• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 29 டிசம்பர், 2010

    அடுத்த தலைமுறை நோக்கி




    சொல்லும் செயலும் மனஓட்டமும் - கருங்
    கல்லாய் நிலையாய் பதித்து வைத்தும்
    எல்லையில்லா ஆசைகளை மறைத்து வைத்தும்
    எடுக்கின்ற எத்தனங்கள் அத்தனையும்
    அடுத்த தலைமறை நோக்கியே குறித்திருக்கும்

    மடுக்களில்லா வாழ்வும் வடுக்களில்லா பதிவும்
    அடுத்த தலைமுறைக்குக் கிடைக்க வேண்டுமென
    துடிக்கும் உணர்வுடன் படைக்கும் படைப்புக்கள்
    செடிக்கு ஊற்றும் நீராய் சிறப்படையும்
    பிடிப்பான உலகில் பிறந்தநாள் தொட்டு
    வடிக்கின்ற வாழ்க்கை வடிவங்கள்
    விடிவான தெத்தனையோ விடியாத தெத்தனயோ – ஆயினும்
    தொடுக்கின்ற நெடிதான திட்டங்கள் அத்தனையும்
    அடுத்த தலைமுறை நோக்கியே குறித்திருக்கும்

    அகலக் கண்கொண்டு ஆய்ந்து நோக்கும் பார்வையிலே
    அளவிடவொண்ணா கணனியுலகு கண்ணில் தோன்றுது
    நிலையில்லா வாழ்வதனில் நிதம் காணும் அற்புதங்கள்
    விலையுள்ள வாழ்வதனை சிலையாய் நிறுத்து ததனால்
    எடுக்கின்ற திட்டங்கள் அத்தனையும்
    அடுத்த தலைமுறை நோக்;கியே குறித்திருக்கும்

    செவ்வாய், 28 டிசம்பர், 2010

    புலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங்கம் 2 )

        ( அங்கம் 2 )

                                                           நேரக்கட்டப்பாடு:

    நம்மைப் பற்றியே நாம் சிந்திப்பதால், அடுத்தவர் நிலைமைள் புரிவதில்லை. புரிய விரும்புவதும் இல்லை. பொன்னான நேரம் மண்ணாகிப் போகலாமா! ஐரோப்பியர்களின் விழாக்கள் 3 மணிக்கு ஆரம்பம் என அழைப்பிதலில் குறிக்கப்பட்டிருந்தால், சரியாக 3 மணிக்கு விழாக்கள் ஆரம்பமாகும். யார் வருகையையும் பொருட்படுத்தப் போவதில்லை. வீடுகளுக்கு வருவதாக இருந்தாலும் குறிக்கப்பட்ட நேரத்திற்கு அழைப்புமணி ஒலிக்கும். எங்கிருந்து இந்த நேர ஒழுங்கைக் கற்றுக் கொண்டார்கள். தமது மனம்தானே பாடம் நடத்தியது. ஏன் நமது தமிழர்கள் அதுபற்றிச் சிந்திப்பதில்லை? 3 மணிக்கு விழா ஆரம்பம் எனக் குறிக்கப்பட்டிருந்தால், அவ்விழா ஆரம்பிக்கச் சரியாக 5 மணியாகும். நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் முதல் நிகழ்ச்சியை விரும்பார். ஏனெனில் பார்வையாளர் பார்வைக்குத் தமது நிகழ்ச்சி உட்படாது என்ற எண்ணமே. ஏனெனில், பார்வையாளர்கள் வந்தடையும் நேரம் 6 மணியாகிவிடுமே. நிகழ்ச்சி அமைப்பாளர்களும் அதற்கேற்ப ஆமோதித்துவிடுவார்கள். இப்படியே நேரம் தாமதமாகி இரவு 1 மணி தாண்டி விழாக்கள் முடிவுறும். இதற்கிடையில், குழந்தைகளின் அழுகை, பொறுமையற்ற ஆத்திரம், பார்வையாளர்களின் சொந்தக்கதை, நாட்டுக்கதை, அடுத்தவர் வீட்டுக்கதை பற்றிய அளவளாவல், விற்பனைப் பொருள்களின் வியாபாரம், இதற்காக இடையிடையே நடைபயிலல், உணவுப் பொருள்களை உண்டு கொண்டு விழாக்களைப் பார்த்தல், மேடையை அலங்கரிக்கின்ற நிகழ்ச்சிகளுக்குக் கைதட்டி ஊக்கப்படுத்தும் விருப்பமின்மை. இவ்வாறான நிலையில் விழா மண்டபத்தைப் பார்க்கும் போது ஒழுங்கற்ற தோற்றமாய்க் காட்சியளிக்கும். அழகாய் ஆடம்பரமாய் ஆரம்பம் கண்ட பார்வையாளர்கள் இறுதியில் களைத்து அலுத்துச் சோர்ந்து வீடு போய்ச் சேர்வார்கள். 30 வருடங்கள் கடந்தும் ஐரோப்பிய மண்ணில் வாழும் தமிழர்கள் இன்னும் நிகழ்ச்சி விழா ஒழுங்குபடுத்தலைக் கற்கவில்லையனால், எப்போது கற்கப் போகின்றார்கள். 

