• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 12 அக்டோபர், 2010

    தமிழ் பேசத் தெரியாத மனிதர்களல்லாத திறமைசாலிகள்

    தமிழ் பேசத் தெரியாத மனிதர்களல்லாத திறமைசாலிகள் சில விடயங்களில் என்னை ஈர்த்தார்கள்.   அவர்கள் திறமை கண்டு வியந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

                                   தேள்:


    8 கால்களுடன் முன்னே இரண்டு கொடுக்குகளுடன் பின்னே நஞ்சுப்பை கொண்ட கொடுக்கும் கொண்டு உலகை வலம் வரும் ஒரு உயிரினமே தேள் இனம். உலகத்திலே 300 வகைளான தேள்கள் இருக்கின்றனவாம். இந்தியாவிலே 100 வகையான தேள்கள் உண்டாம். இரவிலே தொழில் வேட்டையாடலாக இருக்கின்றது. இவற்றின் உணவுகளாக சிறிய பூச்சிகள், வெள்ளை எறும்புகள், சிலந்திப்பூச்சிகள், கரப்பான் பூச்சிகள் என்பனவாகும். இதற்குப் 10 கண்கள் உள்ளன. இவை முன்னும் பின்னுமாகக் காணப்படும். ஆனால், இதற்குப் பார்வை குறைவாக இருக்கின்றது. 4 அங்குலம்தான் இதன் பார்வைப்புலன். காதுகள் இல்லை. ஆணும் பெண்ணும் சேரும் முன் ஆடிக் கழிப்பார்கள். சேர்ந்த பின் பெண் ஆணைக் கொன்றுவிடும். 


    இந்தத் தேளானது கொட்டினால், என்ன மருந்து போட்டாலும் 24 மணித்தியாலங்கள் வலி இருக்கும். பொட்டாசியம் காபனீரொட்சைட்டு இதற்கு மருந்தாக அமைகின்றது. கொட்டியவருக்கு இரத்தத்தில் விஷம் கலந்து மாரடைப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. செந்தேள் கொட்டினால், குழந்தைகள் இறந்துவிடும். பெரியவர்களுக்குப் பாதிப்பு இல்லை. இப்படியான தேளின் ஆயுட்காலம் 4 முதல் 25 ஆண்டுகள் ஆகும். 


                                        முதலை:

    நீரிலும் நிலத்திலும் வாழும் ஒரு ஊர்வன இனத்தைச் சேர்ந்த விலங்கே முதலை ஆகும். இது ஆபிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற வெப்பவலய நாடுகளில் வாழுகின்றது. இதன் பல் இடுக்கிலே இறைச்சி பொறுத்துக் கொண்டால், நீரினுள்ளே ஆ என்றபடி வாயை விரித்துப் படுத்திருக்கும். அப்போது குகிமா என்ற ஒரு குருவி, வாயினுள் வந்து இருந்தபடி அதன் பற்களைத் துப்பரவு செய்து விட்டுப் பறந்து போன பின் தன் வாயை முடும். இந்தக் குருவியின் தலையில் முள் போன்ற ஒரு நீணட வடிவம் இருக்கின்றது. இதன் மூலமே சமூகப்பணி செய்கின்றது. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யும் உன்னத குணம் மனிதனுக்கு மட்டும் என்று தவறான எண்ணங் கொண்ட மாந்தர்களுக்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு. இவற்றின் மொழி கற்கவில்லையே நாம்........

                                    கறையான்:



    கறையானுக்குக் கண்கள் இல்லை. ஆனால், கண்கள் உள்ளவர்கள் செய்யாத வேலைகள் இவை செய்கின்றன என்று நினைக்கும் போது வியப்பாக இருக்கின்றது. இவர்களில் அரசன், அரசி, தொழிலாளர்கள், படைவீரர்கள், போன்ற பல பிரிவுகள் இருக்கின்றன. அரசியே முட்டை இடுகின்றது. இது 50.000 முட்டைகள் இடும். இக் கறையான்கள் சிறந்த கட்டடக்கலை நிபுணர்கள் என்றால் நம்புவீர்களா? தொழிலாளர்க் கறையான்கள் செம்மண்ணை எடுத்து உண்ணும். அச்செம்மண் வயிற்றினுள் சென்று அமிலங்களுடன் சேர்ந்து ஒருவகைப் பதார்த்தமாக மாறும். இதை வாயினால் வெளியெடுத்து அவற்றைக் கொண்டு தன் கட்டிடப்பணியை மேற்கொள்ளும். இந்தக் கட்டிடத்தில் பழுது ஏதாவது ஏற்பட்டுவிட்டால், டிக்டிக் என்று மற்றைய கறையான்கள் தட்ட தொழிலாளர்கள் வந்து திருத்தம் செய்வார்கள். அந்தக் கட்டிடத்தினுள் பலவகையான அறைகள் உண்டு. உலாவும் அறையும் உண்டு. 

