• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 13 டிசம்பர், 2011

    தலைப்பாகை


                                                       
                              மோவாயில் முறுக்கு மீசையும், தலையிலே தலைப்பாகையும், தோளிலே சால்வையும் அணிந்து வரும் கம்பீரத் தமிழன் எமது கலாச்சார பாரம்பரியத்தை படம் பிடித்துக்காட்டுகின்றான். காலத்தின் மாறுதலால், கலாச்சாரக் கலப்பினால், அந்நிய மோகத்தினால் நாம் தேசிய ஆடைகளை மறந்து அல்லது மறுத்து காலத்திற்கேற்பக் கோலம் மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனாலும் எமது கலாச்சார நிகழ்வுகளில் அதை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது பெருமைப்படத்தக்கதாக இருக்கின்றது. தற்பொழுது திருமணவீடுகளில், மணமகன், தோழன் போன்றவர்களும், திருமணத்தின் போது மாமன் தேங்காய் உடைக்கும் போது கட்டுகின்ற இந்தத் தலைப்பாகை என்ற சொல்லானது முண்டாசு, தலைப்பா, தலைக்கட்டு என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.                    
                             
                    ஆரம்பகாலப்பகுதியில் தமிழர்கள் தலைப்பாகை அணிந்து கொண்டு நடமாடிய விபரங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆனாலும் இது வழக்கு ஒழிந்து போனாலும் அதனை மறவாமல் இருப்பதற்காகத் தமிழர்கள் திருமணவீடுகளில் இதைக் கைக்கொள்ளுகின்றார்கள்.

                                        இத்தலைப்பாகையானது தலையில் வந்து அமர்ந்ததன் உண்மைக்காரணம் என்ன என்பதை என் தேடல் மூளை தேடித்தவித்த பின் அதற்கான விபரத்தையும் தெரிந்து புரிந்து பிறர் தெரியச் செய்ய விழைந்தது. மூளைக்குத் தேவையான கதிர்வீச்சுக்கள் வெளியேறாமல் இருப்பதற்காகவே இத் தலைப்பாகை அணியப்படுகின்றது. மூளை என்பது எமது உடலின் மூலஸ்தானம். அதாவது எமது உடலின் Head of the Department. இதில் ஏதாவது பிழை ஏற்பட்டால், வாழ்நாள் முழுவதும் கடினத்தை அநுபவிக்க வேண்டியதுதான். எமது உடலினுள் ஞானசக்தி, போகசக்தி என்பன உண்டு. ஞானசக்தி மூளையிலும் போகசக்தி அடிவயிற்றிலும் இருக்கின்றது. எனவே இச் சக்திகள் வெளியேறாமல் இருக்க தலைப்பாகை அணிவது வழக்கமாக இருந்தது. இது கோயில் கோபுரம் போன்ற நிலையில் கட்டப்பட வேண்டும். கூராகக் கட்டும் போது மனிதசக்தியும் பரசக்தியும் நேராக அமையும். அதாவது பூமியிலுள்ள சக்தி காலினூடாக உடலை வந்தடைந்து மனிதசக்தியாகின்றது. இது எமது உடலினுள் உள்ள சக்தியாகும். அத்துடன்; வெளியுலக சக்தியாகிய பரசக்தி நேராக  இணைகின்றது. இதுவே இந்த தலைப்பாகை அணியும் குறிக்கோளாகக் கொள்ளப்பட்டது. எதுவும் காரணம் இல்லாமல் செய்யப்படவில்லை. காரணம் புரியாமலே நாம் காலத்தைக் கழிக்கின்றோம். 
             
