• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வியாழன், 30 செப்டம்பர், 2010

  16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வி யார் கையில் தங்கியிருக்கின்றது

  thq;f thq;f thrfHfNs! nfhQ;rk; tpthjpj;Jg; ghHg;Nghkh! vd; vz;zj;jpy; Njhd;wpaJ cq;fs; vz;zj;jpy; vd;d Njhd;WfpwJ vd;Wjhd; ghHg;NghNk.


         அறிவுக்கண்ணைத் திறந்திடும்
         விரிவாய் உலகைக் காட்டிடும்
  வித்தியார்த்திகள் ஆகவும் 
  விஷயார்த்திகள் ஆகவும்
   வாழவழிகாட்டும் 
  அந்தக் கல்வியை 16 வயதிற்கு மேற்பட்ட இளையோர் தெரிவு செய்தில் பெற்றோர் தலையீடு அவசியமில்லை என்று வாதிட்டு பெற்றோர் கண்டனக் குரலுக்கு ஆளானாலும் பெற்றோர்களே! பெற்றோர்களாகப் போகின்றவர்களே! என விளித்து எனது வாதத்தைத் தொடங்குகின்றேன். அணுவைப் பகுப்பாய்ந்த விஞ்ஞானிகளிலிருந்து உளத்தைப் பகுத்தாயும் உளவியலாளர் வரை இளையோர் கல்வித் தேர்வு அவர்கள் கையிலேயே ஒப்படைக்கப்படல் வேண்டும். என்று கூறுகின்றார்கள். கற்றல் ஒருபுறம் கற்பித்தல் ஒருபுறம் இருக்க இடையில் அநாவசியமாகப் பெற்றோர் ஏன் அவர்கள் கல்வியில் ஆக்கிரமிப்பு. பிள்ளையைப் பெற்றுவிட்டீர்கள் என்பதற்காக அவர்கள் உணர்வுகள் உங்களுடையதாக முடியுமா? பிறக்கும் போதே கட்டுச் சோற்றுடன் வந்து பிறந்தவர்கள் அவர்கள். தங்கள் முயற்சியினால், வளர்ச்சிப்படிகள் கண்டவர்கள். அவர்கள் வளர்வதற்கு நீங்கள் ஒத்தாசையாய் இருந்திருக்கலாம். உங்களுக்கூடாக அவர்கள் வந்தவர்கள் என்பதற்காக அவர்கள் உணர்வாக நீங்கள் மாறுதல் கூடாது. அவர்கள் அவர்களுக்காகவே பிறந்தவர்கள். தலைமுறை இடைவெளியில் கணனி உலகில் உலகத்தையே காலடியில் வைத்திருப்பவர்கள். அவர்களிடம் நீங்கள் கற்க வேண்டியது ஏராளம் இருக்கிறது. கற்றுக் கொள்ளுங்கள். கல்வித் தேர்வுக்கு வழிவிடுங்கள். 
                 பிறந்த குழந்தையை தனியறையில் தூங்கவிடுவது தொட்டு பாலர் பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் வரையில் தன்னம்பிக்கை போதிக்கும் கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாடசாலை சீருடை பிள்ளைகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று சீருடையையே அறிமுகப்படுத்தாத நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறான சூழ்நிலையிலுள்ள இளவயதினர் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ( உதாரணம்: உணவு, உடை, பொழுதுபோக்கு) எனத் தமது ஆக்கிரமிப்பைப் பயன்படுத்தும் பெற்றோர் தாம் விரும்பிய கல்வியைத் தெரிவு செய்வதற்குரிய அடிப்படை கல்விச் சுதந்திரம், மனிதஉரிமையும் மறுக்கும் போது பெற்றோரிடம் ஒரு எரிச்சலை ஏற்படுத்தி பெற்றோர் பிள்ளை உறவிலே ஒரு பிளவை ஏற்படுத்துகின்றனர். பல்கலைக்கழகங்களைத் தெரிவுசெய்கின்ற போது அப்பாடி தப்பிவிட்டோம் என்று தொலைதூரத்திலுள்ள பல்கலைக்கழகங்களைத் தெரிவுசெய்கின்றனர்.
                  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கின்றது. தனது கற்றல் வலு எத்தகையது. எது தன்னால் முடியும் என்னும் உண்மையை அறிந்தவர்கள், அவர்களே. கற்கக் கசடறக் கற்க. அதாவது தெளிவுற ஒரு விடயத்தைக் கற்க வேண்டும் அப்படிக் கற்கவேண்டுமானால், ஒன்றில் முழுமனதுடன் ஈடுபட வேண்டும். விருப்பமான துறையென்றால்த் தானே முழுமனதுடன் ஈடுபடமுடியும். அதில் பரிபூணர வெற்றியைப் பெற முடியும். உயரத்தைத் தொட முடியும். எனது மகன் டொக்டர், எஞ்சினியர் என்று கூறுவதில் எமது பெற்றோர்களுக்கு ஒரு பெருமையிருக்கிறது. இது எங்கள் நாட்டிலிருந்து விமானம் ஏறும் போது விட்டுவிட்டு வந்திருக்க வேண்டிய பெருமை. டொக்டர், எஞ்சினியர், கணனி இவற்றை விட்டால், மற்றைய எதைப் படித்தாலும் பயனில்லை என்னும் தவறான அபத்தமான கருத்து எம்மவரிடையே இருக்கின்றது. இவற்றிற்குப் படிக்காவிட்டால், எங்கள் மானம் தான் போகும் என்று டிடயஉம அயடை பண்ணுவதனால் ஆவதென்ன சொந்த விருப்பம், கற்கின்ற துறை என்று இரட்டைச் சூழலில் கற்க வேண்டிய நிலை இளவயதினருக்கு ஏற்பட்டு அவர்களுக்கு மனஅழுத்தம், ஏற்படுகின்றது. கல்விப்பழு சிலவேளை தற்கொலை செய்ய வேண்டிய நிலைக்கும் ஆளாக்கும் 
                          அம்மா எனக்கு இரத்தைக் கண்டால் பிடிக்கவில்லை. நான் ஜேனலிஸ்ட் படிக்கப் போகின்றேன். அது எனக்கு நன்றாகப் பிடித்திருக்கிறது. என்னும் மகளிடம் 'சும்மா இருடி நான் பி. ஏ லிட்ரிசர் இப்ப வீட்டில விதம்விதமாச் சமைக்கிறேன். விட்டுப்போட்டு ஒழுங்காப் படி. முhனத்தைக் காப்பாற்றும் வழியைப் பார்' என்கிறார், ஓர் அம்மா. தன்னால் முன்னேற முடியவில்லை என்பதற்காக மகளாலும் முடியாது என்று ஒரு தாய் எப்படி நினைக்க முடியும். முன்னேற்றம் என்பது அவரவர் துறைகளைப் பொறுத்தது. கல்வியறிவில்லாதவர் தொழிலதிபதியாக வரவில்லையா? பல்கலைக்கழகம் செல்லாத எத்தனையோ பேர் வெளிநாடு வந்து பட்டப்படிப்பு கற்கவில்லையா? காலச்சூழல், வயதுக்கோளாறு தள்ளிப்போட்ட கல்வி காலம் தாழ்த்தி வரவில்லையா?
        எங்கள் பிள்ளைகளுக்கு அறிவு போதாது. கல்வியைத் தீர்மானிக்;;கும் பக்குவம் அவர்களுக்கு இல்லை. என்னும் அறியாமையில் நமது பெற்றோர் வாழுகின்றார்கள். எம்மை அறியாமலே எமது தோளைத் தாண்டி வளர்வது போல் எம்மை அறியாமலே அவர்களுக்கு அறிவு வளர்ச்சியும் உடல் வளர்ச்சியுடன் ஏற்படுகின்றது. சந்ததி இடைவெளி தரம் கூடிய சமுதாயத்தை உருவாக்குவதை, கற்கால மனிதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எமக்குப் புரிவதில்லையா? இதைவிட ஆசிரியர் மையக்கல்வியில் கல்வி பயின்று வந்த நாம், மாணவர் மையக்கல்வியில் கல்வி பயிலும் எமது இளவயதினருக்கு ஆலோசனை கூறுவது எந்த விதத்தில் பொருந்தும். இளையோருக்குத் தாமே ஒரு துறையைத் தெரிவு செய்யும்படிப் பாடசாலையிலேயே அவர்களுக்குச் சலுகை வழங்கப்படுகின்றது. வழிப்படுத்தப்படுகின்றது. அவர்கள் எந்தத் தொழிலைத் தெரிவு செய்தாலும் அதில் முன்னேறவும், எந்தத் தொழிலாய் இருந்தாலும் மனிதாபிமானத்துடன் மதிப்புக் கொடுக்கவும் இந்த நாட்டில்  பண்பு இருக்கின்றது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியதும் அல்லது தமது படிப்பை முடித்ததும் தொழில்வாய்ப்புக்  கிடைக்கக் கூடிய துறையைத் தான் இளையோர் நாடுவர். அந்தத் துறை பற்றிய பூரண அறிவைப் பெறுவதற்காக கணனி நூல்கள் என நுழைந்து அலசி ஆராய்வர்கள். அதற்குரிய வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கின்றது. எனவே நமது சிறுவர்களுக்கு எதுவும் தெரியாது. ஏன்ற எண்ணத்தைப் பெற்றோர் கைவிடவேண்டியது அவசியம். 
                         இளையோர் ஆர்வமுள்ள கல்விக்கு ஊக்கம் கொடுப்பவர்கள் தான் சிறப்பான பெற்றோர்கள். பெற்றோர் இளையோர் தமக்குத் தகுந்த துறையைத் தாமே தெரிவு செய்ய நீங்கள் ஒத்துழைக்கும் போது நீங்களும் மொடல் பெற்றோராவீர்கள். அவர்களும் படிப்பில் ஜமாய்ப்பார்கள்.  

  ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

  டichternacht ( வெளிச்சஇரவு)

                       டichternacht ( வெளிச்சஇரவு)

  இந்த அற்புதமான இருளில் இயற்கையை வெல்ல ஒரு கோலாகலக் கண்காட்சி. நிலா தன் இருக்கையில் இருந்தபடி மனிதன் அற்புத வண்ணங்களைக் கண்காணித்துக் கொண்டது. நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன். மேகக் கூட்டத்திடையே வெட்கித்து மறையும் அந்த நிலாவின் போக்கைக் கண்டேன். சிரிப்பாய் இருந்தது. ஆம் அன்றுதான் 25.09.10 சோலிங்கன் நகரில் வெளிச்சஇரவு ( Lichternacht) தோமஸ்அல்வா எடிசன் கண்டுபிடித்த மின் விளக்குகளை வெல்லும் வண்ணம், பகல் போல் தற்போதைய புதிய கண்டுபிடிப்புக்களின் வண்ணவிளக்குகளின் அற்புதம். வருடாவருடம் இந்நிகழ்வுக்கு என் சங்கமம் எப்போதும் இருக்கும். இரவில் வெளிச்சம் காண யார்தான் விரும்பார்! ஆனால், அந்த வெளிச்சத்தையும் கோலாகலமாக்கும் சோலிங்கன் நகரபிதாவின் ஒத்துழைப்பும் உதவிநல்கும் நிறுவனங்களின் ஒத்துழைப்பும் என்னைப் போன்ற பலருக்கு குதூகல இரவாகத் தானே தோன்றச் செய்யும். கண் பார்க்கும் இடமெல்லாம்  வெளிச்சம். கற்பனைக்கு எட்டாத வேலைப்பாடுகள். இத்தனைக்கும் மேல் புற்றீசல் போல் எங்கிருந்துதான் இவ்வளவு மக்கள் இந்த சோலிங்கனுக்குள் நிறைந்தார்களோ! ஆச்சரியம். ஆனால், உண்மை. வாழப்பிறந்தவர்கள் ஐரோப்பியர்கள் என்று அடிக்கடி நான் சிந்திப்பேன். வாய்விட்டுச் சிரிப்பார்கள். வாழ்க்கையைக் கவலை மறந்து அநுபவிப்பார்கள். குடியும் குதூகலமுமாய் சேர வேண்டிய நேரத்திற்குச் சேர்வார்கள். உடலால் உழைக்க வேண்டிய நேரத்திற்கு உழைப்பார்கள். குளிரென்று ஒதுங்குவதும் இல்லை மழையென்று குடை எடுப்பதுவும் இல்லை.  வெயிலென்று நிழல் தேடுவதுவும் இல்லை. நினைத்த மாத்திரத்தில் நினைத்ததைச் செய்துவிடுவார்கள். இதனால்த் தானோ என்னவோ இவர்களை வெள்ளைக்காரர் என்கிறோம்.


                        
                      நிகழ்ச்சிப் படிவத்திலே என்னைக் கவர்ந்த இத்தாலி நாட்டவர்களுடைய தொழில்நுட்பம் நிறைந்த நடன, நாடக வடிவம் மனதைக் கொள்ளை கொண்டது. கல்வியிலே டாக்டர், இஞ்சினியர் படிப்புத் தான் சிறந்தது என எம்மில் பலர் கருதுவார்கள். இந்த கலைநுணுக்கம் நிறைந்த இத் தொழில்முறையை எந்த டொக்டர் படைப்பாளியாலும் பண்ணமுடியாது. அதற்கென்று திறமையுள்ளவர்களால் மட்டுமே முடியும். இந்தத் திறமையையும் மனிதன் தன் உழைப்பை மானசீகமாக அர்ப்பணிக்கும் போது மட்டுமே பெறமுடியும். கலைஞர்கள் வாழவேண்டும். அவர்கள் கற்பனைத் திறன் ஓங்கவேண்டும், அதிசய படைப்புக்கள் உருவாக வேண்டும். அதை இரசிப்போர் தொகை அதிகரிக்க வேண்டும். நான் பெற்ற இன்பத்தை என் வாசகர்களுக்கும் பகிர்ந்து கொண்டேன்.

