விருதை விரும்பார் உலகில் யார் உண்டு! எண்ணமெல்லாம்
எழுத்தாக்குகின்றோம். அதை ஏற்பவர் யார்? எடுத்தாள்பவர் யார்? ஏதிது எம்மை
இம்சைப்படுத்துகின்றதே என்று எடுத்தெறிவார் யார்? புரியாது தான். ஆனாலும் உறக்கமின்று
உள்ளத்தை வெளிப்படுத்த கணணி விசைப்பலகையை தடவிக் கொண்டேதான் இருக்கின்றோம். காட்சிப்
படுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். ஏற்பாரும் உண்டு சட்டை செய்யாது போவாரும்
உண்டு.
என்ன இது வலை
உலகில் ஏதோ விருதொன்று உலாவுகிறதே ....
நினைத்தேன். அதற்குள் எனக்கும் ஒரு விருது என் முகநூலை தட்டியது. விட்டுவிட
முடியுமா? விருதாச்சே. விரும்பி ஏற்றேன். இதை எனக்காய் வழங்கி மகிழ்ந்தவர் கோவைக்
கவி. வழங்கியது மட்டுமா. ஏற்றுப் பின் கொடுக்க என்று எச்சரிக்கையும்
வைத்துவிட்டார். அது மட்டுமா என்னைப் பற்றி பிறருக்கும் எடுத்துரைக்க வேண்டும். அதற்கும்
சம்மதம். இது என்ன கல்லுடைத்து நார்பிழியும் வேலையா? எழுத்துத் தானே எம்மோடு
ஒட்டிக் கொண்ட பிறப்பல்லவா
விருது வழங்கியவர்
http://kovaikkavi.wordpress.com/
என்னைப்பற்றி
இலங்கை மண்ணில் ஏர் ஊர் என்னும் பெயர் மருவிய ஏறாவூர் என்னை பெற்றெடுத்தது.
வேலுப்பிள்ளை என்னும் தந்தையாரும்
பரமேஸ்வரி என்னும் தாயாரும் என்னுடல் உருவாக உதிரம் தந்தார்கள்.
ஊருக்காய்
உழைத்தார் என் தந்தை. என் வாழ்வுக்காய் உழைத்தார் என் தாய். நான்கு பிள்ளைகள்
நலமாக வாழ இருவர் வளமும் இணைந்ததனால், கல்வி தொடர்ந்தேன். பேராதனை பல்கலைக் கழகம் நான் பட்டம் சுமக்க இடம் தந்தது. தொடர்ந்து
கல்வியியல் டிப்ளோமா பட்டத்தையும் நுகேகொட பல்கலைக் கழகம் தந்தது.
தொடரும்
என் தமிழ் தாகம் தீர்க்க ஆசிரியர் தொழில்
என்னை அணைத்துக் கொண்டது. அன்பான மாணவர்களின் பாச மழையும், ஆத்மார்த்த தொழிலும்
திருமண பந்தத்தால் முறிவடைந்தது. ஜேர்மனிய மண் மீண்டும் வளர்ப்புத் தாயானது. மீண்டும்
மொழித் தாகம் ஜெர்மன் மொழியில் தவித்ததனால் கற்றேன். இங்கு கணவன் ஒரு மகளுடன் வாழ்கிறேன்.
ஆனாலும் மூச்சுக் காற்றை நிறுத்த முடியுமா? மொழி மேல் கொண்ட காதலை தவிர்க்க
முடியுமா? எழுதுகிறேன் ..... எழுதுகிறேன்......எழுதுகிறேன்....
பெற்ற விருதை யாருக்கு வழங்கலாம் என்றுநினைத்த போது, எம்மை நேசிப்பாரை
நாம் நேசிக்க வேண்டும் அல்லவா! தமிழோடு நான் வாழ்ந்ததற்கு அடையாளமாகவும் என்
தொழிலுக்கு அத்தாட்சியாகவும் இன்றும் எழுதி என்னை மகிழ்விக்கின்ற என் அருமை
மாணவர்கள் இருவர் வலையை அறியாதவர்கள், அவர்களை அறிய வேண்டும். அவர்கள் திறமைகள்
பாராட்டப்பட வேண்டும். ஊக்கத்தினால் அவர் திறமைகள் மேல் செல்ல வேண்டும் என்னும்
மனவிருப்பில் மனமகிழ்ந்து இவ்விரு வலைகளுக்கும் இவ்விருதை வழங்குகின்றேன்.
