எழுத்தாளர்
சந்திரகௌரி சிவபாலனின் வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் யேர்மனிய நூல் அறிமுகவிழாவுக்கான
வாழ்த்துரை
பேராதனைப்
பல்கலைக்கழகத்தில் எனது மாணவியாக விளங்கிய சந்திரகௌரி சிவபாலனின் இன்றைய நூல்
அறிமுக விழா சிறப்பாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈழத்தின்
புலம்பெயர் எழுத்தாளர்களுள் ஒருவரான சந்திரகௌரி, தமக்கெனத் தனிப்பாதை வகுத்துச்
செயற்பட்டு வருகிறார். அவரது எழுத்தாற்றலும், பேச்சாற்றலும், செயலாற்றலும் அவரை
உலகம் முழுவதும் அறியச்செய்துள்ளன. அவரது எழுத்துப் பங்களிப்புகள், வாசகர் அவரை
வியந்து பார்க்க வைத்துள்ளன. புகழ் பெற்ற புலம்பெயர் எழுத்தாளர்களுள் ஒருவராக அவர்
உயர்ந்துவருகிறார். எதிர்காலத்திலும் அவரது நூல்கள் பல வெளிவரவேண்டும். எழுத்தாளர்
சந்திரகௌரியை வாயார, மனமார இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்துவதில் நான் மிகவும்
மகிழ்ச்சி கொள்கிறேன்.
வெள்ளை உடைக்குள்
கரையும் பருவம் என்னும் இந்நூலின் அறிமுகவிழா, சந்திரகௌரிக்கு எழுத்துத்துறையில்
மேலும் புதிய தெம்பை ஊட்டுவதாக அமையும் என்பது திண்ணம். மட்டக்களப்பில் பிறந்து,
ஜேர்மனியில் வதியும் சந்திரகௌரியின் இந்நூல், யாழ்ப்பாண மண்ணில் வெளியிட்டது
மகிழ்ச்சிக்குரியது. அவர் எல்லோராலும் நேசிக்கப்படுபவர் என்பதையே இது காட்டுகிறது.
இவ்வெளியீட்டுவிழாவை யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நிகழ்த்திய யாழ்ப்பாவாணனும், அவரைச்
சார்ந்தவர்களும் நமது பாராட்டுக்கு உரியவர்கள்.
இன்றைய
அறிமுகவிழாவினை யேர்மனி தமிழ் கல்விச் சேவை நடத்துவது பாராட்டுக்குரியது. கலந்துகொள்ளும்
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகுக!
பேராசிரியர் துரை. மனோகரன்
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்,
பேராதனைப் பல்கலைக்கழகம்.
சிரிப்பின் நாயகி சிந்தனைத் திறனாளி
நிறைப்பார் பலகேள்வி நிறுவிடுவார் விடையாக்கி
வெள்ளை உடைக்குள் கரையும் பருவத்தை
சொல்ல வருகிறார் அழகான நூலாக்கி
நல்லதொரு தோழி நயமான பெண்படைப்பாளி
அள்ளிச் சுவைத்திட மேலான ஆர்வமெனக்கு (கௌசி)
உரமான தேடலில் உணர்வுகளை வழிநடத்தி
உருண்டிடும் ஆயுளுக்குள் உயிர்ப்போடு வாழ்ந்திடவே
உறுதியுடன் நடைபோட்டு உரமாய் உழைக்கின்றார் (கௌசி)
உயர்ந்து எழுந்து உயரங்களை முட்டுகிறார்
மூடக் கொள்கைகளை முட்டி மோதி
ஆழக் கருவூலங்களை அழகாய்க் கோர்த்து
வாழ்விற்கு வேண்டியதை வரன்முறையாய்க் கொண்டு
வலைப்பின்னல் ஆக்கிடுவார் பழைமையில் புதுமையை
முடியாது ஒன்றில்லை முயன்றிடுங்கள் என்றே
கடிதான பக்கங்களை கைக்குள் எடுத்து
காட்சியாய் கலையாய் காணொளி யாக்கி
கவர்கிறார் பல பார்வையாளர் மனங்களை
ஆக்கலுக்கு வயதில்லை ஆர்வமொன்றே எல்லையென்பார்
ஊக்கம் கொண்டால் உலகை வலம்வரலாமென
உற்சாகக் குரலுடனே நித்தமொடு கௌசி
வெற்றிக ளெல்லாம் நினதாக வாழ்த்துகிறேன்
வளமோடும் நலமோடும் வாழிய வாழியவே
கீதா பரமானந்தன்
08.12.18
தென்றலே
கவிபாடும் கிழக்கு மண் .
