;Fk; nghWikf;Fk; ,Ug;gplk; ngz;jhd;. vdNtjhd; xU Foe;ij tsUk; tiuapy; jhapd; guhkhpg;gpy; ,Uf;f Ntz;Lnkd;W rl;lk; $WfpwJ.
              ,y;ywj;ijtplr; rpwe;j mwk; xUtDf;F ,y;iy. ,e;j ,y;ywj;ijr; rpwg;ghd Kiwapy; elhj;j Ntz;Lnkd;why;> rpwe;j ,y;yhs; Njit. ,jd; %yNk mtd; r%fj;jpd; Kd; VWNghy; gPLeil gapy KbAk; vd ts;Stg; ngUe;jif $wpapUf;fpd;whH. clyhy; thOk; M;iztpl cs;sj;jhy; thOk; Mw;wy; ngw;w ngz; cyfpy; rpwg;Gg; ngWfpd;whs;. ,e;jg; ngz;ikapd; ngUikia czHe;Jjhd;
             ~~kq;ifauha;g; gpwg;gjw;Nf ey;y
              khjtk; nra;jply; Ntz;Lkk;kh|| vd;W ftpkzp Njrpatpehafk;gps;is mtHfs; $Wfpd;whH.
              ~~xU mofpa fw;Gila ngz; Mz;ltdpd; KOikahd rpwe;j gilg;ghfTk;> Njtijfspd; ngUikahfTk;> cyfpd; mjpmw;Gjkhd jdpj;j mjprakhfTk;  tpsq;Ffpd;whs;|| vd;W n`Hkp]; vd;Dk; mwpQH $Wfpd;whH.
             ~~ehk;ngw;wpUf;fpd;w tho;tpw;Fk;> me;j tho;itj; jFjpAs;sjhf mikj;Jj; je;jjw;Fk;> ehk; flTSf;F mLj;jgbahfg; ngz;fSf;Ff; flikg;gl;Ls;Nshk;|| vd;W nghtP vd;Dk; mwpQH nkhope;Js;shH.
             ,jidNajhd; ekJ kfhftp ghujpahUk; 
         ~~ngz;Zf;F Qhdj;ij itj;jhd;
          Gtp Ngzp tsHj;jpLk;

                             செவ்வாய், 12 அக்டோபர், 2010

  என் கேள்விக்கு என்ன பதில்

  காட்சி என்ற பெயரில் கலாச்சாரச் சீர்கேடுகள் காட்டுகின்ற தொலைக்காட்சி கண்டு ஒரு சின்ன உள்ளத்தில் எழுந்த கேள்விகள் 

            என் கேள்விக்கு என்ன பதில்


  தமிழகத் தாத்தா!  
              
  உங்களை நம்பினேன். இன்று கேட்கிறேன். என் கேள்விக்கு என்ன பதில். இரட்டைக் கலாச்சாரம் மத்தியில் தமிழச்சியாய் ஜேர்மனி மண்ணில் வாழுகின்ற ஒரு சின்னவள் யான். சிரந்தாழ்த்தி சில கேள்விகள் உங்கள் காதுகளுக்குச் சிந்துகிறேன்.     மனங்கொள்ள முறையாய் விடை நீங்கள் தர வேண்டும். என் தாய் என்னைத் தமிழ் கலாச்சாரத்தில் வளர்க்கின்றாள் என்று தான் நினைக்கின்றேன். உங்கள் ஆதரவாளர்களின் தொலைக்காட்சி என்று சொல்லப்படுகின்ற கலைஞர் தொலைக்காட்சியே முதல்முதல் என் வீடு தேடி வந்த ஒலிஒளிக் காட்சி. தமிழர் உணவு, உடை, மொழி, கலாச்சாரம் கற்க இந்த ஊடகமும் ஒரு கல்விக்கூடமாக அமையும். என்று என் தந்தையும் இணைந்தே இணைப்பைத் தந்தார். தமிழ் மழை கொட்டும் உங்கள் வசனநடையில் மகிழ்ந்தவர்கள் அல்லவா என் பெற்றோர். உங்கள் பொக்கை வாயிலிருந்து புறப்பட்டு வந்த தமிழ் கண்டு புளகாங்கிதம் கொள்வோம். இன்று உங்கள் நாட்டில் உங்கள் ஆட்சியில் தமிழகம் இருந்து புறப்பட்டுச் செல்லும் தமிழ் கலாசாரம் கண்டு மனம் மிக வருந்துகிறோம். 
               