    1. அதிகம் நிகழ்ச்சிகளுக்கு இடம் தரக்கூடாது
    2. குறிக்கப்பட்ட நேரத்திற்கு விழா ஆரம்பிக்க வேண்டும். முதல்   
            நிகழ்ச்சியாளர் வருகை தரவில்லையெனில், அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட  
            வேண்டும். 
    3. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நேரம் முன்னமே நிகழ்ச்சியாளர்களுக்கு 
            குறிப்பிட்டுக் கூறியிருக்க வேண்டும். 
    4. விழாவிற்கான நேரம் 3, 4 மணித்தியாளங்களை மீறக்கூடாது. 
    5. நிகழ்ச்சிகள் நடைபெறும் போது உணவுப்பொருள்கள் விற்பனை 
            நடைபெறக் கூடாது
    6. தரமான நிகழ்ச்சிகளைத் தெரிவு செய்ய வேண்டும். பயில்பவர்கள் 
             யாவருக்கும நிகழ்ச்சி கொடுக்க வேண்டுமானால், கலைகளைப் 
             பயிற்றுவிக்கும் ஆசிரியாகள் ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்து 
            பெற்றோர்களை மாத்திரம் அழைத்து அவாகளின் பிளஇளைகளின் 
           நிகழ்ச்சிகளைக் காண்பிக்கலாம். ஐரோப்பியர்களின் இசைக்கல்லூரிகளில்  
        அவ்வாறே நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நடத்துகின்றார்கள். குறிக்கப்பட்ட 
         நேரம் கொடுக்கப்பட்டிருக்கும்., பார்வையாளர்கள் தொகை குறைவாக  
          இருக்கும். அமைதி கடைப்பிடிக்கப்படும். ஒழுங்குமுறை பேணப்படும்.  
         அற்புதமான விழாக் கண்ட நிகழ்ச்சியுடன் வீடு திரும்பலாம்.
    7. பலர் சேர்ந்து ஆலோசனை செய்து விழாக்களை ஒழுங்கமைக்கலாம்.

    பார்வையாளர்கள் பற்றிச் சிந்தித்து நிகழ்ச்சியில் ஈடுபாட்டைக் குறைக்காத வகையில் விழாக்கள் நடைபெறும் போது இடம்பெற்ற கலைப்படைப்புக்கள் மனதில் நின்று நிலைக்கும்.

    ஞாயிறு, 26 டிசம்பர், 2010

    புலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு

              ( அங்கம் 1)
    புலம்பெயர்விலே தமிழர்களிடையே திருந்த வேண்டிய சில விடயங்களை உலகறிய உரக்கச் சொல்ல உங்கள் முன் விரிகிறது இக்கட்டுரை. இங்கு வாழும் தமிழர்களிடையே இளைஞர் போக்குகள், தமிழர் விழாக்கள், நேரக்கட்டுப்பாடின்மை, புறங்கூறல், மாற்று இனத்தினருடன் இணைந்து வாழாமை போன்ற பலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் எம்மினத்தின் உயர்வுக்கு இக்கட்டுரை உந்துதலாய் இருக்கும் என்று நம்பி பேனாவை கையெடுத்தேன்.
                                           நாடுவிட்டு நாடு வந்தும்
                                           கேடு கெட்ட குணநலங்கள் 
                                           நாடி இன்பம் தேடித்திரியும்
                                           பேடிவாழ்வு தீர வேண்டும்.

