இணையற்ற இலக்கியம்
வள்ளுவம் கற்றோம் காளமேகம் கண்டோம்
ஒட்டக்கூத்தர் ஒளவை போட்டியும் கற்றோம்
படிக்காசு புகழேந்தி பற்பலரைச் சுவைத்தோம்
சிற்றிலக்கியத்தில் சிந்தை மிக மகிழ்ந்தோம்
ஆசுகவி கலம்பகம் ஆர்வமுடன் கற்றோம் - ஆனால்
பொறிக்கப்பட வேண்டிய இப்பொறிக்கவிதையை
எங்கும் கண்டிலமே இங்குதான் கண்டோம்
பலபொருள் குறிக்கும் ஒரு சொல் பாடசாலையில் மனப்பாடம் செய்த காலங்கள், மனனம் செய்த காலங்கள், மனதில் நிழலாட வழக்கொழிந்த தமிழ் சொற்களை வாழவைக்கும் நோக்குடனும் வாழும் சிறார்கள் சொற்களின் பொருள் அறியும் சிந்தையுடனும் இலண்டன் தமிழ் வானொலி தன் இலக்கின் ஒரு வடிவாய் உருப்பெறும் பொறிக்கவிதை பற்றிப் பொறிதட்டிய சில எண்ணக்கருக்கள் எழுத்து வடிவில் உருப்பெறுகின்றன. வளர்ந்து விட்ட தமிழை வளாக்கிறோமென மார்பு தட்டிக் கொள்ளும் மனிதர்களிடையே வாழுகின்ற தமிழைச் சாக விடாது, அம்மொழி பேசும் இளந்தளிர்கள், தாம் ஊன்றிய இடத்தில் கிளைவிட்டுத் தமிழ் மனம் வீசவும், கலப்புக் கலாச்சாரத்தில் தனித்துவம் பெறவும் ஊக்கத்தை அள்ளி வழங்கும் அட்சயபாத்திரமாக இவ்வானொலி உலக வான்பரப்பில் வலம் வருகின்றது. அதன் பாடத்திட்டத்தின் ஒரு பாடம் வரலாற்றில் இடம்பிடிக்கும் பொறிக்கவிதை.
சங்கம் தொட்டு இன்றுவரை இலக்கிய வடிவங'கள் பற்பல விரிந்து காணப்பட அனைத்திலும் தேடினேன், அகப்படவில்லை, இவ் இலக்கியம். காளமேகப்புலவர் தனிப்பாடலில் சிலேடையைக் கண்டேன். அங்கு ஒரு பாடலுக்கு இரு பொருள்கள்கள் விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஒரே பாடலில் பாம்பையும் எள்ளையும்
ஒப்புமை காட்டியுள்ளாh.
''ஆடிக் குடத்தடையு மாடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகம்காட்டும் - ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பௌ;ளெனவே யோது'
பாம்பு
பாம்பு படபெடுத்தாடிப் பெட்டிக்குள் புகுந்து கொள்ளும் படமெடுத்தாடும் போது இரையும். மூடியைத் திறந்தால், தன்னுடைய முகத்தைக் காட்டும். மனிதன் உடலில் தன்னுடைய நச்சுப் பற்களால் தீண்டினால், அந்நஞ்சு இரத்தத்தினுள் ஓடி மண்டைக்குள் நுழையும். இவ் உணர்ச்சியை உண்டாக்கும் பாம்பிற்குப் பிளவு பட்ட நாக்கு இருக்கிறது. ஏன இப் பாடலில் பாம்பைப் பற்றிக் கூறுகிள்றார்.
எள்ளு
எள்ளானது செக்குக்குள் போட்டு ஆடி குடத்திற்குள் எண்ணெயாக அடையும். ஆட்டும் போது ஒரு இரைச்சலை ஏற்படுத்தும். மூடியைத் திறந்து பார்த்தால் எண்ணெயில் எமது முகத்தைக் காட்டும். தலையில் எண்ணெய் தேய்த்தால் மண்டைக்குள் ஓடிக் குளிர்ச்சியைத் தோற்றுவிக்கும். எண்ணெய் எடுக்கப்பட்ட பின் கழிவுப் பொருளாகப் பிண்ணாக்குக் காணப்படும்.
இவ்வாறு இரு பொருள் ஒரே பாடலில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், இப் பொறிக்கவிதையில் ஒரு சொல் உணர்த்துகின்ற பல பொருள்கள் ஒரு தனிப்பாடலுடன் எடுத்தக்காட்டப்படுவதுடன் சமுதாயத்திற்கு ஒரு செய்தியைக் கூறுவதாகவும் நல்வழிப்படுத்துவதாகவும் அமைந்து காணப்படுகிறது. அதுவே கற்பதுக்கு இலகுவாக கவிதை, பொன்மொழி வடிவங்களில் காற்றலைகளில் வலம் வருகின்றது.
பொறிக்கவிதை ( சாலம்)
சாலமும் ஆழமும் கொண்ட அறிஞர்காள்
சாலமாம் கர்வம் நீக்கி – வாழ்வில்
சால மின்றி சாலமொப்ப சிறார்
சாலச் சிறக்க சாதிப்பீராக.
அகலமும் ஆழமுமாய் கல்வி அறிவு பெற்ற அறிஞர்களே, மதில் போன்று உங்களை மறைக்கும் கர்வத்தையும் போலிநடிப்புக்களையும் நீக்கிப் பூ அரும்பு போன்ற சிறார்கள், வாழ்க்கையில் மிகச் சிறப்புடன் வாழ வழிவகை செய்து சாதனை புரிவீர்களாக.
1. அகலம் 2. மதில் 3. போலிநடிப்பு 4. பூ அரும்பு
இவ்வாறு அமைந்துள்ள பொறிக்கவிதை நல்வழி, நாலடியார், மூதுரை, திருக்குறள், வரிசையில் நாளை கல்விப்பாடத்திட்டத்தில் பதியப்படக்கூடிய ஒரு 21ம் நூற்றாண்டின் இலக்கிய வடியமாகக் காணப்படும்., இதன் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ளல் அவசியமாகும். வானொலி ஒரு பொழுதுபோக்குச் சாதனம் என்னும் நிலைமாறி இலண்டன் தமிழ் வானொலி அதிபர் நடாமோகன் அவர்கள் நிருவாகத்தில் நடைபெறும் கல்விக்கூடம் என்று அழைப்பதே சாலச்சிறந்ததாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.