பிறந்தநாள் விழா:
நாம் பிறப்பு எடுத்த அன்றைய தினத்தின் முன் ஒடுங்கிய இடத்தில் சுருண்டு கிடந்து ஈரமும் சூடும் இணைந்தே பெற்ற அற்புதமான அணைப்புடனே கிடந்தோம். காற்றும் சுவாசமும் உணவும் உண்ணும் தன்மையும் இன்றி தாயிடமிருந்து உணவையும் ஒட்சிசனையும் பெற்று அமைதியான உலகில் வாழ்ந்து வெளிச்சம்> சத்தம்> காற்று குரல்கள்> பரந்த இடம் என வித்தியாசமான சூழ்நிலைகள் கண்டு புதிதாய்ப் பிறந்தோம். சிரித்து> அழுது> உடல்திரும்பி> இருந்து> தவண்டு> நின்று> நடந்து இந்நிலை கண்டோம். அன்றிலிருந்து இன்று வரை ஆண்டாண்டு வயது ஒவ்வொன்றாய்க் கூடிப் பருவங்கள் கடக்கின்றன. மூளைப்பதிவில் பிறந்ததும் நினைவில் இல்லை குழந்தைப் பருவத்தில் நடந்ததும் நினைவில் இல்லை. அழிந்தது போக நினைவில் நிற்கும் அந்த நாள்களில் எமது பிறந்த திகதி இன்றும் மறவாது தொடர்கிறது. காரணம் நாம் இத்தினத்தை வருடாவருடம் நினைவுபடுத்திக் கொண்டாடி மகிழ்கின்றோம். ஆனால், நாம் நினைவுபடுத்தும் முறையில்தான் மாற்றங்களைக் காண்கின்றோம். அந்நாளை நினைவுபடுத்தும் போது நாம் வாழ்;க்கையில் ஒரு கட்டத்தைக் கடந்துவிட்டோம். மறுகட்டத்திற்குக் காலடி வைக்கப் போகின்றோம். சென்ற வருடத்தில் நாம் படைத்த சாதனைகள் எவை? என்பவற்றையெல்லாம் மீட்டிப் பார்க்கும் ஒரு உணர்வு தோன்ற வேண்டும். வருடாவருடம் கொண்டாடி மகிழும் பிறந்தநாள் விழாவானது> பரிசில் பொருள்களுக்காகவும் நட்புறவுகளுடன் கூடி மகிழ்வதற்காக மாத்திரமே கொண்டாடி மகிழ்வதாக இருக்கக் கூடாது.
புலம்பெயர்வில் சிறுவர்களுடைய பிறந்தநாள் விழாவை எடுத்துக் கொண்டால், வீட்டிலே அன்றைய தினத்தை மகிழ்விற்கக் கூடிய விளையாட்டுக்களைத் தெரிவுசெய்து அவர்களுடன் நாமும் சேர்ந்து விளையாடி> அவர்களைச் சந்தோசப்படுத்தி நாமும் சந்தோசப்படுவதுவே சிறப்பைத் தரும். ஆனால்> என்ன நடக்கின்றது. பெரியவர்கள் கூடியிருந்து விருந்துண்டு மதுபானங்கள் அருந்திப் பெருமகிழ்வுடன் கொண்டாடுவார்கள். பெரியவர்களை விளையாடுங்கள் என்று விட்டுவிடுவார்கள். அவர்களும் வீடு முழுவதும் ஓடியடித்து விளையாடுவார்கள். சாதாரணமான விருந்தினர் வருகை போல் இந்நாள் அமைந்து விடுகின்றது. விசேடமான இந்நாளைப் பிள்ளைகள் என்றும் மறக்காத வகையில் கொண்டாடினால்> அடுத்த வருடம் வரை அது மனதில் பதிந்து இருக்கும்.
1. பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கப்பட்ட அனைத்துச் சிறுவர்களையும் Picnic என்று வெளி இடங்களுக்கு அனைத்துச் சென்று> அவர்களுக்குரிய விளையாட்டுக்களைத் தெரிவுசெய்து> விளையாட விட்டுப் பரிசில்கள் கொடுத்துக் கொண்டாடலாம். இங்கு பலவித இனிப்புப் பண்டங்கள் பகிர்ந்தளித்து அச்சிறுவர்கள் மகிழ்ச்சியைப் பார்த்து மகிழலாம்.
2. பிறந்தநாள் கொண்டாடுவதற்கென அமைக்கப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு அவ் அமைப்பினர் ஒழுங்குபடுத்தியிருக்கும் முறைகளுக்கேற்ப விளையாட்டுக்களை விளையாட விடலாம். பின் அவர்கள் ஒழுங்குபடுத்தியிருப்பதற்கேற்ப கேக் வெட்டி மகிழலாம்.
இவ்வாறு சிறுவர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடும் போது அதுவே சிறுவர்கள் பிறந்தநாள் விழாவாக அமையும். அவர்கள் மனமும் மகிழ்ச்சி அடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.