• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 10 ஜனவரி, 2011

    செவிப்புலனற்றவர் திரைப்படம் பார்த்தல்

         

          தொட்டதனைத்தும் பிறர்நாடிக் காத்திருப்பா ருலகில்
          தொட்டிற் பிள்ளைக் கொப்பாவார்

    2 மாதக்குழந்தை வீறிட்டு அழும், அழுகைச் சத்தமானது தனது நித்திரையை உலுப்பிவிட, கண்விழித்த கவிதா, அருகே படுக்கையில் கணவன் இல்லாமை கண்டு இருமுறை அழைத்துப் பார்த்தாள். நிசப்தம் நிலவியவேளை, இரவு விடைபெற பகல் சேலைகட்டிக் கொண்டு வெளிவர ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் அதிகாலை 2 மணி. அறையின் வெளியே ஆராய்ந்தாள். அகப்படவில்லை அவன் உருவம். எங்கே சென்றிருப்பார்? இதயமோ கடிகாரச் சத்தம் போட்டது. வாசல்கதவுக்கு வெளியே ஆழ்ந்த உறக்கத்தில் குறட்டைஒலி கதவின் இடுக்கினூடே உள்ளே ஒலித்துக் கொண்டிருந்தது. தொலைபேசி அழைப்பால் அயல்வீட்டார் அண்மித்தவேளை வாசலிலே அயர்ந்து உணர்வின்றி உறங்கிக்கொண்டிருந்த அவள் கணவன் நிலை கண்டு, நிலைமை உரைக்கவும், உணர்வற்ற அவள் கணவனை வைத்தியசாலைக்கு அனுப்பவும் என அவசரசேவையை அழைக்க மொழிதெரியாத இரு குடும்பமும் முழித்தனர். 4 வயதுக்குழந்தையை மொழிபெயர்க்கச் சொல்லி ஆக்கினைப்படுத்திய பின் உறவினர்க்கு விபரம் அறிவித்து அவர் மூலம் அவசரசேவை வீடு வந்தது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தொலைபேசி மூலம் பதில் கொடுக்கவேண்டிய நிலை தொலைதூரம் வசிக்கும் உறவினர்களுக்கு ஏற்பட்டது. 
                 தவறு எங்கே உண்டு? உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்கவீடும, கற்கக்கல்வியும்; தந்தல்லவா இந்நாடு பலரைப் பாதுகாக்கின்றது. அந்நாட்டு மொழியைக் கற்க விரும்பாது, தாய்மொழியே தஞ்சம் என்று வகைவகையாய் உணவுண்டு கழித்து வாழ்வது என்ன மடைமைத்தனம். அவசர தேவைக்காகவாவது உதவும் என்றல்லவா மொழியைக் கல்லுங்கள் என்று இந்நாட்டரசு கட்டளையிடுகின்றது. இலவசமாகக் கல்வியை வழங்கினாலும் இலுப்பம் பூவாய் நினைத்து அரசாங்கப் பணத்தை விரயமாக்குபவர்கள் எத்தனை பேர் எம்மத்தியில் வாழ்கின்றார்கள். நோய்க்கான காரணம் புரியாது காரியத்தில் எப்படி வைத்தியர் இறங்குவது. அவர் காட்டுகின்ற காரியத்தை எப்படிப் புரிந்து கொள்வது. விலங்கனையர் வாழ்நாட்டு மொழி தெரியாத மக்கள். இவர் தாய்மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்து என்ன பலன்? கற்பதனால் வாழ்வு கருகிப் போவதில்லை. மொழிக்கல்வியானது ஆளுமைக் கண்ணைத் திறக்கும். அடுத்தவரை எதிர்பார்த்து நிற்கும் அடிமைத்தனத்தை ஒழிக்கும். மொழிக்காய்த் தாம் பெற்ற பிள்ளைகளிடம் பிச்சைப்பாத்திரம் ஏந்தி நிற்கும் பல பெற்றோர் இன்னும் எம்மத்தியில் வாழ்கின்றார்கள்.
                 எனக்கு வேண்டாம் யுஇடி.உ எனது பிள்ளை மருத்துவம் படிக்க வேண்டும். அது படிக்க வேண்டும், இது படிக்க வேண்டும், அனைத்தும் படிக்க வேண்டும். ஒரு மொழி சாதாரணமாய்த் தட்டுத்தடுமாறிப் பேசமுடியாத வளர்ந்தவர்கள் சுதந்திரமாய் ஆடிப்பாடி விளையாட வேண்டிய பருவத்தில் அதற்கும் இதற்கும் என்று வளரத் துடிக்கம் சிறுவர்களை வாட்டி எடுத்தல் தகுமோ! எனக்கு ஒரு நீதி, என் பிள்ளைக்கு ஒரு நீதியோ! வாழும் நாட்டிலே செவிப்புலனற்றவர் திரைப்படம் பாhக்கும் நிலை யாருக்கும் வேண்டாமே.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...