• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 29 நவம்பர், 2010

  சோமபானம் உண்டால் சொல்லுக்குள் அடங்கும் மனம்
              சோமபானம் உண்டால் சொல்லுக்குள் அடங்கும் மனம்


  மனிதன் என்ற பெயரில் நடமாடும் விலங்குகளை அடையாளங் காண ஒரு ஞானக் கண்ணைத் தந்துதவு இறைவா! என இரு கரம் ஏந்த வேண்டிய நிலை பெண் இனத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஆசை காட்டி மோசம் செய்வோரும், ஐரோப்பிய ஆறடி மண்ணுக்குள் அடக்கமாக்கப் பெண்களை விமானம் ஏற்றி வந்த காலன்களும் கணவன் என்ற பெயரில் அப்பாவி அபலைகளை கையில் கிடைப்பவற்றைக் கொண்டு கொன்று குவிக்கும் கொடுமைக்காரர்களும் கோலோச்சும் மண்ணில் குடிவந்த குலவிளக்குகளே! உங்களுக்கோர் எச்சரிக்கை! தாய் மண்ணுக்கு விடைகொடுத்து கைப்பிடித்தவனை நம்பி மட்டும் அந்நியநாட்டு மோகத்தில் விமானப்படி மிதிக்காதீர்கள். தைரிய ஆயுதம் ஏந்துங்கள். தனித்து நிற்கப் பழகுங்கள். பிள்ளைப் பூச்சியல்ல பெண் பிடித்து நசுக்குவதற்கு. விலங்கிட்டுக் கொல்வதற்கு பெண் அடிமையல்ல. காதலித்தவளுடன் சல்லாபம் புரியக் கைப்பிடித்தவளும் வாரிசும் இடையூறென்றால், அந்த மிருகம், கத்தி மட்டும் ஏந்தாது. உங்களைக் கொல்வதற்கு தன் கையில், கிடைப்பது எதுவானாலும் அதனை உங்களைக் கொன்று குவிக்கும் ஆயுதமாக்கும். தன் வாரிசாக இருந்தாலும் அதைக் காலால் மிதித்துக் கொல்லவும் தயங்காது. இறுதியில் மனஅழுத்தமென்னும் மாயப் பேச்சால், அடுத்தவர் அநுதாபச்சொல்லை இலகுவாகப் பெற்று அப்பாவியாகக் காட்சியளிக்கும். இவ்வாறான இராக்கதர்கள் வாழும் அபூர்வ பூமியிது. 
                 
                    இந்த இரகம் ஒருபுறம் இருக்க, இங்கு பணம் உண்டு, பசியாற அளவுக்கதிகமான உணவுண்டு, உல்லாச வாழ்க்கையுண்டு. ஆனால் மனிதன் மனிதனாக இல்லை. ஓயாது உழைத்து, நிம்மதியைத் தொலைத்தவர்களும் இங்கு தொகையாக உள்ளார்கள். இவர்களுக்கும் இராட்சத குணமே இரக்க குணத்தைவிட மேலதிகமாகத் தொழிற்படுகின்றது. அது எப்போது வெளிப்படும்? என்ன செய்யும்? என்று எவருக்குமே தெரியாது. எனவே மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சோமபானம் அருந்துங்கள். அது ஒன்றும் இலகுவானதல்ல. தினமும் சிறிது சிறிதாக முயன்றால், பலன் காட்டும் தியானமே, சோமபானம் என்பதாகும். தியானத்தின் மூலம் மாத்திரமே மிருககுணத்தை மனிதனால் அடக்க முடியும். அப்பாவிப் பெண்களின் உயிரைக் காக்க முடியும்.

  ஞாயிறு, 28 நவம்பர், 2010

  வாழ வந்த நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்


  வாழ வந்த நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்

  தாய்நாடு ஒரு மனிதனுக்குத் தாயைப் போல் அமைகின்றது. ஒருவன் அந்தத் தாய்நாட்டை விட்டு வேறுநாட்டுக்குத் தஞ்சம் புகுந்தால், அந்த நாடு அவனுக்கு வளர்ப்புத் தாயைப் போல் அமையும். சொந்தத் தாயை விட்டுப் பிரிந்தவன், வளர்ப்புத் தாயை சொந்தத் தாயைப் போலவே கருத வேண்டும். தாய்க்குச் செய்யும் நன்றிக்கடனை வளர்ப்புத்தாய்க்கும் செய்ய வேண்டும் அல்லவா?  வாழுகின்ற நாட்டை விட்டுச் செல்லுகின்ற நிலை வந்தால், நிலத்திலிருந்துவிட்டுச் செல்லுகின்ற போது பின்பக்கம் ஒட்டியிருக்கின்ற மண்ணைத் தட்டிவிட்டுச் செல்வது போல், அந்த நாட்டை மறந்து செல்லுதல் கூடாது. வாழவந்த நாடு உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க வீடு, உற்றார் உறவினர்கள் போல் நீ ஏன் வாழும் நாட்டு மொழி கற்கவில்லை? எனக் கேட்டு மொழியை இலவசமாகக் கற்பித்து, வாழ்வதற்கான வேலைவாய்ப்புக்களைத் தேடித் தருவதுடன் சகல வசதிகளும் தந்து தஞ்சம் புகுந்தவர்களைப் பாதுகாக்கின்றது. 

  தஞ்சம் புகுந்த நாட்டிற்கு வந்தவர்கள் தமக்குக் கிடைக்கின்ற வருமானத்தில், கிடைக்கும் அரசாங்க உதவிகளில் மிச்சம் பிடித்து, தாய்நாட்டில் இருக்கும் உறவினர்களுக்கு அனுப்புகின்றார்கள். இப்படிச் செய்கின்ற போது அந்தநாட்டுக்கு அந்நியசெலவாணி அதிகரிக்கின்றது. இப்படிப் பார்க்கும் போது வாழ வந்த நாடு தஞ்சம் புகுந்தவர்களுக்கு உதவி செய்வதுடன், அவர்கள் உறவினர்கள், அவர்கள் தாய்நாடு போன்றவற்றிற்கும் உதவுகின்றது. அகதிகளைக் காப்பது புகுந்த நாட்டின் கடமை அல்ல. அது ஒரு மனிதாபிமான செயல். இந்த மனிதாபிமானம் காட்டும் நாட்டுக்கு அகதிகளாய் வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும். சிலர் உடலில் வலிமையும், வயதும் இருந்தும் உடம்பை வளைத்துப் பணி செய்யாது, வீட்டில் அடைந்து கிடந்து சோம்பேறிகளாக யாருக்கும் பயனற்றவர்களாக வாழுகின்றார்கள்.                     வேலை செய்து கிடைக்கும் வருவாயை விட வேலை செய்யாமலே ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும் சந்தோசத்தில் வாழுகின்றார்கள். குழந்தைகள் அதிகமாகப் பெறுகின்ற போது குழந்தைகளுக்காக அரசாங்கம் வழங்கும் பணம் (Kindegeld) அதிகரிக்கின்றது. முதல் இரண்டு பிள்ளைகளுக்குக் கிடைக்கும் பணத்தைவிட மூன்றாவது பிள்ளைக்கு அதிகமான பணம் வழங்கப்படுகின்றது. அதனால், குழந்தை உற்பத்தி சிறந்த உற்பத்தி எனக் கருதி அத்தொழிலிலேயே ஈடுபட்டுவிடுகின்றனர். இந்தக் குழந்தைகள் நாட்டுக்கு உதவுகின்ற பிள்ளைகளாக வளர்க்கப்பட்டால்,குழந்தை உற்பத்தி பலனைத் தரும். ஆனால், பெற்ற குழந்தைகளையே சரியான முறையில் வளர்க்கத் தெரியாது வளர்க்கும் போது அவர்களால் நாட்டுக்கு நன்மையா? தீமையா? ஏற்படும்.

