• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 24 ஜனவரி, 2011

    நாதங்கள்


           
    வானுக்கும் மண்ணுக்கு மோர் நெசவாலை
    வெள்ளிக் கம்பிகள் நீட்டியோர் சரிகைச்சேலை
    பூமியில் வீழுதுபார் தாளம்மாறாத ஓசை
    புதுப்புது ராகம் இசைக்குது மேகத்தின்கொடை
    தத்தோம் தித்தோம் தகதிமிதோம் தகதிமிதோம்

    தோலிலே தட்டிடும் விரல்களின் நாதம்
    தோடுடைய செவியனின் உடுக்கையிலும் நாதம்
    தாளவாத்தியக் கருவிகள் தந்திடும் ஞானம்
    தரணியில் தோற்கருவிகள் தரமான ராகம்
    தத்தோம் தித்தோம் தரிகிடத்தோம் தரிகிடதோம்

    மண்ணிலே உருவங்கள் மகத்தான படைப்புகளி
    மண்ணையே பதங்காண பாதங்களின் துடிப்பு
    மண்ணிலே சேர்ந்திடும் சுதிசேரும் துள்ளல் - கால்கள்
    மண்ணிலே பண்ணிய சுகமான ராகம்
    தத்தோம் தித்தோம் ததிங்கிணத்தோம் ததிங்கிணத்தோம்

    பாதங்கள் படப்படப் பாய்ந்திடும் பந்துஉதை
    பட்டதால், உருண்டு ஓடிடும் பந்து
    தொம் தொம் தத்தோம் தத்தோம்
    கதாநாயகன் கையிலே வில்லனும் பந்து
    தாக்கிடும் குத்திலே தோன்றிடும் சிந்து
    தோம் தோம் தித்தித்தோத் தித்தோம்

    சதங்கை கட்டிய கால்களும் துள்ளும் - ஜதி
    சந்தங்கள் கூட்டிச் சதங்கையும் பாடும் - ஆதி
    அந்தமுமில்லா ஆண்டவன் ஆடிய தாண்டவம்
    அரங்கிலே காட்டிய களிப்பிலே கேட்கும்
    தரிகிடதோம் தரிகிடதோம் தித்தோம் தித்தோம்

    தோளிலே மூடையைச் சுமந்திடும் தொழிலாளி
    தோணிபோல் முதுகை வளைத்திடும் பாரத்தை
    தூக்கியே தரையிலே போட்டிடும் ஜதியும்
    தொம் தொம் தொம்தொம் தகதொம்

    நாதங்கள் காதோரம் நாள்தோறும் கேட்கும்
    கேட்கின்ற இசையாவும் ராகமாய் ஒலிக்கும்
    ஒலிக்கின்ற ஓசையிலே  ஒருப்பட ஒன்றிடும்
    மனமெங்கும் இசைலயங்கள் இணைந்தே கலந்திடும்


    2 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...