    வேட்டைத் தொழிலில் நாட்டம் கொண்டு, விலங்கு, பறவை கொன்று தின்று, வாழ்வு கண்ட மனிதன், நாள்கள் நகர, காலங்கள் கழிய, நல்லவை நாடி, சமூகம் அமைத்து கலாசாரம் கண்டு, இறையைப் படைத்து, மொழியைப் படைத்து, நாகரீக வாழ்வை நன்றாய்க் கண்டான். பண்பாட்டு நூல்கள் பலர் படைத்து சீர் பெற்று வாழ்வு சிறக்க உழைப்பைத் தந்தனர். மனிதன் வாழ்க்கையின் பாதையில் நற்பழக்கவழக்கங்கள், அநுபவரீதியில் கண்டு பட்டுத் தெளிந்த வாழ்க்கையை வாழப்பழகிக் கொண்டான். அப்படியானால், காலப்போக்கில் கண்ணில் காணும் நல்லவை கண்டு மனிதன் திருந்த வேண்டியது அவசியமாகின்றது. திருந்தியும் உள்ளான்.
                 தாயகத்திலே தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பேகர் என்ற நான்கு இனங்கள் மட்டும் சேர்ந்தும் சேராதும், புரிந்தும் புரியாதும் போட்டி பூசல் என வாழ்ந்து தன்நாடு, நிம்மதியில்லை என வெளிநாடுகளுக்குத் தேடி ஓடிப் பலர் வந்தனர். தமிழீழத் தாயக உணர்வுப் போராட்டுத் தளைத்தோங்க முன் மேற்கல்வி மேற்கொள்ளவே வெளிநாடுகள் நோக்கி தமிழர்கள் நகர்ந்தனர். ஆனால், தற்பொழுது கற்றவர், கல்லாதவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் அந்நியநாடுகளில் அடைக்கலம் புகுந்தனர். வந்த நாடுகளோ ஓர் இனம் மட்டும் ஒதுங்கி வாழும் நாடுகள் அல்ல. அவை பலநாட்டு மக்களும் பல நாட்டுக் கலாசாரங்களும் பின்னிப்பிணைந்து வேலைத்தளங்ளிலும், பாடசாலைகளிலும், போக்குவரத்துச்சாதனங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் கலந்து களிநடம் புரிகின்ற நாடுகள் ஆயின. 
                 இச்சை கொண்டு மனிதன் தன்னைப் பார்த்துத் தன்னுடைய குறைநிறைகளை அலசி ஆராய்ந்து தன்னைச் சுயமதிப்பீடு செய்யக் கூடிய நிலைமை மனிதனுக்கு ஏற்படுகின்றது. பிறநாட்டினர் கலாசாரப் பழக்கவழக்கங்களில் இருந்து நல்லவற்றைத் தேடிப்பெற்றுத் திருந்தி வாழக்கூடிய வசதிவாய்ப்புக்களைப் பெற்ற தமிழினம் திருந்தி வாழ்தல் நியாயம் அல்லவா. மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் வாசனை உண்டு என்னும் கூற்றுக்கிணங்க பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்துப் பாலருந்தும் அன்னத்தைப் போல் நல்லவற்றை நாடிப் பெற்றுக் கொள்ளல் சிறப்பு இல்லையா? ஆனால் எங்கு சென்றாலும் அழுக்குகளைக் களையோம் என அடம்பிடிக்கின்ற தமிழர் நிலைமைகளை அநுபவித்து ஆற்றாமையில் என் பேனா வார்த்தைகளைச் சிந்துகின்றது. 

    இப்படியும் சில இளைஞர்கள்:

    21 ம் நூறறாண்டில் பலவித நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மலிவாக விஞ்சி நிற்கின்ற நாட்டிலே, சாதாரணமாக இவற்றை இளைஞர்களும் இளம் யுவதிகளும் கையாளுகின்றார்கள். தண்ணீரைக் குடிப்பதற்குத் தயங்கினாலும் Schulervz, Face Book, Twitter, Myspace, MSN, ICQ, இதுபோன்று பலவித கணனிப் பேச்சுத் தொடர்பு தளங்களுக்கு விஜயம் செய்வதற்குத் தயங்குவதில்லை. முகங்காணா நட்புக்களையும் முகங்காணும் நட்புக்களையம் கொண்டு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகின்றார்கள். குறைந்த கட்டண வசதியுள்ள தொலைபேசிகள் மூலம் SMS என்னும் ஒரு கலையைப் பயன்படுத்தி அடிக்கடி நண்பர்களுடன் பேச்சுத் தொடர்பை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு இளையோர் நட்புறவு அதிரிக்கும் வாய்ப்புக்களை புதுப்புது நவீன சாதனங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. நட்புறவு நன்றே. ஆயினும், நட்புறவு நண்பர்கள் வாழ்வைச் சீர்குலைக்காது இருக்குமேயானால், நட்பிற்கு பங்கம் வரப் போவதில்லை. 

                ஆனால், புலம்பெயர்வில் தமிழ் இளைளஞர்கள் பெண்பிள்ளைகளுடன் பக்குவமாய்ப் பேசுகின்றார்கள். ஆசைவார்த்தைகளை அழகாய்ச் சொரிகின்றார்கள். உண்மை நட்பென உளம்பதிய உரைக்கின்றார்கள். சுதந்திரம் பற்றிச் சுவையாய் புகட்டுகின்றார்கள். போதை வார்த்தைகளால் பெண்பிள்ளைகள் மனதை புரட்டிப் போடுகின்றார்கள். பொது இடங்களில் வீதிளில் சந்திப்புக்கு அழைக்கின்றார்கள். ஆசைதீரப் பேசி, கலகலப்பாய்ப் பழகுகின்றார்கள். பின் அழைத்துப் பழகிய பெண்களைப் பற்றியே அவதூறாகப் பேசுகின்றார்கள். இறுதியில் புலம்பெயர்ந்த பெற்றோர்களின் பெண்களைத் திருமணம் செய்யப் போவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் பெண் எடுக்க மாட்டோம். இலங்கையில் இருந்துவரும் அப்பாவிப் பெண்களை திருமணம் செய்து வாழ்வோம் என வீராப்பாய்ப் பேசுகின்றார்கள். வக்கிர புத்தியுள்ள இவ் இளைஞர்களுக்கு தாயகத்துத் தங்கங்கள் அடைக்கலமாக வேண்டுமா? அடுத்தவர் வாழ்க்கையைக் கெடுத்துத் தாம் அற்புதமாய் வாழ வேண்டுமா? இப்படிச் சில இளைய தலைமுறைக்கு அத்திவாரம் இட்டது யார்? நமது எதிர்கால இளஞ்சமுதாயம் இவ்வாறு வளர்க்கப்பட்டதன் காரணம்தான் யாதோ? இவ் ஐரோப்பிய மண்ணிலே வாழுகின்ற ஐரோப்பிய இளைஞர்களுடன் வாழும் பாக்கியம் இவர்கள் பெறவில்லையா? அனைத்து இன மக்களுடன் பழகும் போது அவர்கள் குணநலன்களைப் புரியாமல்; இந்நாட்டில் எவ்வாறு வாழ முடிகின்றது? 