கன்னித்
தமிழின் கழுத்துக்கு
கனகமணி
மாலையிட்டு
விண்ணுலகம்
விரைந்திட்ட
முத்தமிழ்
வித்தகர்
சுவாமி
விபுலாந்த அடிகளார் பிறந்த மண்
கிழக்கு
மண்
ஈழத்து
இலக்கியத்தை வளப்படுத்தி வாகை சூடிய
சான்றோர்களும்
பிறந்து சரித்திரம் படைத்த மண்
உலக
அதிசயமான சீனச்சுவர் போன்று
இற்றைவரை
நீண்டு செல்லும் படைப்பாளிகள் நிறைந்த மண்
வைரக்கற்களோடு
வைரக்கல்லாக தன்னையும் பதித்துக் கொண்டவள்
அன்பான
சந்திர கௌரி(கௌசி)
இணையத்தில்
ஒரு படைப்பு இடம்
பெற்றால்
'நோபல்'பரிசு 'லெவலுக்கு'கூத்தாடும் சில படைப்பாளிகள் தம் படைப்புக்கள்
மக்கள்
இதயங்களில் இடம் பிடித்திருக்கின்றதா?
என்று
ஒரு போதும் எண்ணிப் பார்ப்பதில்லை.!
எழுதப்படுவதால்
மட்டும் எந்தப் படைப்பும் வாழாது.
எண்ணற்றவர்களால்
படிக்கப்படுவதாலும்
எண்ணங்களில்
பதிக்கப்படுவதாலுமே அப்படைப்பு
என்றென்றும்
ஜெயம்
பெற்று ஜீவிக்கும்..! அதனால்,
அப்படைப்பாளியின்
பெயரும் முழுநிலவாய் பிரகாசிக்கும்..
இஸ்லாம்,சிங்களம்,தமிழ்,பேர்கர்ஆகிய
04 நான்கு சமுகத்துடனும்
ஒற்றுமையாய் வாழ்ந்தவர் கௌரி
பன்முக
ஆளுமை கொண்டவர்
இலங்கையில்
ஆசிரியர் பயிற்சி, கல்வியியல் டிப்ளோமா, ஆசிரியர் சேவை ஆசிரியர் ஆலோசகர் என இவரது சேவைகள் தொடர்ந்தன .
ஓடிக்கொண்டது
இருக்கும் நதிக்கு யாரும் முகவரி காட்டவேண்டும்
என்பது
அவசியம் இல்லை என்பதை கௌரி தன் சேவைகளால், ஆற்றல்களால் வெளிப்படுத்தி காட்டி விட்டார்.
எழுதுவதற்கு அனுபவம் வானத்திலிருந்து மழையாய்
பொழிவதில்லை. வாழ்க்கையில்
இருந்து தான் அது கிடைக்கிறது என்ற கருத்துக்களோடு கைகுலுக்கிக் கொள்ளும் இவர் ,
ஈழத்துப்
பெண் படைப்பாளிகள் வரிசையில் (கிழக்கு மாகாணம் ஏறாவூரில்)தன்னையும் ஒருவராக
நிலைநிறுத்திக் கொண்டவர்..!
ஈழத்து
இலக்கியத்தை கொத்திச் செதுக்கி அழகு படுத்தியதில்
பெண்
படைப்பாளிகளின் பங்கும் அளப்பரியது. ஆனால் பெண் படைப்பாளிகளின் பங்கோ அரிதானது .
ஆங்காங்கே
தொட்டம் தொட்டமாக எழுந்த சில பெண் படைப்பாளிகள் தோல்விகளையெல்லாம் தோற்கடித்து
எழுவான் கதிர்களாய் எழுந்து வந்திருப்பது சாதனைக்குரியதே..!
பூவில்
இருக்கின்ற தேனைப்போல் –
அன்புபொதிந்த
ஆற்றலை சுவைக்க வைத்திடுவீர்
கலையின்
பெருமையெலாம் பேசும்
திருக்குறளின்
நுண்ணரிய
கருத்தெல்லாம் நுணுகிச்
சுவைத்து எழுதும் கௌசியே
இலக்கிய
உலகில் ஆயிரங்
காலப் பயிராய்
தலைத்திடுவீர்...!
