• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 11 செப்டம்பர், 2014

    பணம், பணம், பணம் பணமில்லையேல் பிணம், பிணம், பிணம்

                

    கருவிகள் ஆயிரம் இருந்தும் கைக்கொள்ளும் வசதிகள் உண்டா?
    வாழ்வில் ஆசைகள் பலவிருந்தும் ஆண்டுகொள்ளும் திறன் உண்டா? 
    வெளிமனது சிரிக்க உள்மனது அழும் மனிதர்கள் உலகில் பலருண்டு
    புரிந்து கொண்டும் பகிர்ந்திடாத மனிதர்கள் பலரும் உலகில் உண்டு 
    ஆசைகள், அன்புகள்;, மகிழ்வுகள், அனைத்திற்கும் தேவை நோட்டு 
    இதை தெரிந்தே மனிதர் பெரிதென்று தெரிவிக்காது மறுக்கின்றார்
    நோட்டுக் கட்டை நீட்டி நீட்டிக் காரியத்தை முடிக்கின்றார்
    நோட்டுத் தேவையில்லை என்று நீட்டி வசனம் உரைக்கின்றார்.
    நோட்டு மட்டும் தேவை என்று எவரும் இன்று நினைப்பதில்லை
    அன்பு மட்டும் போதுமென்று எவரும் இன்று வாழ்வதில்லை
    ஆன்மீகத் துறவிகளும் ஞானிகளும் கூட அளவின்றி சேர்க்கின்றார்
    அநாதைகள் வாழ்வுக்கும் ஆச்சிரமத் தொண்டுக்கும் தேவை என்றே
    அளவு இல்லாது சேர்க்கின்றார் ஆனந்தமும் அவர் கொள்கின்றார்.
    அன்பைப் பெறவும் அன்பை ஆதரிக்கவும் அதுதானே தேவை
    வாரிசுகள் மனமகிழ, வசந்தம் தேடிக்கொள்ள, வசதிகள் பெற்றுயர 
    புதுமைகள் நாட, புகழைத் தேட, புதியவை கைவர, 
    தேவை... தேவை.....தேவை.....தேவை.....பணமது தேவை 
    பலருக்கு உதவ, பண்பாளனாய் உலாவ கத்தைகத்தையாய் தேவை
    இரவிரவாய் கண் முழித்து பணத்தைத் தேடும் மனிதன்
    பகலெல்லாம் பகட்டுக்காட்டிப் பலரையும் ஆசையில் ஆழ்த்துவான்
    பணம் தேவையில்லை பாசம்தான் தேவையென பரிந்துவேறு உரைத்திடுவான்
    பாரில் இது இல்லையென்றால், பாரதி வாழ்வு போலாகும்
    தானும் வாழ்வை இழந்து தன் குடும்பமும் தத்தளிக்கும்
    நாம் இல்லாத உலகினிலே நமக்காய் சிலை வடிப்பார்
    இறந்தும் நாம் வாழ்கின்றோமென எவரெவரோ புகழ் உரைப்பார்
    கேட்பதற்கும் நாமில்லை, மகிழ்ந்து கொள்வதற்கு நாம் வாழ்வதுமில்லை

    6 கருத்துகள்:

    1. பாரதி நேற்று வாழ்ந்தான்
      இன்று வாழ்கிறான்
      நாளையும் வாழ்வான்
      நன்றி சகோதரியாரே

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. ஆனால் வாழ்ந்த போது குடும்பம் வாழ்ந்ததா. வாழும் போது தம்மைச் சார்ந்தாரை அழவைத்து வாழ்தல் ஒரு வாழ்வா? இன்று வாழும் வாழ்க்கை காண அவர் எங்கே வாழ்கின்றார். ஆழும் போது நொந்து இறந்த பின் கிடைக்கும் புகழால் அவருக்கு என்ன இலாபம் .

        நீக்கு
    2. மதிப்பிற்குறிய அக்கா... அருமையான பதிவு... பணத்தால் மெத்தையை வாங்க முடியும்..ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது என்பதே நிதர்சனம்...

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. யார் சொன்னார் . பணமில்லாதவன் பசியால் வயிற்றில் ஈரத் துணியைப் போட்டு உறக்கமின்றி தவிக்கின்றான் . பணமுள்ளவன் பதுக்கி வைக்க இடம் இன்றி தவிக்கின்றான். ஆனாலும் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தி வசதியாக உறங்குகின்றான். என்பதே மெய்

        நீக்கு
    3. பணம் ஒரு வகை நிம்மதி, வசதி தருவது உண்மையே.
      ஆனால் பலர் மனிதத் தன்மையை, பிறரை அணைத்து வாழ்தல்
      போன்ற பண்புகளை இழக்கிறார்கள். அறிவால் வாதத்திற்கு
      எப் பக்கமும் இழுக்கலாம்.
      அளவோடு இருப்பது மிக நல்லது.
      Vetha.Langathilakam.

      பதிலளிநீக்கு
    4. இது பணத்தால் மட்டும் ஆவதில்லை. அது வளர்ப்பு முறை, அதுபவங்களைப் பொறுத்தது. நீங்களே சொல்லுங்கள். இன்று கணனி வாங்க வசதிகள் அற்ற எத்தனையோ எழுத்தாளர்கள் பிரபலமின்றி மலைவாழ் இருக்க ஓரளவே எடுத்த தெரிந்தவர்கள் 6,7 என்று நூல்களாக வெளியிட்டு பெயர் பெற்றுவிடுகின்றார்கள். இப்படிப் பலருடை. ஏக்கங்களேக் இக் கவிதையில் வெளிப்படுகின்றது

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...