                    ஐரோப்பிய இளைஞர்கள் பெண்ணுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையானால், அவர்களை வற்புறுத்தப் போவதில்லை. புரிந்துணர்வுடன் விட்டுவிடுவார்கள். திருமணம் செய்த மனைவியோ, கணவனோ தமது குணநலன்களுக்கு ஒத்துவரவில்லையானால், தாமாக புரிந்துணர்வுடன் ஒதுங்கிவிடுவார்கள்.  ஆனால், அந்தப் பெண்ணைப் பழி வாங்கும் உணர்வோ, அவளைப் பற்றிய அவதூறான பேச்சுக்களோ பேசி, அப்பெண்ணை மானபங்கப்படுத்தப் போவதில்லை. அவளுக்கு ஒரு உதவி தேவைப்படும் பட்சத்தில் மனமுவந்து அவ்வுதவியைச் செய்வார்கள்.  இது ஏன் நடக்கின்றது என்றால், இருவர் திருமணம் செய்வது என்பது இணைந்து வாழ்வதற்கே ஆகும். பொருத்தம் இல்லாத இருவர் மனதால் வேறுபட்டு, குணத்தால் வேறுபட்டு, நாளும் பொழுதும் சண்டை செய்தபடி வாழுகின்ற போது வாழ்வு சுவைக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க முடியவில்லையானால், புரிந்துணர்வுடன் பிரிந்து நண்பர்களாவதில் தவறு ஒன்றும் இல்லையே. பலருடைய வாழ்க்கையை ஆராய்ந்து பேசியதில் அவர்கள் பண்பை உணரக்கூடியதாக இருந்தது. இது திருமணத்தின் பின் ஏற்படுகின்ற நிலை. ஆனால், எமது இளைஞர்கள் திருமணத்தின் முன்னேயே பெண்கள் பற்றி அவதூறாகப் பேசத் தொடங்கிவிட்டால், திருமணத்தின் பின் எப்படி ஆவார்கள்!!!!!
                 அதனால், பெண்பிள்ளைகளுக்கு ஒரு எச்சரிக்கை. இளைஞர்கள் பேச்சுக்கு இடந்தராது உங்கள் வாழ்;கையைப் பற்றிச் சிந்தித்து வாழப் பழகி; கொள்ளுங்கள். பெற்றோர் எச்சரிக்கையை தலைமேற் கொண்டு நடவுங்கள். எப்பெற்றோரும் தம் பிள்ளைகள் கெட்டுப்போக இடந்தர மாட்டார்கள் என்னும் உண்மையைத் தலைமேற் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு சிறக்கும்.

    வாசகர்களே! அங்கம் 2 உடன் மீண்டும் உங்களைச் சந்திக்கின்றேன். அதுவரை பொறுத்திருங்கள்.  
                     

    புலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு

    ( அங்கம் 1)

    புலம்பெயர்விலே தமிழர்களிடையே திருந்த வேண்டிய சில விடயங்களை உலகறிய உரக்கச் சொல்ல உங்கள் முன் விரிகிறது இக்கட்டுரை. இங்கு வாழும் தமிழர்களிடையே இளைஞர் போக்குகள், தமிழர் விழாக்கள், நேரக்கட்டுப்பாடின்மை, புறங்கூறல், மாற்று இனத்தினருடன் இணைந்து வாழாமை போன்ற பலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் எம்மினத்தின் உயர்வுக்கு இக்கட்டுரை உந்துதலாய் இருக்கும் என்று நம்பி பேனாவை கையெடுத்தேன்.
    நாடுவிட்டு நாடு வந்தும்
    கேடு கெட்ட குணநலங்கள்
    நாடி இன்பம் தேடித்திரியும்
    பேடிவாழ்வு தீர வேண்டும்.