  தாத்தா! கோடையென்ன, மாரியென்ன போர்த்திக்கட்டிய உடையில் நான் வெளிவருவேன். கேட்டால், தமிழர் கலாசாரம் என்று ஆடையில் அடக்கம் போதித்தாள் என்தாய். அந்நிய ஆடவர் கைபடும்போது அருவருப்பு உணர்ச்சி தோன்ற வேண்டும். என்று கற்பு மொழி ஊட்டினாள் என் அன்னை. இத்துடனே உங்கள் தொலைக்காட்சி போட்டார் என் தந்தை. ஏங்கி விட்டோம். விநாயகசதுஷ்டி என்றால் தலைமுழுகித் தெய்வதரிசனம் காண ஆலயம் செல்வது வழக்கம். அந்தக் காட்சிகள் காணலாம் இந்திய மண்ணிலே. இந்த ஆலய வழிபாட்டின் மகிமைதனை மனங்கனியக் காணென்று தொலைக்காட்சி முன் இருத்தினர் என் இனிய பெற்றோர். ஆனால் நடிகநடிகையர் ஆடைகளுடன் அங்கங்கள் எல்லாம் அங்கிங்கெல்லாம் தென்படப் பேட்டி என்ற பெயரில் போட்டுவந்த ஆடைகளைக் கண்டபோது எனக்குள் தோன்றிய கேள்வி அம்மா எனக்கு இங்கே சொன்னதெல்லாம் பொய்யா தாத்தா? தமிழ் கலாச்சாரத்தில் ஊறிய தனித்துவமான நாடு இந்தியா என்று என் அம்மா சொன்னதெல்லாம் பொய்யா தாத்தா? 
              
  அரசியல்வாதியாய் யான் உங்கள் தோற்றத்தைக் காணவில்லை. செந்தமிழ்க் காவலராய் சிந்தையில் உங்களைக் கொண்டுள்ளேன். உங்கள் முன்னே கால்நீட்டி கால்நீட்டிக் காட்சி பொம்மைகளாய் துண்டுகட்டி மேடைகளில் தொங்கி ஆடும் மங்கையர்களைக் கறுப்புக் கண்ணாடியூடாக நீங்கள் கண்டு கொண்டிருப்பதைப் பார்த்த போது, உங்களைப் பற்றி அம்மா எனக்குச் சொன்னதெல்லாம் பொய்யா  என்று சந்தேகிக்கின்றேன். 
              
  மக்கள் உள்ளங்களில் நல்ல விடயங்களைப் பதிக்கும் நல்ல மாயப் பொருள் சினிமா என்பார்களே. அந்நிய நாட்டில் தமிழர் கலாச்சாரத்துடன் தமது வாரிசுகளை வளர்க்கத் துடிக்கும் என் பெற்றோர் போன்றோர்களின் எண்ணங்களில் மண்ணைத் தூவும் கைமருந்தாக அல்லவா இவ்வாறான தொலைக்காட்சிகள் இருக்கிறன. நாம் நாமாக வாழவேண்டும் தாத்தா. அந்நியமோகம் நமக்கு வேண்டாம் தாத்தா. இந்த மண்ணில் அந்நிய கலாச்சாரத்தின் அருவருப்புகளைக் கண்டு கொண்டிருக்கும் எம் போன்ற வளர் தலைமறைகளுக்கு நல்ல மனப்பதிவுகள் கிடைக்காதா?
                
  அருவருப்பான காட்சிகளைக் குடும்பமாய் கண்டுகழிக்க வழி செய்த தாத்தாவே! கண்மூடி நான் இருக்க இந்தியமண்ணில் நான் பிறக்கவில்லை. ஜேர்மன் மண்ணிலே பிறந்து வாழும் ஒரு தமிழிச்சி. இக்காட்சிகளை இன்னும் நாம் காணத்தான் வேண்டுமா? கேட்பேன், கேட்பேன் திரும்பத் திரும்பக் கேட்பேன். இத்தனை விடயங்கள் தவிர இன்னும் பல என் நெஞ்சில் இன்னல்கள் செய்கின்றன. மீண்டும் உங்கள் பதில் கண்டு தொடரும். 

