• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 2 நவம்பர், 2012

    தலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 5)



    பொறுமை இழந்த ராமுக்கு எது செய்வதென்று அறியாத குழப்பத்தைக் காட்ட அவனது மூளையானது மேல்மாடியிலிருந்த தன் அறைக்கு விரைவாக அவனை இழுத்தெடுத்தது. பெற்றோர் இருவரையும் விலத்திவிட்டு விரைவாக மேல்மாடியிலிருக்கும் தன் அறைக்கு ஓடினான். எதுவுமே பேசாது மௌனமாய் அடங்கிய தாய் மெதுவாக வேலைக்குப் போவதற்காக கதவைத்திறந்தாள். தந்தையும் 'கோவம் மட்டும் துரைக்கு இப்போது மூக்கு நுனியிலே வந்திடும். மேலே போகிறாய் உன் அறை அலங்கோலமாக இருக்கிறது. அதை முதலில் அடுக்கி வை. எல்லாம் அம்மாதான் செய்ய வேண்டும் என்றில்லை|| என்று ஆத்திரத்துடன் கூறியவராய் மனைவியுடன் வெளியேறினார். 

                வேலைத்தளத்திலே எந்த விடயத்தில் கைவைத்தாலும் எதிலுமே மனம் நிலைநிறுத்த முடியாத சஞ்சலத்தை தேவி மனம் உணர்ந்தது. பிள்ளையின் போக்குக்கு  விட்டிருக்கலாமே. இளந்தலைமுறை தாம் விரும்பியதைத்தானே செய்யும். எமது காலந்தான் கடந்துவிட்டது. எல்லாம் அநுபவித்துத்தானே இங்கு வந்தோம். மற்றவர்களிடம் நான் சொன்ன வார்த்தைகளுக்காக பிள்ளையின் ஆசையை மறுப்பதா? என்ன தான் பெரிதாய் மறுத்துவிட்டான். நான் அடம்பிடிப்பதற்கு. சீச்சீ .... என்ன மனம் எனக்கு. நான்  பிள்ளைக்கு அடிவாங்கிக் கொடுத்துவிட்டேனே. பெற்ற மனம் பேதலித்தது. வேலையில் இருப்புக் கொள்ளவில்லை. மேற்பார்வையாளாரிடம் உடம்புக்கு முடியவில்லை டாக்டரிடம் போக வேண்டும் என்று சாட்டுச் சொல்லிவிட்டு வீடு நோக்கிச் சென்றாள் தேவி.

              இருந்தாலும் நாளை வேலைக்குப் போகும்போது வைத்தியரின் துண்டு கொண்டு போனால்த்தானே அதிகாரி மீண்டும் வேலைக்குத் தேவியை ஏற்றுக் கொள்வார். அதனால் டாக்டரிடம் சென்றாள். வழமைபோல் டாக்டர் வரவேற்பறை நாற்காலி அவளைத் தாங்கியது. சிலவேளை டாக்டரிடம் காட்டுவதற்கு அப்பொய்ன்ட்மெனட் இல்லையென்றால் அநுமதி கிடைக்காது. இன்று என்னவோ அவளுக்கு அநுமதி கிடைத்துவிட்டது. நேரம் செல்லச்செல்ல அவளுக்குச் சலிப்பேற்பட்டது.  இது அப்பொய்ன்ட்மென்ட் இல்லாது வருபவர்களுக்கு எப்போதும் வரும் சலிப்புத்தான். ஆனால்> ஒருபடியாக மருத்துவரிடம் வலிந்து தனக்கு வராத ஒரு நோயை வரவழைத்துப் பொய்யான நோய்க்கு மருந்துவரிடம் மருந்துச் சீட்டையும்  விடுமுறைக்கான சீட்டையும் பெற்றுக் கொண்டு வீடுதிரும்பினாள். வீட்டு வாசலில் சுதன் கார் நிறுத்தப்படுவதைக் கண்ட தேவி இவர் என்ன இன்று நேரத்துடன் வந்துவிட்டார் என்று நினைத்தபடி அவரருகே சென்றாள்.

               'என்ன ஆச்சரியமா இருக்கு. நேரத்தோடு வந்திட்டீங்க||. 

            'மனசு சரியில்லை தேவி மனம் நல்லா இருந்தால்த்தானே வேலை செய்ய முடியும். நான் ராமுக்குத் தேவையில்லாமல் கை நீட்டியிருக்கக் கூடாது. அவனும் தோளுக்கு மேலே வளர்ந்திட்டான்|| 