  செவ்வாய், 21 செப்டம்பர், 2010


  www.freegifs.de


               புரட்டாதிச் சனிவிரதம்


          
                                  இவ்வருடம் புரட்டாதி மாதம் 18 ஆம் திகதி தொடங்கி வருகின்ற 4 கிழமைகள் தொடர்ந்து 5 சனிக்கிழமைகளில் புரட்டாதிச் சனிவிரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. கன்னிகாமாதம் என்று சொல்லப்படுகின்ற புரட்டாதி மாதத்திலே கன்னிகா விருட்சம் பரவியிருக்கின்ற தினம் புரட்டாதி மாத முதற்சனியாகும். இந்நாளிலேயே சூரியனுக்கும் அவர் மனைவி சாயாதேவிக்கும் மகனாகச் சனீஸ்வரன் தோன்றினார் என்பது ஐதீகம்.
               இச்சனிக்கிரகம் 9 கிரகங்களில் ஒன்று. இது சூரியகிரகத்திலிருந்து மிக எட்ட இருக்கின்ற ஒரு கிரகமாகும். தனக்கு மகன் பிறந்திருக்கின்ற செய்தி கேட்டு சூரியபகவான் மகனைப் பார்க்க ஆவலுடன் சென்றார். மகனைக் கண்ட மாத்திரத்தில் அவர் குஷ்டரோகியானார். இதனால் கோபம் கொண்ட சூரியனும் மகனாகிய சனீஸ்வரனைத் தூக்கிவீசினார். அவரும் தூரத்திலே முடங்கிவிட்டார். அதாவது முடவனாகி விட்டாராம். வேடிக்கையாக இருக்கின்றதல்லவா? இதுவும் புராணங்கள் கூறுகின்ற கதைதான். சூரியனுடைய தள்ளுவிசையினால் வீசப்பட்டிருக்கும் ஒரு கிரகமே சனிக்கிரகமாகும். சூரியனுக்கு அருகே எதுவுமே செல்ல முடியாது. அருகே சென்றால், செல்பவை தூக்கிவீசப்படும். ஒரு எல்லை தாண்டிப் போனால், உள்ளே இழுத்துவிடும். உறிஞ்சி இழுத்து வீசி எறியப்பட்ட ஒரு கிரகமாக சனிக்கிரகமாக இருக்கலாம்.

            சனீஸ்வரன் கிரகங்களிலே பாபக்கிரகமாகக் கருதப்படுகின்றது. அக்கிரகத்திலிருந்து வீசப்படுகின்ற தீய கதிர்வீச்சானது, உடலிலே பல தீய தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. இதனாலேயே பயபக்தியுடன் சனிக்கிரகத்தை சனீஸ்வரன் என்று அழைக்கின்றோம். இக்கதிர்கள் மூளைநரம்புகளைப் பாதிக்கின்றது. எண்ணங்களை மாற்றிவிடுகின்றது. இதனாலேயே சனிக்கிழமைகளில் (எள்எண்ணெய்) நல்லெண்ணெய் தேய்த்து சூரிய உதயத்தில் அரைமணி நேரம் நின்று குளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஜாதகத்தில் சந்திரராசிக்கு 1,2,5,8,12 ஆகிய இடங்களில் சனிபகவான் சஞ்சாரம் செய்கின்ற போது அந்தச் சனி பகவானுடைய கதிர்வீச்சு அதிகரிக்கும். இதனால், எள்எண்ணெயில் ஊறிய உடம்பு இக்கதிர்களைத்தாக்கவிடாது.

           
  கிரகதோஷம் ஒருவர் வாழ்நாளியே ஒவ்வொரு 30 வருடத்திற்கும் ஒரு தடவை வருமாம். இத் தோஷம் உள்ளவர்களுக்குக்கு புத்திரபாக்கியம் குறைவு, மிருகபயம், மரணபயம், அதிகசெலவு, பணநஷ்டம், தேகசுகம்குறைவு, வீண்சச்சரவு போன்றவை நிகழும் எனப் பயம் காட்டப்பட்டுவிட்டது. மக்கள் மனதில் ஒரு நம்பிக்கையை எடுத்துக்காட்ட இவ்வாறு கூறப்படுகன்றது. மனமே எல்லாவற்றிற்கும் காரணமானது. கிரகக்கதிர்களினால், உடலும் அதனோடு இணைந்த மனமும் பாதிக்கப்படுபவர்களுக்கு மேற்கூறியவை நிகழச் சந்தர்ப்பம் இக்கின்றது.  கிரகதோஷம் உள்ளவர்கள் சனீஸ்வரனுக்குரிய தானியமாகிய எள்ளைச் சிறிதளவில் எடுத்து, சனீஸ்வரனுக்குரிய நிறமாகிய கறுப்புத்துணியில் ஒரு பொட்டலமாக கட்டி, ஒரு மண்சுட்டியில் நல்லெண்ணை விட்டு அதற்குள் இந்த பொட்டலத்தை வைத்து எரித்தல் வேண்டும். எள் உணவை சனீஸ்வரன் வாகனமாகிய காகத்திற்குக் கொடுக்க வேண்டும். சனீஸ்வரனின் நிறம் கறுப்பாகக் கருதப்படுவதால், கறுப்புத்துணியில் கட்டப்பட வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. இக்காலங்களில் விரதம் இருந்தால் சனீஸ்வரன் மகிழ்ச்சியடைந்து இப்பாதகங்களைக் குறைப்பார் என்றும் கருதப்படுகின்றது. பெரியவர்கள் பால்,பழம் போன்றவையை உணவாக உட்கொள்ளலாம் என்றும் குழந்தை நோயாளிகள் இட்லி முதலிய எளிய உணவை உட்கொள்ளலாம் என்றும் சொல்கின்றார்கள். இட்லி எனப்படுவது எளிமையான உணவு என்பது கேள்விக்குறி.
    