              சரியான முறையில் பிள்ளைகள் வளர்க்கப்படாத போது கிரிமினல்களும் நாட்டைப் பழுதடையச் செய்பவர்களும் அதிகரித்து விடுகின்றனர். இந்த நாட்டவர்கள் இப்படியான தவறுகளைச் செய்தால் பொறுத்துக் கொள்ளலாம். வாழ வந்தவர்கள் செய்யலாமா? உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா? களவு செய்தல். அரசாங்க உடைமைகளைப் பழுதடையச் செல்தல், உதாரணமாக, பஸ், புகைவண்டியில் இருக்கையில் காலணி அணிந்த காலைத் தூக்கி வைத்தல், ஆயுதங்களால் இருக்கைகளை கிழித்தல், கூரான ஆயுதங்களால் அரசாங்க உடைமைகளில் கீறுதல், வீதிச் சுவர்களில் தேவையற்ற படங்களை வரைதல் போன்றவை. இவ்வாறான வேலைகளைச் செய்யும் போது அரசாங்கம் இதைத் திருத்தவதற்கு மேலதிகச் செலவுகளைச் செய்ய வேண்டி ஏற்படும். இது அகதிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட செலவுடன் மேலதிக செலவை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைகின்றது. சிந்திக்கத் தெரியாத எதிர்காலப் பார்வை இல்லாத பெற்றோர்களுக்கு புத்தி சொல்ல வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள், சமூகநல சேவையாளர்கள், ஆலோசகர்களையே சாரும். நாட்டுப்பற்றும் சூழல் பற்றும் மனிதனுக்கு அவசியம். 'நாடு என்ன செய்தது எனக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு'' என்ற பாடலைப் போல் பிறர் எமக்குச் செய்ய வேண்டும் என்பதை விடுத்து நாம் பிறருக்குச் செய்ய வேண்டும் என்று நினைத்துப் பார்ப்போம். சுயநலவாதிகளால் ஒரு நாடு முன்னேற்றம் காணாது. பொதுநலவாதிகளே ஒரு நாட்டைக் கட்டிக் காக்கக் கூடியவர்கள்.

                       கற்பிக்க பாடங்களின் ஊடாக ஒழுக்க முறைகளைக் கற்பித்தல் வேண்டும். வன்முறைகளை வெளிப்படுத்துகின்ற பிள்ளைகளைச் சரியான புத்திமதிகளைக் கூறித் திருத்த வேண்டும். அதிகமான கண்டிப்பும் கூடாது. கண்டிப்பு அதிகரித்துவிட்டால், கண்டிப்பவர்கள் இல்லையென்றால், பிள்ளை தவறுகளை அதிகமாகச் செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. பொருள்களை உடைக்கும், தனது சேட்டைகளைப் பிற பிள்ளைகளிடம் காட்டும். அம்மாவின் உறவு பிள்ளைகளுக்கு அவசியம். எவ்வாறான அவசிய வேலைகள் இருந்தாலும், அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு பிள்ளைகளுடன் உறவாட வேண்டும். அவர்களைச் சிரிக்க வைக்க வேண்டும். நல்ல விதையிலிருந்தே நல்ல மரம் வளரும். அதை மனதில் கொண்டு பிள்ளைகளை வளர்த்தால், எந்த நிலையிலும் அவர்களுக்கு மனநோய்கள் வருவதற்குரிய வாய்ப்புகள் இல்லை. சிறுவயதில் கவனிக்காமல் விட்டுவிட்டு வளர்ந்தபின் ஐயோ! என்மகன் கெட்டுப் போய் விட்டானே என்று கலங்குவதில் பயனில்லை. சொல்லுக்கு இருக்கும் சக்தி வேறு எதற்கும் இல்லை. சொற்களை நாம் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் மனங்களை வெல்லலாம். மனங்களை வென்றெடுக்கும் போது அறிவுரைகள் பலிக்கும்.

           நாம் வாழுகின்ற நாட்டிலே அடிப்படை உணவு, சுகாதாரவசதிகளுடன் வாழ்வதற்குரிய பொருள்கள் குறைவான விலையில் கிடைக்கின்றது. ஏனென்றால், நாடு சுத்தமாகவும் நாட்டிலுள்ள மக்கள் சுகதேகியாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே ஆகும். இவற்றைச் சரியான முறையில் வெளிநாட்டவர்கள் பயன்படுத்தல் வேண்டும். இதைவிடுத்து சுகத்தைக் கெடுக்கும் மதுபானம், சிகரெட், னுசழபநnஇ போன்றவற்றைப் பாவித்து குற்ற வேலைகள் செய்து நாட்டைச் சீர்குலைப்பதனால், தொலைக்காட்சியும் die Ausreißer ( வீட்டை விட்டு வெளியேறியோர்) Teenager außer Kontrolle  ( கட்டுப்பாடற்ற பருவவயதினர்)die Mädchen gang போன்ற நிகழ்ச்சியும் நடத்த வேண்டியது அவசியமாகின்றது.

               எனவே ஒவ்வொரு மனிதர்களும் எதிர்கால வாழ்க்கையை மனதில் கொண்டு தாம் சரியன முறையில் நடந்து தம்மை ஏற்றுக் கொண்ட நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக நடந்து தமது பிள்ளைகளைச் சிறப்பான முறையில் வளர்த்தால் வாழ வந்த நாடு நம்மை ஏற்றுக் கொண்டதற்கு நன்றியுள்ளவர்களாவோம்.

