• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 22 மார்ச், 2014

  03.03.2014 Rosen Montag  நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல்  03.03.2014  Rosen Montag அன்று நான் பெற்றேன் இன்பம். அதைப் பகிர்கின்றேன் உங்கள் பக்கம்.  
            வருடம் ஓர் நாள் தம் கவலைகள் மறந்து ஜெர்மானியர் களித்திருக்கும் நாள். விலங்குகளாய், பறவைகளாய், தாம் விரும்பிய வகையில் தமது உருவங்களை மாற்றி அன்றைய தினம் காட்சி அளிப்பார்கள்.

  குடியும் கூத்தும் கும்மாளமுமாய் அன்றைய பொழுது கழியும்.

  பாதுகாப்புக்காக பொலிஸ் வாகனங்களும் ஆங்காங்கே காணப்படும். வாகனத்திலும் நடந்து கொண்டும் வருவோர் இனிப்புப்பண்டங்கள், சிற்சில பொருட்களை வீசி எறிந்து கொண்டுவர சிறுவர்கள் பெரியவர்கள் ஓடியோடிப் பொறுக்கி எடுப்பார்கள் குடைகள் தொப்பிகளை மேல் நோக்கிப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள் . அப்போது வீசி எரியும் பொருட்கள் அவற்றினுள் வந்து விழும். பார்ப்பதற்கு அற்புதமாகவும் மகிழ்ச்சியாகவும் இப்பொழுது அமைந்து கொள்ளும்.

       
                     நாமோ கலாச்சாரப் போர்வைக்குள் நுழைந்து மனதுக்குள் மறைந்துள்ள ஆசைகளை துடிப்புகளை மறந்து எம்மவர் துடிப்போடு துள்ளித் திரிய வேண்டிய காலங்களில் கூட துவண்டு கிடப்பது எதனால்? அவர் என்ன சொல்வார் இவர் என்ன சொல்வார்? என்னும் எண்ணப்போக்கே. வாழுகின்ற வாழ்க்கை ஒன்றே. இப்பூமியில் எம் பெற்றோர் இன்பத்தின் வழி நாம் வந்து பிறந்துவிட்டோம். செல்களின் தொகுப்பில் வடிவம் பெற்றோம். சில காலங்களே வாழ்கின்றோம். பின் மண்ணோடு மண்ணாகி மறைந்து போகின்றோம். பார்வைக்குத் தூரச் செல்லும் வாகனம்போல் மெல்ல மெல்ல எங்கள் பற்றிய நினைவுகள் எங்களைச் சார்ந்தவர்களை விட்டு மறைந்து விடுகின்றது. மறுபிறப்பு எமக்கு உண்டு என்னும் நம்பிக்கை அற்ற ஒரு எண்ணத்துடன் வேறு ஒரு வடிவமாகவும் வாழ்வாகவும் வரப்போகின்ர ஒரு வாழை எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வை அடக்கி வாழ்கின்றோம். தெரிந்தோ தெரியாமலோ புரிந்தோ புரியாமலோ எம்மவர் இப்படித்தான் வாழவேண்டும் என்பது விதியாகிப் போனது.                    தினம் ஒன்று எம்மை எல்லாம் மறந்து குழந்தைகளின் குதூகலத்தோடு நாமும் குழந்தைகளாய் மாறி ஒரு நாளை களிப்பதற்குக் கூட நாம் தயங்குகின்றோம். ஆனால் வெள்ளையர்கள் அனுபவிக்கப் பிறந்தவர்கள். அதனால் நீண்ட காலம் வாழும் பாக்கியம் பெற்றவர்கள். எம்மைப்போல் வரப்போகும் துன்பம் கருதி இன்றே கவலையில் ஆழ்ந்திருக்கும் கவலை அவர்களுக்கு இல்லை. திட்டமிட்டு தம் வாழ்க்கையை சீராகக் கொண்டு செல்கின்றார்கள். வருடம் குறைந்தது ஒரு தடவையாவது சுற்றுலா சுற்றி வந்து ஒரு வருட மன அழுத்தத்தை நீக்கி விடுகின்றனர். அதற்கான திட்டத்தை வருட ஆரம்பத்திலேயே போட்டுவிடுகின்றனர்.


                     இத்தினத்தில் நான் கண்ட இன்பத்தை உங்களுடன் இப்பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன். இந்த வீடியோவைப் பாருங்கள். அன்றைய தினம் என் கருவி படம்பிடித்தா காட்சி 
  திங்கள், 17 மார்ச், 2014

  18 ஆவது பிறந்த தினம்
  இன்று 18.03.2014 .எனது உதிரம் சுமந்து உருவாய் வளர்ந்து பதினெட்டை எட்டிப் பிடித்து நிற்கும் எனது மகளின் பிறந்த தினம். அவர் உலகம் மெச்ச வாழ்ந்து வானுயரப் புகழ் சேர்த்து உள்ளத்தால் தூய்மை பெற்று தனக்கும் தான் பிறந்த மண்ணுக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மனதார வாழ்த்தி மகிழ்கின்றேன்.                          அன்றும் இன்றும் அவர்  Cryonic Technology

    இறந்தவர் மீண்டும் எழும்ப முடியுமா? மறுபிறப்பு ஒன்று இருக்கிறதா? ஒரு மணிதனால், 100 ஆண்டுகள் கழிந்தும் வாழ முடியுமா? இவ்வாறான கேள்விகள் எங்க...