       இவ்விரதம் விஷ்ணுகோயிலில் அநுஷ்டிக்கப்படுகின்றது. ஏனென்றால், புரட்டாதி மாதத்திலே சூரியன் கன்னிராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசியானது, புதனின் ஆட்சியின் உச்சவீடு. மகாவிஷ்ணுவே புதனாக அவதரித்தவர். எனவே விஷ்ணுகோயிலில் இவ்விரதம் அநுஷ்டிக்கப்படுகின்றது. என்று கூறுவர். ஆனால் சிவன் கோயிலிலும் இவ்விரதம் அநுஷ்டிக்கலாம். ஏனென்றால், சனீஸ்வரன் தனக்குக் கிரகபதவி கிடைக்க வேண்டுமென்று காசிக்குச் சென்று காசிவிஸ்வநாதரை வழிபட்டுப் பதவியைப் பெற்றதன் காரணத்தினால் சிவன் கோயில்களில் இவரை வழிபடுவது சிறந்தது என்றும் கூறப்படுகின்றது. விஷ்ணு ஆதிமூலம். இவரே அவதாரங்கள் எடுக்கக் கூடியவர். சூரியன் உட்பட கிரகங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முதல் இருந்த நிலையே ஆதிமூலநிலை. இந்தநிலையையே விஷ்ணுவாக உருவகித்திருக்கின்றார்கள். அவதாரம் என்றால், ஆதியிலிருந்த இரசாயண மூலக்கூறுகள் கீழே இறங்குதல். எனவே விஷ்ணு நிலையே அவதாரம் எடுக்கக் கூடிய நிலையாகக் கருதப்படுகின்றது. இந்தப் பிரபஞ்சமானது சிவனாக உருவகிக்கப்பட்டிருக்கின்றது என்பதை எனது திருநீலகண்டர் என்னும் கட்டுரையில் வாசித்திருப்பீர்கள். எனவே இந்தப் பிரபஞ்சமாகிய சிவன் கோயிலிலும் சனிக்கிரகம் இருக்கலாம் ஆதிமூலமாகிய விஷ்ணு கோயிலிலும் சனிக்கிரகம் இருக்கலாம் அல்லவா.
          
   சனிக்கிரகத்திலிருந்து வருகின்ற கதிர்கள் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமாயிருந்தால், எள்எண்ணெயை உடலிற்குப் பூசுகின்றோம். அது ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால், அதை எரிப்பதன் அவசியம் தான் என்ன? என்ற வினா எழலாம். எள்ளானது எள்எண்ணெயில் எரிகின்ற போது அதன் தன்மை ஆவியாக வெளிவருகின்றதல்லவா? இதனை எமது மூளையிலுள்ள அமிக்டாலா  உணர்ந்து கொள்வதுடன் அதற்கேற்பத் தன்னுடலிலே மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
          

   புரட்டாதி மாதத்திலே குளிர்காலம் ஆரம்பித்துவிடுகின்றது. சூரியவெளிச்சம் குறைந்துவிடுகின்றது. பகல் குறைந்து இரவுப்பகுதி அதிகரித்தும் காணப்படுகின்றது. இதனால் தாவரங்கள் பச்சையம் தயாரிப்பது குறைந்துவிடுகின்றது . ஒட்சிசனை வெளியிடுவது குறைகின்றது. எள் உணவிலே Arginin என்று சொல்லப்படுகின்ற அமினோவமிலம் இருக்கின்றது. இந்த அமினோவமிலம் சுவாசிக்கப்படுகின்ற ஒட்சிசனுடன் இணைந்து நைத்திரிக்கமிலத்தை உருவாக்குகின்றது. இந்த நைத்ரிக் அமிலம் அல்லது நைத்திரிக்மோனோ ஒக்சைட் இரத்தக்குழாய்களை விரிவடையச் செய்கின்றது. இரத்தக்குழாய்கள் விரிவடையும் போது உடலுக்குக் கொண்டுசெல்லப்படும் ஒட்சிசனின் அளவும் அதிகரிக்கின்றது. இதனால் இக்காலப்பகுதியில் ஒட்சிசனின் அளவு உடல் உறுப்புக்களுக்குச் சென்றடைய எள் உணவு உதவுகின்றது. இதைவிட இந்த எள்உணவானது இரத்தக்குழாய்களின் சுவர்களில் காணப்படுகின்ற மெல்லிய சுவர் போன்றிருக்கும் பகுதியையும்( Endothel)வலுவடையச் செய்கின்றது. எனவே எள் உணவு உண்பது இக்காலப்பகுதியில் மிகவும் அவசியப்படுகின்றது.


                                           எனவே காரணமில்லாமல் இவை ஏற்படுத்தப்படவில்லை என்பது இவற்றின் மூலம் தெளிவாக்கப்படும் போது விரதம் காப்பாரும் விளக்கம் பெறுவர் எமது இளையசந்ததியினரும் இவைபற்றிப் புரிந்து கொள்வதுடன் பிறருக்கும் புரியச் செய்வர்.  புதன், 8 செப்டம்பர், 2010

  அன்பு வாசகர்களே!

  எழுத்துப்படையல்கள் உங்கள் எதிர்நிற்கின்றன. என் எண்ணம் என்னும் புதையலில் எழுந்து வந்த மலர்கள், இப்பக்கத்தில் மணம் வீசிநிற்கின்றன. மூளை தேக்கித்தன் முயற்சியனால், தன் பலபக்கத் தொழிற்சாலைகளில் வேலைப்பாடமைத்து கரங்களின் துணையுடன் கணனித்திரைக்கு அர்ப்பணித்துள்ளது. அன்புடன் சுவையுங்கள். சுவையின் தித்திப்புக்களையும் கசப்புக்களையும் மனச்சுத்தியுடன் பகிர்ந்தளியுங்கள். என் அன்புத் தேடல்களுக்கு ஊட்டச்சத்துத் தாருங்கள். உங்கள் அன்பை நாடிநிற்கும்

  இவள்
  வலைக்குச் சொந்தக்காரி

                                                                   

  சிந்திக்கத் தெரிந்த மனிதனுக்கே அறிவின் பலம் கைகொடுக்கும். கண்டதைக் கேட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளாது மூளைக்குள் போட்டு ஆராய்ந்து எடுக்கும் முடிவுகளையே முழுவதுமாக நம்புகின்ற ஒரு ஜீவனே இந்த கௌசி என்று எழுத்துலகில் பயணிக்கின்ற சந்திர கௌரி சிவபாலன் ஆகிய நான். எழுத்து என்னும் மென்மையான இறகுகளால் வாசகர்கள்   சிந்தனை நரம்புகளைத் தீண்டிப்பார்க்கின்றேன். அதற்காய் இந்த இணையத்தை 2010 இல் ஆரம்பித்தேன். சமுதாயம் கண்டது கேட்டதைக்  கண்மூடி ஏற்றுக்கொள்ளாது எதிர்த்து நான்கு வார்த்தை பேச வேண்டும். அதன் மூலம் தெளிவு நான் பெறவேண்டும்  என்னும் சுயநல நோக்குடன் இப்பாலத்தில் உங்கள் இதயங்களை வந்தடைகின்றேன். பயணிக்கும் உங்கள் கருத்துக்களே என் எழுத்துக்களுக்குத்  தீனி போடும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். 

