மன அறையுள் அறை அழுக்கிட்டு
நடிப்பு அறையால் மறைத்திருப்போர்
நட்பு அறையை அறையாய்
அமைப்பது எப்படி?
பொருள்:
மனமென்னும் சுரங்கத்தினுள் வஞ்சனை என்னும் அழுக்கைப் போட்டு நடிப்பென்னும் திரைச்சீலையால் மறைத்திருப்பவர்கள் நட்பு என்னும் கட்டிடத்தைப் பாறைபோல் உறுதியாக அமைப்பது எப்படி?
1. சுரங்கம்
2. வஞ்சனை
3. திரைச்சீலை
4. கட்டிடம்
5. பாறை
தெளிவுரை:
நிலக்கரி, தங்கம் போன்றவை தோண்டி எடுக்கும் இடம் சுரங்கம் எனப்படுகின்றது. மனிதன் பிறக்கும் போது மனம் என்னும் ஆழச்சுரங்கத்தினுள் தங்கம், வைரம் போன்ற எண்ணங்களும் உணர்வுகளும் உருவாகக் கூடிய வெற்றிடமாகவே அமைந்திருக்கும். அத்துடன் மனிதர்கள் எல்லோரும் நல்லவர்களாகவே பிறக்கின்றார்கள். வளருகின்ற சூழல், வளர்க்கப்படுகின்ற தன்மை, அவர்களை தீய வழிக்கு இட்டுச் செல்லுகின்றது. இவ்வாறாக சந்தர்ப்பம் சூழ்நிலையால் மாசு பட்ட மனத்தினுள் வஞ்சனை எனப்படுகின்ற அழுக்கைப் புதைத்து வாழுதல் எல்லோருக்கும் இலகுவாகவானது. ஏனெனில், மனதை அறியும் கருவி உலகில் படைக்கப்படவில்லையே. மனமென்ன பேசும், மனமென்ன கருதும் என்பதை மதிப்பிடும் வல்லமை பிறருக்கு கிடையவே கிடையாது. அதனாலேயே நடிப்பென்னும் திரைச்சீலையால் தம் உள் மனதை மறைத்து வெளிவேடம் போட்டு, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் உத்தமர்கள் உலகில் பலராகப்படுகின்றனர்.
மனிதர் தமது இயல்பான உண்மை நிலையினை மறைத்து வாழ்தலே நடிப்பெனப்படுகின்றது. இங்கு நடிப்பென்னும் திரைச்சீலை என்று நடிப்புக்கு திரைச்சீலை உருவகிக்கப்பட்டுள்ளது. மனிதன் மனதில் தோன்றும் நடிப்பு என்னும் திரைச்சீலையானது இலகுவில் விலக்கப்படக்கூடியதே. ஒரு மனிதன் மனதில் நல்லெண்ணங்களை விதைத்தல், நல்லறிவூட்டும் நூல்களைக் கற்றல், யோகா போன்ற ஞானப்பயிற்சிகள் செய்தல், தன் முயற்சி மூலம் நல்லவனாக மனதால் சிந்தித்தல், பொன்ற காரியங்களைச் செய்வதன் மூலம் நடிப்பென்னும் திரைச்சீலையை அகற்றலாம். இதனாலேயே நடிப்பானது திரைச்சீலை எனப்படுகின்றது. இந்நடிப்பெனும் திரைச்சீலை கொண்டு வாழ்வோர் நட்பெனும் மாபெரும் கட்டிடத்தைக் கட்டியெழுப்ப முடியாதவர்களாகி விடுகின்றனர். இதனையே வள்ளுவப் பெருந்தகையும்
'மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு''
என்கின்றார். அதாவது மனதிலே மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். மாசு உள்ளவர்களுடைய நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும். இதனையே இப்பொறிக்கவிதையானது மனதினுள் வஞ்சனையை நிறைத்துக் கொண்டு, நண்பர் போல் நடிப்பவர்கள் நட்பென்னும் அற்புத உறவை உறுதியாகப் பெற முடியாது என வலியுறுத்துகின்றது.
நல்ல சிந்தனை! அருமையான கவியாக்கம்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
வணக்கம்
பதிலளிநீக்குபாடலும் சிறப்பு சொல்லிய கருத்தும் சிறப்பு நன்றாக உள்ள து வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅமைதியாக ஆறுதலாக வாசித்து
பதிலளிநீக்குவிளங்க முடியும். மிக்க நன்று.
இனிய வாழ்த்து.
Vetha.Langathilakam.
அருமையான மனோவியல் கட்டுரை சகோதரி...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
//மனிதன் மனதில் நல்லெண்ணங்களை விதைத்தல், நல்லறிவூட்டும் நூல்களைக் கற்றல், யோகா போன்ற ஞானப்பயிற்சிகள் செய்தல், தன் முயற்சி மூலம் நல்லவனாக மனதால் சிந்தித்தல், பொன்ற காரியங்களைச் செய்வதன் மூலம் நடிப்பென்னும் திரைச்சீலையை அகற்றலாம். இதனாலேயே நடிப்பானது திரைச்சீலை எனப்படுகின்றது. இந்நடிப்பெனும் திரைச்சீலை கொண்டு வாழ்வோர் நட்பெனும் மாபெரும் கட்டிடத்தைக் கட்டியெழுப்ப முடியாதவர்களாகி விடுகின்றனர்// அருமை! பகிர்விற்கு மிக்க நன்றி!
பதிலளிநீக்குஅருமையான கருத்து ..
பதிலளிநீக்கு