• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 10 மார்ச், 2013

    மழை


                          


    ஆகாய அணைக்கட்டை 
    அடித்து உடைத்தது யார்?
    அடைமழை பொழிகிறதே 
    அட்டகாசமாய் இடிஇடிக்கிறதே
    வானப்பந்தலிலே வெள்ளிச் சிதறல்களை 
    மூட்டை கட்டிவிட்டது யார்?
    முடிச்சவிழ்ந்து வெள்ளிக்கம்பிகளாய்
    விரைகிறதே மண்ணோக்கி

    வானத்து மழையை வரவேற்க
    வண்ணமயில்கள் விரித்தன தோகை
    அகவலில் ஆனந்தம்
    ஓடையெங்கும் தவளைகளின் ஒய்யார ஓசை
    சில்லூறுகளின் சிங்கார ஓசை

    தத்தோம் தித்தோம் தகதோம்
    தகரங்கள் எங்கும் தரிகிடத்தோம்
    சளசள படபட கடகடவெனவே
    சாரல்கள் எங்கும் கூடங்கள் தோறும்

    விரியுங்கள் குடையை முதியவரே
    விட்டுவிடுங்கள் இளையவரை 
    வானம் தெளிக்கும் பன்னீரால் 
    வாழ்த்துப்பெற வழிவிடுங்கள்.



    9 கருத்துகள்:

    1. வானம் தெளிக்கும் பன்னீரால்
      வாழ்த்துப்பெற வழிவிடுங்கள்

      அழகாய் பொழிந்த மழைக் கவிதைக்கு வாழ்த்துகள்..

      பதிலளிநீக்கு
    2. கோடை மழை அருமையாய்ப் பொழிந்தது.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. இங்கு மழையோடு பனியுமல்லவா சேர்ந்தடிக்கிறது

        நீக்கு
    3. ////வானப்பந்தலிலே வெள்ளிச் சிதறல்களை
      மூட்டை கட்டிவிட்டது யார்?
      முடிச்சவிழ்ந்து வெள்ளிக்கம்பிகளாய்
      விரைகிறதே மண்ணோக்கி///

      அழகு அழகு...
      பூட்டி வைத்த வெள்ளிக் குமிழ்கள்
      ஒருசேர்ந்து வெள்ளிக் கம்பிகளாய்
      மின்னல் உருவில்...
      உவமான மிக அருமை சகோதரி...

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. மழைக்கு நான் தந்த உவமையை விட மின்னலுக்கு உங்கள் உவமை குறைந்தது அல்ல . வாழ்த்துகள்

        நீக்கு
    4. மிகவும் அற்புதமான கவிதை.

      //வானம் தெளிக்கும் பன்னீரால்
      வாழ்த்துப்பெற வழிவிடுங்கள்.//

      சிறப்பாக இருக்கு.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...