    வேட்டைத் தொழிலில் நாட்டம் கொண்டு, விலங்கு, பறவை கொன்று தின்று, வாழ்வு கண்ட மனிதன், நாள்கள் நகர, காலங்கள் கழிய, நல்லவை நாடி, சமூகம் அமைத்து கலாசாரம் கண்டு, இறையைப் படைத்து, மொழியைப் படைத்து, நாகரீக வாழ்வை நன்றாய்க் கண்டான். பண்பாட்டு நூல்கள் பலர் படைத்து சீர் பெற்று வாழ்வு சிறக்க உழைப்பைத் தந்தனர். மனிதன் வாழ்க்கையின் பாதையில் நற்பழக்கவழக்கங்கள், அநுபவரீதியில் கண்டு பட்டுத் தெளிந்த வாழ்;க்கையை வாழப்பழகிக் கொண்டான். அப்படியானால், காலப்போக்கில் கண்ணில் காணும் நல்லவை கண்டு மனிதன் திருந்த வேண்டியது அவசியமாகின்றது. திருந்தியும் உள்ளான்.
    தாயகத்திலே தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பேகர் என்ற நான்கு இனங்கள் மட்டும் சேர்ந்தும் சேராதும், புரிந்தும் புரியாதும் போட்டி பூசல் என வாழ்ந்து தன்நாடு, நிம்மதியில்லை என வெளிநாடுகளுக்குத் தேடி ஓடிப் பலர் வந்தனர். தமிழீழத் தாயக உணர்வுப் போராட்டுத் தளைத்தோங்க முன் மேற்கல்வி மேற்கொள்ளவே வெளிநாடுகள் நோக்கி தமிழர்கள் நகர்ந்தனர். ஆனால், தற்பொழுது கற்றவர், கல்லாதவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் அந்நியநாடுகளில் அடைக்கலம் புகுந்தனர். வந்த நாடுகளோ ஓர் இனம் மட்டும் ஒதுங்கி வாழும் நாடுகள் அல்ல. அவை பலநாட்டு மக்களும் பல நாட்டுக் கலாசாரங்களும் பின்னிப்பிணைந்து வேலைத்தளங்ளிலும், பாடசாலைகளிலும், போக்குவரத்துச்சாதனங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் கலந்து களிநடம் புரிகின்ற நாடுகள் ஆயின.
    இச்சை கொண்டு மனிதன் தன்னைப் பார்த்துத் தன்னுடைய குறைநிறைகளை அலசி ஆராய்ந்து தன்னைச் சுயமதிப்பீடு செய்யக் கூடிய நிலைமை மனிதனுக்கு ஏற்படுகின்றது. பிறநாட்டினர் கலாசாரப் பழக்கவழக்கங்களில் இருந்து நல்லவற்றைத் தேடிப்பெற்றுத் திருந்தி வாழக்கூடிய வசதிவாய்ப்புக்களைப் பெற்ற தமிழினம் திருந்தி வாழ்தல் நியாயம் அல்லவா. மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் வாசனை உண்டு என்னும் கூற்றுக்கிணங்க பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்துப் பாலருந்தும் அன்னத்தைப் போல் நல்லவற்றை நாடிப் பெற்றுக் கொள்ளல் சிறப்பு இல்லையா? ஆனால் எங்கு சென்றாலும் அழுக்குகளைக் களையோம் என அடம்பிடிக்கின்ற தமிழர் நிலைமைகளை அநுபவித்து ஆற்றாமையில் என் பேனா வார்த்தைகளைச் சிந்துகின்றது.

    இப்படியும் சில இளைஞர்கள்;:

    21 ம் நூறறாண்டில் பலவித நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மலிவாக விஞ்சி நிற்கின்ற நாட்டிலே, சாதாரணமாக இவற்றை இளைஞர்களும் இளம் யுவதிகளும் கையாளுகின்றார்கள். தண்ணீரைக் குடிப்பதற்குத் தயங்கினாலும் ளுஉhரடநசஎணஇ குயஉநடிழழமஇ வுறவைவநசஇ அலளியஉநஇ ஆளnஇ ஐஉங இதுபோன்று பலவித கணனிப் பேச்சுத் தொடர்பு தளங்களுக்கு விஜயம் செய்வதற்குத் தயங்குவதில்லை. முகங்காணா நடபுக்களையும் முகங்காணும் நட்புக்களையம் கொண்டு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகின்றார்கள். குறைந்த கட்டண வசதியுள்ள தொலைபேசிகள் மூலம் ளுஅள என்னும் ஒரு கலையைப் பயன்படுத்தி அடிக்கடி நண்பர்களுடன் பேச்சுத் தொடர்பை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு இளையோர் நட்புறவு அதிரிக்கும் வாய்ப்புக்களை புதுப்புது நவீன சாதனங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. நட்புறவு நன்றே. ஆயினும், நட்புறவு நண்பர்கள் வாழ்வைச் சீர்குலைக்காது இருக்குமேயானால், நட்பிற்கு பங்கம் வரப் போவதில்லை.

