• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

    டichternacht ( வெளிச்சஇரவு)

                         டichternacht ( வெளிச்சஇரவு)





    இந்த அற்புதமான இருளில் இயற்கையை வெல்ல ஒரு கோலாகலக் கண்காட்சி. நிலா தன் இருக்கையில் இருந்தபடி மனிதன் அற்புத வண்ணங்களைக் கண்காணித்துக் கொண்டது. நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன். மேகக் கூட்டத்திடையே வெட்கித்து மறையும் அந்த நிலாவின் போக்கைக் கண்டேன். சிரிப்பாய் இருந்தது. ஆம் அன்றுதான் 25.09.10 சோலிங்கன் நகரில் வெளிச்சஇரவு ( Lichternacht) தோமஸ்அல்வா எடிசன் கண்டுபிடித்த மின் விளக்குகளை வெல்லும் வண்ணம், பகல் போல் தற்போதைய புதிய கண்டுபிடிப்புக்களின் வண்ணவிளக்குகளின் அற்புதம். வருடாவருடம் இந்நிகழ்வுக்கு என் சங்கமம் எப்போதும் இருக்கும். இரவில் வெளிச்சம் காண யார்தான் விரும்பார்! ஆனால், அந்த வெளிச்சத்தையும் கோலாகலமாக்கும் சோலிங்கன் நகரபிதாவின் ஒத்துழைப்பும் உதவிநல்கும் நிறுவனங்களின் ஒத்துழைப்பும் என்னைப் போன்ற பலருக்கு குதூகல இரவாகத் தானே தோன்றச் செய்யும். கண் பார்க்கும் இடமெல்லாம்  வெளிச்சம். கற்பனைக்கு எட்டாத வேலைப்பாடுகள். இத்தனைக்கும் மேல் புற்றீசல் போல் எங்கிருந்துதான் இவ்வளவு மக்கள் இந்த சோலிங்கனுக்குள் நிறைந்தார்களோ! ஆச்சரியம். ஆனால், உண்மை. வாழப்பிறந்தவர்கள் ஐரோப்பியர்கள் என்று அடிக்கடி நான் சிந்திப்பேன். வாய்விட்டுச் சிரிப்பார்கள். வாழ்க்கையைக் கவலை மறந்து அநுபவிப்பார்கள். குடியும் குதூகலமுமாய் சேர வேண்டிய நேரத்திற்குச் சேர்வார்கள். உடலால் உழைக்க வேண்டிய நேரத்திற்கு உழைப்பார்கள். குளிரென்று ஒதுங்குவதும் இல்லை மழையென்று குடை எடுப்பதுவும் இல்லை.  வெயிலென்று நிழல் தேடுவதுவும் இல்லை. நினைத்த மாத்திரத்தில் நினைத்ததைச் செய்துவிடுவார்கள். இதனால்த் தானோ என்னவோ இவர்களை வெள்ளைக்காரர் என்கிறோம்.


                          
                        நிகழ்ச்சிப் படிவத்திலே என்னைக் கவர்ந்த இத்தாலி நாட்டவர்களுடைய தொழில்நுட்பம் நிறைந்த நடன, நாடக வடிவம் மனதைக் கொள்ளை கொண்டது. கல்வியிலே டாக்டர், இஞ்சினியர் படிப்புத் தான் சிறந்தது என எம்மில் பலர் கருதுவார்கள். இந்த கலைநுணுக்கம் நிறைந்த இத் தொழில்முறையை எந்த டொக்டர் படைப்பாளியாலும் பண்ணமுடியாது. அதற்கென்று திறமையுள்ளவர்களால் மட்டுமே முடியும். இந்தத் திறமையையும் மனிதன் தன் உழைப்பை மானசீகமாக அர்ப்பணிக்கும் போது மட்டுமே பெறமுடியும். கலைஞர்கள் வாழவேண்டும். அவர்கள் கற்பனைத் திறன் ஓங்கவேண்டும், அதிசய படைப்புக்கள் உருவாக வேண்டும். அதை இரசிப்போர் தொகை அதிகரிக்க வேண்டும். நான் பெற்ற இன்பத்தை என் வாசகர்களுக்கும் பகிர்ந்து கொண்டேன்.

    3 கருத்துகள்:

    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      பதிலளிநீக்கு
    2. வாங்க வாங்க அன்புதோழியே!
      வந்து உங்கள் திறமைகளையும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதோடு எங்களின் திறமைக்கு தூண்டுகோலாய் இருங்கள்.

      அன்புடன் மலிக்கா

      பதிலளிநீக்கு
    3. அனுபவத்தைத் தந்ததால் எமக்கும் நிகழ்வை அறியக் கூடியதாக இருந்தது. நன்றி.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...