  வாழ வந்த நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்

            வாழ வந்த நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்

  தாய்நாடு ஒரு மனிதனுக்குத் தாயைப் போல் அமைகின்றது. ஒருவன் அந்தத் தாய்நாட்டை விட்டு வேறுநாட்டுக்குத் தஞ்சம் புகுந்தால், அந்த நாடு அவனுக்கு வளர்ப்புத் தாயைப் போல் அமையும். சொந்தத் தாயை விட்டுப் பிரிந்தவன், வளர்ப்புத் தாயை சொந்தத் தாயைப் போலவே கருத வேண்டும். தாய்க்குச் செய்யும் நன்றிக்கடனை வளர்ப்புத்தாய்க்கும் செய்ய வேண்டும் அல்லவா?  வாழுகின்ற நாட்டை விட்டுச் செல்லுகின்ற நிலை வந்தால், நிலத்திலிருந்துவிட்டுச் செல்லுகின்ற போது பின்பக்கம் ஒட்டியிருக்கின்ற மண்ணைத் தட்டிவிட்டுச் செல்வது போல், அந்த நாட்டை மறந்து செல்லுதல் கூடாது. வாழவந்த நாடு உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க வீடு, உற்றார் உறவினர்கள் போல் நீ ஏன் வாழும் நாட்டு மொழி கற்கவில்லை? எனக் கேட்டு மொழியை இலவசமாகக் கற்பித்து, வாழ்வதற்கான வேலைவாய்ப்புக்களைத் தேடித் தருவதுடன் சகல வசதிகளும் தந்து தஞ்சம் புகுந்தவர்களைப் பாதுகாக்கின்றது. 

  தஞ்சம் புகுந்த நாட்டிற்கு வந்தவர்கள் தமக்குக் கிடைக்கின்ற வருமானத்தில், கிடைக்கும் அரசாங்க உதவிகளில் மிச்சம் பிடித்து, தாய்நாட்டில் இருக்கும் உறவினர்களுக்கு அனுப்புகின்றார்கள். இப்படிச் செய்கின்ற போது அந்தநாட்டுக்கு அந்நியசெலவாணி அதிகரிக்கின்றது. இப்படிப் பார்க்கும் போது  வாழ வந்த நாடு தஞ்சம் புகுந்தவர்களுக்கு உதவி செய்வதுடன், அவர்கள் உறவினர்கள், அவர்கள் தாய்நாடு போன்றவற்றிற்கும் உதவுகின்றது. அகதிகளைக் காப்பது புகுந்த நாட்டின் கடமை அல்ல. அது ஒரு மனிதாபிமான செயல். இந்த மனிதாபிமானம் காட்டும் நாட்டுக்கு அகதிகளாய் வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும். சிலர் உடலில் வலிமையும், வயதும் இருந்தும் உடம்பை வளைத்துப் பணி செய்யாது, வீட்டில் அடைந்து கிடந்து சோம்பேறிகளாக யாருக்கும் பயனற்றவர்களாக வாழுகின்றார்கள்.                     வேலை செய்து கிடைக்கும் வருவாயை விட வேலை செய்யாமலே   ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும் சந்தோசத்தில் வாழுகின்றார்கள். குழந்தைகள் அதிகமாகப் பெறுகின்ற போது குழந்தைகளுக்காக அரசாங்கம் வழங்கும் பணம் (முiனெநசபநடன) அதிகரிக்கின்றது. முதல் இரண்டு பிள்ளைகளுக்குக் கிடைக்கும் பணத்தைவிட மூன்றாவது பிள்ளைக்கு அதிகமான பணம் வழங்கப்படுகின்றது. அதனால், குழந்தை உற்பத்தி சிறந்த உற்பத்தி எனக் கருதி அத்தொழிலிலேயே ஈடுபட்டுவிடுகின்றனர். இந்தக் குழந்தைகள் நாட்டுக்கு உதவுகின்ற பிள்ளைகளாக வளர்க்கப்பட்டால்,குழந்தை உற்பத்தி பலனைத் தரும். ஆனால், பெற்ற குழந்தைகளையே சரியான முறையில் வளர்க்கத் தெரியாது வளர்க்கும் போது அவர்களால் நாட்டுக்கு நன்மையா? தீமையா? ஏற்படும்.

              சரியான முறையில் பிள்ளைகள் வளர்க்கப்படாத போது கிரிமினல்களும் நாட்டைப் பழுதடையச் செய்பவர்களும் அதிகரித்து விடுகின்றனர். இந்த நாட்டவர்கள் இப்படியான தவறுகளைச் செய்தால் பொறுத்துக் கொள்ளலாம். வாழ வந்தவர்கள் செய்யலாமா? உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா? களவு செய்தல். அரசாங்க உடைமைகளைப் பழுதடையச் செல்தல், உதாரணமாக, பஸ், புகைவண்டியில் இருக்கையில் காலணி அணிந்த காலைத் தூக்கி வைத்தல், ஆயுதங்களால் இருக்கைகளை கிழித்தல், கூரான ஆயுதங்களால் அரசாங்க உடைமைகளில் கீறுதல், வீதிச் சுவர்களில் தேவையற்ற படங்களை வரைதல் போன்றவை. இவ்வாறான வேலைகளைச் செய்யும் போது அரசாங்கம் இதைத் திருத்தவதற்கு மேலதிகச் செலவுகளைச் செய்ய வேண்டி ஏற்படும். இது அகதிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட செலவுடன் மேலதிக செலவை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைகின்றது. சிந்திக்கத் தெரியாத எதிர்காலப் பார்வை இல்லாத பெற்றோர்களுக்கு புத்தி சொல்ல வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள், சமூகநல சேவையாளர்கள், ஆலோசகர்களையே சாரும். நாட்டுப்பற்றும் சூழல் பற்றும் மனிதனுக்கு அவசியம். 'நாடு என்ன செய்தது எனக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு'' என்ற பாடலைப் போல் பிறர் எமக்குச் செய்ய வேண்டும் என்பதை விடுத்து நாம் பிறருக்குச் செய்ய வேண்டும் என்று நினைத்துப் பார்ப்போம். சுயநலவாதிகளால் ஒரு நாடு முன்னேற்றம் காணாது. பொதுநலவாதிகளே ஒரு நாட்டைக் கட்டிக் காக்கக் கூடியவர்கள்.

