• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 23 நவம்பர், 2012

    திருமணம்



    களவினில் குற்றம் கலந்தது
    கடிமணம் உலகினில் விதந்தது
    உறவினில் கலங்கங்கள் புகுந்தது
    உதவிட பிரிவுகள் எழுந்தது
    இருமனம் இணைவதே திருமணம் - இதை
    உணர்த்திட மார்பினில் மாங்கல்யம்
    உணர்த்திடும் அவசியம் புரிந்ததால்
    திருமணம் உலகினிலின் றவசியம்.

    மனிதர்கள் மாண்புகள் உணர்ந்துவிட்டால்
    மதமது சடங்கது தேவையில்லை
    கலாசார பண்பாடு களத்திலில்லை
    எழுதாத சட்டமது திருமணமும்
    எழுதப்பட்ட சட்டமாய் தேவையில்லை.

    குணமது தெரியணும் நெறியது புரியணும்
    வளமது பெருகிட வாழ்வது சிறக்கணும்
    பணமது நீக்கியே மனமது பார்க்கணும்
    விதவைகள் திருமணம் விரும்பியே ஏற்கணும்
    தெளிவிலா மனதுடன் திருமணம் வெறுக்கணும்
    நாளைய உலகினை நாடிய வாழ்வினை
    நாளுமே எண்ணியே வாழ்வினை நடத்தணும்
    அன்புடன் துணையினை ஆதரவாய் நடத்தணும்
    பிறரது வாழ்வது சிறந்திட திருமணவாழ்வும் சிறக்கணும்

    6 கருத்துகள்:

    1. ஒவ்வொரு வரியும் சிறப்பு... வாழ்த்துக்கள்...

      பதிலளிநீக்கு
    2. மங்கள நாண் பற்றிய அழகிய கவிதை சகோதரி....
      சிறக்கட்டும் அனைவரது திருமண வாழ்க்கையும்...

      பதிலளிநீக்கு
    3. // மனிதர்கள் மாண்புகள் உணர்ந்துவிட்டால்
      மதமது சடங்கது தேவையில்லை
      கலாசார பண்பாடு களத்திலில்லை
      எழுதாத சட்டமது திருமணமும்
      எழுதப்பட்ட சட்டமாய் தேவையில்லை.//

      இரு மனம் சேர்ந்தால் திருமணம். காலச் சூழலுக்கேற்ற நல்ல கவிதை!

      பதிலளிநீக்கு
    4. \\\பணமது நீக்கியே மனமது பார்க்கணும்
      விதவைகள் திருமணம் விரும்பியே ஏற்கணும்///
      புரட்சியான கருத்துகள்.
      காலத்திற்கேற்ற வரிகள்.

      அருமை

      பதிலளிநீக்கு
    5. அழகான வரிகளுடன் அற்புதமான கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...