இதயத்தைப் பிழிந்தெடுத்த கண்ணீர்த்துளிகளைத் தேக்கி வைத்த தாங்கியாய் விழிகள். அவை நாளும்நாளும் பொழுதுகளும் வடித்த வண்ணம் தொடரும் கதையாய்த் தொடர்ந்து கொண்டிருந்தது மீரா வாழ்வு. 'என்னிடம் ஏன் இவர் பற்றி மறைத்தார்கள். உண்மைக்கதை கூறியிருந்திருந்தால் இங்கு இவருக்குத் தாரமாய் வந்து தாரைதாரையாய் வார்க்க கண்ணீரை மட்டும் சேமித்து வைத்திருப்பேனா? சொர்க்கம் என் பிறந்தகம். அதைவிட்டு இந்த நரக வாழ்க்கையில் விழுந்திருப்பேனா?''துடிக்கும் அவள் இதயம் நாளும் துடிப்புடன் கேட்கும் கேள்விகள் இவை. சுதன் சுமப்பதெல்லாம் சந்தேகம். மட்டுமே. ஜேர்மனி மண்ணில் காலடி வைத்தது அவனுக்கு யோகம். உடல் வளைத்துத் தொழில் செய்தறியாத தேகமானது உரம் கண்டது அதிகம். சும்மா இருக்கும் உடல் தலைமையகம் தொழில் இல்லாதவர்க்கு எப்படித் தொழிற்படும். அடுத்தவர் வாழ்வில் குறை காண்பது மட்டுமன்றி உதவியவர் மனதுக்கு ரணங்களையும் தந்துவிடும். இதனாலேயே வள்ளுவர்
' உதவி வரைத்தன்று உதவி உதவி
செய்யப்பட்டார் சால்பின் வரைத்து" என்று சொல்லி வைத்தாரோ.! சூழல் சுற்றத்துடன் சுகமாய் மகிழ்ச்சியாய் வாழவேண்டும் என்பது மீரா மனம் சொல்லும் பாடம். சுற்றங்களை வெறுப்பது சுதன் மனம் சொல்லும் பாடம். வேறுபட்ட மனப்போக்குள்ள இருவரை இணைத்துவாழவைக்க சுற்றத்தார் நினைப்பது எந்த வகையில் நியாயம். தாயுடன் தாயகத்தில் வாழ்ந்த மீராவுக்கு உறவினர் விசாரிப்பில் தேர்ந்தெடுத்த கணவனே சுதன். அவர்களை நம்பி இ;ப்போது இவள் வாழ்க்கையிலே நம்பிக்கையைத் தொலைத்தாள். குடும்பப் பாரம் அனைத்தும் சுமந்தாள். 24 மணிநேரமும் ஆண்மகனொருவன் வீட்டில் அடைந்து கிடந்தால் அந்தப் பெண்ணுக்கு எங்கே சுதந்திரம். வார்த்தை ஆணிகள் ஏறிய மனம் சீழ் பிடிப்பதுதானே நிஐம். மீரா எச்சரிக்கின்றாள். 'புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களே! உங்கள் முகமூடியைக் கழட்டியே வரன் தேடுங்கள். அப்பாவிப்பெண்களை உண்மையை மறைத்து பொய்கூறி அவர்களை வாழ்க்கைக்காய் வரவழைக்காதீர்கள். ஊறவைத்த சோற்றுநீரை உண்டு வாழ்ந்தாலும் சோம்பேறியுடன் வாழ்வதை எந்தப் பெண்ணும் விரும்பாள். Nஐர்மன் பூமியே! நீ சோம்பேறிகளுக்குச் சிறப்பாய் மகுடம் சூட்டுகின்றாய். பிள்ளை கொடுக்கும் இயந்திரங்களுக்குப் பணத்தைத் தாரை வார்க்கின்றாய். நாளும் உழைக்கும் உழைப்பாளிகளைக் கறந்து சோம்பேறிகளின் சுகத்திற்குத் துணைப்போகின்றாய். அரசாங்கப் பணத்தில் ஆடம்பரமாய் ஆயிரம் பொய் மூட்டைகள் கட்டி அவிழ்ப்பவர்களுக்கு அள்ளிக் கொடுக்கின்றாய். தாய்நாட்டுப் பிரச்சினையைக் கூறிக்கூறி வாழும்நாட்டில் சுகம்தேடுவோர்க்களைச் சோம்பேறி ஆக்குகின்றாய். இப்படிப்பட்டவர்கள் இலங்கை மண்ணில் இருந்தால் உழைத்தே தீர வேண்டும். இல்லையேல் துண்டுவிரித்துக் கோயில் திண்ணையில் குந்தவேண்டும். அங்கே சும்மா இருக்க சோபா இராது. உண்டு கழிக்க உணவு இராது. படுத்துறங்கப் பஞ்சணை இராது. அடுத்தவரை வம்புக்கிழுக்க இலவசத் தொலைபேசி இணைப்பு இராது. உழைத்தே தீர வேண்டும். தாயகப் பெண்களே! வாழ்க்கைக்காய்ப் புலம்பெயர எண்ணியுள்ளீர்களா? அவதானம் அவதானம் தேவை. தீரவிசாரித்து வாழ்க்கைக்களம் இறங்குங்கள். வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. ஒரு ஆண்மகனைக் கட்டிக்கொண்டு மாய்வதற்கல்ல. என்னோடு போகட்டும் நம்பிக்கைத் துரோகம். இனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்.
இந்த வீடியோ கிளிப்பைப் பாருங்கள்.
இந்த வீடியோ கிளிப்பைப் பாருங்கள்.
வணக்கம் சகோதரி !
பதிலளிநீக்குமுதல் முறையாக வந்த எனக்கு உங்க பதிவின் தோற்றம்,கருத்துகளில் நனைந்தேன்,பலராலும் அடையாளம் காணப்பட வேண்டியவர்களுள் நீங்களும் ஒருவர்.இன்ட்லியில் வாக்களிக்க முயற்சித்தேன்,எங்கு பிரச்சனை எனத் தெரியவில்லை ,என்னால் இயலவில்லை,தொடருங்கள் தங்கள் பதிவுகளை.
எழுத்து நடை அருமையாக இருக்கு.. சொல்லும் விசயத்தில் கருத்து அனல் கக்குகிறது..வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு"...வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. ஒரு ஆண்மகனைக் கட்டிக்கொண்டு மாய்வதற்கல்ல",,. முழுக்க முழுக்க உண்மை. வாழ்க்கை என்ற சொல்லுக்குப் பதில் திருமணம் என்று போட்டால் இன்னும் பொருந்தும். தொடரட்டும் சிறந்த பணி.
பதிலளிநீக்கு