                       கற்பிக்க பாடங்களின் ஊடாக ஒழுக்க முறைகளைக் கற்பித்தல் வேண்டும். வன்முறைகளை வெளிப்படுத்துகின்ற பிள்ளைகளைச் சரியான புத்திமதிகளைக் கூறித் திருத்த வேண்டும். அதிகமான கண்டிப்பும் கூடாது. கண்டிப்பு அதிகரித்துவிட்டால், கண்டிப்பவர்கள் இல்லையென்றால், பிள்ளை தவறுகளை அதிகமாகச் செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. பொருள்களை உடைக்கும், தனது சேட்டைகளைப் பிற பிள்ளைகளிடம் காட்டும். அம்மாவின் உறவு பிள்ளைகளுக்கு அவசியம். எவ்வாறான அவசிய வேலைகள் இருந்தாலும், அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு பிள்ளைகளுடன் உறவாட வேண்டும். அவர்களைச் சிரிக்க வைக்க வேண்டும். நல்ல விதையிலிருந்தே நல்ல மரம் வளரும். அதை மனதில் கொண்டு பிள்ளைகளை வளர்த்தால், எந்த நிலையிலும் அவர்களுக்கு மனநோய்கள் வருவதற்குரிய வாய்ப்புகள் இல்லை. சிறுவயதில் கவனிக்காமல் விட்டுவிட்டு வளர்ந்தபின் ஐயோ! என்மகன் கெட்டுப் போய் விட்டானே என்று கலங்குவதில் பயனில்லை. சொல்லுக்கு இருக்கும் சக்தி வேறு எதற்கும் இல்லை. சொற்களை நாம் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் மனங்களை வெல்லலாம். மனங்களை வென்றெடுக்கும் போது அறிவுரைகள் பலிக்கும்.

           நாம் வாழுகின்ற நாட்டிலே அடிப்படை உணவு, சுகாதாரவசதிகளுடன் வாழ்வதற்குரிய பொருள்கள் குறைவான விலையில் கிடைக்கின்றது. ஏனென்றால், நாடு சுத்தமாகவும் நாட்டிலுள்ள மக்கள் சுகதேகியாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே ஆகும். இவற்றைச் சரியான முறையில் வெளிநாட்டவர்கள் பயன்படுத்தல் வேண்டும். இதைவிடுத்து சுகத்தைக் கெடுக்கும் மதுபானம், சிகரெட், னுசழபநnஇ போன்றவற்றைப் பாவித்து குற்ற வேலைகள் செய்து நாட்டைச் சீர்குலைப்பதனால், தொலைக்காட்சியும் die ausreißer ( வீட்டை விட்டு வெளியேறியோர்) Teenager außer Kontrolle  கட்டுப்பாடற்ற பருவவயதினர்) die Mädchen gang போன்ற நிகழ்ச்சியும் நடத்த வேண்டியது அவசியமாகின்றது.

               எனவே ஒவ்வொரு மனிதர்களும் எதிர்கால வாழ்க்கையை மனதில் கொண்டு தாம் சரியன முறையில் நடந்து தம்மை ஏற்றுக் கொண்ட நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக நடந்து தமது பிள்ளைகளைச் சிறப்பான முறையில் வளர்த்தால் வாழ வந்த நாடு நம்மை ஏற்றுக் கொண்டதற்கு நன்றியுள்ளவர்களாவோம்.

  வியாழன், 25 நவம்பர், 2010

  ஒழுங்கை விழுங்கும் மனிதர்கள்

                                  


                                        ஒழுங்கை விழுங்கும் மனிதர்கள்

  அரோஹரா..... என்னும் ஒலி ஹம் நகரில் பள்ளி கொண்டுள்ள அம்மன் காதுகளில் அலைஅலையாய்ச் சென்றடைய, செவிப்பறையை அதிரச் செய்த ஓசை கேட்டு கல்லாய் அமர்ந்திருந்த விக்கிரகம் கண்கள், மெதுவாகத் திறக்கப்படுகின்றது. சனக்கூட்டத்தின் இடிபாடுகள் தென்படுகின்றது. கோயில் மணிச்சத்தத்திலும் கூட்டத்தின் சத்தம் அபாரம். வாய்களினால் வந்த வார்த்தைகள் மனங்களில் உறையவில்லையே. அகல விரித்த கண்கள், அடுத்தவர் ஆடை அலங்காரங்களில் மொய்க்கின்றனவே. மனம் எங்கோ, வார்த்தைகள் எங்கோ செல்கின்றனவே. திறந்த கண்கள் திரும்பவும் மூடின. மந்திரங்கள் மணியோசைகள் அத்தனையும் மெல்ல மெல்ல அடங்கின. 

                           அடியார்கள் அனைவரும் அன்னதான மண்டபத்தை மொய்த்தனர். பல நாட்கள் பட்டினி கிடந்து ஒருநாள் உணவு கண்ட பரபரப்பு. அடிபட்டு இடிபட்டு பந்திக்கு முந்துகின்றனர். ''இந்த ஐரோப்பிய மண்ணில் அந்நியர் அவலம்'' என ஒரு ஜேர்மனியர் பத்திரிகைக் குறிப்பிறகுத் தலைப்பு இடுகின்றார்.  சற்றே விலகி அகன்ற அம்மன் கோயில் வீதியில் மெல்லென வந்த தென்;றல் காற்றின் ஸ்பரிசத்தை ஆகாயத்தை அண்ணாந்து நோக்குகின்றேன். வரிசைவரிசையாய் அழகாகச் சிறகு விரித்துப் பறக்கின்றன புள்ளினங்கள். அவற்றின் ஒழுங்கின் நேர்த்தியை வியந்து பார்க்கின்றேன். கோடு போட்டு விட்டது போல் கோணாமல் செல்கின்ற அழகை இரசித்தபடித் தரையை நோக்கிக் கண்களை இறக்குகின்றேன். வரிசைவரிசையாய் எறும்பு அணி ஒன்றின் அணிவகுப்புத் தென்படுகின்றது. அதைச் சற்றே சீண்டிப் பார்க்க ஆசை கொண்டு இடையே ஒரு குச்சியைப் போடுகின்றேன். எந்தவித சஞ்சலமுமின்றி மிக இலாவகமாகத் தடையை விலக்கி, ஒழுங்காக நிமிர்ந்து, நேர் பாதை கொண்டு, நிதானமாக முன்னேறும் யாங்கைக் கண்ணுற்றேன். என் மனக்கண்ணை குளக்கரை நோக்கித் திருப்புகின்றேன். தாய் வாத்து மிதந்துவரக் குஞ்சுகள் அதைத் தொடர்ந்து ஒழுங்கு மாறாது ஒய்யாரமாய்ப் பவனி வரும் இரம்யத்தை நினைத்துச் சிரித்த வண்ணம் அன்னதானக் கூட்டத்தைப் பார்க்கிறேன். அன்று காளமேகம் கண்ட சத்திரம் என் மனதில் பொறி தட்டுகிறது. ஒரு சத்திரத்திலே ஒரு பிராமணி இலைக்கும் வாய்க்கும் இடையிலே ஒரு உணவுப் போராட்டமே நடத்தகின்றார். உண்ணம் வேகத்தில் அவர் தலைமுடி அவிழ்ந்து உணவில் விழ, அதை உதறிவிடுகின்றார். அந்த உதறலில் பறந்து வந்த சோற்றுப் பருக்கை காளமேகம் உணவில் விழுகின்றது. அருவருப்புடன் ஆத்திரம் மேலிட, 
          
               ''சுருக்கவிழ்ந்த முன் குடுமிச் சோழியா சோற்றுப்
                 பொருக்குலர்ந்த வாயா புலையா – திருக்குடந்தைக்
                 கோட்டானே! நாயே! குரங்கே! உனையொருத்தி 
                 போட்டாளே வேலையற்றுப் போய்''

  என்று வசை பாடுகின்றார். அக்கவி இங்கிருந்திருந்தால்,

                 பட்டுவேட்டி பளபளக்க பட்டுப்புடவை மினுமிங்க
                 வட்டில் சோற்றுக்காய்த் தட்டுத் தடுமாறுபவரே – உங்கள்
                 கட்டுப்பாடு நிலைகுலைகிறது கற்றுக் கொள்ளுங்கள்
                 கற்றுத் தருவார் ஐந்தறிவு ஓரறிவு உயிர்கள்

  என்று அழகாகப் பாடியிருப்பார்.
                 