                                              எப்போதோ பாக்யா என்னும் புத்தகத்தில் நான் வாசித்து ரசித்தவிடயத்தை இங்கு பகிர்ந்து கொள்ளுகின்றேன். குதிரையின் மீது போர்வீரன் அமர்ந்திருக்கும் சிலை உள்ளதல்லவா. அச்சிலையில் பலவேறு வடிவங்கள் இருக்கின்றன. குதிரை முன் இரு கால்களையும் தூக்கியவாறு சிலை அமைந்திருந்தால் அதன் மேல் அமர்ந்திருப்பவர் சண்டையின்போது இறந்து விட்டதாக  அர்த்தமாகின்றது. குதிரை ஒரு காலை மட்டும் தூக்கிக் கொண்டிருந்தால், போரில் காயம் பட்டு பின்னர் இறந்ததாக அர்த்தமாகின்றது. குதிரை எந்தக் காலையும் தூக்காமல் இருந்தால் அவர் இயற்கையாகவே மரணம் அடைந்தார் என்று அர்த்தமாகின்றது. எனவே காரணத்தோடுதான் பல விடயங்கள் நடைபெறுகின்றன. அவற்றை அறிந்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மத்தியில் வளர வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கையில் எதற்கும் ஆமாப்போடும் கோழைத்தனம் விரட்டியடிக்கப்படும்.

    14 கருத்துகள்:

    1. //எனவே காரணத்தோடுதான் பல விடயங்கள் நடைபெறுகின்றன. அவற்றை அறிந்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மத்தியில் வளர வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கையில் எதற்கும் ஆமாப்போடும் கோழைத்தனம் விரட்டியடிக்கப்படும்.//

      இந்தத் தங்கள் கருத்துக்கு மட்டும் நான் ஆமாம்போட விரும்புகிறேன், அதுவும் கோழைத்தனமாக இருக்குமோ என்னவோ?

      //அதாவது எமது உடலின் ர்நயன ழக வாந னுநியசவஅநவெ.//

      4 ஆவது வார்த்தை முதல் 7 ஆவது வார்த்தை வரை ஒன்றுமே புரியவில்லையே!

      சரி, சரி, புரிந்து தான் என்ன செய்யப்போகிறேன்? ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாவோடு போச்சு என்ற பழமொழி போல, அந்த 4 வார்த்தைகளையும் நான் படிக்கும்போது சாய்ஸில் விட்டு விட்டேன்.

      நல்ல பதிவு. வாழ்த்துக்கள். vgk

      பதிலளிநீக்கு
    2. எப்போது தங்கள் பதிவைப் படித்தாலும் அதில்
      நிச்சயம் இதுவரை அறியாத ஒரு அரிய கருத்தும்
      நம் முன்னோர்களின் பழக்கவழக்கங்களில்
      உள்ள சிறந்த தன்மைகளை விஞ்ஞானப் பூர்வமாக
      சொல்லிச் செல்லும் விதமும் இருப்பது
      மகிழ்வூட்டுவதாகவும் பெருமைப் படத்தக்கதாகவும்
      தாங்கள் ஒவ்வொரு பதிவுக்கும்
      எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் புரிகிறது
      மனம் கவர்ந்த பதிவு
      தொடர வாழ்த்துக்கள்
      த.ம 2

      பதிலளிநீக்கு
    3. முதல் போணி, பண்ணலாமா வேண்டாமான்னு யோசிச்சு போட்ட பின்னூட்டம். அதிகமா பின்னூட்டம் வரல்லைன்னா என்னைத்திட்டாதீங்க. சும்மா ஒரு ஈமெயில் தட்டிவிடுங்க. ஒரு மணி நேரத்துல 100 பின்னூட்டம் வரவழைக்க ஒரு டீமே வச்சிருக்கேன். பூந்து விளையாடீடுவோம்.

      நிற்க, உக்கார்ந்தாலும் பரவாயில்லை, "தலைப்பா" பதிவ படிச்சவுடனே தலைப்பாகட்டு நாய்க்கர் பிரியாணி ஞாபகத்துக்கு வந்துட்டுது. சாப்பிட்டுட்டு வந்து மீதி கமென்ட்டைப் போடுகிறேன்.