  நன்றி 


  என்னைத் தொடர்பு கொள்ள :

  Facebook:
  https://www.facebook.com/search/top/?q=gowry%20sivapalan
  https://www.facebook.com/search/str/kowsy+blog/keywords_search

  மின்னஞ்சல் முகவரி :


  kowsy2010@gmail.com

  ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

  திருநீலகண்டன்:

                                                                 திருநீலகண்டன்:

                                                                      சிவனார் திருநீலகண்டர் ஆனார். என சிவபக்தர் கூறும் கதையை அறிந்த சைவசமயத்தார், உலகத்திற்கு உண்மை ஞானத்தை முதலில் எடுத்தியம்பிய சைவசமயத்தின் ஆன்மீகக் கதைகளின் மெய்ப்பொருள் அறியாது, கதையை மட்;டும் உள்வாங்கிக் கருத்தை மட்டும் விட்டுவிட்டதனால், மனிதர்களை  மடையர்களாக்கும் மனிதர்கள் உலகில் அதிகரித்து விட்டார்கள். தேவர்களும் அசுரர்களும் நீண்ட காலம் வாழவேண்டும் என்று சிவனாரிடம் வேண்டிக் கொண்டனர். அப்போது சிவபெருமானும் பாற்கடலைக் கடைந்து, அதனுள் இருக்கும்   அமுதத்தை அருந்தினால், நீண்டகாலம் உயிர்வாழலாம் என்று கூறினார். அப்போது தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து மேருமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது விஷம் பிரிந்து வெளியேறியது. அவ்விஷத்தை சிவபெருமான் எடுத்து உண்டதாகவும் அவ்விஷமானது சிவபெருமானைக் கொன்றுவிடும் என்று எண்ணிய உமையம்மையார், உடனே சிவபெருமானுடைய கழுத்தைப் பிடித்ததாகவும், அதனால் அவ்விஷமானது சிவபெருமானுடைய  கண்டத்தில் தங்கிவிட்டதாகவும் இதனாலேயே சிவனுக்குத் திருநீலகண்டர் என்ற ஒரு பெயர் நிலவுவதாகவும் புராணக்கதை புனையப்பட்டது. அத்துடன் அசுரர்கள் அமுதத்தை உண்டால் நீண்டகாலம்  உயிர்வாழ்ந்துவிடுவார்கள். அதனால், உலகுக்குத் தீங்கு ஏற்படுமே என்று கருதிய கிருஷ்ணபரமாத்மாவும் அழகான பெண் வடிவம் தாங்கி அங்கு தோன்ற அசுரர்கள் கவனமெல்லாம் அப்பெண்வடிவில் இலயிக்க, மறுபுறம் சிவபெருமானும் தேவர்களுக்கு அமுதம் முழுவதையும் கொடுத்து முடித்துவிட்டதாகவும் அக்கதை கூறுகின்றது. 
                           ஆனால், அற்புதமான அண்டவெளி இரகசியத்தை சுவையான கதையாக இந்து மதம் கூறியிருக்கின்றது என்றால் அதிவிவேகமுள்ள மக்கள் அக்காலத்தில் வாழ்ந்து மடிந்திருக்கின்றார்கள் என்ற உண்மை புலனாகின்றது. இப்போது விளக்கத்திற்குள் வருகின்றேன். பாற்கடல் என்றால், என்ன? பால் போன்றிருக்கும் கடலல்லவா! அதுவே ஆங்கிலத்தில் Milky wayஎன்றும் ஜேர்மனிய மொழியில் Milchstrasse  என்றும் அழைக்கப்படும் அண்டவெளியாகும். தூரத்தில் நின்று பார்க்கும் போது பால் போன்று வெண்மையாகவே காட்சியளிக்குமாம். அதனாலேயே எம்மவரும் பாற்கடல் என்றழைத்தார்கள். 

  மேருமலை என்னவென்று அறிய ஆவல் மேன்படுகிறதல்லவா! அதுவே எம்மையெல்லாம் காக்கின்ற கதிரவன். கதிரவனை பக்கமாக நின்று பார்த்தால், மேல் நோக்கி எரியும் மலையாகத்தான் காட்சியளிக்கும். உச்சியில் நின்று பார்த்தால், புள்ளியாகவே, அதாவது எமக்குத் தெரிவது போன்றே காட்சியளிக்கும். மேரு என்பது பொன். மேருமலையெனில் பொன்மலை என்பது புலப்படுகின்றது.  எனவே பொன்மலை என்பது புரிகிறதல்லவா எம்மைக் காக்கும் சூரியன் என்னும் உண்மை. 

  அவ்வாறெனில் வாசுகி என்னும் பாம்பு! அதுவே சூரியனைச் சுற்றி வலம் வருகின்ற அந்த 9 கிரகங்களும் ஆகும். கிரகங்கள் ஒன்பதும் தலையாகவும் அவற்றின் நிழல் வால் போன்றும் தூர நின்று பார்ப்பவர்களுக்குத் தோன்றமளிக்குமாம். இதுவே மேருமலையைச் சுற்றிவருகின்ற வாசுகி என்ற பாம்பாகியது. 

  சூரியன் தோற்றத்திலும் கிரகங்களின் சுழற்சியிலும் தோன்றிய நச்சுவாயுவானது அண்டவெளியிலே கலந்திருக்கின்றது. இது உயிரினங்கள் தோன்ற முடியாத நச்சு நிலையாகும். அது சுழன்று பூமிக்கு வருகின்றது. உலகெங்கும் பரந்திருக்கும் இந்த நச்சுவாயுவினால், உலகமக்கள் அனைவருக்கும் பாதிப்பே. அது எந்த வடிவில் என்று கூறமுடியாது. ஆனால், அழிவு நிச்சயமாகிறது. அந்த அழிவைத் தருகின்ற நஞ்சை கண்டத்தில் தாங்கியவராக சிவபெருமான் உருவகிக்கப்பட்டார். நஞ்சை விழுங்கவும் முடியாது துப்பவும் முடியாது. இரண்டும் ஆபத்தே. ஆனால் உலகெங்கும் நஞ்சு இருப்பது நிச்சயம். அவரவர் உடல்நிலைக்கேற்ப வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வெண்குருதிசிறுதுணிக்கை எம்மைப் பாதுகாக்கின்றது. எனவே கண்டத்தில் நஞ்சை அடக்கிய சிவனும் அறிவின் படைப்பே. 