                                                     ஆறறிவு படைத்த மனிதனென தம்மைத் தாமே உயர்வாகக் கருதும் நம் மனிதர்கள், ஆலயங்களில் மட்டுமல்ல. திருமண வைபவங்களில் கூட மொய் எழுத முனைந்து நிற்கும் போது, விழாக்களின் போது, கச்சேரிகள் நடந்து கொண்டிருக்கும் போது என எங்கும் சீர்கேடு, ஒழுங்கின்மை. கலையைக் கருத்துடன் சபையிடம் ஒப்படைக்கும் போது நம்மவர் சம்பாஷணைக் கச்சேரி ஆரம்பித்துவிடும். நடந்து கொண்டே இருப்பார்கள். மேடையிலோ கலைஞன் தன்னை மறந்து தன் கலைப்படையலை நடத்திக் கொண்டிருப்பார். உணவு விற்பனை அமோகமாக நடைபெறும். பொறுமை இல்லையெனில், எதற்குப் பொது இடம். ஒழுங்கும் கட்டுப்பாடும் உள்ளத்திலிருந்து வர வேண்டும். நாகரீகம் கற்றுக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். நேரத்தைப் பொறுமையுடன் பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால், ஒதுங்கி விடவேண்டும். ஒழுங்கை விழுங்கிவிடக் கூடாது. பலர் கூடும் கூட்டத்திலே ஒழுங்கு மீறி நடக்க வேண்டாம் என்று ஒரு உலகநீதி பாட மீண்டுமாய் உலகநாதர் வந்து பிறக்க வேண்டும் போல் இருக்கின்றது.
               
                

  திங்கள், 22 நவம்பர், 2010

  உச்சி மோந்த தமிழ்க் கன்னி


                     


                               உச்சி மோந்த தமிழ்க் கன்னி

  வண்ணச் சொல்லும் வகைவகையாய்ப் பொருளும் கலந்து வாரி என்னை அணைத்து மகிழும் எழுத்து வள்ளல்களே! எனக்காயத் தரப்படும் சில மணித்துளிகள் என் பெருமையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன். 

  நான் பிறக்கும் போதே சுந்தரத் தோற்றத்துடனும் இலக்கண அமைப்புடனும் இலகுவற்ற முறையுடனும் இனிமையாகத் தோன்றினேன். என் தந்தையார் சழவனழன் ஆணையிலும் குறுமுனி அகத்தியன் அறிவிலும் அகிலத்தில் அவதரித்தேன். கடந்துவந்த பாதையிலே நான் பதித்து வந்த கோலங்கள், கோலவாரியாக மாறுபட்டுக் கொண்டேயிருக்கின்றன. மூவேந்தர் ஆட்சியிலே பூரித்து நின்ற என்னைக் கடல்கோள்கள் அச்சுறுத்தின. எனினும் காலன் என்னைக் கவரவில்லை. முதல், இடை, கடை என்று முறையே சங்கங்கள் வைத்து என்னை வளர்க்க மன்னர்களும் புலவர்களும் தங்களைப் போல் முனைந்து நின்றனர். சங்கப்பலகையிலே நான், எட்டுத்தொகை, பத்துப்பாட்டென அழகு அணிகளில் பொய்யாமொழி, நான் பொய்யாமல் இருக்க, நீங்கள் என்னை அடிக்கடித் தொட்டுக் கொள்ளும் குறள்வெண்பாவால் ஆரம் சூட்டினான். காதல், வீரம், மேவி நின்ற காலத்திலே காதலால் மேம்பட்டேன். துறவு மேவி நின்ற காலத்தில் துறவினால் மேம்பட்டான்.

           அடுத்து வந்த பல்லவர் காலத்திலே பக்திப்பாடல்களால் என்னைத் தூவி மகிழ்ந்தனர். தாழிசை, துறை, விருத்தம் கலந்த பாக்களினால் பாடல்களைச் சமர்ப்பித்தனர். சோழர்காலத்திலே நளவெண்பா, பரணி, பிள்ளைத்தமிழ் என வகைவகையாய்ப் படைத்தளித்தனர். நாயக்கர் ஆட்சிக்காலத்திலே விகடகவி, சிலேடைக்கவி, வசைக்கவி போன்ற சிறப்புமிக்க வடிவங்களை வடித்து எனக்கு அளித்ததுடன் சந்தச் சுவை கலந்த பாடல்களையும் அருணகிரிநாதர் என்னும் முருகபக்தன் எனக்களித்தான். குறவஞ்சி, பள்ளு போன்ற பிரபந்தங்கள் இக்காலத்தில் என்னை அலங்கரித்ததுடன் இவற்றிற்குச் சிந்து முதலிய செய்யுள்வகைகளைக் கையாண்டு பேச்சுவழக்கிலுள்ள சொற்கள் கையாளப்பட்டமையை, தற்கால எளிய போக்கிற்கு நாயக்கர் காலமே வித்திட்டது. என மனதில் நான் நினைப்பதுண்டு. நாயக்கர் காலத்தில் என்னை அலங்கரிக்க வடமொழி தழுவினர். ஐரோப்பியர் இலக்கியங்களின் போக்கைத் தழுவினர். ஐரோப்பிய நாட்டார் தம்மதம் பரப்ப என்னைத் தாராளமாக ஆய்ந்து கற்று எனக்கே பல படைப்புக்கள் ஆக்கி வைத்தார்கள் என்றால், என் பெருமையை என்னென்பேன். இக்காலத்து என்னுள் பதிந்த இலக்கியங்கள், நாடக இலக்கியங்கள், உரைநடை இலக்கியங்கள், அத்தனையையும் பட்டியலிட்டு அழகாய் எடுத்துரைக்க எனக்காய் அமைக்கப்பட்ட நேரம் போதாது. ஆதலால், ஆவலாய் என்னை அளக்கிறேன், அளவாய் இப்போது. 20ம் நூற்றாண்டிலே பாரதியை, கம்பதாசனை, கவிமணியை இவர்கள் போன்ற எண்ணற்றோரை நாவாரப் புகழுகின்றேன்.

