• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 18 டிசம்பர், 2019

    மன ஓசை பாகம் 1











    ஒரு தாயின் உணர்வுகளின் போராட்டம் அதில் சுகமும் உண்டு சுமைகளும் உண்டு. சுகமாய்ச் சுமந்து வலியோடு வளர்த்து உயிராய் உரமாய் கனவாய் வெளியுலகில் நடமாட விட்ட உயிர்களில் பெண்கள் பிரச்சினைகள் ஒவ்வொன்றாய் தாமாக வெளிப்படுத்தும் விதமாகத் தருகிறேன். இவை அத்;தனை வடிவங்களையும் நீங்கள் வாசிக்கின்ற போது உங்கள் உணர்வுகளின் போராட்டம், உள் உணர்வுகளின் வெளிப்பாடு இருக்கும்.


    மூளையின் அடங்காத ஆட்டிப்படைப்பு
    ஆழமாய் குடைந்ததால்
    வார்த்தைகளைக் கட்டிப்போட முடியாமல்
    கணனிக்குள் புதைகிறேன்.

    அந்தரங்கங்களில் அற்புதம் தோன்றும்
    அழுக்குகளில் சொர்க்கம் பிறக்கும்
    தலையணை மந்திரம் தாரகமந்திரமாகும்
    இருட்டறை எதிர்காலத்தைக் காட்டும் - அங்கு
    மனிதப்படைப்பு புனிதமாய் உருவெடுக்கும்



    ஓருடலில் ஈருயிர் உலகில் நடமாடத் தொடங்கும்
    மார்பகங்கள் மெல்ல மெல்ல வீங்கும்
    தன்னுள் வளரும் உயிருக்கு மூளை
    உணவு தயார் படுத்தத் தொடங்கிவிடும்
    உடலமைப்பு பல மாற்றங்களைக் காட்டும்
    வயிறு மெல்ல மெல்ல பெருக்கும்
    முகத்தின் பொலிவு மெருகேறும்
    உடலினுள் ஒரு உயிர் தாயை
    மெல்ல மெல்ல உருசிக்கத் தொடங்க
    உண்பதெல்லாம் வாந்தியாய் வெளிவரத் தொடங்கும்
    குழந்தைக்கு தலைமயிர் வளர்கிறது என்று
    பாட்டியின் அனுபவக் குறிப்பு வெளிப்படுத்தும்

     




     நிமிர்ந்து அமருகின்றேன்
    நான் தாய்!
    நான் அம்மா!
    என் பலவீனத்தில் உன் தந்தையின் பலத்தில்
    உன் உயிர் என்னுள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.
    என் கரங்களைப் பிடித்தே உன் தந்தை நடக்கின்றார்
    என் பரிசத்தில் உன் பரிசத்தை உணரவிழைகின்றார்.

    அப்பா என்று மனதுள் இசைத்துப் பார்க்கின்றார்.
    எனை இறுகப் பிடித்தே என் இதயம் நுழைகின்றார்
    நன்றி என்றே காதுக்குள் காற்றாய் இசைக்கின்றார்
    பெருங் காரியம் செய்த உணர்வில் கர்வம் கொள்கின்றேன்



    எனக்குள் நீ உன் அங்கங்களைப் பொருத்துகிறாய்
    உன்னை நீயே வடிவமைக்கின்றாய்
    அற்புதமாய் உரிமைப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றாய்
    அடித்தாலும் உதைத்தாலும் ஆக்கினைகள் செய்தாலும்
    அன்போடு இரசிக்கும் அந்தமனம் தாய் மனமே



    எனக்குச் சுத்தமாய் புரியவில்லை
    வலிக்குக் கூடச் சிரிப்பு வருமா!!
    வலிக்கச் செய்வது யாரென்பதைப் பொறுத்ததே
    வலியின் வலிமை




    எனக்குள் வாழ வாழிடம் தேடிய நீ
    உலகுள் பிரவேசிக்க வழியையும் தேர்ந்தெடுத்தாய்
    அழுதேன் துடித்தேன்
    உனது அவசரமும் எனது துடிப்பும்
    அக்கண அகோர போராட்டம்






    என்னை விட்டு
    நீ வர எத்தனித்தாயா? இல்லை
    வரவுக்கு அஞ்சினாயா?
    காலம் போட்ட கணக்கை உன்னால்,
    கட்டுப்படுத்த முடியவில்லை.
    வெட்டிப்பிரித்து என் நெஞ்சிலே போட்டபோதே
    புரிந்தது தாய் ரசிக்கும் சங்கீதம்
    உடலின் உக்கிர வேதனையின் மருந்து
    பிய்த்து எடுத்த கலங்களின் காயத்தின்
    வேதனையை வென்ற சுகம் அத்தனையும்
    தன் மழலையின் முதல் ஆ, ஓ என்னும்
    சத்தம்தான் என்னும் உண்மை



    தொடரும் ..............................................................................



