• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 31 ஆகஸ்ட், 2013

    வேதனைக் காலம் தொடர்வதில்லை







          வேதனைக் காலம் தொடர்வதில்லை – மனிதன்
         சோதனைக் காலம் சொந்தமாவதில்லை
         வேதனையும் சோதனையும் ஓர்நாள் - இன்ப
         வேதனத்தை விதைத்து விடும்
         விளைவுகளும் நலமாய்ச் சொரிந்துவிடும்.

                 


           

    வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

    பெற்றோரின் பங்கு


    தவறுகள் நடக்கின்றன. தண்டனைகள் பெறுவது பெற்றோரா? எனத் தத்தளிக்கும் உங்கள் மனதிடமே கேட்டுப்பாருங்கள். நீங்களும் ஒருவகையில் குற்றவாளிகளே. உங்களிடம் இருக்கும் இருப்புக்களை வெளியிலே காட்ட ஆசைப்படுகின்றீர்களா? குற்றங்களைச்சுமந்துதான் ஆகவேண்டும். குரங்கு மனத்தின் குறிப்பறியாது பிள்ளைகள் ஆசைகளை நிவர்த்தி செய்ய விரும்புகின்றீர்களா? வரும் துன்பங்களை ஏற்றுத்தான் ஆகவேண்டும். போட்டிகள் ஒருவருக்கொருவர் பணஅளவை வெளிக்காட்ட அல்ல. திறமையை மேம்படுத்தவே என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புக்கள் நல்லவை கருதியே செய்யப்படுகின்றன. அதை தவறான வழியில் செலுத்துபவர்கள் பண்பாடற்ற மனித ஜென்மங்களே. பிள்ளைகளைப் பெற்றவர்கள் குறிப்பறிந்து, காலம் உணர்ந்து, வயதை அநுபவம் மூலம் கற்றுக் கொண்டு எதிர்கால வாரிசுகளை வளத்தெடுக்க முனைந்திடுங்கள். இப்படிச் செய்துவிட்டார்களே!! என்று பிள்ளைகளைக் கரிந்து கொட்டாதீர்கள். அடிப்படை என்னவென்று ஆராய்ந்து பாருங்கள். அதில் உங்கள் தவறும் அடங்கியிருக்கும்.

    சனி, 17 ஆகஸ்ட், 2013

    மின்னல் எப்படி ஏற்படுகின்றது





                          மழைக்காலங்களில் மேகக்கூட்டங்களிடையே மின்னல் தெறிப்பதைக் கண்டிருப்பீர்கள். மின்சாரம் பாய்வபோல் அழகாகக் கண்ணைப் பளீச்சிடும் வண்ணம் காணப்படும். சில சமயங்களில் மின்னல் மரத்தில் விழுந்துவிட்டது, மனிதர் விலங்குகளில் பாய்ந்துவிட்டது எனச் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.  இத்தொழிற்பாடு எப்படி ஏற்படுகின்றது என்பது பற்றி அறியாத சிறார்கள் மத்தியில் பல பெரியோர்களும் இருக்கின்றார்கள்.
                

    பூமியிலிருந்து புறப்பட்டுச் சென்ற நீராவியே மேகமாகக் வளிமண்டலத்திலே உலாவருகின்றன. 0.01மி.மீ விட்டத்தைக் கொண்ட கண்ணுக்குத் தெரியாத பல கோடித் நீர்த்துளிகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும்போது முகில் எனப்படுகின்றது. ஒளி ஊடுறுவும் நீர்த்துளிகளின் ஆழம் அதிகரிக்கும்போது உட்பகுதியின் ஒளி ஊடுறுவும்தன்மை குறைய மேகமானது சாம்பல் நிறமாகக் காட்சியளிக்கின்றது.
                 