    என்றபடி கதவைத் திறந்தான். உடலென்னவோ இருவருக்கும் வாசலில் நின்றது மனமென்னவோ வீட்டினுள் இருந்தது. உடையும் கழட்டாது மகனைச் சமாதனப்படுத்துவதற்காக உடனடியாக ராம் அறையை நோக்கிச் செல்வதற்காக வரவேற்பறையினுள் இருந்த படிகளில் ஏறினான். குனிந்து படிகளில் பாதங்களை வைத்தவன் நிமிர்ந்து அடுத்த படிகளில் கால்வைப்பதற்காக மேல்நோக்கினான். அதிர்ந்துவிட்டான். படிகளில் தொங்கிய ராமுடைய பாதங்களைக் கண்டு துடித்துப் போனான். தேவி..... என்று அலறியபடி மேல் நோக்கிப் பார்த்தான்.  படிக்கட்டுகளில் தாயின் சீலையால் தூக்கிட்டுத் தொங்கிய ராமின் உயிர் பிரிந்த உடல் கண்டான். ஸ்தம்பிதமானான். தாங்கமுடியாது அவதிப்பட்டான். கயிற்றை அறுப்பதற்காகக் 'கத்தியை எடுத்துவா தேவி.....|| என்று பலமாகக் கத்தினான். விசயம் எதுவென்று அறியாது சமையல் அறையினுள் ஓடிச்சென்று கத்தியை எடுத்துக் கொண்டு வேகமாய் ஓடிவந்த தேவி மகனைப் பார்த்தாள். ஐயோ.... என்று அலறியவளாய் கையில் கத்தி இருப்பதையும் உணராதவளாய் கையால் தலையில் ஓங்கிஓங்கி அடுத்தபடி உலகமே அதிரும்படிக் கத்தினாள். அடிக்க அடிக்க கத்தி தலையைப் பதம்பார்த்தது. அப்படியே இரத்த ஓட்டத்தின் நடுவே தரையில் சாய்ந்தாள். மகனைப் பார்ப்பதா> மனைவியைப் பார்ப்பதா? சுதன் நடைப்பிணமானான். அழுது கொண்டு தரையில் சட்டென்று அமர்ந்தான். கைகள் இரண்டையும் கோர்த்துக் மேலுச்சியை அழுத்தியபடி அப்படியே படிக்கட்டுக்களில் அமர்ந்து கொண்டான். விரிந்த கண்களினுள் தொங்குகின்ற தன் மகனின் கால்களை நோக்கினான். யாரை அணைப்பது அழுவது எதுவுமே புரியாது. அம்புலனஸ்க்கு அழைப்பைக் கொடுத்தான். மருத்துவமனையில் உணர்வற்ற தேவி உடலும் உயிரற்ற ராம் உடலும் உணர்விருந்தும்  உயிரிருந்தும் சலனமற்ற மௌனமான சுதனும் ........

                அடுத்தவர் வாழ்வில் தலையீடு 
                கெடுத்திடும் வாழ்வை உணர்வீர்கள்
                மடியது சுமந்த மகவானாலும் - அவர்
                மனமது வேறு அறிவீர்கள்
                அவரவர் ஆசைகள் ஆயிரம் - அதில்
                பிறரது நுழைதல் பிழையாகும்
                கணமது கொள்ளும் ஆத்திரம் - வாழ்வை
                கடிதென முடித்திடும் நிச்சயம்.

                                

    7 கருத்துகள்:

    1. தோளுக்கு மிஞ்சினால் தோழன்-- சரியாகத்தான் இருக்கிறது.

      பதிலளிநீக்கு
    2. ஏன் இப்படி சோகமாக முடித்து விட்டீர்கள்?

      வேறு விதமாக எழுதி சுபமாகவே முடித்திருக்கலாமே!

      இப்போதும் ஒன்றும் குறையில்லை. இந்த சம்பவங்களை அப்படியே கனவுக் காட்சிகள் எனச்சொல்லி, அடுத்த பகுதியைத் தொடரலாமே!

      இது JUST என் ஆலோசனை மட்டுமே, மேடம்.

      அன்புடன்
      VGK

      [பின் குறிப்பு:
      ”சலிப்பு” என்பதே சரியான சொல்.
      “சளிப்பு” தவறானது. எழுத்துப்பிழையாகும்.
      2-3 இடங்களில் வருகின்றன.
      அவற்றை திருத்தி விடவும்]

      பதிலளிநீக்கு
    3. அவரவர் ஆசைகள் ஆயிரம் - அதில் பிறரது நுழைதல் பிழையாகும்/ கணமது கொள்ளும் ஆத்திரம் - வாழ்வை கடிதென முடித்திடும் நிச்சயம்.//

      ///உண்மைதான்// நன்றி!

      பதிலளிநீக்கு
    4. மிகவும் சோகமான முடிவு. வருத்தமாக உள்ளது.

      பதிலளிநீக்கு
    5. அக்கா ..ரொம்ப நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன்
      டாஷ்போடில் உங்க வலை தெரியாமல் இருந்தது இப்ப சரி செய்து விட்டேன்

      பதிலளிநீக்கு
    6. //மடியது சுமந்த மகவானாலும் - அவர்
      மனமது வேறு அறிவீர்கள்//

      முற்றிலும் நூற்றுக்கு நூறு உண்மைக்கா .
      பெற்றோர்கள் பலர் தங்கள் விருப்பங்களையே பிள்ளைகள் மேல் திணிக்கிறார்கள் ...இன்னும் இப்படி மரணகள் ஆங்காங்கே நடக்கின்றன .முடிவு மனதை என்னமோ செய்துவிட்டது ...இக்காலபில்லைகள் சிறு வருத்தத்தை கூட தோல்வியைக்கூட தாங்க மாட்டார்கள் ..
      இக்கதை பல வெளிநாட்டு வாழ் பெற்றோருக்கு ஒரு பாடமாக அமையும் ..

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...