    ஆனால், புலம்பெயர்வில் தமிழ் இளைளஞர்கள் பெண்பிள்ளைகளுடன் பக்குவமாய்ப் பேசுகின்றார்கள். ஆசைவார்த்தைகளை அழகாய்ச் சொரிகின்றார்கள். உண்மை நட்பென உளம்பதிய உரைக்கின்றார்கள். சுதந்திரம் பற்றிச் சுவையாய் புகட்டுகின்றார்கள். போதை வார்த்தைகளால் பெண்பிள்ளைகள் மனதை புரட்டிப் போடுகின்றார்கள். பொது இடங்களில் வீதிளில் சந்திப்புக்கு அழைக்கின்றார்கள். ஆசைதீரப் பேசி, கலகலப்பாய்ப் பழகுகின்றார்கள். பின் அழைத்துப் பழகிய பெண்களைப் பற்றியே அவதூறாகப் பேசுகின்றார்கள். இறுதியில் புலம்பெயர்ந்த பெற்றோர்களின் பெண்களைத் திருமணம் செய்யப் போவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் பெண் எடுக்க மாட்டோம். இலங்கையில் இருந்துவரும் அப்பாவிப் பெண்களை திருமணம் செய்து வாழ்வோம் என வீராப்பாய்ப் பேசுகின்றார்கள். வக்கிர புத்தியுள்ள இவ் இளைஞர்களுக்கு தாயத்துத் தங்கங்கள் அடைக்கலமாக வேண்டுமா? அடுத்தவர் வாழ்க்கையைக் கெடுத்துத் தாம் அற்புதமாய் வாழ வேண்டுமா? இப்படிச் சில இளைய தலைமுறைக்கு அத்திவாரம் இட்டது யார்? நமது எதிர்கால இளஞ்சமுதாயம் இவ்வாறு வளர்க்கப்பட்டதன் காரணம்தான் யாதோ? இவ் ஐரோப்பிய மண்ணிலே வாழுகின்ற ஐரோப்பிய இளைஞர்களுடன் வாழும் பாக்கியம் இவர்கள் பெறவில்லையா? அனைத்து இன மக்களுடன் பழகும் போது அவர்கள் குணநலன்களைப் புரியாமல்; இந்நாட்டில் எவ்வாறு வாழ முடிகின்றது?

    ஐரோப்பிய இளைஞர்கள் பெண்ணுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையானால், அவர்களை வற்புறுத்தப் போவதில்லை. புரிந்துணர்வுடன் விட்டுவிடுவார்கள். திருமணம் செய்த மனைவியோ, கணவனோ தமது குணநலன்களுக்கு ஒத்துவரவில்லையானால், தாமாக புரிந்துணர்வுடன் ஒதுங்கிவிடுவார்கள். ஆனால், அந்தப் பெண்ணைப் பழி வாங்கும் உணர்வோ, அவளைப் பற்றிய அவதூறான பேச்சுக்களோ பேசி, அப்பெண்ணை மானபங்கப்படுத்தப் போவதில்லை. அவளுக்கு ஒரு உதவி தேவைப்படும் பட்சத்தில் மனமுவந்து அவ்வுதவியைச் செய்வார்கள். இது ஏன் நடக்கின்றது என்றால், இருவர் திருமணம் செய்வது என்பது இணைந்து வாழ்வதற்கே ஆகும். பொருத்தம் இல்லாத இருவர் மனதால் வேறுபட்டு, குணத்தால் வேறுபட்டு, நாளும் பொழுதும் சண்டை செய்தபடி வாழுகின்ற போது வாழ்வு சுவைக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க முடியவில்லையானால், புரிந்துணர்வுடன் பிரிந்து நண்பர்களாவதில் தவறு ஒன்றும் இல்லையே. பலருடைய வாழ்க்கையை ஆராய்ந்து பேசியதில் அவர்கள் பண்பை உணரக்கூடியதாக இருந்தது. இது திருமணத்தின் பின் ஏற்படுகின்ற நிலை. ஆனால், எமது இளைஞர்கள் திருமணத்தின் முன்னேயே பெண்கள் பற்றி அவதூறாகப் பேசத் தொடங்கிவிட்டால், திருமணத்தின் பின் எப்படி ஆவார்கள்!!!!!
    அதனால், பெண்பிள்ளைகளுக்கு ஒரு எச்சரிக்கை. இளைஞர்கள் பேச்சுக்கு இடந்தராது உங்கள் வாழ்;கையைப் பற்றிச் சிந்தித்து வாழப் பழகி; கொள்ளுங்கள். பெற்றோர் எச்சரிக்கையை தலைமேற் கொண்டு நடவுங்கள். எப்பெற்றோரும் தம் பிள்ளைகள் கெட்டுப்போக இடந்தர மாட்டார்கள் என்னும் உண்மையைத் தலைமேற் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு சிறக்கும்.

    வாசகர்களே! அங்கம் 2 உடன் மீண்டும் உங்களைச் சந்திக்கின்றேன். அதுவரை பொறுத்திருங்கள்.

    புதன், 22 டிசம்பர், 2010

    அவள் நினைத்தாளா இது நடக்குமென்று.


