"ஆத்திரம் அறிவைக் கெடுக்கும்'', "பதறிய காரியம் சிதறிப் போகும்''. பிரச்சினையை எப்படி அணுகுகின்றோம், சமாளிக்கின்றோம், அதை எப்படி அநுபவித்து மீளுகின்றோம் என்பதிலேயே எல்லாம் அடங்கியிருக்கின்றது. மனதினாலே எல்லாம் ஆகும். மூளையே மனமாகச் சக்தி வடிவம் பெறுகின்றது. எது நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. விதையிலிருந்து செடி முளைப்பது போல எண்ணத்திலிந்து செயல் பிறக்கின்றது. எண்ணத்தைப் புரிந்து கொண்டு உள்ளத்திலிருந்து எண்ணத்தைப் பிரித்தால், எளிதான விடிவு கண்டுவிடலாம். திடீரெனத் தோன்றும் பதற்ற நிலையில் சுயஉணர்வு குறைந்துவிடும். என்ன நடந்தாலும் புரிந்து கொள்ள முடியாது கவனம் சிதறுண்டு போகும். பதற்றம் நீங்கிய பொறுமையே முதலில் கையாளப்பட வேண்டியது. குறிக்கோளும் மகிழ்ச்சியும் பொருள் என்று கொள்ளாது எது நன்மை வளைவிப்பது என்று எண்ணுபவனே பொறுமைசாலி. அப்பொறுமை மூலம் பிரச்சினையை நீக்கிவிடலாம். அமைதியாக இருக்கும் போது ஆலோசனை மூலம் எண்ணங்களை மாற்றியமைக்கலாம். பொறுமை இழந்து கோபப்படும்போது நாம் நிதானம் இழக்கின்றோம். இரத்தக் கொதிப்பு அதிகரிக்கின்றது. கைகால்கள் உதறுகின்றன. நமக்கு நாம் கொடுக்கின்ற தண்டனைதான் கோபம்.
எனவே பொறுமை, நிதானம், பதற்றமற்ற நிலை போன்றவையே மனித வாழ்க்கையை சீரான பாதையில் வழிநடத்திச் செல்ல உறுதுணையான காரணிகளாக அமைகின்றன.
எனவே பொறுமை, நிதானம், பதற்றமற்ற நிலை போன்றவையே மனித வாழ்க்கையை சீரான பாதையில் வழிநடத்திச் செல்ல உறுதுணையான காரணிகளாக அமைகின்றன.
''..நமக்கு நாம் கொடுக்கின்ற தண்டனைதான் கோபம்...''
பதிலளிநீக்குதண்டனை கொடுக்காமல் வாழப் பழகுவோம்.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நமக்கு நாமே கொடுக்கும் தண்டனை தான் கோபம் என்பது.
பதிலளிநீக்குஅருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
உண்மை தான்... நம்ம திருவள்ளுவர் சும்மாவா "வெகுளாமை" என்று சினத்தைப் பற்றி ஒரு அதிகாரமே எழுதி உள்ளார்...? அதுவும் "வாய்மை" அதிகாரத்திற்குப் பின்...!
பதிலளிநீக்கு