உந்தியில் தங்கியபோது
உந்தியே வரம்பு
உருண்டதும் உதைத்ததும்
கருவறையுள் கட்டுப்பாடு
உதித்ததும் பூமியில் சுதந்திரம்
உருவாகும் உயர் வாழ்வுக்கு
மனக் கட்டுப்பாடு
சந்ததி காத்திடும் தாய்மடி கட்டுப்பாடு
சரித்திரம் புகழ்ந்திட கட்டாய நிலைப்பாடு
சிந்துகள் பாடும் சிட்டுக்குருவி வாழ்வில்
மிஞ்சிடா துலகில் வஞ்சியாய் வாழ்ந்திட
வாழ்வின் கறை சுமக்க வழி விடாத
பெற்றோர் கட்டுப்பாடு
விலங்குகள் சுதந்திரம் காட்டினுள்ளே- அவை
வீதிக்கு வந்தால் இழப்பது வாழ்வு
மீன்களின் சுதந்திரம் நீரினுள்ளே- அவை
நீரைத் தாண்டினால் நிலைக்கா துலகில்
சொற்சுதந்திரமென நாவடக்க மறந்தால்
சொல்லுக்கேது சுதந்திரம்
புலனடக்கம் புரியாதுலகில் தறுதலையாய் வாழ்ந்தால்
குலநடுக்கம் குலத்தையே அழிக்கும்
கட்டவிழ்ந்த மந்தைகளாய் மேய்ப்பாரிழந்தால்
கெட்டழியும் வாழ்வு கெடுத்து விடும் சுதந்திரம்
வாழ்வை உயர்த்த வழிகாட்டும் சுதந்திரம்
வானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்
சீரழியாது வாழ்வைச் சிறப்பாக்க
பேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு
01.12.2011 முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது
01.12.2011 முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது
அழகு கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
//வானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்
பதிலளிநீக்குசீரழியாது வாழ்வைச் சிறப்பாக்க
பேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு//
வாழ்வு சிறக்க வழமான கருத்துக்கள்.
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅழகிய முத்தான சொற்களால் கோர்க்கப்பட்ட
பதிலளிநீக்குஇனிய கவிதை..
கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரமே
பதிலளிநீக்குஉண்மையான சுதந்திரம் என்பதை
மிக நேர்த்தியாக விளக்கிப் போகும் படைப்பு அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2
அழகான வார்த்தை செறிவுடன் கூடிய கவிதை
பதிலளிநீக்குசுதந்திரத்தை வரம்பு மீறாமல் நடந்து
பதிலளிநீக்குதக்க வைத்து கொள்வது பற்றி அழகாக்
கூறி உள்ளீர்கள். அருமை. வாழ்த்துக்கள்.