      பதிலளிநீக்கு
    4. வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…//

      அமாப் போடும் அனைத்தும் கோழைத்தனம் அல்ல. அதன் உண்மையை அறிந்து கொள்ள மேலும் தேடலில் இறங்க வேண்டும். அது அறிவை மேலும் வளம் படுத்தும். அடுத்து நீங்கள் சொல்லியதைத் திருத்தி விட்டேன். ௪ வார்த்தைகளையும் தெரியாமலேயே விட்டுவிட்டேன் என்று சொல்வது வேதனையைத் தருகின்றது. ஏனென்றால், ஒன்றை மனம் வைத்துப் படித்தால் அதில் ஏதாவது விளங்கவில்லை என்றால் திருப்பிக் கேட்கும் தன்மை இருக்க வேண்டும். ஆசிரியர் கற்பிக்கும் போது விளங்காததை கேட்காமல் விட்டால் விளக்கத்தை எங்கிருந்து நாம் பெறுவது. அதுபோலவே எழுதியவர் எழுதிய நோக்கத்தை எப்படி அடைய முடியும். இருந்தாலும் விளங்கியதை மட்டுமாவது எடுத்துக்கொண்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. தொடருங்கள் .

      பதிலளிநீக்கு
    5. மகேந்திரன் சொன்னது…//

      வாருங்கள் சகோதரன். விளக்கத்தை உள்வாங் கியமைக்கு மிக்க நன்றி

      பதிலளிநீக்கு
    6. Rathnavel சொன்னது…//

      நன்றி அய்யா

      பதிலளிநீக்கு
    7. Prof. DrPKandaswamyPhD சொன்னது…//

      நகைச் சுவையாக இருந்தாலும் நல்ல ஆலோசனை தந்திருக்கின்றீர்கள் . நன்றி

      பதிலளிநீக்கு
    8. நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது//


      வருகைக்கு மிக்க நன்றி. ம் என்ற வார்த்தைக்குள் என்ன அடங்குகின்றதோ

      பதிலளிநீக்கு
    9. Ramani சொன்னது//

      எப்போதும் உங்கள் வார்த்தைகளில் இருக்கும் ஊக்குவிப்பு எழுத்துலகுக்கு ஒரு வரம். நன்றி

      பதிலளிநீக்கு
    10. நம் பழக்க வழக்கங்களுக்கு விஞ்ஞான பூர்வமான தகவல்கள் அருமை,கெளரி.

      பதிலளிநீக்கு
    11. ரம்வியின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

      பதிலளிநீக்கு
    12. உங்கள் தேடல் மூளை தேடிக் கண்டுபிடித்த விஷயங்கள் தலைப்பாகை கட்டுவதன் காரணங்களை நன்றாகவே கற்பிதம் செய்கிறது. முன்னோர்களின் செயல்களில் நம்பிக்கை இருந்தால் அவற்றைத் தொடர்ந்து செய்யுங்கள். நிறையவே கற்பனை செய்து அதற்கு நீங்கள் சொல்லும் விளக்கங்கள் எல்லோராலும் ஏற்கக் கூடியதா என்பதையும் கற்பனை செய்திருக்க வேண்டும். மாற்றுக் கருத்து வெளியிடலாம்தானே.

      பதிலளிநீக்கு
    13. G.M Balasubramaniam சொன்னது//

      மிக்க சந்தோசம் ஐயா இதைத்தான் நான் விரும்புகின்றேன். நான் ஒன்றும் மேதாவி இல்லை . எல்லாவற்றையும் தேடும் ஊக்கம் உள்ளவள் மட்டுமே. உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் சொன்னால் அதையும் சீர்தூக்கிப் பார்க்கக் கூடியதாக இருக்கும் அல்லவா. ஆனால் அதை யாரும் செய்வதில்லையே. இப்படியான விடயங்களில் ஆர்வம் எனக்கு அதிகம் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். தயவுசெய்து உங்கள் கருத்துக்களையும் இதில் பதிவிடுங்கள்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...