• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 28 டிசம்பர், 2010

    புலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங்கம் 2 )

        ( அங்கம் 2 )

                                                           நேரக்கட்டப்பாடு:

    நம்மைப் பற்றியே நாம் சிந்திப்பதால், அடுத்தவர் நிலைமைள் புரிவதில்லை. புரிய விரும்புவதும் இல்லை. பொன்னான நேரம் மண்ணாகிப் போகலாமா! ஐரோப்பியர்களின் விழாக்கள் 3 மணிக்கு ஆரம்பம் என அழைப்பிதலில் குறிக்கப்பட்டிருந்தால், சரியாக 3 மணிக்கு விழாக்கள் ஆரம்பமாகும். யார் வருகையையும் பொருட்படுத்தப் போவதில்லை. வீடுகளுக்கு வருவதாக இருந்தாலும் குறிக்கப்பட்ட நேரத்திற்கு அழைப்புமணி ஒலிக்கும். எங்கிருந்து இந்த நேர ஒழுங்கைக் கற்றுக் கொண்டார்கள். தமது மனம்தானே பாடம் நடத்தியது. ஏன் நமது தமிழர்கள் அதுபற்றிச் சிந்திப்பதில்லை? 3 மணிக்கு விழா ஆரம்பம் எனக் குறிக்கப்பட்டிருந்தால், அவ்விழா ஆரம்பிக்கச் சரியாக 5 மணியாகும். நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் முதல் நிகழ்ச்சியை விரும்பார். ஏனெனில் பார்வையாளர் பார்வைக்குத் தமது நிகழ்ச்சி உட்படாது என்ற எண்ணமே. ஏனெனில், பார்வையாளர்கள் வந்தடையும் நேரம் 6 மணியாகிவிடுமே. நிகழ்ச்சி அமைப்பாளர்களும் அதற்கேற்ப ஆமோதித்துவிடுவார்கள். இப்படியே நேரம் தாமதமாகி இரவு 1 மணி தாண்டி விழாக்கள் முடிவுறும். இதற்கிடையில், குழந்தைகளின் அழுகை, பொறுமையற்ற ஆத்திரம், பார்வையாளர்களின் சொந்தக்கதை, நாட்டுக்கதை, அடுத்தவர் வீட்டுக்கதை பற்றிய அளவளாவல், விற்பனைப் பொருள்களின் வியாபாரம், இதற்காக இடையிடையே நடைபயிலல், உணவுப் பொருள்களை உண்டு கொண்டு விழாக்களைப் பார்த்தல், மேடையை அலங்கரிக்கின்ற நிகழ்ச்சிகளுக்குக் கைதட்டி ஊக்கப்படுத்தும் விருப்பமின்மை. இவ்வாறான நிலையில் விழா மண்டபத்தைப் பார்க்கும் போது ஒழுங்கற்ற தோற்றமாய்க் காட்சியளிக்கும். அழகாய் ஆடம்பரமாய் ஆரம்பம் கண்ட பார்வையாளர்கள் இறுதியில் களைத்து அலுத்துச் சோர்ந்து வீடு போய்ச் சேர்வார்கள். 30 வருடங்கள் கடந்தும் ஐரோப்பிய மண்ணில் வாழும் தமிழர்கள் இன்னும் நிகழ்ச்சி விழா ஒழுங்குபடுத்தலைக் கற்கவில்லையனால், எப்போது கற்கப் போகின்றார்கள். 

    1. அதிகம் நிகழ்ச்சிகளுக்கு இடம் தரக்கூடாது
    2. குறிக்கப்பட்ட நேரத்திற்கு விழா ஆரம்பிக்க வேண்டும். முதல்   
            நிகழ்ச்சியாளர் வருகை தரவில்லையெனில், அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட  
            வேண்டும். 
    3. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நேரம் முன்னமே நிகழ்ச்சியாளர்களுக்கு 
            குறிப்பிட்டுக் கூறியிருக்க வேண்டும். 
    4. விழாவிற்கான நேரம் 3, 4 மணித்தியாளங்களை மீறக்கூடாது. 
    5. நிகழ்ச்சிகள் நடைபெறும் போது உணவுப்பொருள்கள் விற்பனை 
            நடைபெறக் கூடாது
    6. தரமான நிகழ்ச்சிகளைத் தெரிவு செய்ய வேண்டும். பயில்பவர்கள் 
             யாவருக்கும நிகழ்ச்சி கொடுக்க வேண்டுமானால், கலைகளைப் 
             பயிற்றுவிக்கும் ஆசிரியாகள் ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்து 
            பெற்றோர்களை மாத்திரம் அழைத்து அவாகளின் பிளஇளைகளின் 
           நிகழ்ச்சிகளைக் காண்பிக்கலாம். ஐரோப்பியர்களின் இசைக்கல்லூரிகளில்  
        அவ்வாறே நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நடத்துகின்றார்கள். குறிக்கப்பட்ட 
         நேரம் கொடுக்கப்பட்டிருக்கும்., பார்வையாளர்கள் தொகை குறைவாக  
          இருக்கும். அமைதி கடைப்பிடிக்கப்படும். ஒழுங்குமுறை பேணப்படும்.  
         அற்புதமான விழாக் கண்ட நிகழ்ச்சியுடன் வீடு திரும்பலாம்.
    7. பலர் சேர்ந்து ஆலோசனை செய்து விழாக்களை ஒழுங்கமைக்கலாம்.

    பார்வையாளர்கள் பற்றிச் சிந்தித்து நிகழ்ச்சியில் ஈடுபாட்டைக் குறைக்காத வகையில் விழாக்கள் நடைபெறும் போது இடம்பெற்ற கலைப்படைப்புக்கள் மனதில் நின்று நிலைக்கும்.

    1 கருத்து:

    1. மிக நல்ல சிந்தனை . உலகம் என்று திருந்துமென எதிர் பார்ப்போம்.
      Vetha. Elangathilakam.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...