• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 12 அக்டோபர், 2010

    என் கேள்விக்கு என்ன பதில்

    காட்சி என்ற பெயரில் கலாச்சாரச் சீர்கேடுகள் காட்டுகின்ற தொலைக்காட்சி கண்டு ஒரு சின்ன உள்ளத்தில் எழுந்த கேள்விகள் 

              என் கேள்விக்கு என்ன பதில்


    தமிழகத் தாத்தா!  
                
    உங்களை நம்பினேன். இன்று கேட்கிறேன். என் கேள்விக்கு என்ன பதில். இரட்டைக் கலாச்சாரம் மத்தியில் தமிழச்சியாய் ஜேர்மனி மண்ணில் வாழுகின்ற ஒரு சின்னவள் யான். சிரந்தாழ்த்தி சில கேள்விகள் உங்கள் காதுகளுக்குச் சிந்துகிறேன்.     மனங்கொள்ள முறையாய் விடை நீங்கள் தர வேண்டும். என் தாய் என்னைத் தமிழ் கலாச்சாரத்தில் வளர்க்கின்றாள் என்று தான் நினைக்கின்றேன். உங்கள் ஆதரவாளர்களின் தொலைக்காட்சி என்று சொல்லப்படுகின்ற கலைஞர் தொலைக்காட்சியே முதல்முதல் என் வீடு தேடி வந்த ஒலிஒளிக் காட்சி. தமிழர் உணவு, உடை, மொழி, கலாச்சாரம் கற்க இந்த ஊடகமும் ஒரு கல்விக்கூடமாக அமையும். என்று என் தந்தையும் இணைந்தே இணைப்பைத் தந்தார். தமிழ் மழை கொட்டும் உங்கள் வசனநடையில் மகிழ்ந்தவர்கள் அல்லவா என் பெற்றோர். உங்கள் பொக்கை வாயிலிருந்து புறப்பட்டு வந்த தமிழ் கண்டு புளகாங்கிதம் கொள்வோம். இன்று உங்கள் நாட்டில் உங்கள் ஆட்சியில் தமிழகம் இருந்து புறப்பட்டுச் செல்லும் தமிழ் கலாசாரம் கண்டு மனம் மிக வருந்துகிறோம். 
                 

    தாத்தா! கோடையென்ன, மாரியென்ன போர்த்திக்கட்டிய உடையில் நான் வெளிவருவேன். கேட்டால், தமிழர் கலாசாரம் என்று ஆடையில் அடக்கம் போதித்தாள் என்தாய். அந்நிய ஆடவர் கைபடும்போது அருவருப்பு உணர்ச்சி தோன்ற வேண்டும். என்று கற்பு மொழி ஊட்டினாள் என் அன்னை. இத்துடனே உங்கள் தொலைக்காட்சி போட்டார் என் தந்தை. ஏங்கி விட்டோம். விநாயகசதுஷ்டி என்றால் தலைமுழுகித் தெய்வதரிசனம் காண ஆலயம் செல்வது வழக்கம். அந்தக் காட்சிகள் காணலாம் இந்திய மண்ணிலே. இந்த ஆலய வழிபாட்டின் மகிமைதனை மனங்கனியக் காணென்று தொலைக்காட்சி முன் இருத்தினர் என் இனிய பெற்றோர். ஆனால் நடிகநடிகையர் ஆடைகளுடன் அங்கங்கள் எல்லாம் அங்கிங்கெல்லாம் தென்படப் பேட்டி என்ற பெயரில் போட்டுவந்த ஆடைகளைக் கண்டபோது எனக்குள் தோன்றிய கேள்வி அம்மா எனக்கு இங்கே சொன்னதெல்லாம் பொய்யா தாத்தா? தமிழ் கலாச்சாரத்தில் ஊறிய தனித்துவமான நாடு இந்தியா என்று என் அம்மா சொன்னதெல்லாம் பொய்யா தாத்தா? 
                
