• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

    அடித்தாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணிவைப்போம்


                     
    தாயைக்கண்ட சேய் இரு கரங்கங்களையும் நீட்டித் தாயை நோக்கி ஓடி வருகின்றது. இடையில் தடையாய் நின்ற தளபாடத்தில் தட்டுப்பட்டு விழுகின்றது. ஓ......என்று அலறல். ஓடிவந்து பிள்ளையைத் தூக்கிய தாய். 'இந்தக் கதிரையா? பிள்ளையை அடித்தது. இதுக்கு அடிபோட வேண்டும். பிள்ளைக்கு அடித்தாயா?  அடித்தாயா?'' என்று பிள்ளையைச் சாந்திப்படுத்துவதற்காக கதிரையை மாறிமாறி அடிக்கின்றாள். இங்கு தன்னை வருத்துவதைத் திருப்பி அடிக்க வேண்டும் என்னும் வன்முறை தாய் மூலம் பிள்ளைக்குப் போதிக்கப்படுகின்றது. இவ்வாறு சிறுவயதிலிருந்தே வன்முறை படிப்படியாகச் சிறுவர்கள் மனதில் விதைக்கப்படுகின்றது. கதிரைக்கு அடிபட்டு விட்டதா? கதிரை அழப்போகின்றதே தடவிவிடுங்கள். என்று கூறலாம். இல்லையேல், நீங்கள் கவனமாக வந்திருக்கலாமே என்று உண்மையை ஆறுதலாகச் சொல்லியிருக்கலாம். ஆனால்;;, புரியாத வயதில் புகட்டும் பாடம் வன்முறையின் ஒரு வடிவமே. 
                        மடியில் போட்டு மழலைக்குத் தாலாட்டுப் பாடுகின்றாள், தாய்.  ஆராரோ ஆரிவரோ ஆரடித்து நீ அழுதாய். கண்மணியே கண்ணுறங்காய். அத்தை அடித்தாளோ அமுதூட்டும் கையாலே. மாமா அடித்தாரோ மல்லிகைப் பூச்செண்டாலே, அடித்தாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணிவைப்போம்.' இது எப்படி இருக்கிறது பழிக்குப் பழி. குழந்தை அழுவதற்கான காரணங்கள் பல இருக்க இப்படியொரு வினா குழந்தையிடம் தேவைதானா? தாலாட்டின் மூலம் ஊட்டப்படும் உள்மன ஊட்டச்சத்தை உணர்ந்து நாம் பார்க்கின்றோமா? இவ்வாறு தவறு என்று அறியாமலே சிறுவயதிலிருந்து குழந்தைகளுக்கு வன்முறை ஊட்டப்படுகிறது
                        கதவை இழுத்து அடித்துப் பூட்டுவது வன்முறை, குழாய் நீரை விசையாகத் திறப்பது ஒரு வன்முறை, தீங்கேதும் செய்யாத தேனீயைத் தன்னைக் குத்திவிடும் எனப் பயந்து அடித்து உயிரைப் போக்க வைப்பதும் வன்முறை. கோபம் வந்தவுடன் கையில் கிடைக்கும் பொருளை வீசி எறிவதும், உடைப்பதும், கையில் அகப்பட்டதைக் கருவியாகக் கொண்டு குழப்படி செய்யும் குழந்தையை அடித்துத் துன்புறுத்துவதும் வன்முறையின் வடிவங்களே.சின்னாபின்னமாக உடைந்து சிதறும் பொருள்கள் ஒருவித மன உழைச்சலை மனதில் ஏற்படுத்துகின்றது. உள்மனதில் பாதிப்புப் படருகின்றது. 
                        நினைப்பென்பதும் மனமென்பதும் ஒன்றே. மனிதனின் நினைப்பால் தக்கவாறு வாழ்வு அமைகின்றது. எனவே, எதிர்காலம் எங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது சிறப்பான சமுதாயமாக வளர, அதன் அடிப்படை அவதானமாக உள்ளத்தில் பதியப்பட வேண்டியது அவசியம். எமது நடவடிக்கைகளை நாமே உற்று நோக்குவோம், பண்பான எண்ணங்களை மனதில் பதிப்போம், 

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...