           இன்று 21ம் நூற்றாண்டிலே புதுமைப் பெண்ணாய் நான் வலம் வருவதென்றால், இலகுநடையிலே பட்டிதொட்டி எங்கும் வாழும் அத்தனை மக்களின் மனதிலும் என்னை விதைக்கின்றீர்களே. கணனிப் பரப்பில் முகநூல் (Face Book)வடிவினுள் முனைந்து நிற்கும் நான் கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தினுள் நுழைகின்றேன்.  அதுமட்டமல்ல, உலகெங்கும் வாழும் என் அருமைக் குழந்தைகள், '' தேமதுரைத் தமிழோசை உலகு எல்லாம் பரவும் வகை'' செய்து தாங்கள் வாழுகின்ற உலகு எங்கும் தங்கள் சின்னஞ்சிறிய விரல்கள் எடுத்து என்னுள் குதித்து விளையாடுகின்றனர். எனக்காயப் படைத்த படைப்புக்கள் அத்தனையும் தாம் வாழும் நாட்டு மொழியில் மொழி பெயர்க்க முன் வந்துள்ளனர். இதைவிட மகிழ்ச்சி எனக்கு என்ன தேவை? மூன்று வயதில் திருஞானசம்பந்தர் பாடிய போது பெற்ற சுகத்தைவிட, இன்று அந்நிய சூழலிலே இச்சிறார்கள், இலண்டன் தமிழ் வானொலியில் என்னை வாழ வைக்க வார்த்தெடுக்கின்ற படைப்புக்கள் கேட்டு நான் பஞ்சாமிர்த சுவையைப் பருகி இன்புறுகின்றேன். இளஞ்சிட்டுக்களே! உங்கள் உச்சிமோந்து நான் வாழ்த்துகின்றேன். இக்குழந்தைகளின் அணைப்பினாலும் எனது தந்தையின் ஆசியினாலும் காலம் தோறும் தோன்றும் புலவர்கள், ஆர்வலர்களின் அன்பளிப்புக்களினாலும் கன்னியாய்க் காலங்கழிக்கின்றேன். காலன் கண்ணில் அகப்படாமல்.

  திங்கள், 15 நவம்பர், 2010

  உண்மை நட்பைத் தேடிப் பெறுவோம்

                                           உண்மை நட்பைத் தேடிப் பெறுவோம்  உற்ற நட்பை உவப்புடன் கூற விரும்புகையில், மற்றைய நட்பையும் சுட்டிக்காட்ட விழைவது இயற்கையே. கண்டொன்று பேசி, கட்டியணைத்துப் பல நகைச்சுவைக் கதைகள் கூறிப் புறமதில் பல கதைகள் புனைந்து கூறும் நட்பும் ஒரு நட்பே. இந்நட்பானது அடியிலிருந்து கரும்பை நுனிவரை உண்பது போன்றது. இனிப்புச் சுவையை இன்பத்தை உடனே தந்து மேலே போகப்போக சுவை குன்றிப் போதலைப் போன்றிருக்கும் என முன்னமே நாலடியார் கூறி வைத்திருக்கின்றார். கற்கக் கற்க நயம் பயக்கும் நூல் போல் பழகப்பழக இனிய நன்மை விளைவிப்பதே உண்மை நட்பாகும். 

         பெற்ற தாயிடமும் பிரியமுடன் துணைசேர்த்த துணையுடனும் பகிர்ந்து கொள்ள முடியாத எத்தனையோ விடயங்களை உண்மை நண்பரிடம் கூறி மனப்பாரம் குறைக்கின்றோம். தூய்மைக்கு இலக்கணமாய் உயிரினும் மேலாய்ப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நட்பின் புனிதம் நோக்கியே வள்ளுவப் பெருந்தகை தன் அறிவுப் பெட்டகத்தில் தீ நட்பு, கூடாநட்பு, நட்பு, நட்பாராய்தல் என நான்கு அதிகாரங்களை எழுதி, விபரமாய் விளக்கியுள்ளார். பாரதி தன் ''கண்ணன் என் தோழன்' என்னும் பாடலில் தன்னை அர்ச்சுனனாகவும் கண்ணனைத் தோழனாகவும் பாவனை பண்ணி நல்ல நட்பின் இலக்கணங்கள் அத்தனையையும் கண்ணணில் கண்டு அழகாகப் பாடியுள்ளார்.

           'ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
           இதஞ் சொல்லி மாற்றிடுவான்

           பிழைக்கும் வழி சொல்ல வேண்டுமென் றாலொரு
           பேச்சினிலே சொல்வான்

           உள்ளத்திலே கருவங்கொண்ட போதினில்
            ஓங்கி அடித்திடுவான் - நெஞ்சில்
           கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னாலங்கு
            காறியுமிழ்ந் திடுவான்'

  என நட்பின் இலக்கணங்களைக் கண்ணன் பாட்டில் அறியக்கூடியதாக இருக்கிறது. எனவே உண்மை நண்பன் உரிமையுடன் எதையும் எடுத்துச் சொல்ல வல்லவனாய் இருத்தல் வேண்டும். 

           'காய் முற்றின் தீங்கனியாகும். இளந்தளிர் நாள் போய் முற்றின் என்னாகிப்போம்'' அதாவது காயானது, முற்றினால் உண்ணக் கூடிய இனிய பழமாகும். இளந்தளரானது முற்றுமானால், முடிவில் சருகுபோல் போய் விடும். நல்லவர்களுடன் நாம் நண்பர்களாக இணையும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து முடிவில் அவர்கள் நட்பானது பழம் போல் இனிக்கின்ற இன்பத்தைப் பெறுவோம். கயவர்களுடன் பழகும் போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சருகுபோல் உயிரற்று  பறந்து போவோம். என்பதை நன்னெறி நவின்றீன்ற சிவப்பிரகாசர் மூலம் அறிந்தோம். இதனையே தான் 'சேராத இடந்தனிலே சேர வேண்டாம்'' அதாவது நல்லிணக்கம் இல்லாதவாகளுடன் இணங்க வேண்டாம் என உலகநீதி கூறுகின்றது. 

                எனவே பன்றியோடு கூடிய கன்றும் பவ்வி தின்னும்'' 'பூவோடு கூடிய நாரும் மணம் பெறும்'' என மனங் கொள்வோம். கர்ணனுக்கோர் துரியோதனன், குசேலனுக்கோர் கண்ணன், ஒளவைக்கோர் அதியமான் என நாம் அறிந்த கதாபாத்திரங்களை நினைவில் நிறுத்தி கற்கக் கற்க நயம் பயக்கும் நூல் போல், பழகப்பழக இனிய நன்மை தரும் சிறந்த நட்பைத் தேடிப் பெறுவோம். 
         