  இவள் 
  தமிழ்மகள்

  தமிழ் பேசத் தெரியாத மனிதர்களல்லாத திறமைசாலிகள்

  தமிழ் பேசத் தெரியாத மனிதர்களல்லாத திறமைசாலிகள் சில விடயங்களில் என்னை ஈர்த்தார்கள்.   அவர்கள் திறமை கண்டு வியந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

                                 தேள்:


  8 கால்களுடன் முன்னே இரண்டு கொடுக்குகளுடன் பின்னே நஞ்சுப்பை கொண்ட கொடுக்கும் கொண்டு உலகை வலம் வரும் ஒரு உயிரினமே தேள் இனம். உலகத்திலே 300 வகைளான தேள்கள் இருக்கின்றனவாம். இந்தியாவிலே 100 வகையான தேள்கள் உண்டாம். இரவிலே தொழில் வேட்டையாடலாக இருக்கின்றது. இவற்றின் உணவுகளாக சிறிய பூச்சிகள், வெள்ளை எறும்புகள், சிலந்திப்பூச்சிகள், கரப்பான் பூச்சிகள் என்பனவாகும். இதற்குப் 10 கண்கள் உள்ளன. இவை முன்னும் பின்னுமாகக் காணப்படும். ஆனால், இதற்குப் பார்வை குறைவாக இருக்கின்றது. 4 அங்குலம்தான் இதன் பார்வைப்புலன். காதுகள் இல்லை. ஆணும் பெண்ணும் சேரும் முன் ஆடிக் கழிப்பார்கள். சேர்ந்த பின் பெண் ஆணைக் கொன்றுவிடும். 


  இந்தத் தேளானது கொட்டினால், என்ன மருந்து போட்டாலும் 24 மணித்தியாலங்கள் வலி இருக்கும். பொட்டாசியம் காபனீரொட்சைட்டு இதற்கு மருந்தாக அமைகின்றது. கொட்டியவருக்கு இரத்தத்தில் விஷம் கலந்து மாரடைப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. செந்தேள் கொட்டினால், குழந்தைகள் இறந்துவிடும். பெரியவர்களுக்குப் பாதிப்பு இல்லை. இப்படியான தேளின் ஆயுட்காலம் 4 முதல் 25 ஆண்டுகள் ஆகும். 


                                      முதலை:

  நீரிலும் நிலத்திலும் வாழும் ஒரு ஊர்வன இனத்தைச் சேர்ந்த விலங்கே முதலை ஆகும். இது ஆபிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற வெப்பவலய நாடுகளில் வாழுகின்றது. இதன் பல் இடுக்கிலே இறைச்சி பொறுத்துக் கொண்டால், நீரினுள்ளே ஆ என்றபடி வாயை விரித்துப் படுத்திருக்கும். அப்போது குகிமா என்ற ஒரு குருவி, வாயினுள் வந்து இருந்தபடி அதன் பற்களைத் துப்பரவு செய்து விட்டுப் பறந்து போன பின் தன் வாயை முடும். இந்தக் குருவியின் தலையில் முள் போன்ற ஒரு நீணட வடிவம் இருக்கின்றது. இதன் மூலமே சமூகப்பணி செய்கின்றது. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யும் உன்னத குணம் மனிதனுக்கு மட்டும் என்று தவறான எண்ணங் கொண்ட மாந்தர்களுக்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு. இவற்றின் மொழி கற்கவில்லையே நாம்........

                                  கறையான்:  கறையானுக்குக் கண்கள் இல்லை. ஆனால், கண்கள் உள்ளவர்கள் செய்யாத வேலைகள் இவை செய்கின்றன என்று நினைக்கும் போது வியப்பாக இருக்கின்றது. இவர்களில் அரசன், அரசி, தொழிலாளர்கள், படைவீரர்கள், போன்ற பல பிரிவுகள் இருக்கின்றன. அரசியே முட்டை இடுகின்றது. இது 50.000 முட்டைகள் இடும். இக் கறையான்கள் சிறந்த கட்டடக்கலை நிபுணர்கள் என்றால் நம்புவீர்களா? தொழிலாளர்க் கறையான்கள் செம்மண்ணை எடுத்து உண்ணும். அச்செம்மண் வயிற்றினுள் சென்று அமிலங்களுடன் சேர்ந்து ஒருவகைப் பதார்த்தமாக மாறும். இதை வாயினால் வெளியெடுத்து அவற்றைக் கொண்டு தன் கட்டிடப்பணியை மேற்கொள்ளும். இந்தக் கட்டிடத்தில் பழுது ஏதாவது ஏற்பட்டுவிட்டால், டிக்டிக் என்று மற்றைய கறையான்கள் தட்ட தொழிலாளர்கள் வந்து திருத்தம் செய்வார்கள். அந்தக் கட்டிடத்தினுள் பலவகையான அறைகள் உண்டு. உலாவும் அறையும் உண்டு. 

