• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 4 நவம்பர், 2010

    கோபம்

                                                              கோபம்


    கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும். கோபதாபங்கள் ஏற்படாத மனிதர்கள் யாருமில்லை என்று சொல்லிவிடலாம். முற்றுந்துறந்த மனிதர்கள்கூட கோபத்தால் சாபமிடுதல் யாவரும் அறிந்ததே. இக்கோப உணர்ச்சி சாந்த உணர்ச்சியின் மறுபக்கமே. திடீரென எரிச்சலை ஊட்டுகின்ற ஒரு சம்பவத்தினால்; இது மூளையில் அட்ரினலில் சுரக்கப்படும் ஒரு ஹோர்மோனினாலேயே கோபம் ஏற்படுகின்றது. கோபிக்கவே கூடாது என்று பலமுறை சிந்தித்தாலும் நம்மை அறியாமலே இரத்தநாளங்களிலே ஒரு துடிப்பை இது கொண்டுவந்துவிடுகின்றது. மூளையின் ஒரு பகுதியில் கோபத்தை அடக்க வேண்டும் என்று சொல்லி ஒரு திரவகம் சுரக்க இல்லையெனத் தூண்டிவிடும் திரவகம் அடக்கமுடியாத கோபம் கொண்டவருக்குச் சொல்லும். அப்போது இரத்தநாளங்களிலே துடிப்பை ஏற்பட கோபம் கொள்ளுகின்றார். கோபிக்க வேண்டும் என்று யாரும் எண்ணுவதில்லை. இவ் உணர்ச்சியைப் பலர் பல விதமாக வெளிக்காட்டுவார்கள். எதிரே தெரிகின்ற பொருள்களைப் போட்டு உடைப்பதும், தன்னைவிடப் பலம் குறைந்தவர்களில் தமது உணர்வுகளை வெளிப்படுத்திக்  கோபமிகுந்த வார்த்தைப் பிரயோகங்கள் செய்வதும், தாக்குவதும், மனம் அறியாது, மனதுக்கு மீறிய வார்த்தைப் பிரயோகங்களை உதிர்ப்பதும், தன்னைக் கட்டப்படுத்த முடியாது வீட்டை விட்டு வெளியேறுவதும், என இதன் பரதிபலிப்புத் தென்படும். ஆனால், இதைவிடக் கொடுமையான கோபங்களே கொலைவெறியாகத் தெறிப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இது யாரை அதிகம் தொற்றிக் கொள்ளுகின்றது என்றால், உடல் தளர்ச்சியுற்று மனத்தளர்ச்சியுற்ற ஒருவருக்கு ஒவ்வாத சில வார்த்தைப் பிரயோகங்கள் பிறர் நடவடிக்கைகள் கோபத்தை அதிகரிக்கச் செய்யும். இதைவிட பருவ வயது (றுநஉhளநட துயாச) மாற்றங்கள் இயல்பாகவே பெண்களுக்கு ஒருவகையான எரிச்சல் குணத்தையும் திடீரென உடலில் தோன்றும் மாற்றங்களால் கோப உணர்வுகளையும் கொண்டுவரும். இது தவிர்க்க முடியாததும்கூட பிள்ளைகளின் தவறான நடத்தைகளால் கூட சில குடும்பங்களில் கோபதாபங்கள் சண்டைசச்சரவுகள் ஏற்படுவதுண்டு. பெற்றோர் தமக்கு அடங்காத பிள்ளைகளைக் கோபம் மீதியினால் தண்டிக்கின்றனர். எதற்காகப் பிள்ளைகள் தவறுசெய்தார்கள் என்று ஆராய்ந்து பார்க்காமல், கையில் கிடைப்பதைக் கொண்டு அடிக்கின்றனர். இப்படிச் செய்கின்ற போது பிள்ளைகள் திருந்துவதற்கு வழி கிடைக்கப் போவதில்லை. தமது கோபம் தீருவதற்குப் பிள்ளைகள் பழிக்கடாவாகின்றனர். பிள்ளைகள் தவறுசெய்கின்ற போது அத்தவறுக்கான காரணங்களைக் கேட்டு அறிந்து அதைத் திருத்தவதற்குரிய வழிவகைகளைச் செய்வதுவே சரியான முறையாகக் காணப்படுகின்றது. பிள்ளைகளுக்குக் கொடுக்கின்ற தண்டனை பிள்ளைகளைத் திருத்துவதற்காக இருக்க வேண்டுமேயொழிய தமது கோபத்தைத் தீர்ப்பதற்காக இருத்தல் கூடாது. 

    ஒருவரின் கோபத்தைத் தவிர்ப்பதற்குரிய வழிமுறைகள்:

    1. கோபப்படுகின்ற சந்தர்ப்பத்தில் நீர் அருந்துதல் வேண்டும்.

    2. கோபம் ஏற்படுகின்ற இடத்தைவிட்டு நகர்ந்துவிடல் வேண்டும்.

    3. கோபப்படுபவர் கோப உணர்ச்சியைத் தூண்டும் வகையில் மேலும்மேலும் வார்த்தைப்   பிரயோகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும். எதிர்த்துப் பேசுதலால்  எரிச்சலே அதிகரிக்கும்.

    4. கணவன் குறிப்பறிந்து நடந்து கொள்ளும் பக்குவத்தை மனைவிமார் அறிந்திருத்தல் வேண்டும். வீட்டில் பொறுமை காக்க வேண்டியது பெண்கள் கடமையாகும்.

    5. மனதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய ஒரு சிறப்பான மருத்துவம் தியானமே. கண்களை மூடி ஒரு நாளுக்கு 5 நிமிடம் என ஆரம்பித்து மனதை ஒருநிலைப்படுத்தம் வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆழ்மனக்கட்டுப்பாடுகள் இந்தக் கோப உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வல்லமையுடையது.

    6.ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளைச் சரிவரச் செய்தால், அடுத்தவரைப் புரிந்து கொண்டு நடந்தால் கோபப்படுவதற்குச் சந்தர்ப்பம் இருக்காது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...