• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 26 அக்டோபர், 2014

  நமக்கு நாமே எதிரி  மூளைக்குள்ளே ஓர் உலகம் 
  உடலுக்குள்ளே ஓர் ஆலை
  தோல் போர்த்திய தேகத்துள்ளே
  தொடர்ந்து ஓடும் குருதியோட்டம் 
  உருவம் முழுதும் செல்கள் தொகுப்பு
  உணர்ந்து பார்த்தால் உருவம் போலி
  அழகாய்த் தோன்றும் உருவம் பொய்
  அற்புத உடலின் உயிரோட்டம் மெய்
  உடலே உயிரை நிதமும் காக்கும் - இதைப்
  புரியா துடலை மனிதன் 
  உருக்குலைத்து சீரழிப்பான் உண்மை


  கருவினுள் உருவாகும் குழந்தை தேடும் உணவை கருத்துடன் தாயும் பகிர்ந்தளிப்பாள். எம்மைக் காக்கவே உடலும் தன்னைத் தயார்படுத்தும். உறுப்புக்களும் தேவைக்கேற்றாற் போல் உருவாக்கப்பட்டிருக்கும். செல்களினாலான உறுப்புக்களும் வௌ;வேறு விதமாகப் படைக்கப்பட்டிருக்கும். 

               சுருங்கிவிரியும் பகுதி மென்மையான செல்களாலும் இதயம் போன்ற பகுதிகள் கடுமையான செல்களாலும் ஆக்கப்பட்டிருக்கின்றன. உடல் முழுவதும் தன் ஆட்சியை மேற்கொள்ளும் செல்கள். கண்ணுக்குத் தெரியாது எம்மில் முழுவதுமாகக் காணப்படுகின்றது.

   

  உடலில் ஓர் இடத்தில் காயம் ஏற்பட்டால், இரத்தமாய்க் கொட்டிக் கொண்டேயிருக்கும் காயம் நாட்செல்ல குருதிச் சிறுதட்டுக்களால் சுகமாகி மீண்டும் அப்பகுதி வழமை நிலைக்குத் திரும்புகின்றதே. அடிபட்ட இடத்தில் இறந்த செல்களுக்குப் பதிலாக வேறு செல்கள் பிரிவடைந்து உடனடியாக காயம் முழுவதையும் மூடிக்கொள்ளும். மூடிக் கொண்டதும் உடல், செல்களுக்கு பிரியும் வேலையை நிறுத்தும்படி உத்தரவிட செல்கள் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வேலையை நிறுத்தும் காயமும் மாறிவிடும். ஆட்டி வைப்பவனும் ஆடுபவனும் உடலுள் இருக்க  நாமோ வெளியே மருத்துவம் தேடி ஆடிக் கொண்டிருக்கின்றோம். 75 முதல் 100 டிரில்லியன் செல்கள் எமது உடலுள் ஆட்சி செய்கின்றன.    எமது செல்களில் கிட்டத்தட்ட 3000 விதமான புரோட்டீன்கள் உண்டு. இவை இரத்தத்தில் கலக்கக் கூடாது. அப்படிக் கலந்தால், இரத்தத்திலுள்ள புரோட்டீன்கள் சமீபாடடையாது. இந்நிலையில் செல்கள் தமக்குள் இருக்கும் புரொட்டின் உடலினுள் சேரவிடாது தற்கொலை செய்து கொள்ளும். 

  ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா. ஆனால் இதுவே உண்மை.   மூக்கினுள் நுழைய எத்தனிக்கும் கிருமிகளை மணிக்கு 100 மைல் வேகத்துடன் உடல் வெளியகற்றும். இதன் மூலம் 100,000 கிருமிகள் உடலிலிருந்து வெளியேறும். ஆனால் நாமோ வெட்கப்பட்டு மூக்கை மூடுகின்றோம். ஆனால் தும்மலைத் தடுத்தால் உயிர் போகும் ஆபத்தும் உண்டு. அதனாலேயே ஒருவர் தும்மினால், 100 என்று தமிழரும் Gesundheit   என்று ஜேர்மனியரும் God bless you என்று ஆங்கிலேயரும் சொல்கின்றார்கள். 

