உந்தியில் தங்கியபோது
உந்தியே வரம்பு
உருண்டதும் உதைத்ததும்
கருவறையுள் கட்டுப்பாடு
உதித்ததும் பூமியில் சுதந்திரம்
உருவாகும் உயர் வாழ்வுக்கு
மனக் கட்டுப்பாடு
சந்ததி காத்திடும் தாய்மடி கட்டுப்பாடு
சரித்திரம் புகழ்ந்திட கட்டாய நிலைப்பாடு
சிந்துகள் பாடும் சிட்டுக்குருவி வாழ்வில்
மிஞ்சிடா துலகில் வஞ்சியாய் வாழ்ந்திட
வாழ்வின் கறை சுமக்க வழி விடாத
பெற்றோர் கட்டுப்பாடு
விலங்குகள் சுதந்திரம் காட்டினுள்ளே- அவை
வீதிக்கு வந்தால் இழப்பது வாழ்வு
மீன்களின் சுதந்திரம் நீரினுள்ளே- அவை
நீரைத் தாண்டினால்இ நிலைக்கா துலகில்
சொற்சுதந்திரமென நாவடக்க மறந்தால்
சொல்லுக்கேது சுதந்திரம்
புலனடக்கம் புரியாதுலகில் தறுதலையாய் வாழ்ந்தால்
குலநடுக்கம் குலத்தையே அழிக்கும்
கட்டவிழ்ந்த மந்தைகளாய் மேய்ப்பாரிழந்தால்
கெட்டழியும் வாழ்வு கெடுத்து விடும் சுதந்திரம்
வாழ்வை உயர்த்த வழிகாட்டும் சுதந்திரம்
வானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்
சீரழியாது வாழ்வைச் சிறப்பாக்க
பேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு
வாழ்வை உயர்த்த வழிகாட்டும் சுதந்திரம்
பதிலளிநீக்குவானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும் //
உண்மையே சுதந்திரம் கட்டப்பாடும்மனமகிழ்வைத் தர வேண்டும்