       தொனேசியாவிலுள்ள ஒரு கறையான் புற்று 15,000 தொன் எடையுள்ளது. இது 150 ஆண்டுகள் பழைமையானது. ஆபிரிக்கக் காடுகளிலுள்ள கறையான் புற்றுக்களை யானைகள் கூட உடைக்க முடியாது. இந்தக்கட்டிடத்தை 21 பாகை சென்ரிகிறேட் இலிருந்து 36 பாகை சென்ரிகிறேட் வரையுள்ள வெப்பநிலையில் வைத்திருக்கும்.  புது அரசி நியமனம் பெறும் போது வேறு வீடுகட்டித் தங்க வைக்கும். அரசி இறக்கும் பட்சத்தில் அந்த அரசியை உண்டுவிட்டு புது அரசியிடம் சென்றுவிடுவார்கள். 


  படைவீரர்கள்:


  படைவீரர்களே வீட்டைப் பாதுகாக்கின்ற பணியைச் செய்கின்றார்கள். இப்படைவீரர்கள் மெழுகுபோல் ஒரு எச்சிலை அக்கட்டிடத்தில் உமிழ்ந்துவிடுவார்கள். அதன் மணத்திலே பூச்சிகள் நெருங்காது. மீறி வருகின்ற பூச்சிகளைப் படைவீரர்கள் கொன்று விடுவார்கள். 


                இப்படிப் பல பணிகளைப் பிரித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்து தமது கடமைகளைச் செய்து வாழ்க்கையை நடத்துகின்ற, இந்தக் கறையான் இனம் பெரிய சமூகத்தையே கொண்டிருக்கின்றது


                                       மண்புழு:

  6 ஆண்டுகளே வாழக்கூடிய மண்புழுக்களில் ஆற்றங்கரையில் வாழுகின்ற வகை 16 ஆண்டுகள் வாழுகின்றன. இவற்றிற்கும்  கண்கள், காதுகள் இல்லை. ஊhயசடநள னுயசறin 3 மாதங்கள் கூடாரம் அடித்து அருகில் இருந்து ஆராய்ந்து மண்புழுக்கள் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளார். உடம்பில் சிவப்பு நிறம் ஈமோகுளோபின் மேல் இருக்கின்றது. இதனால், இது இலகுவாக ஒட்சிசனை உள்ளெடுக்கக் கூடியதாக இருக்கின்றது. இது 6 தொடக்கம் 15 சென்ரிமீற்றர் வளரக் கூடியது. இதன் உடலிலே 150 வளையங்கள் உண்டு. தண்ணீருக்குள் அப்படியே நிற்கும். மரங்களில் ஏன் ஏறிஏறி வருகின்றது என்பதுதான் எனது கேள்வியாக இருக்கின்றது. ஆண் பெண் பாகங்கள் ஒன்றாகச் சேர்ந்து அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகக் காட்சியளிக்கும். ஆனால், வேறு மண்புழுவுடன் சேர்ந்தே இனப்பெருக்கம் செய்யும். 


                                     ஒட்டகம்:


  பெரிய இரு முகடுகளைத் தாங்கிய வண்ணம்; சாதாரணமாக வாழுகின்ற ஒட்டக இனமானது, வாழுகின்ற சூழலுக்கேற்ப தனது உடலமைப்பைக் கொண்டு வாழுகின்ற ஒரு மிருகம்.
             