நீரோடு கயல்பிரி யாதது போல்
நிலவொடுஒளிபிரி
யாதது போல்
காரோடு
குளிர் பிரியாதது போல்
கடலிடை
அலைபிரியாதது போல்
நூலோடு
நயமும் நுதலொடு திலகமும்
தாளோடு
எழுத்தும் தமிழிடை இனிமையும்
பாலோடு
வெண்மையும் பழமொடு சுவையும்
பூவோடு
மணந்தான் பொருந்திய வளாய் என்றும்
–
தொடந்து
வாழ்க ! எழுதுக !!
"செந்தமிழ் கவிதையாய் சிறப்புடன்
வாழ
வாழ்தும்
உங்களன்புத் தோழி
கலைமகள்
ஹிதாயா ரிஸ்வி –
அமைப்பாளர்
தடாகம் கலைகலாச்சார சமூக சேவை பன்னாட்டு அமைப்பு
நேரடிப் பரிட்சியமின்றி பண்புநலனையும் புகழையும் கேள்விப்பட்டு நட்பு கொண்ட
கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் போல தாய்மையின் கனிவுடன் இன்றைய இளைஞர்பால் கொண்ட
அதீத அக்கறையுடனும் தொடர்ந்து மிகச் சிறப்பானப் படைப்புகளை வழங்கிவரும் கௌசி அவர்களின் அதி தீவிர இரசிகன் நான். நல்லவர்கள் வல்லவர்களாகவும் ஆனால் நாடு எத்தனை
நலம் பெறுமோ அதனினும் சிறந்ததை பயனுள்ளதை மட்டுமே எழுதுபவர்கள் சிறந்த
சிந்தனையாளர்களாகவும் மொழிப் பாண்டித்தியம் மிக்கவர்களாகவும் இருப்பின் இலக்கிய
உலகம் பல உன்னத பொக்கிஷங்களைப் பெறும் என்பதற்கு எழுத்தில் பன்முகத் திறன் கொண்ட
கௌசி அவர்களே நல்ல உதாரணம். அவரது மூன்றாவது வெளியீடான "வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்" நூல்
வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக அமைய தமிழ்ப்பதிவர்கள் சார்பாக என் மனமார்ந்த
நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
வாழ்த்துக்களுடன்.
யதார்த்தக்
கவி யாதோரமணி"
தீதும் நன்றும் பிறர் தர வாரா
புலம்பெயர் நாடுகளில்
தமிழைப் பேணும் கடின உழைப்பாளிகளான இலக்கிய நாட்டமுள்ள இந்நிகழ்விற்கு வருகை
தந்திருக்கும் எல்லோருக்கும் முதற்கண் வணக்கம். 'வெள்ளை உடைக்குள் கரையும்
பருவம்' எனும் நூல் அறிமுக விழாவுக்கான தலைவர், நூல் ஆய்வாளர்கள், ஏற்பாட்டாளர்கள்
என எல்லோருக்கும் வணக்கம்.
தமிழறிஞர் சந்திரகௌரி
சிவபாலன் (கௌசி) அவர்களின் 'வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்' எனும் நூல் அறிமுக
விழாவுக்கான வாழ்த்துரை வழங்க இடமளித்தமைக்கு முதலில் நன்றியைத்
தெரிவித்துக்கொண்டு தொடருகிறேன். இந்நூல் நூலாசிரியரின் மூன்றாவது நூலென்பதை நானறிவேன்.
இதனை இலங்கை, யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் வெளியிட்டு வைத்து
நூலாசிரியரிற்கு நன்மதிப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளேன்.
நூலாசிரியரின் இரண்டாவது
நூலான 'முக்கோண முக்குளிப்பு' நூலுக்கு; இலங்கை, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் அறிமுக விழா இடம்பெற்ற வேளை
நானும் பங்கெடுத்தேன். 'முக்கோண முக்குளிப்பு' நூல் நூலாசிரியரின்
வித்துவச் சிறப்புக்கு அல்லது பாண்டித்தியத்திற்கு நல்லதொரு சான்றாகும்.