    அரசியல்வாதியாய் யான் உங்கள் தோற்றத்தைக் காணவில்லை. செந்தமிழ்க் காவலராய் சிந்தையில் உங்களைக் கொண்டுள்ளேன். உங்கள் முன்னே கால்நீட்டி கால்நீட்டிக் காட்சி பொம்மைகளாய் துண்டுகட்டி மேடைகளில் தொங்கி ஆடும் மங்கையர்களைக் கறுப்புக் கண்ணாடியூடாக நீங்கள் கண்டு கொண்டிருப்பதைப் பார்த்த போது, உங்களைப் பற்றி அம்மா எனக்குச் சொன்னதெல்லாம் பொய்யா  என்று சந்தேகிக்கின்றேன். 
                
    மக்கள் உள்ளங்களில் நல்ல விடயங்களைப் பதிக்கும் நல்ல மாயப் பொருள் சினிமா என்பார்களே. அந்நிய நாட்டில் தமிழர் கலாச்சாரத்துடன் தமது வாரிசுகளை வளர்க்கத் துடிக்கும் என் பெற்றோர் போன்றோர்களின் எண்ணங்களில் மண்ணைத் தூவும் கைமருந்தாக அல்லவா இவ்வாறான தொலைக்காட்சிகள் இருக்கிறன. நாம் நாமாக வாழவேண்டும் தாத்தா. அந்நியமோகம் நமக்கு வேண்டாம் தாத்தா. இந்த மண்ணில் அந்நிய கலாச்சாரத்தின் அருவருப்புகளைக் கண்டு கொண்டிருக்கும் எம் போன்ற வளர் தலைமறைகளுக்கு நல்ல மனப்பதிவுகள் கிடைக்காதா?
                  
    அருவருப்பான காட்சிகளைக் குடும்பமாய் கண்டுகழிக்க வழி செய்த தாத்தாவே! கண்மூடி நான் இருக்க இந்தியமண்ணில் நான் பிறக்கவில்லை. ஜேர்மன் மண்ணிலே பிறந்து வாழும் ஒரு தமிழிச்சி. இக்காட்சிகளை இன்னும் நாம் காணத்தான் வேண்டுமா? கேட்பேன், கேட்பேன் திரும்பத் திரும்பக் கேட்பேன். இத்தனை விடயங்கள் தவிர இன்னும் பல என் நெஞ்சில் இன்னல்கள் செய்கின்றன. மீண்டும் உங்கள் பதில் கண்டு தொடரும். 

    இவள் 
    தமிழ்மகள்

    3 கருத்துகள்:

    1. கெளரி தங்களின் ஆதங்கம் அருமை.

      ஆடை அதைபற்றிசொன்னால் அடிக்கவுல்லவாராகா. முழுமையான ஆடையுடன் வலம்வருவது இன்றைகாலத்து பெரும்மக்களுக்கு பிடிப்பதேயில்லை நாகரீகமாம்..

      உங்கள் தளம் வெளில் தெரிய தமிழ்மணம் தமிலிஸில் இணையுங்கள் கெளரி..

      பதிலளிநீக்கு
    2. // அருவருப்பான காட்சிகளைக் குடும்பமாய் கண்டுகழிக்க வழி செய்த தாத்தாவே! கண்மூடி நான் இருக்க இந்தியமண்ணில் நான் பிறக்கவில்லை. ஜேர்மன் மண்ணிலே பிறந்து வாழும் ஒரு தமிழிச்சி. இக்காட்சிகளை இன்னும் நாம் காணத்தான் வேண்டுமா? //

      சரியான சாட்டையடி!

      //கேட்பேன், கேட்பேன் திரும்பத் திரும்பக் கேட்பேன்//

      நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் பதில் வராது.
      உங்களுக்கு பதில் கொடுக்கின்ற நேரத்தை நாங்க மானாட மயிலாட பார்க்க பயன்படுத்திப்போம்

      பதிலளிநீக்கு
    3. தமிழ் பண்பாட்டோடு தாய் வளர்க்க
      தமிழ் பண்பாடு சீர்கெட்டுப் போவதாய்
      சேய் சொல்லும் செய்தியை ஏற்கிறேன்...
      பண்பாட்டைப் பேண வேண்டிய ஊடகங்கள்
      பண்பாட்டையே சீர்கெடுக்கையிலே
      எப்படித் தான் பொறுத்திருக்க முடியும்!

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...