    15 கருத்துகள்:

    1. அற்புதம்..உணர்வுகள் வார்த்தைக்குள் நிறைந்து கவிதைக்கு உன்னதம் சேர்க்கின்றன.தொடர வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    2. பெண்களுக்கு மட்டுமே கிடைக்கும் பேறு தாய்மை.

      அதில் அவள் படும் சுகமான பல்வேறு சோகங்களைக் கவிதையாகப் பின்னிப்படைக்க முயன்றுள்ளீர்கள்.

      இந்த ஆக்கம் தங்கள் மூலம் இன்று சுகப்பிரஸவம் ஆகி வெளிவந்துள்ளது.

      கவிதையில் வசன நடையே அதிகம் இருப்பினும், நீங்கள் காட்டியுள்ள அந்தப் படங்களால் சுண்டியிழுக்கப்பட்டு நான் இங்கு உங்களிடம் வர நேர்ந்துள்ளது.

      பெண்களின் மறு ஜென்மமான பிரஸவத்தையே நேரில் பார்த்த உணர்வுகள் ஏற்பட்டன.

      பாராட்டுகள் + வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு
    3. சிறப்பு. கூறிய விதம் அருமை. (அலை ஓசை என்றவுடன் கல்கியின் எழுத்தைப் பற்றி என்று நினைத்தேன்)

      பதிலளிநீக்கு
    4. நன்றி சார். இதனைக் கவிதை என்று சொல்ல முடியாது. உள் உணர்வின் அலைகள்

      பதிலளிநீக்கு

    5. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு கருத்துக்கு மிக்க நன்றி

      பதிலளிநீக்கு

    6. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University அவர்களுக்கு மன அலைகளின் ஓசையையே இப்பதிவுகளில் வெளிப்படுத்துகின்றேன்.

      பதிலளிநீக்கு
    7. படிக்கும்போதே சிலிக்கிறது உடல். தொடர்கிறேன்...

      பதிலளிநீக்கு
    8. அருமையான எண்ணங்கள்
      அழகிய கைவண்ணம் - நல்லதொரு
      படைப்பாற்றலைப் பகிரும் படைப்பு!

      பதிலளிநீக்கு
    9. /" அடித்தாலும் உதைத்தாலும் ஆக்கினைகள் செய்தாலும்
      அன்போடு இரசிக்கும் அந்தமனம் தாய் மனமே

      எனக்குச் சுத்தமாய் புரியவில்லை
      வலிக்குக் கூடச் சிரிப்பு வருமா!!
      வலிக்கச் செய்வது யாரென்பதைப் பொறுத்ததே
      வலியின் வலிமை//

      மிக அழகான, உணர்வுப்பூர்வமான , சத்தியமான வரிகள்! குழந்தை பிறக்கும்போது மட்டுமா? கடைசி வரை ஒரு தாய் மனம் வலிகளை இப்படித்தானே பொறுத்துக்கொள்ளுகிறது!

      பதிலளிநீக்கு

    10. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா நீண்ட காலத்திற்குப் பின் என் வலைப் பக்கம் வந்திருக்கின்றீர்கள். அதற்கு இந்த படங்கள் காரணம் என்றால், மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இது நிச்சயமாக கவிதை அல்ல. இது ஒரு பெண்ணின் மன ஓசையே. அது உள்ளக் கிடக்கையை ஒளிவின்றி வார்த்தை ஜாலங்கள் இன்றி வெளிப்படுத்தும். கருத்துக்கு மிக்க நன்றி சார்

      பதிலளிநீக்கு
    11. KILLERGEE Devakottai பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

      பதிலளிநீக்கு
    12. கரந்தை ஜெயக்குமார் அவர்களே வருகைக்கு மிக்க நன்றி

      பதிலளிநீக்கு
    13. Yaathoramani.blogspot.com

      வணக்கம் ரமணி சார்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...