• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 10 மே, 2014

    உருத்தந்த பிரம்மா



     தாயின் பெருமை உலகே உணர்ந்தாலும்
    இந்நாளில் அப்பெருமை ஓங்கி ஒலிக்கிறது

    வலி தாங்கி வாழ்வளித்த தெய்வமே 
    என் முதல் மொழி தமிழ் மொழியானால்
    என் உதட்டின் முதல் சொல் அம்மா அல்லவா
    பூவிற்கு மணம் உண்மையானால்
    என் வாழ்வுக்கு வளம்  நீங்கள் அல்லவா
    படைப்பின் கடவுள் பிரம்மாவானால்
    என்னைப் படைத்த பிரம்மா நீங்கள்
    எனைக் காக்கும் கடவுளும் நீங்களே
    பாலைவனக் குடிநீர்  நீங்கள்
    கோடைகாலக் குளிர்நீர் நீங்கள்
    மாரிகால வெப்பமூட்டி நீங்கள்
    வருவாய் காணாத் தொழிலாளி நீங்கள்
    கொட்டும் மழைக்கு ஈடாமோ நீங்கள்
    என்னில் கொட்டிய பரிவுக்கு
    விளைநிலம் கண்டு பயிர் செய்வான் உழவன் – என்
    மனம் கண்டா பாசத்தை கொட்டுகின்றீர்கள்
    உங்கள் மடியே எனக்குப் பஞ்சணை
    என் மனத்தின் கவலை நீக்கும் அரியணை
    இடியைத் தாங்கி மழை தரும் மேகம் போல்
    என் உதையைத் தாங்கி உறவு தந்த உத்தமி
    வானத்தின் எல்லை தெரிவதில்லை – உங்கள்
    பாசத்தின் அளவும் சொல்லக் கணக்கில்லை
    வெட்டிப் பொலிவானது வைரம் – உங்களை
    ஒட்டிய வாழ்வில் தரமானேன் நான்
    வகைவகை உணவுதான் உண்டாலும்
    உங்கள் வாயமுதுக்கு ஈடாமோ
    தாய்பாலை மிஞ்சிய சத்துணவு எங்குண்டு
    தாய்ப்பாசத்திற்கு மிஞ்சிய அன்பு எங்குண்டு
    தாலாட்டும் இதமான சூடும் தந்ததுங்கள் கருவறை
    காலாட்டிக் கையாட்டிக் களித்திருந்த துங்கள் கருவறை
    வாடகை இன்றி வாழ்ந்த இடமது கருவறை – என்
    வாழ்க்கையிலே எங்குமில்லை இதுபோல் தனியறை
    சூரியன் உள்ள காலம் வரை நீங்கள் வாழவேண்டும்
    சந்திரனின் ஒலி போல் தேகம் ஒளிரவேண்டும்
    பூமியின் ஈர்ப்பு சக்திபோல் எம்மிடையே ஈர்ப்பு வேண்டும்
    என் தாய்போல் யாருமில்லை என்னும் நேசம் வேண்டும்
    என் வாழ்வுவரை நீங்கள் என்கூட வர வேண்டும்
    என் வாழ்வின் வசந்தமெல்லாம் களித்திருக்க வேண்டும்



    அனைத்து அன்னையர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்






    6 கருத்துகள்:

    1. தாயைப் போற்றக்கூடிய அருமையான கவிதை. பொருத்தமான தலைப்பும் கூட.
      தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் சகோதரி.

      பதிலளிநீக்கு
    2. அன்னையர் திரு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

      பதிலளிநீக்கு

    3. அனைத்து அன்னையர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    4. சிறப்பு...

      அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

      பதிலளிநீக்கு
    5. அருமையான கவிதை.
      உங்களுக்கு என் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு
    6. அனைத்து அன்னையர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...