• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 5 பிப்ரவரி, 2011

    தீயை அணைத்ததனால், தீயும் என் உள்ளம்


        
           
         காலில் ஊற்றிய காய்ச்சிய பாலால் கதறியழுதான் கவியழகன்> தன் வேதனை தீர வேண்டுமென வைத்தியரை விரைந்து கண்டான்> தன் நோவதனைத் தீர்க்க வழி தானே தேடிக் கணடு கொண்;டான். எம்நோய் தீர்க்க பிறரைத் தூண்டல் வன்நோயாகுமென வள்ளுவர் வாய்மொழி கூறாதிடினும்> எமக்காய் ஓர் தமிழன் தன் உடல் எரிந்து மாண்டான். அவன் இழப்பது பெற்ற இணையும்> உறவும் இழந்தது இழந்ததே. அன்றும்> இன்றும் அத்துணையை ஈடு செய்திட யாரால் இயலும். அத் தீயின் வேதனை எப்படித் தாங்கியிருப்பான். எப்படித் துடித்திருப்பான். நினைக்க நினைக்க நெஞ்சமும் உடலும் இணைந்தே எரிகிறதே. அடுத்தவர் வலியை> தீயை நாமும் அணைத்துப் பார்த்தாலே புரியும.; அவரவர் வேதனையை அளக்கவும் முடியும். அன்றைய நாளுக்காய் இரங்கல் பாடி> அடுத்தநாளுக்கு காவலன் திரைப்படம் பார்க்க விரைந்திடுவார்> புலம்பெயர்வில் தமிழர். வீரவார்த்தை பேசுதல் மூலம் விரைந்து பலர் வாழ்வுக்குத் தீயை மூட்டி வதிவிட உரிமை புலம்பெயர்வில் பெறுதல் வாழ்க்கை முறையாமோ?; 
          அடுத்தவர் குடும்பம் அழித்து என் குடும்பம் இன்பம் காணல் அகோரக்குணம்.
          யாருக்காகவும் யாரும் வேதனைப்பட்டு இறப்பது வேதனைக்குரிய விடயம்.
          தன்னைவருத்தி இறைவனிடம் வரம் கேட்கும் பக்தியைப் பழிப்பது பகுத்தறிவு
          தன்னை வருத்தி இறப்பது தாங்கமுடியாத சோகம்.
    இப்படி ஒரு நிகழ்வு கண்டு> இன்னும் ஒரு நிகழ்வு இப்படி ஏற்படாதிருக்க கடிந்துரைத்தல் கட்டாயக் கடமை அல்லவா! வீரன், தமிழுக்காய் தன்னை மாய்த்தான் என்று புகழ்துரைத்தல்> பலரையும் இவ்வழி திருப்பும் மாய வார்த்தை அல்லவா! அன்று கூழுக்கும், பொன் முடிச்சுக்கும் புலவர் புகழ்ந்து பாடி மன்னர் வீரத்தை மூட்டினார்கள். இதனால்> பல பெண்கள் தாரமிழந்தார்கள். அழகான வாழ்க்கை, அற்புதமான இயற்கை, புதியபுதிய கண்டுபிடிப்புக்கள். இவையெல்லாம் இழந்து இளமையில் மனிதன் மண்ணுக்கு இரையாகத்தானா, பத்து மதங்கள் தாய்> தன் வயிறு கனக்கத் தாங்கி, இடுப்புவலிக்கப் பிள்ளையை வெளிக் கொண்டுவந்து, தன் உணவு ஒறுத்து தன் பிள்ளைக்கு ஊட்டி வளர்த்தெடுக்கின்றாள். சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவசர புத்தியால் அறிவிழக்க் கூடாது. பிறரைப் பற்றிச் சிந்திக்கும் போது, முதலில் நான் எப்படி என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனது செய்கையால் வரவிருக்கின்ற பாதிப்பு என்ன? என் பிறப்பு வளர்ப்பு இவ்வளவு தானா! என்று எண்ணிப் பார்க்க வேண்டும். திடீரென எடுக்கும் முடிவானது எப்போதும் சிறப்பாக இருப்பதில்லை. ஒன்றைப் பலமுறை சிந்தித்துப் பார்த்தே முடிவுகளைத் தீர்மானிக்க வேண்டும். என்னைப் பற்றிச் சிந்திக்கும் போது எதிரியின் நிலையில் நின்றும் சிந்திக்கும் பக்குவம் வளர வேண்டும். அப்போதுதான் சரிபிழை பகுத்துப் பார்க்கும் பக்குவம் ஏற்படும். யாராவது அப்படிச் செய்கின்றோமா? எதிரியை எதிரியாகத் தானே பார்க்கின்றோம். அவனும் மனிதன் என்பதை மறந்து விடுகின்றோமே. அவனுள் மறைந்திருக்கும் மனிதக்குணத்தை வெளியே கொண்டுவர எத்தனை பேர் முயற்சிக்கின்றோம். ஆவேசத்தால் ஆவது என்ன? ஒருமுறை எமது விரலை, நாமே தீக்குள் திணித்துப் பார்ப்போமா? அப்போது புரியும் தணலின் வேதனை. எமது பிள்ளைகள் பல்கலையும் பயிலவேண்டும், பலவித விற்றமின் உணவுகள் உண்ணவேண்டும்> வாகனத்தில் பிரயாணம் செய்துகொண்டே திரைப்படத்தை இரசிக்கவேண்டும் குடும்பமாய்க் குதூகலக்கவேண்டும் என்று எண்ணுகின்றோம் அல்லவா? அதேபோன்றே> அனைத்துக் குழந்தைகளும் சந்தோசத்தை அநுபவிக்கவேண்டும்> பெற்றோருடன் ஒன்றாக வாழவேண்டும்> அமைதியை நாடவேண்டும் என்று ஒவ்வொரு கணமும் சிந்திப்போம். தொடரும் வாழ்க்கைப் பயணத்தை இடையில் முடிக்கும் தீர்க்கமான முடிவுக்கு முட்டுக்கட்டை போடுவோம். 
          எல்லோரும் வாழவேண்டும். அதுவும் நன்றே வாழவேண்டும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...