    இம்மேகக் கூட்டங்களிலுள்ள அணுக்கள் ஒன்றையொன்று உரசுகின்ற போது மின்னூட்டம பெறுகின்றது. இவ்வாறு மின்னூட்ம் பெற்ற முகில்களுக்கு அருகிலே எதிர் மின்னோட்டம் கொண்ட முகில்கூட்டங்கள் வருகின்றபோது கவர்ந்திழுக்கப்படுகின்றன. இப்போது காற்றின்வழி மின்னோட்டம் பாய்கின்றது. இதுவே மின்னலாகத் தெரிகின்றது. இம்மின்சாரம் மின்னலாகப் பூமியை நோக்கி வருகின்றபோதே பல பாதிப்புக்கள் உயிர்களுக்கும் கட்டிடங்கள், மரங்களுக்கும் ஏற்படுகின்றன. இதனையே நமது முன்னோர் மாவிலைச் சக்கரவர்த்தி தன்னுடைய வாளைத் தீட்டுகின்றார் என்பார்கள். அங்கும் போரா என்று சலித்துக் கொண்ட இளமைப்பருவமும் இருந்தது. இக்கேள்வியை  வளர்ந்தவர் ஒருவர் இன்று கேட்டபோது இயற்கையின் சில சிறிய நடைமுறைகளை இலகுவாகப் புரிய வைப்பதன் மூலம் அறியாமையை அகற்றலாம், பகுத்தறிவை வளர்க்கலாம் என உணர்ந்தேன்.

    புதன், 14 ஆகஸ்ட், 2013

    மாரிகாலத்தில் கோடை காலத்தைவிட முன்னமே வானம் இருண்டுவிடுகின்றது



    சந்தேகங்கள் பல. அவை தீர்க்கப்பட வழிமுறைகள் உண்டு. சிந்தனை வளர்ச்சிக்கு ஏன் என்ற கேள்வி பயன்தருகின்றது. சிறுவர்களால் கேட்கப்பட்ட பல கேள்விகள் அறியப்படாத பெரியோர்களுக்கும் பயன்தரும் என்னும்  வகையில் சிறுவர் பகுதியென இப்பகுதியைக் குறிக்கின்றேன்.    ஏன்


      மாரிகாலத்தில் கோடை காலத்தைவிட முன்னமே வானம்                                
                                   இருண்டுவிடுகின்றது





    பூமியானது சரியாகச் செங்குத்தாக இருப்பதில்லை. சற்று சாய்ந்தே இருக்கின்றது. இப்பூமியானது சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள் எடுக்கின்றன.  இது சூரியனைச் சுற்றும்போது பூமியின் அரைக்கோளமானது ஒரு அரை ஆண்டு வடக்குக்கும் மற்றும் அரைஆண்டு தெற்குக்கும் சூரியனுக்கு அருகாமையில் வருகின்றது. மாரிகாலத்தில் பூமியின் வடபகுதி சூரியனுக்கு அப்பால் செல்கிறது. அதனால், சூரியக்கதிர்கள் நீண்ட நேரம் ஒளிவீசுவதில்லை. கோடையை விட ஒரு மேலோட்டமான கோணத்தில் விழும். இதனால், குளிராக இருக்கின்றது. நாள் குறைவாகவும் இருள் நீண்டும் இருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் 21 ஜூன் மாதம் சூரியனானது பூமியின் அரைவட்டத்தில் சரியாக வடதுருவத்தின் மேலாக பிரகாசிக்கும்.  இந்தக் காலங்களில் இரவு குறைவானதாகவும் பகல் அதிகமாகவும் காணப்படும்.

    வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

    நா


     

    உதிரம் இன்றி வலி தரும் ஆயுதம்
    வார்த்தைகளெனும் குண்டு தாங்கி
    இதயத்தின் துடிப்பை அதிகமாக்கும்
    இரத்தத்தின் அழுத்தத்தை துரிதமாக்கும்
    சுவைக்க மட்டுமன்றி உணவைச் செரிக்கவும்   
    சொற்சுவையை அளிக்கவும் செய்வதனால்
    இதைச் சுமந்தே வாழவேண்டிய மனிதர்கள் நாம் - ஆனால்
    இதை அறிந்தே கட்டுப்படுத்த வேண்டிய மனிதர்களும் நாமே

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...