  பழுதடைந்த உணவுகளை நாம் உட்கொண்டுவிட்டால் உடலானது வாந்தியாக வெளியகற்றிவிடும்.
  தேவையான உணவுகளை நாம் உட்கொண்டால் அதை சத்தாக மாற்றி தேவையான உடலுறுப்புக்களுக்கு அனுப்பும். இக்கரிசனை எம்முடலுக்கிருக்க நாமோ எதிலும் அக்கறையின்றி  சாக்கடையினுள் அழுக்கைப் போடுவதுபோல் கண்டதையும் உண்டு உடலைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றோம்.

                       பேரிடிபோல் சத்தம் வரவே எம் கைகள் எமையறியாது காதுகளை ஏன் இறுகப் பொத்துகின்றன.
  காதுவழி செல்லும் ஒலி செவிப்பறையைத்தாக்குவதுடன் அதனூடு சென்று உடலுக்கும் ஊறு விளைவிக்கின்றது. அத்துடன் இதயநரம்புகள் சார்ந்த இதயப்பாதிப்பும் ஏற்படுகின்றது. ஓரே ஒரு தடவை எட்டுமணி நேரத்துக்கு மிகையான சத்தம் கூடிய கூடிய சூழ்நிலையில் இருந்தால், இரத்தஅழுத்தமானது அழுத்தத்தில் ஐந்து முதல் பத்து புள்ளிகள் கணிசமான ஏற்றத்துடன் அயர்வு ஏற்படும். அத்துடன் நரம்புகள் இறுகவதால் இரத்த அழுத்தமும் கூடுகின்றது. இதனால், இதயக்கோளாறுகள் ஏறபடுகின்றன.  ஆனால், சிந்திக்கின்றோமா? களியாட்டங்கள், வைபவங்கள், கொண்டாட்டங்கள் அனைத்திலும் காதுகிழிய ஒலிபெருக்கிகளை ஒலிக்கவிட்டு இதுவே மகிழ்ச்சி என்று ஆரவாரம் செய்கின்றோம்.                    எம்மைச் சுற்றி, எம்மை நோக்கி வரத் துடிக்கும் நோய்க்கிருமிகள் உடலினுள் புகுந்துவிட்டால் உடலிள்ளே வாள், கத்தி ஏந்தி போருக்கு நிற்கும் இரத்தஅணுக்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். எம்மைக் காக்க எமக்குள்ளே ஓர் நண்பன் இரத்த அணுக்களினுள் வெண்குருதி சிறுதுணிக்கையே இத்தொழிலை எமக்கடிமையாய்ச் செய்கின்றது. முதலில் உள்வராமல் தடுக்கும். வந்துவிட்டால் உடலைத் தாக்காமல் பாதுகாக்கும். அது ஏந்தும் வாள், கத்தி யாதென்று தெரியுமா? முதலில் "பகோசைட்". இவை பக்டீரியா முதலில் இரத்தத்தால் பக்குவமாக்கும். பின் அழிக்கும். இரத்தத்தால் பக்குவமாக்கும் பொருள் யாதென்று தெரியுமா? அதுவே ஆப்ஸனின்.  பார்த்துப் பார்த்து பணி செய்ய பக்குவமாய் உடல் எமக்குள் தொழிலாளியாய் இருக்க நாமோ சூழலைக் கெடுக்கின்றோம். ஆலைகள் அமைக்கின்றோம். இயந்திர மயத்தில் இ.றப்பதற்கு வழி தேடுகின்றோம். 
                 
               எங்கிருந்தோ ஆபத்து வரும்போது முதலில் நம் தலையைத் தானே இரு கரங்களினாலும் பொத்திப் பிடிக்கின்றோம். எம்மை அறியாமலே அதன் அவசியத்தை நாம் உணர்கின்றோமா இல்லையா? 

  மூளையே நமது தலைமையகம். அதன் ஆட்சியில்தான் அனைத்தும் அடக்கம். மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இரத்தஓட்டம் தேவையான அளவு ஒட்சிசனை மூளைக்குக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் மூளையும் தொழிற்படமுடியும். நாமென்ன செய்கின்றோம். இரத்தோட்டம் அதிகரிக்கச் செய்யும் உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்கின்றோமா? கணனி முன் இருந்து காலத்தைக் கழிக்கின்றோம். 
             