இவரின் இப்பதிவைப் படித்துப் பாருங்கள்
இவரின் இப்பதிவைப் படித்துப் பாருங்கள்
அடுத்து நான் கொடுக்க விரும்புபவர்
இவர் என் மாணவர் அல்ல. ஆனால், இவர் பதிவுகள் எனக்கு மிகப் பிடிக்கும்.
"தவறு செய்யாத மனிதனே இல்லை..தவறிலிருந்து
பாடம் கற்றுக்கொள்ளாதவன் மனிதனே இல்லை.." என்னும் இவர் கொள்கையும் நாட்டிற்க்கு
ஏதும் நல்லது நடக்காதா? உண்மை நின்றிடாதா? மனிதன் சிந்தனை மாறிடாதா? உலகம்
புத்துயிர் பெற்றிடாதா? என ஏங்கும் பலரில் ஒருவன். சுருக்கமாக, "உங்களில்
ஒருவன்" என்னும் சிந்தனையும் அருமை
மற்றையவர்கள் மிகப் பிரபல்யமானவர்கள். எப்பதிவு நான் இட்டாலும் முதலில்
ஓடிவந்து தமது கருத்துரையை வழங்கிச் செல்வார்கள். அவர்களுக்கே என் விருதை வழங்க
வேண்டும் என்று மிக ஆசைப்படுகின்றேன். நிச்சயமாக இவ்விருது அவர்கள்
பெற்றிருப்பார்கள் என்பது நிச்சயம். ஆனாலும் பல முறை விருது பெறுவது என்ன
கசக்குமா?
தாங்கள் விருது பெற்றதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்
நீக்குவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குதகுதியானவரால் , தகுதியானவருக்கு வழங்கப் பெற்ற விருது.
எனக்கும் இவ்விருதினை வழங்கியிருக்கிறீர்கள்
எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை
நன்றி நன்றி சகோதரியாரே
நன்றி சார்
நீக்குநன்றி... நன்றி... மிக்க நன்றி...
பதிலளிநீக்குவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி சார்
நீக்குவிருது பெற்றதற்கும் பகிந்தளித்தமைக்கும் இனிய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குGlad
பதிலளிநீக்குVaalka
valarka.
பெற்றேன். பகர்ந்தேன்
நீக்குஇனிய வணக்கம் சகோதரி...
பதிலளிநீக்குவிருது பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
இன்னுமின்னும் பல விருதுகள் உங்களை வந்தடைய
என் விருப்பங்கள்...
அன்புள்ள அக்கா.. வணக்கம்...
பதிலளிநீக்குஎன்னையும் ஒரு பொருட்டாய் மதித்து, எனக்கும் விருதளிக்க வேண்டும் என நினைத்த தங்களின் அன்பான சிந்தனைக்கு, எனது பணிவான நன்றிகள்.. தங்களின் திருக்கரங்களால் இவ்விருதினை பெருவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் அக்கா... பெரும் ஜாம்பவான்களுடன் இவ்விருதினை பகிர்ந்து கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்....
மிக்க நன்றி அக்கா...
பி.கு: பணி புரியும் இடத்தில் வேலை சற்று அதிகமாய் இருந்ததால், வலைப்பூ பக்கம் வர இயலவில்லை.. நீண்ட இடைவெளிக்கு பின், மறுமொழி அளிக்கும் இந்த பொடியனை மன்னிக்க வேண்டுகின்றேன் அக்கா...
விருது பெற்றமைக்கு
பதிலளிநீக்குமனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
சிறந்த பதிவர்கள் பட்டியலில் என்னையும்
இணைத்தமைக்கு மிக்க நன்றி
தங்கள் சிறந்த எழுத்துப் பணித் தொடர
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்