• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 27 ஜனவரி, 2011

    தாயார் பாடல்




    கீச்சுமூச்சுத் தம்பலம் கீயோமாயோத் தம்பலம்
     கீதமாச்சு உங்கள் நினைவோ தம்பலத்தில்
     கீதமாச்சு உங்கள் நினைவோ தம்பலத்தில்

    பல்லாங்குழி ஆட நானும்
     சொல்லாமத்தான் போனபோது
     சொல்லிச்சொல்லி அடிச்சஅடி வலிக்கவில்லை - நீங்க
     சொல்லாமாத்தான் போன அடி வலிக்கிறதுநெஞ்சில்
     சொல்லாமத்தான் போன அடி வலிக்கிறது.

     கிட்டிப்பொல்லு அடித்த அடி
     பட்டு நானும் பதறியதும்
     கட்டிவந்து அணைத்த சுகம் மறக்கவில்லைநீங்கள்
     விட்டுச்சென்று போனசுகம் மறக்கவில்லைஎன்னை
     விட்டுச் சென்று போனதுயர் கனக்கிறதுஎன்னை       
     விட்டுச் சென்று போனதுயர் கனக்கிறது.

     சின்னச்சோறு நான் சமைக்க
     கன்னத்திலே முத்தமிட்டு
     தித்திப்பதாய்ச் சொன்னசொல்லு மறக்கவில்லைஉங்கள்
     தித்திப்பான உணவுதேடி ஏங்கிறதுமனம்
     தித்திப்பான உணவு தேடி ஏங்கிறது

    2 கருத்துகள்:

    1. பெற்றவர் நினைவு.. இற்றுவிடாத நினைவு.
      மற்றவர் சொல்லி வருவதல்ல அந்நினைவு.
      நேற்று, இன்று நாளையும் உள்ள நினைவு.

      பதிலளிநீக்கு
    2. நன்றி வேதா இலங்காதிலகம் அவர்களே. ஒவ்வொரு இடுகைக்கும் நீங்கள் தரும் அபிப்பிராயம் எனக்கு ஒரு உந்துதலை ஏற்படுத்துகின்றது.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...