            பாலைவனப் பகுதிகளில் வீசுகின்ற காற்றானது மண்ணை அள்ளிக் கொண்டு வீசும். அப்படியான நேரங்களில் ஒரு விழித்திரை தோன்றி மண் கண்களினுள் போகாமல் தடுக்கும். ஆனால், அந்த விழித்திரை மூடிய நேரத்திலும் கூட பார்க்கக் கூடிய சக்தி அதற்கு உண்டு. இதன் மூக்கிலே சுருக்குத் தசை இருக்கின்றது. காற்று மணல் உள்ளே போகாமல் அது தடுக்கின்றது. பாலைவன மணலிலே கால்கள் புதையாமல் இருப்பதற்குப் பாத்திர வடிவத்திலே பாதங்களைக் கொண்டிருக்கின்றது. 10 நாட்கள் நீரில்லாமல் வாழக்கூடியது. மணலிலே பாதச்சுவடுகள் அழிந்து விட்டாலும், முகர்ந்து பார்த்துத் தன் இனத்தை அறிந்து கொள்ளும். 


                வாழுகின்ற இடத்திற்கேற்ப உடலமைப்பும் பழக்கவழக்கங்களும் வாழும் பண்பும் கொண்டே உயிரினங்கள் வாழுகின்றன. அதேபோல், தமக்குப் பொருத்தமான காலநிலையும் வாழிடமும் கொண்டே தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுகின்றன. உலக உயிரினங்களின் தோற்றத்தில் அனைத்தும் அற்புதமும் ஆச்சரியமுமே.


  குறிப்பு :


  என் வாழ்வியல் இலக்கியம் என்ற பகுதியில் வாயில்லா ஜீவராசிகளுக்கான   இரண்டு இலக்கியங்கள் இருக்கின்றன. சுவைத்து இன்புறுங்கள்.
    

  திங்கள், 11 அக்டோபர், 2010

  வானில் வலம் வரும் கறுப்பு நிலா

            வானில் வலம் வரும் கறுப்பு  நிலா

  வெள்ளை நிலா பார்த்து வியந்து நிற்கின்றோம். ஆராய்ச்சி செய்கின்றோம். ஏன்? குடியிருக்கவும் ஆசைப்படுகின்றோம். ஆனால், வானில் உலாவருகிறதே அதை கவனிக்காமல் விட்டுவிட்டோமே. கவிதை எழுத மறந்துவிட்டோமே. காலம் கடந்து என் காதில் விழுந்த செய்தி. ஆனாலும் காத்திரமான செய்தி அல்லவா. விண்ணுலகில் பல அதிசயங்களை யான் அறிகின்றேன். நான் விஞ்ஞானியல்ல. ஆனால் விஞ்ஞானிகளின் இரசிகை;. வியப்பான இயற்கை அற்புதங்கள் எனக்குப் பாயாசம் உண்டதுபோல் இருக்கும்.  ஏனென்றால், அமுதம் நான் உண்டதில்லை. 


          சனிக்கோள் பற்றி ஆராய்ச்சிக்கு சென்ற காசினி என்ற விண்கலமே இக்கறுப்புநிலாவைப் படம் பிடித்திருக்கின்றது. மேடு பள்ளங்கள் நிறைந்த இந்த நிலா சனிக்கிரகத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றது. இது உருண்டையாக இல்லாமல், ஒரு பகுதி கடிக்கப்பட் அப்பிள்பழம் போல் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது சனிக்கிரகத்தால் ஈர்க்கப்பட் ஒரு கோளாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. போபி என்று பெயர் வைக்கப்பட்ட இது,  நிச்சயமாக சூரியக்குடும்பம் இல்லையென்பது இவர்கள் கருத்தாக உள்ளது. 200 கிலோ மீற்றரே குறுக்களவுள்ள இந்நிலா, தன்னைத்தானே ஒருமுறை சுற்ற 9 மணி 16 நிமிடம் எடுக்கின்றதாம். முழுக்கமுழுக்க கரிப்பொருளால் ஆனதால், இது கறுப்பாகத் தென்படுகின்றது. இது ஒரு காலத்தில் வால் நட்சத்திரமாக இருந்திருக்கலாம் 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சனியால் ஈர்க்கப்பட்டு சனியைச் சுற்றிக் கொண்டிருக்கின்றது. நாமெல்லாம் அதன் அநுபவத்தில் ஒரு தூசி. கறுப்புநிலா என்றதனால் இவ்வளவு காலங்களும் அப்படியே கவனிக்கப்படாமல் இருந்திருக்கிறது போலும்.

  அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

    இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...