  இப்பிரபஞ்சமே சிவனின் வடிவம். அவர் கழுத்தில் தங்கிய விஷமே இப்பிரபஞ்சத்தில் தங்கியுள்ள விஷமாகும். ஒரு உடலில் கழுத்துப்பகுதியில் விஷம் தங்கினால், அவ்விஷத்தை விழுங்கவும் முடியாது, துப்பவும் முடியாது. துப்பினால் பிறருக்குக் கேடு. விழுங்கினால், விழுங்கியவருக்குக் கேடு. இதனாலேயே திருநீலகண்டர் வடிவில் கழுத்தில்(கண்டம்) விஷம் தங்கியதாக கதை புனையப்பட்டுள்ளது. 
  இங்கு அசுர தேவர்களை தோற்றம் தான் யாது! சுரம் அசுரம். சுரம் என்றால் தேவர்கள் அசுரம் என்றால், அசுரர்கள். இதன் விளக்கம் தான் யாது! நியூட்டனின் விதி தரும் விளக்கமே இதன் விளக்கமாகும். எதற்கும் ஒரு செயலுக்கும் எதிர்ச்செயல் இருக்கும். என்பதாகும். தீமை இருந்தால், நன்மை இருக்கும். மகிழ்ச்சி இருந்தால், துன்பம் இருக்கும். எனவே தேவர்கள் இருந்தால் அசுரர்கள் இருக்க வேண்டும் அல்லவா! அழகான அற்புதமான இயற்கை நிகழ்வுகள், அக்கால அறிவாளிகளின் தவறான வெளிப்படுத்தலால் உலகிலே ஆன்மீகம் புகுந்தது. அறிவு அழிந்தது. இன்னும் இருக்கிறது தொடருவேன். பொறுத்திருங்கள்.

  மதம் கடந்த ஆன்மீகம்
    மதம் கடந்த ஆன்மீகம் 

  சுறுசுறுப்பான உணர்வில் இருந்தும் எமது இதயத்திலிருந்தும் தூய்மையாகவும் உறுதியாகவும் இருக்கின்ற ஆசைக்கு, ஒரு மிதமான மின்சக்தி இருக்கிறது. ஓவ்வொரு நாளும் உறக்கத்தின் போது வான்வெளியில் அது கலக்கிறது. பிரபஞ்ச இயக்கத்தில் இணைந்து உறுதியாகிறது. தினமும் காலையில் உணர்வு நிலையில் சேருகிறது. இவ்வாறு உயிரில் உறுதியாகக் கலந்த ஆசை, நிச்சயம் நிறைவேறும்.  எனவே தூய்மையான ஆசைக்கு வலு இருக்கின்றது.  அது நிறைவேறும் என நம்பிக்கை
  கொள்வோம்.  

  கண்ணீருக்குச் சொந்தமானவர்கள்

  அடுத்தவர் உங்களைப் பற்றிக் கூறும் அவதூறான வார்த்தைகளுக்காக உங்கள் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீரும் வீணாகக் கூடாது. ஏனென்றால், அவர்கள் உங்கள் கண்ணீருக்கு தகுதியானவர்கள் அல்ல. உங்கள் கண்ணீருக்குத் தகுதியானவர்கள், ஒருபோதும் உங்கள் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்க மாட்டார்கள்.

  எது நிஜம்

  கருவிழி மறைக்க இமையொன்று திரையிட்ட நாளென்ற திரைப்படம் முடிவடைகிறது. நீண்ட ஓய்வு தேடினும் சிலமணிநேரமாவது இறந்து மீண்டும் பிறப்பெடுக்கும் உயிரோட்டம். படபடவென்று செக்கன்களைச் செலுத்திக் கொண்டிருக்கும் கடிகாரமும் உண்மையான ஊழியனாய் மீண்டும் ராதிகா, உலகில் சஞ்சரிக்க உலுப்பிவிட்டது, அவள் உணர்வுகளை. திரையகற்றிச் சாளரத்தை மெல்லத் திறந்தாள். சத்திரத்து வாசல் பிச்சைக்காரனைப்போல் புகுபுகுவென்று உள்நுழைந்து சில்லிட்ட தென்றல்காற்று மனதுக்கு இதமான உணர்வை உணர்த்தியது. செய்தொழில் முடித்துத் தன் ஊதியத்தொழில் தொடங்க வீட்டைவிட்டுப் படியிறங்கினாள். சூரியனைக் கட்டிப்போட்டிருந்த இருள் தன்பிடியை மெல்லமெல்லத் தளர்த்தியது.
                              ராதிகா, அவசரஅவசரமாகப் பேரூந்து நிலையத்தை அடைந்தாள். சத்தமின்றி அருகே ஊர்ந்து வந்த பேரூந்து தரித்து நின்று வாசலைத் தாராளமாகத் திறந்துவிட்டது. குபுகுபுவென்று உள்நுழைந்த எறும்புக்கூட்டமாம் சனநெருக்கடியுள் நுழைந்தவளுக்கு இருக்கை சந்தர்ப்பவசமாய் இடந்தந்தது. தன்முன்னே அமர்ந்திருந்த இருபருவக் குழந்தைகளின் முகத்தில் பட்டுத்தெறித்த அவள் பார்வை மீண்டும் சென்று அதில் ஒரு பளிங்குச் சிற்பத்தை விட்டகல முடியாவண்ணம் அப்பிக் கொண்டது. தேநீருக்குள் விழுந்த சீனிபோல் கரைந்து போனாள். புன்னகை புரியும் பாங்கில் புதியவள் முகத்தில் அந்நியோன்யம் நாடினாள். சிறகடிக்கும் இமையினுள் சிக்கிக்கொண்ட கருவிழிகள் பற்கள் இல்லாமலே சிரித்தன. ஓவியன்   கைப்படாத சித்திரம், சிற்பி வடிக்காத சிலை, ஆயிரம் கண்களை வசப்படுத்தும் அற்புத உடல்வண்ணம். அவள் தாயார் தங்கபஸ்பம் உண்டாளோ! கலர்கலர் மரக்கறிகளைக் கரைத்துக் குடித்தாளோ! பிரம்மன் சிருஷ்டிப்பில் நேரம் ஒதுக்கியதும் இவளுக்குத்தானோ! இவ்வாறெல்லாம் மனதில் சிந்தனைகள், ராதிகாவின் மூளையில் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தன.Nächste haltestelle Merscheid தரிக்குமிடம் அறிவிக்கப்பட்டதும் அந்தப்பருவச்சிறுமியின் பார்வை சட்டென்று உள்வரவு  நுழைவிற்குப் பறந்தது. பேரூந்து நின்றது. ஆவலின் இறுதி ஓரம் தடுக்கிவிழ இறுக்கமானது, அவளின் உடலின் முகவரி. சிவந்தது கன்னங்கள், ஏங்கிய தாகம் தீராதவள் தோழியிடம் முறையிட்டாள். அவள் தோழி வரிகளில் வர்ணமிட்டாள்.
              ' கடுகதி என் நினைவு
         காக்கவைப்பது உன் வரவு
         ஏங்கவைப்பது உன் பண்பு
         இரங்கி நிற்குது என் காதல் ''
  படபடவென்று தொலைபேசியில் இசைக்கருவி மீட்டுவது போல விரல்கள் ஆடிய நர்த்தனத்தில் விரைந்து சென்றது எஸ்.எம்.எஸ். யாரோ எழுதித் தாளமிட்ட கவிதைக்குத் தன் கற்பனையாமென கடைவிரிக்கும் கவிஞர்களை இக்கணம் சொப்பனம் கண்டாள், ராதிகா. சிலநிமிடங்களில் தலைவளைத்து விடைபெற்றபடி பேரூந்தை விட்டகன்றாள், அந்த அழகின் அவதாரம்.
                 காலச்சுழற்சியின் அடுத்தநாளும் அதேபேரூந்து அதே இருக்கை. அந்த சுந்தரப்பாவையின் சிநேகிதி தன்னுடைய சிரிப்பை எங்கோ தொலைத்திருந்தாள். முகத்தின் தசைகள் அவள் கட்டளைக்குள் கட்டப்பட்டிருந்தன. அவள் அருகே வந்த ராதிகாவும் உள்ளத்திடம் உத்தரவு கேட்காமலே மிக விரைவாக 'இன்று உங்கள் சிநேகிதி பாடசாலைக்கு விடுமுறை எடுத்து விட்டாளா?' 'இல்லை அவள் இனிமேல் வரமாட்டாள்' நேற்றுப் பிற்பகல் ஒரு விபத்தில் இறந்து விட்டாள்' மின்சாரம்தாக்கியது போன்று ஒருகணம் நாடிநரம்புக்குள்; இரத்தம் அத்தனையும் ஒன்றாக அதிவேக வெப்பத்தில் கொதித்தெழுந்தன. திடீரென்று சூரியகிரகணம் வந்துவிட்டது போன்று உணர்வுகள.; அனைத்தும் இருண்டு போயின. ஒருநாள் இதயம் முழுவதும் ஆச்சரியமாகி மறுநாள் இதயத்தைப் பிழிந்தெடுத்துப் போன அந்தப்பருவப் பெண்ணை எண்ணிஎண்ணிக் கலங்கினாள்,ராதிகா.
                  எது நிஜம். அவள் இரம்மியம் நிஜமா? அவள் காதல் நிஜமா? அவள் கல்வி நிஜமா? இல்லை அவளைப் படைத்ததுதான் நிஜமா? அவள் வாழ்க்கைதான் நிஜமா? எதுவும் நிஜமில்லை என்று அறிந்தபின்னும் நமக்குள்ளே போட்டிகளும் பொறாமைகளும், மறைமுகப்பேச்சுகளும், இதயத்தை வெட்டிப்பிழியும் வார்த்தைகளும், காலம் கடந்தும் தொடர்ந்தே வாழ்வோம் என்ற இறுமாப்புப் பேச்சுகளும் தற்பெருமையும் கொண்டு மனிதன் வாழும் வாழ்க்கைக்கு இவளின் மறைவும் ஒரு எடுத்துக்காட்டு.

