• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 5 டிசம்பர், 2010

    வழிகாட்டிய வரம்



    Airlankaவிமானம் ஒரு மணிநேரம் தாமதமாகத் தரையிறங்க இருக்கின்றது'. என்னும் அறிவுப்புக் கேட்டு ரவி, தன்னுடைய ஒரு வயது ஒரே மகள் ரம்யாவைத் தோளில் போட்டபடி இருக்கையொன்றில் அமர்ந்தான்.  அவன் எண்ண அலைகள்  மெல்லெனப் பின்னோக்கி நகர்ந்தன. 
          அன்று காலை அவசர யுகத்தில் ஆயிரம் துயரச் சுமைகளைச் சுமந்த வண்ணம் ஆடைகளை மாற்றி அமரச் செய்து விட்டு, அவளுக்குரிய உணவுகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான். அப்போது ரெலிபோன் மணி அலறியது. விரைந்துவந்து பதட்டத்துடன் ரிசீவரைக். காதில் வைத்தான். மருத்துவமனைத் தாதியின் குரல் கேட்டவுடன் திடுக்கிட்டு விட்டான். '' உங்கள் மனைவி உங்களுடன் அவசரமாகக் கதைக்க வேண்டுமென்று துடிக்கின்றார். உடனே மருத்துவமனைக்கு வரமுடியுமா?  என்று தனது இனிமையான குரலில் கூறிய தாதி அவனுடைய சம்மதத்தைப் பெற்றாள். அவசரஅவசரமாக சமயலறையினுள் நுழைந்தான் அடுப்பில் வைக்கப்பட்ட உணவோ எரிந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது. அடுப்பை அணைத்தான், அப்படியே எல்லாவற்றையும் போட்டபடி குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான். 
                                 குழந்தையோ பசியால் வீரிட்டது. அங்கே கண்கள் குளமாக உயிரைக் கையில் பிடித்தபடி இறுதிப்பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள், அவன் மனைவி. அழுது அடம்பிடித்த குழந்தையை வாரி அணைத்தாள். கன்னத்தில் மாறிமாறி முத்தம் கொடுத்தாள். தாயின் அணைப்பில் குழந்தை அழுகையை நிறுத்தியது. மனைவியை அணைத்தபடி மார்பில் அவளைச் சரித்தான் ரவி. நான்; உயிர் வாழ்வேன் என்னும் மடத்தனமான ஒரு நம்பிக்கையை நீங்கள், இன்னும் வைத்திருக்கின்றீர்களா?'' மெலிந்த குரலில் அவள் கேள்வி அவனுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது.  'எதற்காக இப்படி ஒரு கேள்வி.? இப்போது இது அவசியம் தானா? உனக்கு ஒன்றுமில்லை. என் இறுதி மூச்சு இருக்கும் வரை உன்னைக் காப்பாற்றாமல்  விட மாட்டேன். இப்படி எல்லாம் உன்னால் எப்படிப் பேசமுடிந்தது. நூறு வருடங்கள் உன்னோடு இணைந்து வாழவேண்டும் என்னும் ஆவலுடன் தான் உன்னைத் திருமணம் செய்தேன். ஏன் நம்பிக்கை வீண் போகாது. தைரியமாக இரு'. என்று அவளை ஆறுதல்படுத்த முனைந்தான், ரவி. 'இல்லை என்னால் முடியவில்லை. ஏதோ பயங்கரமான எண்ணமெல்லாம் வந்து என் இதயத்தைப் பிழிந்தெடுக்கின்றது. வாழவேண்டும் என்ற சிந்தனை என்னை விட்டு மெல்லமெல்ல அகன்று கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு வருடங்கள் நான் வாழ்ந்த வாழ்க்கையே நூறு வருடங்களுக்குச் சமமான பொன்னான நாள்கள். உங்களுடன் தொடர்ந்து வாழமுடியாத அபாக்கியவாதியாயினும் நான், உங்களை இந்த இரண்டு வருடங்களும் நன்றாக அறிந்து வைத்துள்ளேன். ஆனாலும், எனது உயிர் என்னை விட்டுப் பிரியும் முன் உங்களிடம் ஒரு வரம் வேண்டி நிற்கின்றேன். தருவீர்களா? ஒரு சத்தியம் செய்து தாருந்கள். Pடநயளந ' அவன் கையை இறுகப் பற்றினாள். ' என்ன அப்படி ? என்ன கேட்கப்போகின்றாய்? „ 'சத்தியம் செய்து தாருங்கள்' என்று பிடிவாதமாக அவனிடமிருந்து சத்தியவாக்குப் பெற்றாள். அவள் முகத்தில் கோடி நட்சத்திரங்கள் பிரகாசித்தன. ' என்னை இழக்கப் போகும் என் கண்மணிக்குத் தாய்ப் பாசம் அற்றுப் போதல் கூடாது. தாயாகவும் தந்தையாகவும் அவளை நீங்கள் வளர்ப்பீர்கள். என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. ஆனாலும், பெண் குழந்தை வளர்ந்த பின் தாயிடம் தன் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்வது போல்த் தந்தையிடம் பகிர்ந்து கொள்ளமாட்டாள். அத்துடன் என்னை இழந்த துயர் உங்கள் மனதில் அழியாத காயத்தை ஏற்படுத்தல் கூடாது. காலப்போக்கில் கரைந்து விடும் நினைவாதல் வேண்டும். அதற்கு மறுதாரமாக ஒரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்தல் வேண்டும். இது எனது இறுதி ஆசை. வருபவள், குழந்தை மீது பாசம் வைப்பாளோ? என்று நீங்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நம்பிக்கை தான் வாழ்க்கையின் அஸ்திவாரமே. எனக்காக, என் ஏக்கத்தைத் தீர்த்து வைக்க எங்கோ ஒரு பெண் பிறந்திருப்பாள்.  ஒரு பெண்ணுக்கு வாழ்வளியுங்கள். இது என் இறுதி ஆசை. இ;லை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். என் சூக்கும சரீரம் இதற்காக ஏங்கிக் கொண்டிருக்கும். என்ன சொல்லுகின்றீர்கள். சொல்லுங்கள் சொல்லுங்கள்' அவன் கண்கள் குளமாகின. இதயத்தை ஆயிரம் சம்மட்டி கொண்டு தாக்குவது போன்ற வேதனை. „ என்னை விட்டுப் போவதென்றே முடிவெடுத்து விட்டாயா? இப்படியான ஒரு சோதனை எனக்கு வரவேண்டுமா?  நீ இருக்கும் இடத்தில் ,வேறு ஒரு பெண்ணை வைத்துப் பார்க்க எப்படி என்மனம் இடம் கொடுக்கும்.' அவன் பேசி முடிக்கவில்லை. அவள் மூச்சு நின்று விட்டது. பேச்சும் அடங்கிவிட்டது. வாக்குறுதி வாங்கிய அவள் கரம்,  ரவி; கரங்களுக்குள் இறுக்கமாய்  அடங்கியிருந்தது. தனது கரங்களை ஒரு தடவை வெறித்துப் பார்த்தான். கண்களின் ஓரம் வடிந்த கண்ணீரை ஆட்காட்டி விரலால் தட்டிவிட்டபடி நிமிர்ந்தான் ரவி. 