இருபதிற்கும் அதிகமான 'முக்கோண முக்குளிப்பு' நூல்களைத் தமிழ்நாட்டுப்
பேராசிரியர்களுக்கு வழங்கிய போது, அவர்கள் தெரிவித்த கருத்திது. இத்துடன் நூலாசிரியரைப்
பற்றிய விளக்கம் போதுமென நினைக்கின்றேன்.
மக்கள் நல மேம்பாடு கருதிய
செய்திகளை, நல்ல தகவலை, வழிகாட்டலை, மதியுரையைத் தாங்கி வெளிவருவது இலக்கியம் எனலாம். அதாவது
இலக்கு இயம்புதல் ஸ்ரீ இலக்கியம் எனலாம். கடுகுக் கதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள்
என்பவற்றைப் புனைகதை இலக்கியம் என்கிறோம். 'இதனை எல்லோராலும் எழுத
முடியுமா?' என்பதே எங்கள் முன் எழுகின்ற கேள்வி.
எழுத விரும்புவோர் எவரும்
எழுதலாம் தானே! - ஆயினும்
எழுதிய யாவும் வாசகர்
உள்ளத்தைத் தொட்டால் தானே
எழுத்தாளரென்ற அடையாளம்
கிட்டுமே!
அந்த வகையில் 'கௌசி' அவர்களின் 'வெள்ளை
உடைக்குள் கரையும் பருவம்' எனும் நூலைத் திறந்து வாசித்துப் பாருங்கள். ஒவ்வொரு
கதையையும் வாசித்து முடித்த பின், உங்கள் உள்ளத்தில் அக்கதைகளை மீட்டுப் பாருங்கள். உங்கள்
உள்ளக் கண்ணில் கதைக் களமான வாழ்க்கைச் சூழலைத் திரைப்படம் போலப் பார்க்க
முடியும். அதுவே ஓர் எழுத்தாளரின் உழைப்பு! சந்திரகௌரி சிவபாலன் (கௌசி) அவர்களின்
கடின உழைப்பின் சான்றாக இந்நூலை என்னால் பார்க்க முடிகிறது.
சந்திரகௌரி சிவபாலன் (கௌசி)
அவர்களுக்கு இந்நூல் பெருவெற்றியை ஈட்டித்தரலாம். சிறந்த படைப்பாளியென மேலும் ஒரு
படி அவர் உயரப் பறக்கலாம். ஆயினும், தமிழ்ப் பற்றாளர்களுக்கு இவை போதாது என்பர்.
அதாவது சிறந்த படைப்பாளியென்றாலும் சிறந்த தமிழறிஞரென்றாலும் சந்திரகௌரி சிவபாலன்
(கௌசி) அவர்களுக்குள் இருக்கும் முழுமையான ஆற்றலை வெளிக்கொணர, அவர்
நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்டு உதவ முன்வர வேண்டுமென்பர்.
எனவே, தமிழறிஞர்
சந்திரகௌரி சிவபாலன் (கௌசி) அவர்களின் இலக்கியப் பயணம் வெற்றியடையவும்
தமிழுலகிற்கு அவர் சிறந்த இலக்கிய நூல்களை வெளியிட்டு உதவவும் இறைவன், அவருக்கு நீண்ட
ஆயுளைக் கொடுக்க வேண்டுமென வேண்டி வாழ்த்தி நிற்கின்றேன். அவரது இலக்கியப் பயணம்
மேலும் சிறப்படைய எனது Google+ உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்'
குழு
வலைப்பதிவர்கள் சார்பாகவும் 'யாழ்பாவாணன் வெளியீட்டகம்' மின்நூல் வெளியீட்டுப்
பிரிவு சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எல்லோருக்கும் நன்றி.