  நன்றி கூறல்

  thanks
          

  புதன், 10 நவம்பர், 2010

  21ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கியம்


  21ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கியம்

                                                     21ம் நூற்றாண்டின் 
                                               இணையற்ற இலக்கியம்
                            
                   வள்ளுவம் கற்றோம் காளமேகம் கண்டோம்
                   ஒட்டக்கூத்தர் ஒளவை போட்டியும் கற்றோம்
                   படிக்காசு புகழேந்தி பற்பலரைச் சுவைத்தோம்
                   சிற்றிலக்கியத்தில் சிந்தை மிக மகிழ்ந்தோம்
                   ஆசுகவி கலம்பகம் ஆர்வமுடன் கற்றோம் - ஆனால்
                   பொறிக்கப்பட வேண்டிய இப்பொறிக்கவிதையை 
                   எங்கும் கண்டிலமே இங்குதான் கண்டோம்
  பலபொருள் குறிக்கும் ஒரு சொல் பாடசாலையில் மனப்பாடம் செய்த காலங்கள், மனனம் செய்த காலங்கள், மனதில் நிழலாட வழக்கொழிந்த தமிழ் சொற்களை வாழவைக்கும் நோக்குடனும் வாழும் சிறார்கள் சொற்களின் பொருள் அறியும் சிந்தையுடனும் இலண்டன் தமிழ் வானொலி தன் இலக்கின் ஒரு வடிவாய் உருப்பெறும் பொறிக்கவிதை பற்றிப் பொறிதட்டிய சில எண்ணக்கருக்கள் எழுத்து வடிவில் உருப்பெறுகின்றன. வளர்ந்து விட்ட தமிழை வளாக்கிறோமென மார்பு தட்டிக் கொள்ளும் மனிதர்களிடையே வாழுகின்ற தமிழைச் சாக விடாது, அம்மொழி பேசும் இளந்தளிர்கள், தாம் ஊன்றிய இடத்தில் கிளைவிட்டுத் தமிழ் மனம் வீசவும், கலப்புக் கலாச்சாரத்தில் தனித்துவம் பெறவும் ஊக்கத்தை அள்ளி வழங்கும் அட்சயபாத்திரமாக இவ்வானொலி உலக வான்பரப்பில் வலம் வருகின்றது. அதன் பாடத்திட்டத்தின் ஒரு பாடம் வரலாற்றில் இடம்பிடிக்கும் பொறிக்கவிதை.
             சங்கம் தொட்டு இன்றுவரை இலக்கிய வடிவங'கள் பற்பல விரிந்து காணப்பட அனைத்திலும் தேடினேன், அகப்படவில்லை, இவ் இலக்கியம். காளமேகப்புலவர் தனிப்பாடலில் சிலேடையைக் கண்டேன். அங்கு ஒரு பாடலுக்கு இரு பொருள்கள்கள் விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஒரே பாடலில் பாம்பையும் எள்ளையும் 
  ஒப்புமை காட்டியுள்ளாh. 
                   ''ஆடிக் குடத்தடையு மாடும்போ தேயிரையும்
                   மூடித் திறக்கின் முகம்காட்டும் - ஓடிமண்டை
                   பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
                   உற்றிடுபாம் பௌ;ளெனவே யோது'
        
                                                               பாம்பு


  பாம்பு படபெடுத்தாடிப் பெட்டிக்குள் புகுந்து கொள்ளும் படமெடுத்தாடும் போது இரையும். மூடியைத் திறந்தால், தன்னுடைய முகத்தைக் காட்டும். மனிதன் உடலில் தன்னுடைய நச்சுப் பற்களால் தீண்டினால், அந்நஞ்சு இரத்தத்தினுள் ஓடி மண்டைக்குள் நுழையும். இவ் உணர்ச்சியை உண்டாக்கும் பாம்பிற்குப் பிளவு பட்ட நாக்கு இருக்கிறது. ஏன இப் பாடலில் பாம்பைப் பற்றிக் கூறுகிள்றார். 
                                            
                                                               எள்ளு


  எள்ளானது செக்குக்குள் போட்டு ஆடி குடத்திற்குள் எண்ணெயாக அடையும். ஆட்டும் போது ஒரு இரைச்சலை ஏற்படுத்தும். மூடியைத் திறந்து பார்த்தால் எண்ணெயில் எமது முகத்தைக் காட்டும். தலையில் எண்ணெய் தேய்த்தால் மண்டைக்குள் ஓடிக் குளிர்ச்சியைத் தோற்றுவிக்கும். எண்ணெய் எடுக்கப்பட்ட பின் கழிவுப் பொருளாகப் பிண்ணாக்குக் காணப்படும். 
             இவ்வாறு இரு பொருள் ஒரே பாடலில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், இப் பொறிக்கவிதையில் ஒரு சொல் உணர்த்துகின்ற பல பொருள்கள் ஒரு தனிப்பாடலுடன் எடுத்தக்காட்டப்படுவதுடன் சமுதாயத்திற்கு ஒரு செய்தியைக் கூறுவதாகவும் நல்வழிப்படுத்துவதாகவும் அமைந்து காணப்படுகிறது. அதுவே கற்பதுக்கு இலகுவாக கவிதை, பொன்மொழி வடிவங்களில் காற்றலைகளில் வலம் வருகின்றது. 


                    பொறிக்கவிதை ( சாலம்)


               சாலமும் ஆழமும் கொண்ட அறிஞர்காள்
               சாலமாம் கர்வம் நீக்கி – வாழ்வில்
               சால மின்றி சாலமொப்ப சிறார்
               சாலச் சிறக்க சாதிப்பீராக.


  அகலமும் ஆழமுமாய் கல்வி அறிவு பெற்ற அறிஞர்களே, மதில் போன்று உங்களை மறைக்கும் கர்வத்தையும் போலிநடிப்புக்களையும் நீக்கிப் பூ அரும்பு போன்ற சிறார்கள், வாழ்க்கையில் மிகச் சிறப்புடன் வாழ வழிவகை செய்து  சாதனை புரிவீர்களாக.


  1. அகலம் 2. மதில் 3. போலிநடிப்பு 4. பூ அரும்பு 


           இவ்வாறு அமைந்துள்ள பொறிக்கவிதை நல்வழி, நாலடியார், மூதுரை, திருக்குறள், வரிசையில் நாளை கல்விப்பாடத்திட்டத்தில் பதியப்படக்கூடிய ஒரு 21ம் நூற்றாண்டின் இலக்கிய வடியமாகக் காணப்படும்., இதன் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ளல் அவசியமாகும். வானொலி ஒரு பொழுதுபோக்குச் சாதனம் என்னும் நிலைமாறி இலண்டன் தமிழ் வானொலி அதிபர் நடாமோகன் அவர்கள் நிருவாகத்தில் நடைபெறும் கல்விக்கூடம் என்று அழைப்பதே சாலச்சிறந்ததாகும். 

