ஒரு வயதான மூதாட்டி காதலர் தினம் பற்றிய தனது கருத்தைக் கூறவதாய் இக்கவிதை வடிக்கப்பட்டுள்ளது.
காதலர் தினமாமே
கேட்டேளா சங்கதி,காதலர் தினமாமே
கேட்டறிந்த செய்தியைத்தான் சொல்லவந்தேன் நானுமிங்கு
போட்டுப்போட்டு மறைச்சு வச்ச காதலுக்குத் திருவிழா
போடியாரு பிள்ளை சொன்ன புதினமிது புதுக்கதைதான்
பாதிரியார் வாலண்டைனால் மாறிவிட்ட சட்டத்தால
பொதுசனங்கள் கொண்டாடுதாம் வாலண்டைன் நாளையும்
சொக்குலட்டும் ரோசாப்பூவும் சொகுசா விலைப்போகுதாம் -என்
சக்களத்தி மககூட சரசமாடப் போறாளாம்
வெக்கக்கேடு இதால ரத்தஓட்டமும் சிறக்குமாம்
சொக்குலட்டுக்குள்ள உள்ள அன்ரி அசிட்டால
பக்குப்பக்கென்று அடிக்கிற இதயமும் சீரா ஓடுமாம்
விஞ்ஞானி சொன்னதாகக் கதையும் அடிபடுதாம்
பத்தைக்குள்ள பதுங்கியிருந்து பண்ணிய காதலெல்லாம்
வித்தைகாட்டி கிளப்பெல்லாம் பேயாட்டம் ஆடுதாம்
சின்னஞ்சிறுசுகளும் தலையைச் சிலுப்பிச்சிலுப்பி; ஆடுதாம்
என்ன புதினமோ இந்தக் காலக்கோலமிது - இனி
என்னஎன்ன நாளுந்தான் வந்து தொலையப்போகுதோ
காதலுந்தான் புனிதமென்டால் தினமொன்று தேவையா
காதலிக்குப் பரிசுகளும் தந்துதவ வேண்டுமா
நாளுந்தான் காதலருக்கு நல்ல தினந்தானே
எக்கேடு கெட்டால் நமக்கென்ன
வாறன்புள்ள நானுந்தான் சொக்குலட்டு வாங்கவேணும்
என்ர புருஷனுக்கும் கொடுக்க வேண்டும்
காதலர் தினமாமே
பதிலளிநீக்குவாறன்புள்ள நானுந்தான் சொக்குலட்டு வாங்கவேணும்
என்ர புருஷனுக்கும் கொடுக்க வேண்டும்
ha ha ha