• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 2 பிப்ரவரி, 2011

    வெள்ளை அங்கிக்குள் கரையும் பருவம்



                   உடல் உழைப்புக்கு ஒத்துடம் போடும் படுக்கை, உன்னைக் காத்து விரிந்துள்ளேனென்று வித்யாவிற்கு அழைப்பு விடுத்தது. தொப்பென்று படுக்கையில் விழுந்தாள். இறுக்கக் கண்களை மூடினாள். உடலும் விழியும் அவளுக்கு ஒன்றாக நன்றி கூறின. அவள் உத்தரவு போட்டு அவள் கண்கள் உறங்கி நீண்ட நாட்களாயின. மூடிய கண்களை மெல்லத் திறந்தாள். என்றுமே தன்னோடு ஒட்டிக் கொண்டிருக்கும், அந்த வெள்ளை அங்கி அவளுக்கு அச்சுறுத்தலாகவும் ஆதரவாகவும் அவளைப் பார்த்தது. ஆடைப் பையில் ஒளிந்து கொள்ளும் அந்த வட்டத் தலைக் கெட்டிக்காரன், தலையை மட்டும் வெளியே தொங்கப் போட்டிருந்தான். எத்தனை இதயத் துடிப்புக்களை, இதுவரை இதனோடு இணைந்து இவள் கணக்கிட்டிருப்பாள். ஆனால், இவள் இதயத்தின் வலிக்கு தைலமிட்டுத் துணைவர துணைவர் யாருமில்லை. அருகே இருந்த நாள்காட்டியில் கண்கள் பதிந்தன. அதுவும் 30 வருடங்கள் அவள் வாழ்ந்த வாழ்க்கையை அத்தாட்சிப்படுத்தியது. நோயாளர்களுக்கு அவள் தெய்வம், அறிவு அவளோடு அளவுகடந்து சொந்தம் கொண்டாடியது. பொறுமைக்கு அவள் இலக்கணம் அதனால்த் தானோ வதுவையும் வணங்கி விடைபெற்றது. 
                  
                                 வாசல் அழைப்புமணி கேட்டு பலகணியூடு பார்வையைச் செலுத்தினாள். அங்கு ஆடம்பரக் காரில் வந்திறங்கி, வாசல் கதவருகே அவள் பால்ய சிநேகிதி காத்திருந்தாள். ஓடிச் சென்று கதவைத் திறந்தாள். „ நாளைக்கு உனக்கு கரடட னயல னுரவல அம்மாவைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குத் தான் வரவேண்டும். அதனால் இன்றே உனது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தேன்'' என்றாள். யுரளடிடைனரபெ (பல்கலைக்கழகம் செல்லாது, ஏதாவது ஒரு வேலைக்கான கல்வியைக் கற்றல்) முடித்து சிறப்பான ஒரு தொழிலில் இணைந்து கைநிறையப் பணமும், கண்ணிறைந்த கணவனும் கலகலப்பான இரண்டு பிள்ளைச் செல்வங்களும் பெற்று ஒரு பூரண வாழ்வு வாழ்பவள் தான், அவள். 'உனக்கு வயதோ 30. இப்படி எத்தனை காலம் வாழப் போகின்றாய். வாழ்க்கை ஒரு முறைதான். அதுவும் வாழத்தான். பெற்றவர் மனவிருப்பப்படி மருத்துவத்துறை பயின்றாய். உன் தரத்திற்கு ஒருவரைத் தேடித்தேடி உனது பெற்றோரும் ஓய்ந்து விட்டனர். இப்படி எத்தனை காலம் வாழப்போகின்றாய். உனக்காக நீ வாழ்வது எப்போது? தோழியின் வார்த்தைகளின் அநுதாபம், அவள் வாய்ப்பூட்டை உடைத்தது. 16 வயதில் நான் யுரளடிடைனரபெ செய்யப் போயிருந்தேனேயானால், இன்று நானும் உன்னைப்போல் சிறப்பாய் வாழ்ந்திருப்பேன். 7 வருடங்கள் பல்கலைக்கழகத்தில் பயின்றும் என்ன பலனைக் கண்டேன். பருவத்தை இழந்தேன். படிப்புக்கேற்ற பணப்புழக்கமுமற்ற நிலையிலல்லவா இன்று நான் வாழ்கின்றேன். காதலுக்குப் பச்சைக் கொடியை எனது பெற்றோர் காட்டுகின்ற இப்போது நான் அந்தப் பருவத்தை இழந்து விட்டேன். காதல் என் பெற்றோருக்கு அப்போது கசத்தது. இப்போது இனிக்கிறது. ஆனால், நானோ அதைப் பற்றிச் சிந்திக்கும் நேரமற்ற சிறைப்பட்சி. நாள்கள் மலர்வதும் மறைவதும் என் எண்ணத்தில் இடம் பிடிக்காமலே நடைபெறுகின்றன. நான் கண் அயர்ந்தால், என் கவலையீனத்திற்குப் பழியாவது ஆருயிர்கள். வித்யாவின் விரக்தியான பேச்சுக்கு இடங் கெடுக்காத அவள் தோழியும் 'வித்யா உன்னால் பல உயிர்கள் வாழுகின்றன. ஆண்டவனுக்கு அடுத்தபடியான தொழிலில் நீ ஈடுபட்டிருக்கின்றாய். உன் திறமைக்குப் பொருத்தமானதும் இத்தொழிலேதான்'' என்றாள். ' உன் வார்த்தைகள் எனக்கு விசிறியாகலாம். நிரந்தரத் தீர்வாகாது. எனது பிடித்த துறையை ஒறுத்து இதை ஏற்றும், ஏற்ற வருமானமோ, ஏற்ற வாழ்வோ எதுவுமற்று வாழவேண்டிய வயதில் வாழ்க்கையைச் சுவைக்க முடியாது வாழும் என் போன்ற பெண்களைப் பெற்றவர்கள், சிந்திக்க வேண்டியது, ஆசாபாசங்கள் எல்லோருக்கும் உண்டு. வாழ்க்கை வாழ்வதற்கே. சென்ற நாள்கள் திரும்பி வருவதும் இல்லை, நிலையாய் நிற்பதும் இல்லை. பெற்றோர் திணிப்புக்களை பிள்ளைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உலகஅறிவு பிள்ளைகளுக்கும் உண்டு என்று நெஞ்சில் நினைக்க வேண்டும்'' என்று கூறி ஓரக்கண்ணில் வடியும் நீரைச் சுண்டு விரலால் சுண்டி விட்டாள். 

    வாழ்வியல் இலக்கியங்கள் ஒவ்வொன்றும், புலம்பெயர்வின் கல்வெட்டுக்கள்  

    2 கருத்துகள்:

    1. வாழ்வியல் இலக்கியங்கள் ஒவ்வொன்றும், புலம்பெயர்வின் கல்வெட்டுக்கள்

      சிறப்பான பதிவு நன்றி

      பதிலளிநீக்கு
    2. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா25 பிப்ரவரி, 2011 அன்று 6:07 AM

      மிகவும் அற்புதமான கல்வெட்டுக்கள்!!
      வாழ்த்துக்கள்!!

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...