         தொனேசியாவிலுள்ள ஒரு கறையான் புற்று 15,000 தொன் எடையுள்ளது. இது 150 ஆண்டுகள் பழைமையானது. ஆபிரிக்கக் காடுகளிலுள்ள கறையான் புற்றுக்களை யானைகள் கூட உடைக்க முடியாது. இந்தக்கட்டிடத்தை 21 பாகை சென்ரிகிறேட் இலிருந்து 36 பாகை சென்ரிகிறேட் வரையுள்ள வெப்பநிலையில் வைத்திருக்கும்.  புது அரசி நியமனம் பெறும் போது வேறு வீடுகட்டித் தங்க வைக்கும். அரசி இறக்கும் பட்சத்தில் அந்த அரசியை உண்டுவிட்டு புது அரசியிடம் சென்றுவிடுவார்கள். 


    படைவீரர்கள்:


    படைவீரர்களே வீட்டைப் பாதுகாக்கின்ற பணியைச் செய்கின்றார்கள். இப்படைவீரர்கள் மெழுகுபோல் ஒரு எச்சிலை அக்கட்டிடத்தில் உமிழ்ந்துவிடுவார்கள். அதன் மணத்திலே பூச்சிகள் நெருங்காது. மீறி வருகின்ற பூச்சிகளைப் படைவீரர்கள் கொன்று விடுவார்கள். 


                  இப்படிப் பல பணிகளைப் பிரித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்து தமது கடமைகளைச் செய்து வாழ்க்கையை நடத்துகின்ற, இந்தக் கறையான் இனம் பெரிய சமூகத்தையே கொண்டிருக்கின்றது


                                         மண்புழு:

    6 ஆண்டுகளே வாழக்கூடிய மண்புழுக்களில் ஆற்றங்கரையில் வாழுகின்ற வகை 16 ஆண்டுகள் வாழுகின்றன. இவற்றிற்கும்  கண்கள், காதுகள் இல்லை. ஊhயசடநள னுயசறin 3 மாதங்கள் கூடாரம் அடித்து அருகில் இருந்து ஆராய்ந்து மண்புழுக்கள் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளார். உடம்பில் சிவப்பு நிறம் ஈமோகுளோபின் மேல் இருக்கின்றது. இதனால், இது இலகுவாக ஒட்சிசனை உள்ளெடுக்கக் கூடியதாக இருக்கின்றது. இது 6 தொடக்கம் 15 சென்ரிமீற்றர் வளரக் கூடியது. இதன் உடலிலே 150 வளையங்கள் உண்டு. தண்ணீருக்குள் அப்படியே நிற்கும். மரங்களில் ஏன் ஏறிஏறி வருகின்றது என்பதுதான் எனது கேள்வியாக இருக்கின்றது. ஆண் பெண் பாகங்கள் ஒன்றாகச் சேர்ந்து அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகக் காட்சியளிக்கும். ஆனால், வேறு மண்புழுவுடன் சேர்ந்தே இனப்பெருக்கம் செய்யும். 


                                       ஒட்டகம்:


    பெரிய இரு முகடுகளைத் தாங்கிய வண்ணம்; சாதாரணமாக வாழுகின்ற ஒட்டக இனமானது, வாழுகின்ற சூழலுக்கேற்ப தனது உடலமைப்பைக் கொண்டு வாழுகின்ற ஒரு மிருகம்.
               
              பாலைவனப் பகுதிகளில் வீசுகின்ற காற்றானது மண்ணை அள்ளிக் கொண்டு வீசும். அப்படியான நேரங்களில் ஒரு விழித்திரை தோன்றி மண் கண்களினுள் போகாமல் தடுக்கும். ஆனால், அந்த விழித்திரை மூடிய நேரத்திலும் கூட பார்க்கக் கூடிய சக்தி அதற்கு உண்டு. இதன் மூக்கிலே சுருக்குத் தசை இருக்கின்றது. காற்று மணல் உள்ளே போகாமல் அது தடுக்கின்றது. பாலைவன மணலிலே கால்கள் புதையாமல் இருப்பதற்குப் பாத்திர வடிவத்திலே பாதங்களைக் கொண்டிருக்கின்றது. 10 நாட்கள் நீரில்லாமல் வாழக்கூடியது. மணலிலே பாதச்சுவடுகள் அழிந்து விட்டாலும், முகர்ந்து பார்த்துத் தன் இனத்தை அறிந்து கொள்ளும். 


                  வாழுகின்ற இடத்திற்கேற்ப உடலமைப்பும் பழக்கவழக்கங்களும் வாழும் பண்பும் கொண்டே உயிரினங்கள் வாழுகின்றன. அதேபோல், தமக்குப் பொருத்தமான காலநிலையும் வாழிடமும் கொண்டே தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுகின்றன. உலக உயிரினங்களின் தோற்றத்தில் அனைத்தும் அற்புதமும் ஆச்சரியமுமே.


    குறிப்பு :


    என் வாழ்வியல் இலக்கியம் என்ற பகுதியில் வாயில்லா ஜீவராசிகளுக்கான   இரண்டு இலக்கியங்கள் இருக்கின்றன. சுவைத்து இன்புறுங்கள்.
      

    1 கருத்து:

    1. நல்ல பதிவு.முதலைகளின் இந்தப் பண்பைத்தான் பாலகுமாரன் கவிதையாக ஆக்கி இருக்கிறார்.
      நல்ல தகவல்கள் நன்றி.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...