யாழ்பாவாணன்
(மாதகல்வாசி
காசி.ஜீவலிங்கம்)
www.ypvnpubs.com
yarlpavanang1@gmail.com
094
070 3445441

………………………………………………………………………………………………………………………………………………………………………………
சந்திரகௌரிசிவபாலனின் வெள்ளை உடைக்குள் கரையும் பருவம், சிறுகதைநூல் வெளியீட்டிற்கு வாழ்த்துச்செய்தி வழங்குவதில் பெருமகிழ்வெய்துகிறேன். கௌசியும் நானும் 1981 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புக்கலை பயின்றோம். அக்காலத்திலிருந்தே அறச்சீற்றமும், சமுகநலனும், அன்புபாராட்டும் பண்புமிக்கவராக இன்றைய கௌசி திகழ்ந்தார். அக்காலத்தில் எண்ணிக்கையில் அதிகமான பேராசிரியர்களிடம் ஒரேவேளையில் கல்விபயிலும் பாக்கியம் நமக்கு சித்தித்தது. பேரா.ஆ.சதாசிவம், பேரா.ஆ.வேலுப்பிள்ளை, பேரா.பொ.பூலோகசிங்கம், பேரா.சி.பத்மநாதன். பேரா.சி.தில்லைநாதன். பேரா.க.அருணாசலம், பேரா.இரா.கனகரட்ணம், பேரா.து.மனோகரன் என இத்துணை பேராசான்களையும் இவ்வேளை நினைவுகூர்கிறேன். பல்கலைக்கழகத்திற்கு வெளியேயும் மகாவித்துவான் கு.ஓ.ஊ நடராசா போன்றோரது நன்மதிப்பையும் கௌசி பெற்றிருந்தார். கற்கும் காலத்திலேயே கவிதை, நாடகம், விவாதம், சிறுகதையென பல்துறையாற்றல் மிக்க இவர் இசையுடன் பாடியதை அருகிருந்தது அனுபவித்திருக்கிறேன். கௌசி, ஆசிரியையாக, கல்வியியலாளராக உயர்ந்துநின்றவர். ஈழத்தில் இடம்பெற்ற இனசங்காரத்தில் வீடு வாசல் ,பொன் பொருளை மட்டுமன்றி அவரது உயர்தேட்டமான நூல்களையும் இனவேள்விக்கு அவிகொடுத்து, அயல்நாடு சென்றார். தான்பயின்ற இனிய தமிழை இன்று உலகத்திற்கே ஊட்டி உவக்கும் இந்நாளை எப்படி வாழ்த்துவேன். இவரது முக்காண முக்குளிப்புக்குப் பின் இலக்கியச்சுழியில் தேடித் தேர்ந்தநூலாக இந்நூல் விளங்குகிறது. புலம்பெயர்வாழ்வின் அவலங்களை அலசும் இத்தொகுதி மிகுந்த கவனத்திற்குரியதே. இவரது கதைநேர்த்தியும், கச்சிதமும், சிந்தாமல் சிதறாமல் கதைபுனையும் பாங்கும், காலதேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப எழுதும் பாங்கும் கௌசியை மேலும், மேலும் உயர்த்தும் என்பதில் ஐயமில்லை. விழா சிறக்க மேலான வாழ்த்துக்கள்.
இரா.சிவலிங்கம்,
தமிழ்த்துறைத்தலைவர்,
திரித்துவக்கல்லூரி,
கண்டி.
எழுதுகோல் தவழுகின்ற காகிதத்திலே -
கௌசி
எண்ணங்கள் பதிவாகும் நானிலத்திலே
உணர்வுகள் தாங்கிய ஊர்வலத்திலே
உண்மைநிலை சொல்லவந்த சிறுகதைத்
தொகுப்பே
“வெள்ளை
உடைக்குள் கரையும் பருவம்“
நூன் முகம் பார்த்தோர் பல நினைப்பார் -
நின்
நுண்மதி கண்டு பலர் வியப்பார்
யாரிவள் என்று நினைக்கையிலே - தமிழ்
தாயவள் தனக்குள் முறுவலிப்பாள்
சந்திரகௌரி சிவபாலன் - நீ
சந்ததிக்கான ஒரு பாலம்.
உறவே உறவே நீ எழுது
உலகம் விழித்திட தினம் எழுது
உணர்வுகளோடு நீ பொருது
உருவாகும் நல்ல கதையமுது
தொடர்ந்திடு மகளே துணிவுடனே
தோல்வியில்லை நம்பி எழு!
ஒற்றை நாளில் சுற்றும் பூமியை
உற்றுப் பாரம்மா - உலகம்
உன்னைச் சுற்றிப் பார்க்கின்றது
- நீ
வெற்றித் தாயம்மா
எழுத்தால் எழுந்தவர் பல கோடி
எடுத்துக் கூறும் வரலாறு!
வாழிய வாழிய பல்லாண்டு - நீ
வாகை சூடிய நாளின்று!
- கவிக்கோ பரம விசுவலிங்கம் -