                  
               
               நினைப்பது யாதும் நடப்பதில்லை 
               துணைப்பொருள் துணைவருவதில்லை
               கணப்பொழுது சித்தம் கலங்கினால்
               கறைபடிந்திடும் கலங்கா மனத்தில்   

    காதல் என்ற வலையில் விழுந்து, கல்யாணம் என்ற சிறையில்  அகப்பட்டு, கலாச்சாரம் என்ற தண்டனையில் வாழ்பவளல்லவா., அவள். தாயார் வைத்தியர் வளர்ப்புத்தாயார் பொடிமெனிக்கே. இனக் கலப்பை இனபமாய் அநுபவிப்பவள். இரு தாயார் வளர்ப்பில் அறிவும் அன்பும் செல்வச் சிறப்பும் பண்பும் அன்புச் சகோதரர் இருவர் பாசப் பிணைப்பும் பற்றிய அழகான வாழ்வை அற்புதமாய் அநுபவித்தவள் அல்லவா, அவள். படுசுட்டியாக படிப்பில் படுகெட்டியாக இருந்து இன்று தொலைக்காட்சியின் அன்பையும் பாசத்தையும் அரவணைத்ததன் காரணம் தான் யாதோ? 10 வயது இடைவெளியில் பகல் இரவென்று கணனியுடன் நேருக்கு நேர் முகம் பார்த்து உரையாடி, ஏற்பட்ட காதல் மயக்கத்தில் அந்தக் காதலனைக் கைப்பிடித்து இன்று தொலைக்காட்சியே கதியாக அந்நியநாட்டிலே வாசம் செய்யும் காரிகை இவள். 
                    வேலைவிட்டு வீடு வந்தால் அலுவலகச் சுவாரசியங்களை ஆளுக்காள் பரிமாறி சிரிப்பிலும் சிந்தனையிலும் பங்கு போட்டுக் கொள்ள மனம் துடிக்கும். ஆனால், துணைவனோ வேலை நேரமெல்லாம் கணனியில் செய்தியும் பற்பலவிடயங்களும்.   அலுவலக வேலை ஸ்தம்பித்து நிற்கும். அதை முடிக்க மீண்டும் மேலதிக நேரம் அலுவலகத்தில் தஞ்சம். நித்திரையைத் தியாகம் செய்து அடுத்த நாள் காலைப்பொழுது 7 மணிக்கு வீடு நோக்கிப் பயணம். சிறிது தூக்கம். காத்திருந்து கதிரையிலேயே உறங்கி அவன் வர இவள் அலுவலகம் நோக்கிப் பயணமாகி விடுவாள். அன்று அவ்வாறே உப்பு மா அவளுக்குப் பிடித்ததும் உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டும். என்று நினைவுறுத்துவதற்காகவும் அவள் அடுக்களையில் ஆயத்தமாக்கும் ஒரு சாதாரண உணவு. சமைக்கத் தொடங்க தொலைபேசி தொணதொணத்தது. கையிலெடுத்தாள் ரிசீவரை. மென்மையான அந்தக்குரல் அவள் செவிகளை வந்தடைந்தது. "குளியலறையில் சவர்க்காரத்தை எடுத்தேன், கதைகொடுக்க நீ சறுக்குவதைப் போல அது வழுக்கிச் சென்றது. சவரைத் திறந்தேன், வெடித்து வந்தது சத்தம் உன் சிரிப்பொலியைப் போல. உன் நினைவு வந்தது. தொலைபேசி எண்களைச் சுழட்டினேன். நேரமோ எட்டு. எட்டி நான் நடந்தால், உன் கிட்டே வந்து விடுவேன். சற்று உன் சம்மதத்தைத் தாராயோ" சுவையாகக் கதைத்தான். தனிமையை அகற்றத் தற்காலிகத் துணையை நாடினாள். அதுவே காலப்போக்கில் அவளுக்குச் சுவைக்கத் தொடங்கியது. சுகந்தமாகியது. பொறுப்பான கணவன் புத்தியிழந்தால்.  பண்பான வாழ்க்கை பறிபோய்விடும். நம்மைப் பற்றிச் சிந்திக்கும் நாம், நம்மைநாடிவந்தவர்கள் பற்றியும் சற்றுச் சிந்திப்போமா? கண்ணைக் கெடுத்த பின் சூரியநமஸ்காரத்தில் ஈடுபட்டு ஆவதுதான் என்ன.

