சமுகத்திற்காய் தன்னை இழப்பதும்
கடமையில் கருத்தாவதும்
ஆலயம் தொழுவதிலும் மேலான தவம்
- கல்வியில் சந்தேகம் கொள்பவன் நிறைவான அறிவு பெறுவான். வாழ்வில் சந்தேகம் கொள்பவன் வாழ்வை இழப்பான்.
- பிள்ளைகளிடம் இடும் சந்தேகம் என்னும் முதலீட்டின் பயன் அவர்களிடம் இருந்து பெரும் வெறுப்பு என்னும் நட்டமே
- நம்பிக்கை கொண்டு வளர்க்கும் பிள்ளை முன்னேற்றம் காணும் சந்தேகம் கொண்டு வளர்க்கும் பிள்ளை சலிப்புடன் வாழும்.
- பெற்ற பிள்ளையிடம் கொள்ளும் சந்தேகம், எமக்கு சஞ்சலத்தையும் அவர்களுக்கு சங்கடத்தையும் தோற்றுவிக்கும்