  உன்னையே நீ அறிவாய்


  சூழ்ச்சியில் புகழ்ச்சி

  காற்றின் குதூகலம்


  வியாழன், 4 நவம்பர், 2010

         தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  மகிடாசுரன் அழிந்தானென மகிழ்வோடு 
   கொண்டாடும் நாள் 
  இருளடைந்த வாழ்வு ஒளி கண்டதென 
  களிப்போடு கொண்டாடும் நாள்
  வளமான வாழ்வு வந்ததென வாஞ்சையுடன்
  நம்பி மகிழ்ந்திடும் நாள்
  இருள் மனங்கள் ஒளி பெற்றதென மருள் மனங்கள் 
  தெளிந்த நாள் - இத் 
  தீபாவளித் திருநாள்.

  என்றென்றும் வாழ்வு ஒளிபெற 

  இத்தீபாவளி நற்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும்
  சந்திரகௌரி சிவபாலன் குடும்பத்தினர்  கோபம்

                                                            கோபம்


  கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும். கோபதாபங்கள் ஏற்படாத மனிதர்கள் யாருமில்லை என்று சொல்லிவிடலாம். முற்றுந்துறந்த மனிதர்கள்கூட கோபத்தால் சாபமிடுதல் யாவரும் அறிந்ததே. இக்கோப உணர்ச்சி சாந்த உணர்ச்சியின் மறுபக்கமே. திடீரென எரிச்சலை ஊட்டுகின்ற ஒரு சம்பவத்தினால்; இது மூளையில் அட்ரினலில் சுரக்கப்படும் ஒரு ஹோர்மோனினாலேயே கோபம் ஏற்படுகின்றது. கோபிக்கவே கூடாது என்று பலமுறை சிந்தித்தாலும் நம்மை அறியாமலே இரத்தநாளங்களிலே ஒரு துடிப்பை இது கொண்டுவந்துவிடுகின்றது. மூளையின் ஒரு பகுதியில் கோபத்தை அடக்க வேண்டும் என்று சொல்லி ஒரு திரவகம் சுரக்க இல்லையெனத் தூண்டிவிடும் திரவகம் அடக்கமுடியாத கோபம் கொண்டவருக்குச் சொல்லும். அப்போது இரத்தநாளங்களிலே துடிப்பை ஏற்பட கோபம் கொள்ளுகின்றார். கோபிக்க வேண்டும் என்று யாரும் எண்ணுவதில்லை. இவ் உணர்ச்சியைப் பலர் பல விதமாக வெளிக்காட்டுவார்கள். எதிரே தெரிகின்ற பொருள்களைப் போட்டு உடைப்பதும், தன்னைவிடப் பலம் குறைந்தவர்களில் தமது உணர்வுகளை வெளிப்படுத்திக்  கோபமிகுந்த வார்த்தைப் பிரயோகங்கள் செய்வதும், தாக்குவதும், மனம் அறியாது, மனதுக்கு மீறிய வார்த்தைப் பிரயோகங்களை உதிர்ப்பதும், தன்னைக் கட்டப்படுத்த முடியாது வீட்டை விட்டு வெளியேறுவதும், என இதன் பரதிபலிப்புத் தென்படும். ஆனால், இதைவிடக் கொடுமையான கோபங்களே கொலைவெறியாகத் தெறிப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இது யாரை அதிகம் தொற்றிக் கொள்ளுகின்றது என்றால், உடல் தளர்ச்சியுற்று மனத்தளர்ச்சியுற்ற ஒருவருக்கு ஒவ்வாத சில வார்த்தைப் பிரயோகங்கள் பிறர் நடவடிக்கைகள் கோபத்தை அதிகரிக்கச் செய்யும். இதைவிட பருவ வயது (றுநஉhளநட துயாச) மாற்றங்கள் இயல்பாகவே பெண்களுக்கு ஒருவகையான எரிச்சல் குணத்தையும் திடீரென உடலில் தோன்றும் மாற்றங்களால் கோப உணர்வுகளையும் கொண்டுவரும். இது தவிர்க்க முடியாததும்கூட பிள்ளைகளின் தவறான நடத்தைகளால் கூட சில குடும்பங்களில் கோபதாபங்கள் சண்டைசச்சரவுகள் ஏற்படுவதுண்டு. பெற்றோர் தமக்கு அடங்காத பிள்ளைகளைக் கோபம் மீதியினால் தண்டிக்கின்றனர். எதற்காகப் பிள்ளைகள் தவறுசெய்தார்கள் என்று ஆராய்ந்து பார்க்காமல், கையில் கிடைப்பதைக் கொண்டு அடிக்கின்றனர். இப்படிச் செய்கின்ற போது பிள்ளைகள் திருந்துவதற்கு வழி கிடைக்கப் போவதில்லை. தமது கோபம் தீருவதற்குப் பிள்ளைகள் பழிக்கடாவாகின்றனர். பிள்ளைகள் தவறுசெய்கின்ற போது அத்தவறுக்கான காரணங்களைக் கேட்டு அறிந்து அதைத் திருத்தவதற்குரிய வழிவகைகளைச் செய்வதுவே சரியான முறையாகக் காணப்படுகின்றது. பிள்ளைகளுக்குக் கொடுக்கின்ற தண்டனை பிள்ளைகளைத் திருத்துவதற்காக இருக்க வேண்டுமேயொழிய தமது கோபத்தைத் தீர்ப்பதற்காக இருத்தல் கூடாது. 

  ஒருவரின் கோபத்தைத் தவிர்ப்பதற்குரிய வழிமுறைகள்:

  1. கோபப்படுகின்ற சந்தர்ப்பத்தில் நீர் அருந்துதல் வேண்டும்.

  2. கோபம் ஏற்படுகின்ற இடத்தைவிட்டு நகர்ந்துவிடல் வேண்டும்.

  3. கோபப்படுபவர் கோப உணர்ச்சியைத் தூண்டும் வகையில் மேலும்மேலும் வார்த்தைப்   பிரயோகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும். எதிர்த்துப் பேசுதலால்  எரிச்சலே அதிகரிக்கும்.

  4. கணவன் குறிப்பறிந்து நடந்து கொள்ளும் பக்குவத்தை மனைவிமார் அறிந்திருத்தல் வேண்டும். வீட்டில் பொறுமை காக்க வேண்டியது பெண்கள் கடமையாகும்.

  5. மனதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய ஒரு சிறப்பான மருத்துவம் தியானமே. கண்களை மூடி ஒரு நாளுக்கு 5 நிமிடம் என ஆரம்பித்து மனதை ஒருநிலைப்படுத்தம் வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆழ்மனக்கட்டுப்பாடுகள் இந்தக் கோப உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வல்லமையுடையது.

  6.ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளைச் சரிவரச் செய்தால், அடுத்தவரைப் புரிந்து கொண்டு நடந்தால் கோபப்படுவதற்குச் சந்தர்ப்பம் இருக்காது.

  அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

    இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...