• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 18 ஏப்ரல், 2011

    சுகம் விசாரித்தல்

                               
    இருமனங்கள் இணையும் போது இதயம் நுழை அன்பு நிலைக்க வேண்டும். தாலி தாங்க மனம் விழைந்த போது தாங்கும் மனம் சேரவேண்டும். நாடுகடந்து வந்தபோது தேடிவரும் பிரச்சினைகள் ஓடிச்செல்ல வழி காணும் மனமும் வலுக்க வேண்டும். இயந்திர உலகு, நிம்மதியற்ற வாழ்க்கை. இப்படித்தான் வாழவேண்டும் என்ற துடிப்பிற்காய் ஓயாத உழைப்பு. கணவன் படி தாண்டுவது காதல் மனையாளைக் களிப்பில் ஆழ்த்த வேண்டும் என்ற அவாவும் ஒரு காரணமாக அமைகின்றது. உரிமையுள்ள இடத்திலேயே கவலை, களைப்பு, கோபம் அனைத்தும் காட்டமுடியும். ஆடிக்களைத்த பம்பரம் வீட்டில் ஓய்வு காண வேண்டும் அல்லவா! இதை உணர்ந்து கொள்ளாப் பெண் வீட்டில் உறைவதன் அர்த்தம் தான் யாதோ! அடுத்தவரைப் புரிந்து வளைந்து சமாளித்துக் கொள்ளும் பக்குவம் இல்லாவிட்டால், மனையை ஆளும் தகுதி அவளுக்கு ஏது? 

    ஆம், அவள் கணவனுடன் வாழ வந்த இளம்பெண் உறவுகள் சொந்தங்கள் சுகம் விசாரிக்கத் தூக்கும் தொலைபேசி அவள் உள்வீட்டுப் பூசலுக்குத் தூபம் போடும் அழைப்பாகவே இருக்கும். சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்துவிடும் சுகம் விசாரிப்பாய் இருக்கும். இப்படி அவர் எனக்குப் பேசிவிட்டார். என்றால், அப்படி அவர் எப்படிப் பேசமுடியும்.? நீ என்ன பேசாமடந்தையா? அடங்கிப்போக நீ என்ன அடிமை இல்லையே. இடத்தைக் கொடுத்துவிடாதே. உன்னைக் காலில் போட்டு மிதித்துவிடுவார். என்று அக்கறையான புத்திமதி. எப்படி சுகமா? என்றே அழைப்பு வரும். ஆனால், அது தூண்டித்தூண்டிப் பற்றவைக்கும் நெருப்பாகப் போய்விடும். அநுபவசாலிகள், வயதுக்கு வந்த பெரியவர்கள் ஒரு இளங்குடும்பத்தை வாழவைப்பதற்காகவோ அறிவுரை கூறுவர்? வாழ்வின் அழிவுக்காகவோ அறிவுரை கூறுவர்? கூடிவாழும் கூட்டைக் குலைப்பது பாவமல்லவா? இப்படியும் சில சூத்திரதாரிகளாலேயே மனிதனும் மிருகமாகின்றான். குடும்பபந்தம் உறுதியானாலேயே எதிர்கால உலகம் உருவாகும். இல்லையென்றால், ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதன் அர்த்தம் தான் என்ன? ஆணையும் பெண்ணையும் படைத்ததன் காரணம்தான் என்ன? தொலைபேசியின் இலவச இணைப்பு நன்றாகத் தொழிற்படுகிறதப்போ!!



    1 கருத்து:

    1. Sujatha Anton ‎''சுகம் விசாரிப்பு இலவசமான தொலைபேசி தொல்லை'' மனிதன்
      சும்மா இருந்தாலும் சங்கு ஊதிக்கெடுப்பான்.இலவசம்......பாவத்திற்கு பரிகாரம் தேடுவது அடுத்தவரை தொல்லைப்படுத்தி விட்டு சுகம் தேடும் மனிதர்கள்
      குடும்ப விளக்கு கணவன் மனைவி ஒற்றுமை பற்றிய விவாதங்களிற்கு அறிவுரை கூறுவது ஏதோ வாழ்க்கையில் இவர்கள் மட்டும் வெற்றி கண்ட மனிதர்களாக....இது சுகமான விசாரிப்பு?????????

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...