    திங்கள், 20 டிசம்பர், 2010

    மொழிக்கலப்பு


    கடலலையாய் ஓங்கியும் குறைந்தும் ஓயாது கட்டிடத் தூண்களில் பட்டுத் தெறித்த கரங்கள் இசைத்த தாளக் கச்சேரியில் கண்களில் துளிர்த்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்த வண்ணம் மேடைக்கு வந்தான,; சுப்பிரமணியன். துக்கம்மிகும்போது மட்டுமன்றி மகிழ்ச்சி பீரிடும் போதும் வலியின் தாக்கத்தின் போதும் இதயம் முதலில் செய்தி சொல்வது, கண்களுக்குத்தான். உடனே கண்களும் தான்அறிந்த செய்தியை வெளிப்படுத்தி விடும் வாயாகிவிடும். இப்போது சுப்பிரமணியன் என்னும் பெயர் இந்துக்கடவுளின் பெயர் என்பது ஐரோப்பியர்கள் நன்கு அறிந்திருந்தனர். அறியச் செய்ததும் அவனில் கொண்ட அபிமானமே. அவனுக்குப் பொன்னாடை போர்த்தவில்லை. ஏனென்றால், இது ஐரோப்பிய அரங்கு. பொன்னாடைக்கு எங்கே இப்போது புளகாங்கிதம். புகழ் இழந்த போர்வை அல்லவா அது. இரவல் கவிதையில் புகழ் தேடும் கவிஞர்கள் மார்பில், தலைகுனிந்தல்லவா நிற்கின்றது: ஸ்குவிட் என்னும் கடற்பிராணி தன் மேனியில் ஒரு வெளிச்சத்தைக் கொண்டு கடலடியில் திரியுமாம். அதுபோலவே தமது புகழைத் தாமே பரப்பச் செலவு செய்யும் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கொண்டதல்லவா இந்நாடு. இவர்களுக்கு மத்தியில் தமிழனாய்த் தமிழிசை மூலம் தமிழை ஐரோப்பியர் புரட்டிப் பாhக்க இசை என்னும் மின்சாரத்தைப் பாய்ச்சியவன், சுப்பிரமணியன். அவன் பாடியது வேற்றுமொழிப் பாட்டாக இருந்தாலும் அதில் அரைப்பகுதி தாய் மொழியைக் கரைத்துவிட்டான். மொழிக்காப்பாளர் முறைத்தனர், கண்டித்தனர். ஆனால், இன்று உலகஅரங்கில் அவன் பாடல் அரங்கேறியபோது உலகம் விழித்தது. அனைத்து இசை கேட்கும் இளையவர்கள் காதுகளில் எலலாம் காற்றுடன் கலந்து தாலாட்டியது. வாய்களில் எல்லாம் நாவுடன் கலந்து நடனம் புரிந்தது. 
                                   உலக அரங்கிலே 2010 ம் ஆண்டிற்கான சிறந்த பாடகன் என்னும் நினைவுச் சின்னம் ஒரு தமிழனின் கரங்களுக்குக் கிடைத்த பெருமையில் கைகளில் தன் இலட்சியப்பரிசை அடக்கமாய்த் தாங்கினான். கைகளில் தொலைவாங்கி தரப்பட்டது. அது சிலர் கைகளில் புதைந்துவிட்டால். அடுத்தவர் நேரத்தையும் சலிப்பையும் சேர்த்தே வாங்கிவிடும். அதைப் பறித்தே எடுக்க வேண்டிய சூழ்நிலை பல தமிழ் மேடைகளில் பழக்கமாய் விட்டது. ஆனால், சுப்பிரமணியனோ பரந்த கடலின் நடுவே கப்பலினுள் இருந்த வண்ணம் கரையில் தொலைத்த ஊட்டச்சத்தைத் தேடிக் கொண்டிருப்பவன்போல் கண்களால் வலைவிரித்தான். அவன் கண்கள் ஏக்கத்தையும் சேர்த்தே கண்ணீர் முத்துக்களைச் சொரிந்து கொண்டிருந்தது. '' என் தந்தை எனக்குத் தந்தது, இசைபயிலப் பணம். என் தாய் எனக்குத் தந்தது, ஒத்தழைப்பு. ஆனால், இசைக்கு உரம் போட்டு '' அந்நியர் உன் குரல் கேட்டுத் தம்நிலை மறக்க வேண்டும். தமிழின் இனிமை உன் குரல் மூலம் அவர் நாடிநரம்புகளை ஊடறுத்துச் செல்லவேண்டும். தாய்மொழிச் சொற்கள் அந்நியமொழிச் சொற்களுடன் சேரட்டும் தங்கத்துடன் செம்பைக் கலந்து பாவனைக்குக் கொண்டு வா. சாதனை வீரனாய்த் தங்கப் பதக்கம் தாங்கி வா'' என்று நாளும் எனக்கு ஊக்கம் தந்த மொழி ஆசிரியை இன்று எங்குள்ளாரோ  எங்குள்ளாரோ? அவருக்கே இவ் அனைத்துப் புகழும். என்னால் முடியும் என்பதை உணர்த்தியவர் அவர்தானே. என்று நன்றியறிதலை வள்ளுவப்பிரியனாய் உணர்த்திப் பாதங்களை இருப்பிடம் நோக்கி நகர்த்தினான்.
              சாதனை வீரர்கள் உருவாகின்றார்கள். உருவாக்க உந்து சக்தியாக மறைவாக மாசற்ற மனத்துடன் இருப்பவர்கள் மறக்கப்படுகின்றார்கள். இதுவே இன்று மனிததர்மமாகப்படுகின்றது. இது ஒருபுறம் இருக்க, மொழிப்பற்றுப் பாடி எமது மொழிப் பெருமையை நாமே புகழ்ந்து கொண்டிருப்பதில்ல பெருமை. முதலில் வேற்று மொழிகளில் எல்லாம் தனது தடத்தை எமது மொழி பதிக்க வேண்டும். எத்தனை மொழிகளுக்குப் புகலிடம் கொடுத்தது எமது தமிழ்மொழி.  இப்போது அது அடுத்தவர்களிடம் போய்ச் சேர்ந்து தனது அடையாளத்தைப் பதிப்பது மட்டுமல்ல அவர்கள் நாவில் நர்த்தனமாடவும் வேண்டும். இதுவே இன்று அந்நியநாட்டிற்குப் படையெடுத்த வந்த தமிழர்களின் கடமையாக இருக்க வேண்டும்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...