       தான் பிறந்த மண்ணில்; வேரிற் பழுத்த பலாவாய் கோரிக்கையற்றுச் சீதனக் கொடுமையாலும், அந்தஸ்து வெறியாலும் முற்றிப்பழுத்த பலாவாய் நோக்கியும் நோக்காமலும் பருவம் கடந்து, திருமணம் காணவொண்ணாது இருந்த பேரிளம் பெண் தான் ரதி. விமானம் மூலம் தரை இறங்கிய அவள், பயணிகளிடையே வந்து கொண்டிருந்தாள். சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றவும் அவளை எதிர்கொண்டான் ரவி. குழந்தையைக் கண்ட அவள் தன் இரு கரங்களையும் குழந்தையை நோக்கி நீட்டினாள். தந்தையையும் அவளையும் மாறிமாறிப் பார்த்த குழந்தை அவளுடைய கையைத் தட்டிவிட்டபடி தந்தையின் தோளில் சாய்ந்தது. குழந்தையின் கன்னத்தை வருடியபடி ஒருதடவை முத்தம் கொடுத்துக் கண்களைச் சிமிட்டியபடி மீண்டும் கைகளை நீட்டினாள். புன்னகை புரிந்த வண்ணம் குழந்தை அவள் கரங்களுக்குத் தாவியது. அவன் விபரங்கள் முழுவதுமாக அறிந்த ரதி, இனிமேல் உங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்று, உங்கள் குறைகளைத் தீர்க்கும் ஒரு உண்மையான மனைவியாக வாழ்வேன் என்பதுபோல் குழந்தையைத் தோளில் போட்டபடி புன்முறுவலுடன் ரவியை நோக்கினாள். ரவி தனது இடது கரத்தை இறுகப் பற்றினான். அக்கரத்தினுள் அவள் மனைவியின் கரம் இணைந்தது. மறுகரத்தை எடுத்துத் தன் வாழ்க்கைக்குத் துணைப்போகும் ரதியின் கரங்களைப் பற்றினான். தன் மனைவியின் ஆசை நிறைவேறியது. ஒரு அபலைப்பெண் வாழ்வு பெறப் போகின்றாள். இச்சமுதாயம் அவனைப் பற்றி ஆயிரம் சொல்லட்டும். அவனுடைய மனச்சாட்சி என்றும் நன்றே சொல்லும்.  
           

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...