சித்திரத்தில் கறை படிந்தது போல் அந்தச் சின்னவன் வதனம் களை இழந்ததும் ஏன்? சிட்டுக்குருவி போல் வீட்டடைச் சுற்றிச்சுற்றி வந்த அவன் பாதங்கள், ஒரு அறையினுள் அடைபட்டுக் கிடந்ததும் ஏன்? வீடு முழுவதும் கலகலக்கும் அவன் ஓசை, இன்று நிசப்தமாகியதும் ஏன்? துருதுருவென்ற பார்வை ஒரு புள்ளியை விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததும் ஏன்? இத்தனையும் ஏன்? மூடப்பட்ட அறையினுள் தாயின் மேலங்கியை அணைத்தபடி தனது அறைக்கட்டிலில் சுருண்டபடியும் கண்கள் மட்டும் எதையோ நினைத்தபடியும் நிலைக்குத்தி நின்றன. மெல்லக்கதவு திறந்து நுழைந்த மருத்துவரை ஓடிவந்து மல்யுத்தக்காரனைப்போல் இரு கைகளாலும் மாறிமாறித் தாக்கினான், ரகு.
அவன் தாய் சாந்தமாய் இருப்பதனாலோ சாந்தி என்று பெயர் பெற்றாள். அவன் உருவாகக் கரு என்னும் ஆய்வுகூடம் சுமந்தவள். உடலுக்குத் தோல்போல் ரகு வளரக் காத்துநிற்பவள். தாலி சுமக்கக் காரணகர்த்தா கடமைக்குத் துணையாய்க் காலமும் கழித்தாள். கணவன் வருவாய்க்கு அவள் கூட்டல் கணக்கு. அவன் இன்பத்திற்கும், உறவினர் நம்பிக்கைக்கும் அவள் பெருக்கல் கணக்கு. இவ்வாறே குடும்பத்தின் முதுகெலும்பு என்னும் படி கணவன் முழு நம்பிக்கையின் பெட்டகமானாள். நம்ப வைத்தாள்.
வேலைக்குச் சென்றவள் திரும்பும் நாழி கடந்ததால், மூளைக்குள் பிரளயம் வந்தது போல் கலங்கினான், ரவி. அவன் மூளையின் இதயத்தின் முக்கால்ப் பகுதி சாந்தியல்லவா! அவன் இதயத்தில் மகுடம்;;; சூட்டியல்லவா அவளை வைத்திருக்கின்றான். திடீரென ஒரு எண்ணம் பளீச்சிட்டது. அவள் கைத்துணையான கைத்தொலைபேசியுடன் தான் சென்றாளா! என்று அறியும் அவாவில் அவள் பீரோவைத் திறந்தான். அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களிடையே மோப்பம் பிடிக்கும் நாயானது, அவன் விரல்கள். கைத்தொலைபேசியுடன் இணைந்தே இந்த ஆச்சரியமும் அவனுக்குக் காத்திருந்தது. மனைவி என்னும் அந்தஸ்துக்கு ரவியும், காதல் என்னும் போதைக்கு அந்தக் கடிதக் காதலனும் இருப்பதை, விரசமாய் அவளால் எழுதப்பட்ட அந்தக் கடித அத்தாட்சி காட்டி நின்றது. விறுவிறு என்று ரவியின் இரத்தக் கொதிப்பு மேலோங்கியது. மனிதன் இரு முகத்தில் மறைந்து நிற்கும் மறுமுகம் மட்டுமே இப்போது வெளிப்பட்டது. பதுங்கிய புலியானான். கதவுதிறக்கும் ஓசை கேட்டு ஓடிய மகனை உச்சி மோந்தாள், சாந்தி. காலதாமதத்தின் காரணம் அறியும் ஆவல் ரவியிடம் எள்ளளவும் இருக்கவில்லை. இன்று ரவியின் சமையலைச் சுவை பார்த்த சாந்தியிடம் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக வாகனம் அண்டை வந்தடை என்று கட்டளையிட்டு வெளியே சென்றான். அவளின் முகத் திரையைக் கிழிக்கும்படி உத்தரவிட்டபடி அவன் இதயம் அளவுக்குமீறித் துடித்துக் கொண்டிருந்தது.
மகனுடன் கீழே வந்த சாந்தி, அவனைப் பின் இருக்கையில் இருத்திப் பாதுகாப்புப்பட்டி அணிவித்தாள். அவளுக்காய் முன் இருக்கைக் கதவு திறக்கப்படவில்லை. கதவினுள் இருந்தவண்ணம் தனது கையில் இருக்கும் கடிதத்தை வீட்டினுள் வைத்துவரும்படி கட்டளையிட்டான். கடிதத்தைப் பெறுவதற்காக தன் கழுத்துடன் இணைத்தே கரத்தையும் நீட்டினாள். திடீரெனச் சாளரம் மேலெழுந்தது. அதனுள் பட்டென அவளது கழுத்து சிக்கிக் கொண்டது. அலறத் தொண்டை இடம் தரவில்லை. ஆதரவு கேட்டு உயிர் நிற்கவில்லை. ஓவென்று அலறிய மகன் மயக்கமானான்.
பொய்மைக்கு இங்கு மரணதண்டனை. நம்பிக்கைத் துரோகத்திற்குச் சாவுமணி. சந்தர்ப்பங்களாலும் சூழ்நிலைகளாலும் மனிதன் மிருகமாகின்றான். தன்னைத் தாக்கவருபவரைக் கண்டாலே மிருகம் துடித்தெழும். அழகாய் நடித்த அந்தப் பெண்ணை அழித்தே ஆகவேண்டும் என்று ஆத்திரம் கொண்ட அவன் செய்கை, இப்படியான பெண்களுக்கு எச்சரிக்கை. ஆனால் அநாதரவான அந்தக் குழந்தைக்கு ...........