  கேள்விக்குறியாகும் இலக்கியங்கள


     Jg;ghf;fpAk; uitAk; FwpghHg;gjhy;
     rKjhaf; ftpQd; ifKidg; Ngdh
     fWg;G ik Jg;GfpwJ.
            ..
     fhyj;ijf; fhz ,yf;fpaq;fisg;  Gul;lhjPH mq;F
     mq;fPfhpf;fg;glhj jiytHfSk;
     nja;tq;fshf;fg;gl;l Nghyp kdpjHfSk;
     NfhB];tuHfshy; Fj;jiff;F vLf;fg;gl;l Nfhapy;fSk;
     fhyj;ij myq;Nfhykha;f; fhl;bf; nfhz;bUf;Fk;.
            …….
     ,yf;fpaq;fnsy;yhk; Nfs;tpf;Fwpahfpd;wd
     ngha;ikfSf;Fg; Gfyplk; nfhLj;j fhuzj;jpdhy;.

            …….
     GfOk; gaKk; $Lfl;bajdhy;
     ,yf;fpag; gwit $l;Lf;Fs; FspH fha;fpwJ.
           ..
             tWik
   
    gQ;rKk; gl;bdpAk; tpQ;rp tpl;ld.
    tpisepyq;fs; GijFopfshf;fg;gl;ljdhy;

           XNrhd; gil

    G+kpj;jha;f;F tajhfp tpl;ljdhy;
    ghJfhtyHfs; gykpoe;J NghdhHfs;.

           goik

    kuq;fNs Mz;Lf;nfhUKiw Milkhw;Wfpd;wd
    kdpjd; kdVl;by; vd;Nwh fpWf;fg;gl;l thrfq;fs;
    ,d;Wk; mopf;fg;glhky; ,Uf;fpd;wd. 

  வியாழன், 2 செப்டம்பர், 2010

  பெற்றோரே என்றும் என் தெய்வங்கள்

  கண்காணாக் கடவுள்களை நம்பி நாம் தொழுகின்றோம். கைகொடுக்கும் என்று காலமெல்லாம் துதிக்கின்றோம். ஆனால், வாழும் வரை நம் வாழ்வுக்காய்த் தம்மை அர்ப்பணித்து நாம் வேண்டியதெல்லாம் வேண்டியபோது தந்துநின்று, எம்மை இப்பூமியில் அவதரிக்கச் செய்து, எமக்காய் ஒரு வாழ்வைக் காட்டி பெருமை சேர்த்த பெற்றோரைத் துதிப்போமா? மற்றோரைத் துதிப்போமா? வாழ்வதுதான் வாழ்க்கை. அவ்வாழ்வைக் காட்டியோர் யார்? எம் தேவையை நிறைவேற்றியோர் யார்? தவறு செய்ய மன்னிப்போர் யார்? தவறுகளைச் சுட்டிக் காட்டியோர் யார்? பெற்றோர் உருவத்தில் தெய்வம் வந்தது என்று சொல்வதாக இருந்தாலும், பெற்றோர்கள் தான் தெயவங்கள். இதை மறுப்பதற்கு யாருண்டு.

  குழந்தை வளர்கிறதா? வளர்க்கப்படுகிறதா?

  பஞ்சு உடல் ஒன்று பூமித்தாயிடம் புகலிடம் தேடி அன்னை என்ற ஆதாரத்தின் துணையோடு அகிலத்தை வந்தடைகின்றது. இராட்சத உருவங்களாய்ச் சுற்றித்தன்னைச் சூழ்ந்து நிற்கும் வைத்தியர்களையும்; இருண்ட உலகு விட்டு வெளிச்சமான ஒரு புரியாத உலகத்தையும கண்ட குழந்தை, தொண்டை விரித்துத் தன் தொனியைக் குரல் எனக் கொண்டுவருகின்றது. குரல் எடுக்க யாரும் துணைக் கொடுத்தாரா? புரியாத உலகில் வெற்றுக் காகிதமாய் எழுதப்படாத இதயத்துடன் பிறந்த அந்த விநாடி தொட்டு வியத்தகு சாதனை புரியும் வின்னர்களாகத் தடம்பதிக்க அவர்கள் வளர்ந்தார்களா? வளர்க்கப்பட்டார்களா? விடைதேடி விளக்கமாய் விரிகிறது மனம்.

