• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 29 நவம்பர், 2010

    சோமபானம் உண்டால் சொல்லுக்குள் அடங்கும் மனம்




                சோமபானம் உண்டால் சொல்லுக்குள் அடங்கும் மனம்


    மனிதன் என்ற பெயரில் நடமாடும் விலங்குகளை அடையாளங் காண ஒரு ஞானக் கண்ணைத் தந்துதவு இறைவா! என இரு கரம் ஏந்த வேண்டிய நிலை பெண் இனத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஆசை காட்டி மோசம் செய்வோரும், ஐரோப்பிய ஆறடி மண்ணுக்குள் அடக்கமாக்கப் பெண்களை விமானம் ஏற்றி வந்த காலன்களும் கணவன் என்ற பெயரில் அப்பாவி அபலைகளை கையில் கிடைப்பவற்றைக் கொண்டு கொன்று குவிக்கும் கொடுமைக்காரர்களும் கோலோச்சும் மண்ணில் குடிவந்த குலவிளக்குகளே! உங்களுக்கோர் எச்சரிக்கை! தாய் மண்ணுக்கு விடைகொடுத்து கைப்பிடித்தவனை நம்பி மட்டும் அந்நியநாட்டு மோகத்தில் விமானப்படி மிதிக்காதீர்கள். தைரிய ஆயுதம் ஏந்துங்கள். தனித்து நிற்கப் பழகுங்கள். பிள்ளைப் பூச்சியல்ல பெண் பிடித்து நசுக்குவதற்கு. விலங்கிட்டுக் கொல்வதற்கு பெண் அடிமையல்ல. காதலித்தவளுடன் சல்லாபம் புரியக் கைப்பிடித்தவளும் வாரிசும் இடையூறென்றால், அந்த மிருகம், கத்தி மட்டும் ஏந்தாது. உங்களைக் கொல்வதற்கு தன் கையில், கிடைப்பது எதுவானாலும் அதனை உங்களைக் கொன்று குவிக்கும் ஆயுதமாக்கும். தன் வாரிசாக இருந்தாலும் அதைக் காலால் மிதித்துக் கொல்லவும் தயங்காது. இறுதியில் மனஅழுத்தமென்னும் மாயப் பேச்சால், அடுத்தவர் அநுதாபச்சொல்லை இலகுவாகப் பெற்று அப்பாவியாகக் காட்சியளிக்கும். இவ்வாறான இராக்கதர்கள் வாழும் அபூர்வ பூமியிது. 
                   
                      இந்த இரகம் ஒருபுறம் இருக்க, இங்கு பணம் உண்டு, பசியாற அளவுக்கதிகமான உணவுண்டு, உல்லாச வாழ்க்கையுண்டு. ஆனால் மனிதன் மனிதனாக இல்லை. ஓயாது உழைத்து, நிம்மதியைத் தொலைத்தவர்களும் இங்கு தொகையாக உள்ளார்கள். இவர்களுக்கும் இராட்சத குணமே இரக்க குணத்தைவிட மேலதிகமாகத் தொழிற்படுகின்றது. அது எப்போது வெளிப்படும்? என்ன செய்யும்? என்று எவருக்குமே தெரியாது. எனவே மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சோமபானம் அருந்துங்கள். அது ஒன்றும் இலகுவானதல்ல. தினமும் சிறிது சிறிதாக முயன்றால், பலன் காட்டும் தியானமே, சோமபானம் என்பதாகும். தியானத்தின் மூலம் மாத்திரமே மிருககுணத்தை மனிதனால் அடக்க முடியும். அப்பாவிப் பெண்களின் உயிரைக் காக்க முடியும்.

    1 கருத்து:

    1. கொஞ்சம் ஆழமான பாதிப்பின் வெளிப்பாடோ! இப்போது வரும் சீரியல்களிலும் இவை தானே காட்டப்படுகிறது...தியானம் எனும் சோமபானம் நல்ல பானம் தான். சொந்தக் காலில் நிற்கப் பழக வேண்டும். ஆனால் ப்ளீஸ்......அந்தரங்கங்கள் அவிழ்க்கும் பெண்மொழிகள் வேண்டாம்.vaalthukal Vetha.Elangathilakam.
      Denmark.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...