நன்றி நவிலல்
1. நன்றிநவில விதிமுறை இல்லை
நாவின் முனைப்பில் நடைமுறைப்படுத்தப்;படும்.
2. வலிந்து கேட்பதன்று நன்றி
நன்றி பெற்றார் மனத்தின்கண்
விரும்பிக்கொடுப்பது.
3. நன்றிநவில சிந்திப்பதில்லை நாநுனி
நவிலத் துடிப்போடு வெளிப்படும்.
உயர்ந்தோர் உள்ளம்
1. பெருக்கத்துப் பணிவும்
தாழ்வுவரின் தளராமையும்
உயர்ந்தோர் உள்ளத்தின்
உயரிய பண்பாகும்.
2. அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தோர் உயர்ந்தோராகார்
உள்ளத்தால் உயர்ந்தோர் உயர்ந்தோராவார்.
3. மனிதரில் தரம் பார்க்காது குணம் சேர்க்கும்
உயர்ந்தோர் உள்ளம்.
பொறாமை
1. புகழடைந்தார் நிலை கண்டு பொறாமையில் புழுங்காது
புகழடையக் காரணத்தைப் புரிந்து கொண்டு – உங்கள்
புகழ் வாழ்வு காண புரிந்தொழுகல் சாலச் சிறந்தது.
2. பொறாமைப்படுபவர் மனம் ஓர்நாள் வெளிப்படின் - அதுவே
அவர் புகழைத் தொலைக்கும் கருவியாகும்.
சந்தேகம்
சந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது
சந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.