                                   தொட்டில் வந்த பிள்ளை சுவை தேடி, உடல் உறுதிநாடி அவதரிக்கும் போதே அன்னையின் மார்பகத்தில் பால் சுரக்கச் செய்து கட்டுச் சோற்றுடன் உலகுக்கு உதயமாகிறது. உணவின்றி உடல் எங்கு உருப்பெறப்போகிறது என்று உள்ளிருந்து உற்பத்தித் தொழிற்சாலையை ஊக்குவித்ததோ! பாதப்பெருவிரல் பக்குவமாய்த் தான் இழுத்து சிறுவாயில் விரல் வைத்துச் சுவை பார்க்கும் போதும், பட்டுப் போன்ற பாதம் நோகாது உருண்டு பிரண்டு சிற்சில பற்பல யோகாசனக் கலையைத் தானாகவே செய்து உடலை வளர்க்கின்றது. அதற்காக ஒரு உபாத்தியாயரை உதவிக்காய் அமர்த்தினோமா? என்னே அற்புதம்!

                                       உறுதியாக உணவு உட்கொள்ள உடல் வலுப்பட்டு விட்டதா? பற்களின் தேவை உணவைப் பதப்படுவதற்காக அன்று தொடங்குவது அகப்பட்ட பொருளை வாயினால் கடிகடியென்று கடிக்கின்றது. அது விறகா விரலா புரியாது அஃறிணைப் பொருளல்ல குழந்தை. கடிப்பதையே காண்கின்றோம். அதன் கருத்தைப் புரிந்தோமா? அத்தனையும் அதன் பற்கள் வெளிவரவேண்டும் என எடுக்கும் முயற்சியே. தன் தேவைக்காய்த் தானாகத் தோற்றுவித்த பற்களல்லவா!

                                    அறிவு துளிர்க்கின்றது. அண்மையிலுள்ள பொருளென்ன. சேய்மையிலுள்ள பொருளென்ன. அளைந்து உறவாட ஆசை பூக்கின்றது.
  ஆராய மனம் துடிக்க கையில் பட்டதைத் துணைக் கொண்டு எழுந்து பிடித்துப்பிடித்து நோக்கிய குறியை நாடி நடைபயில்கின்றதே. நம் துணை தேவையென நாம் எடுக்கும் முயற்சியெல்லாம் நம் தற்பெருமை தானென்று நாம் அறிய வேண்டும். தானாய் தன் முயற்சியில் தானாய் எழுந்த தளிர்நடை பயிலும். சமநிலைப்படுத்த தன் இரு பிஞ்சுக் கரங்களையும் சமநிலைப் பலகையாய் விரித்துத் தன் தள்ளாடும் தளிர்ப்பாதங்களைத் தாண்டித் தாண்டி வைத்து அழகாய் நடந்துவரும் காட்சியை அகக்கண்ணிலே நிறுத்துங்கள். ஐயோ இதுவன்றோ அதிசம்!

                                            பொருள் நோக்கிச் சுவை நோக்கி எம் அதரங்களின் அசைவை நோக்க முனைகின்றதே. அன்று தான் பேச்சுக்கலைக்கு முக்கியத்துவம் தேடுகின்றது. பேசுகின்றபோது எங்கள் உதடுகளின் அசைவை இமைவெட்டாது. உற்றுநோக்கித் தன் மென் இதழ்களையும் அசைத்துப் பார்க்கும். அங்கே பேச எத்தனிக்கும் முயற்சியின் முழுவடிவத்தையும் நாம் காணலாம்.

                                            இத்தனையும் சுயமாய் நடைபெறுகின்ற போது பறவைகளுக்கும் மனிதர்களுகு;கும் இடையே பாகுபாட்டை நாம் காண்கின்றோம். நடைபயிலும் காலம் வரை உணவு ஊட்டவேண்டியவர் உதவிநாடி நிற்கவேண்டியுள்ளது. இதற்காகப் பெற்றோர்கள் என்ற அந்தஸ்தைத் தந்த அந்தக் குழந்தைகளில் எங்கள் கருத்துக்கள் அத்தனையையும் திணிக்க முயலலாமா? அவர்களுக்கென ஓர் உலகம், உணர்வு ஆசைகள், அனைத்தும் உண்டு. எழுந்து நடமாட எவ்வளவோ முயற்சிகளைத் தங்களுக்காகத் தாங்களாகவே மேற்கொள்ளும் அவர்கள், அவர்களுக்காகவே இப் பூமியில் பிறப்பெடுத்தவர்கள். இதனையே அப்துல்கலாம் அவர்கள்,''உங்கள் குழந்தைகள் உங்களுக்கூடாக வந்தவர்கள் உங்களுக்காக வந்தவர்கள் அல்ல. அவர்கள் வளர நீங்கள் உதவியாக இருக்கலாம். அவர்கள் உணர்வாக மாறுதல் கூடாது'' என்றார். குழந்தை வளரத் தாய் வளர்க்கிறாள். என்பதைவிட தாய், தாயாக வளர்கிறாள் என்பதே மெய். குழந்தை குழந்தையாக வளர்கிறது என்பதும் மெய் ஆகும்.

  நம்பிக்கை
  கஷ்டங்கள் வாட்டும் போது தளர்ந்துவிடாது அநுபவப்பாடம் கற்றுக் கொண்ட ஞானத்துடன் நிமிர்ந்து நடவுங்கள். பாதைதோறும் தொடர்ந்துவரும். துன்பங்களும் அநுபவங்களும் உங்களைப் பூரண மனிதனாகப் பிரகாசிக்கச் செய்யும். நம்பிக்கை கொண்டு நகரும் பயணம் எப்போதும் வெற்றிப் பாதைக்கே வழிசமைக்கும். கண்ணபரமாத்மாவிடம் நம்பிக்கை கொண்டு இரு கரங்களையும் நீட்டி அழைத்த போதுதான், ஆண்டவன் பாஞ்சாலிக்கு ஆடை கொடுத்தார். இது நம்பிக்கைக்கு ஆதாரமாகக் கூறப்படும் மகாபாரதக் கதையாகும். எனவே நம்பிக் கைவைக்கும் எக்காரியமும் தோற்றுப் போவதில்லை. தோற்றுப் போகவும் கூடாது.

  LGBTQ

  கட்டுப்பாடு, விட்டுக் கொடுப்பு இவற்றை ஒட்டியே மனித வாழ்க்கை குடும்பம் என்ற அமைப்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றை மனதில் கொள்ளாத உணர்வுகள...