வாசகர்களே இக்கதை பற்றிய உங்கள் கருத்துக்களை இதில் பதிவிடுங்கள்.
நல்ல கதை.
பதிலளிநீக்குஉண்மை கசக்கிறது.
அதுதான் சொல்லிவிட்டீர்களே மனிதனும் மிருகமாவான் என்று. அதை நீங்கள் நியாயப் படுத்தவில்லையே.
பதிலளிநீக்குபடித்துமுடிக்கையில் நெஞ்சம் பதறிப்போனது
பதிலளிநீக்குசரியாவதற்கு சிறிது நேரம் ஆனது
தங்கள் எழுத்து நடையில் மயங்கி
மிக இயல்பான சந்தோஷமான மனத்துடன்
படித்துக்கொண்டே வந்ததாலோ என்னவோ
இறுதிவரிகள் பெரிய அதிர்சியைக் கொடுப்பதுபோல்
இருந்தது.கதை கொஞ்சம் சங்கடப்படுத்தினாலும்
தங்கள் எழுத்து நடை மீண்டும் மீண்டும் படிக்கத்
தூண்டிப்போகிறது.மூன்று முறை படித்துவிட்டேன்
தொடர வாழ்த்துக்கள்
உண்மையில் நடந்த சம்பவம் என்றால் மிகவும் துயரமானதே;
பதிலளிநீக்குஆதரவற்ற அந்தக்குழந்தையின் நிலை பரிதாபத்திற்குரியது தான்.
சில சூழ்நிலைகளில் சில மனிதர்கள் இதுபோல மிருகமாகிவிடுவதும் இயற்கையே. என்ன செய்வது?
=======
தங்களிடம் ஒரு சந்தோஷச்செய்தி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தாங்கள் விருப்பப்பட்டால் தங்களின் மின்னஞ்சல் முகவரியை என் முகவரியான valambal@gmail.com க்கு அனுப்பி வையுங்கள். vgk
கதை படித்து மனது வலிக்கிறது. பகிர்வுக்கு நன்றி சகோதரி!
பதிலளிநீக்குநம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."
G.M Balasubramaniam சொன்னது//
பதிலளிநீக்குகதையே அதை நியாயப்படுத்துவதாகத் தானே இருக்கிறது அய்யா.
எவ்வளவோ மனைவியைத் தாங்கிய கணவன். மனைவியையே அழிக்கும் நிலைக்கு ஆளாகின்றான் என்றால் அதுவே மனிதனின் மறுபக்கம் தானே
மிக்க நன்றி அய்யா
பதிலளிநீக்குவை.கோபாலகிருஷ்ணன் சொன்னது//
பதிலளிநீக்குபொதுவாக வாழ்வியல் இலக்கியத்தில் உண்மைச் சம்பவங்களே எழுதுகின்றேன். இவற்றைப் பார்க்கும் உள்ளங்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கட்டும் என்பதே எனது நோக்கமாகும் .மிக்க நன்றி சார்
Ramani சொன்னது…//
பதிலளிநீக்குமிக்க நன்றி ரமணி சார். சில உண்மைகள் எம்மால் சகிக்க முடியாமல்தான் இருக்கின்றன. ஆனால் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
திண்டுக்கல் தனபாலன் சொன்னது…//
பதிலளிநீக்குவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து கொள்ளுங்கள்
மிகவும் வருந்தத்தக்க விஷயம். நல்லவர்கள் என நாம் நினக்கும் சில மனிதர்களின் மறுபக்கம் எவ்வளவு கொடூரமாக இருக்கு??
பதிலளிநீக்குநல்லதொரு பதிவு. உண்மையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது வேதனைதரும் உண்மை. எந்தவொரு பிரச்சனைக்கும் பலவிதமான தீர்வுகள் எட்டப்படலாம்.அவசரப்பட்ட பழிவாங்குதல்களும் கொலைவெறியும் சிக்கல்களை மேலும் சிக்கலாக்கவே செய்யும்.
பதிலளிநீக்குஅம்பலத்தார் சொன்னது…//
பதிலளிநீக்குதிடீரென சிலர் தம்மை அறியாமல் கோபப்படுகின்றார்களே. அதற்கு என்ன காரணம் என்று விளங்குவதில்லை. இரத்தத்தில் இருக்கும் கோளாறாக இருக்கலாம் என்று நம்புகின்றேன். பழிவாங்கும் உணர்வு எம்மவர்க்கு அதிகம் என்று நினைக்கின்றேன். ஐரோப்பியர்கள் பிடிக்கவில்லை என்றால் சாதாரணமாகப் பிரிந்து பின் ஏதாவது தேவை ஏற்படும் போது பிரிந்தவருக்கே உதவி செய்கின்றார்கள். இப்படிப் பலரை நான் பார்த்திருக்கின்றேன். எங்கள் உஅவகத்திர்க்கு வந்த பலருடன் உறவாடியிருக்கின்றேன் .
இதைத்தான் சொல்வது மனிதனின் மறு பக்கம் என்பது. ராம்வி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி
பதிலளிநீக்குகதையை படித்தவுடன் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும் இந்த தண்டனை தேவைதான் இம்மாதிரி பெண்களுக்கு. தங்களின் கதையின் நடை அற்புதம். மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது. நன்றி அருமையான கதையை பகிர்ந்தமைக்கு.
பதிலளிநீக்கு