• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 8 மார்ச், 2011

    பாதை மாறிய பயணங்கள்



        
    பாதை வகுத்த பரம்பொருள் புரியாது
    போதையில் பலப்பல பாதைகள் தேடி 
    வாதையில் வருந்தும் வாழ்க்கையும் முறையோ 
    ஈதைதான் தீர தேவைதான் இறையருள். 

    கொண்டேன் பாதை கொழுநனின் மலரடி 
    தொடர்ந்தேன் வாழ்க்கை வையத்து ஒருபுறம்
    கண்டேன் வாழ்வின் தரிக்காத ஓட்டம் 
    விண்டேன் விதியின் விளங்காத விளக்கத்தை.  

    இக்காயம் புக்க இடம் புதிது 
    அயல் புதிது அயலுரை புதிது 
    நயனம் காணும் நயவரும் புதிது
    பயணம் போகும் பாதையும் புதிது புதிது 

    நிலையா உலகின் நிலையா நினைவில் 
    நிலைக்கும் இன்பம் தேடி நாடி
    நித்தமும் தொடரும் நிலையில்லாப் பயணத்தில் 
    புக்க இடத்தில் புகழடைய புனிதப் பயணம் தொடர்வோம் 

    1 கருத்து:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    2026 புதுவருட வாழ்த்துக்கள்

      2026 புது வருட வாழ்த்துக்கள் ---------------------------------------- 2025 ஏற்ற இறக்கங்கள், உயர்வுகள் தாழ்வுகள், தோற்றங்கள் அழிவுகள், கவலை...