                           மூளையின் அவசியம் கருதி ஒரு பாதுகாப்புக் கவசத்தினுள்ளேயே அது அமைக்கப்பட்டிருக்கும். இக்கவசத்திற்கும்  மூளைக்குமிடையே ஒரு நீர்த் தன்மை (Cerebrospinal Fluid) பரவி இருக்கும். இது ஓடுகின்ற போதும் நடக்கின்ற போதும் அதிர்வு ஏற்படாமல் பாதுகாக்கும். மூளை தொழிற்படும் போது ஏற்படுகின்ற இரசாயணக்கழிவுகளை இந்த Cerebrospinal Fluid ஏ உறக்கத்தின்போது மூளைச் செல்களினூடாக ஊடுருவிப்போய் வெளியகற்றுகின்றது. பிற உறுப்புக்களுக்காகத் தொழிற்படும் மூளை தனக்காக ஓய்வெடுத்து தன்னிலுள்ள நச்சுத் தன்மையை வெளியகற்றும் நேரம் உறக்கமல்லவா? ஆனால், நாம் என்ன செய்கின்றோம்.  இரவிரவாகக் கண்விழித்து தூக்கத்தைக் கெடுத்து chat  பண்ணுகின்றோம். Party கொண்டாட்டங்கள் தொலைக்காட்சி என்று உறங்கும் நேரத்தைத் தொலைக்கின்றோம். 

                               ஏதும் பறந்தாலோ, கையை யாரும் முன்னே அசைத்தாலோ, மனதைக் கெடுக்கும் காட்சி ஏதும் கண்டாலோ முதலில் மூடுவது எம் கண் இமைகளே. கண்ணையும் கருத்தையும் பாதுகாக்க கண்இமை கைகொடுக்க கண்ணீர் துணையாக, நாமென்னவோ பார்க்கக் கூடாதவற்றைப் பார்த்து கணனி ஒலியின் பாதிப்பை உணர்ந்தும் அதற்கேற்ப சொல்லப்பட்ட தூரத்தில் கணனியை வைத்து வாசிக்காது, கண் இமைத்து வாசிக்காது, கண்களை காயவைத்து கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றோம். 

               செய்வதெல்லாம் செய்து விட்டு நேர்த்திக்கடனென்றும் நேர்மையற்ற மருத்துவரென்று, போதாத காலமென்றும், பொல்லாத உலகென்றும் அடுத்தவரைக் குறைகூறி அழிவது நாமே. 
                  
                    இப்போது சொல்லுங்கள் எமக்கு யார் எதிரி?

  நன்றி 

  சனி, 11 அக்டோபர், 2014

  எழுந்திடு பெண்ணே! எழுந்திடு!

      

                                                     எழுந்திடு பெண்ணே! எழுந்திடு!
         உன் இமைக் கதவுகளை இழுத்து மூடாதே
         உன் இதயமது இருண்டுவிடும்
         உன் பஞ்சுமெத்தையிலே முட்கள் பரந்து கிடக்கட்டும்
         உன் இருக்கையிலே இரும்பு ஆணிகள் நிமிர்ந்து நிற்கட்டும்
         தூங்கிவிடாதே தூரிகை கொண்டு உன் வாழ்வோவியம் தீட்டு
         பாதையிலே ரோஜாக்கள் மட்டும் விரிந்து கிடப்பதில்லை
         கல்லும் மண்ணும் விதந்து கிடக்கும் பூமியிலே
         வீர நடை போட்டு நிமிர்ந்து செல்
         உன் இரத்தச்சுவடுகள் இரத்த சரித்திரம் பேசட்டும்
         பூமியைச் சுருட்டி எடுத்து உருட்டி விளையாடு
         நச்சுப்பாம்புகள் அதில் நசுக்கப்படட்டும்
         மறைந்த உண்மைகள் விஸ்வரூபம் எடுக்கட்டும்
         பெண்ணே! உன் மனிடப்பிறப்பு மாய்ந்துவிடுவதற்காகவல்ல
         காலத்தை வென்று காவியம் படைக்க


  LGBTQ

  கட்டுப்பாடு, விட்டுக் கொடுப்பு இவற்றை ஒட்டியே மனித வாழ்க்கை குடும்பம் என்ற அமைப்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றை மனதில் கொள்ளாத உணர்வுகள...