• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 19 ஜனவரி, 2011

    நம்பினார் கெடுவதில்லை




    தன்னம்பிக்கை கொண்டு தடம்பதிக்கின்ற வேளை தடுக்குமோ விதி. நம்பிக்கை கொண்டு எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு காலடிக்கும் இடையூறு வரும்போது எதிர்பார்க்காது ஒன்று நடந்து விட அதன் காரணம் புரியாது விழிக்கும் போது விதியை நோக்குகின்றோம். நம்பிக்கையுடன் நூற்றுக்கு நூறு வீதம் நம்புகின்ற ஒரு செயல் தடைப்படின் விதியை நம்புகின்றோம். விதியை மதியால் வெல்லலாம் என்னும் ஒரு நம்பிக்கை கொண்டு தொடருகின்றோம். 
                மண்சோறு விளையாடிய தாய் மண்ணை விட்டு புகைப்படத்தில் அறிமுகமாகிய புதுமுகத்திற்குக் கழுத்து நீட்டி அந்நிய நாட்டில் வாழ வரும் பெண் கொண்டது, நம்பிக்கையே. மொழி, கலாச்சாரம், மனிதர்கள் அனைத்தும் புதிது. ஆனாலும், அந்நிய நாடு பற்றி எழுதப்படாத வெள்ளைக் கடதாசியாய் நம்பிக்கையென்னும் துடுப்புக் கொண்டு களம் புகுகின்றாள். வாழ்கின்றாள். ஆள்நடமாட்டமில்லா வான்வெளியில் விமானியை முற்றுமுழுதாக நம்பி ஆகாயத்தில் நாம் பறக்கவில்லையா? நம்பிக்கை இல்லாதவன் வாழ்வில் நிம்மதிதான் காண்பது எங்கே. முடியாது என்று துவண்டாலும் மீண்டும் முயற்சிக்கத்தானே வேண்டும். பூமிப்பந்தில் வந்து விழுந்து நாம் எழுந்து நடந்தேயாகத் தான் வேண்டும். விதியை எண்ணி வீணாய்க் காலத்தை விரயமாக்கும் வீணர்களாய் நாம் வாழலாமா?
                ''நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு' எனப்படுவது, இறைவனை நம்பினார் கைவிடப்படார் என்பதே. ஆனால், அதன் உன்மை தத்துவம் உருக்கொள்வது, என்னால் முடியும் என நாம் திடமாகக் கொள்ளும் எண்ணப்பதிவு ஆழ்மனதை அச்சடித்தது போல் ஆட்கொள்ளுகிறது. ஆட்கொண்ட எண்ணம் அகலவிரிகின்றது. பிரபஞ்சசக்தியுடன் தொடர்புகொள்கின்றது. அதை அடைவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. எனவே எல்லாம் ஆவது மனதாலேயே. வில்லியம் ஜேம்ஸ் கொண்ட நம்பிக்கை எவரெஸ் சிகரத்தைத் தொட்ட முதல் மனிதனாய் முகம் காட்டியது. நயாகரா அருவி மீது குறுக்கே நடந்தார், சார்ள்ஸ் பிளான்டின். அவர் கொண்டது தன்னம்பிக்கை. நம்பிக்கை என்பது வாழ்வில் மரணிக்க விடாமல் மனிதனை வாழவைக்கும் சக்தியுள்ளது. துவண்டு விடாதீர்கள். சோதனை மேல் சோதனை ஏற்படினும் வாழும் மண் சோதனைக் களமாயிடினும் நம்பிக்கை என்னும் துடுப்புக் கொண்டு வாழ்க்கைப் படகை வழிநடத்துங்கள்.

            பாரப்பா இவ்வுலக பிரச்சினைகள்
             பகிரப்பா விதியென்ற சிறப்புப் பெயரால்
             தேடப்பா நம்பிக்கை என்ற ஆயுதத்தை – எதிர்நீச்சல்
             போடப்பா வாழ்வின் சிக்கல்களை

    1 கருத்து:

    1. மண்சோறு விளையாடிய தாய் மண்ணை விட்டு புகைப்படத்தில் அறிமுகமாகிய புதுமுகத்திற்குக் கழுத்து நீட்டி அந்நிய நாட்டில் வாழ வரும் பெண் கொண்டது, நம்பிக்கை

      அருமையான கருத்து

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...