வரவும் செலவும் புண்ணியக் கணக்கில் பூர்த்தியானதனாலோ- எம்
உள்ளக் கணக்கைச் சித்திராகுப்தன் உடைத்தெறிந்தார்
புண்ணியங்கள் கூடிவிட்டால் இவ்வுலகின்பம் குறைந்திடுமென
நூல்களில் நான் கற்றதில்லை
தனக்காக வாழாத எவ்வுயிரும் இவ்வாழ்வில் தரணியில்
ஆண்டுகள் பல வாழ்ந்ததில்லை எனும்
இயமன் எழுதிய தீர்ப்பை யான் அறிந்ததில்லை
ஜடை பிண்ணி அழகு பார்த்த கண்கள் - பேத்தி
ஜடை போட்ட காட்சி காணவில்லை
சோறூட்டி வாழ வைத்த சொக்கத் தங்கம்
நீறாகிப் போன துயர் தீராத வடுவாக நிலைக்கிறது
வாழ்வின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
இறப்பொக்கவில்லையே!
காலம் தெரிந்திருந்தால் கடிவாளம் போட்டுத் தடுத்திருப்பேனோ
வேளை தெரிந்திருந்தால் வேலி போட்டுக் காவல் இருந்திருப்பேனோ
நோயில் படுத்திருந்தால் நோகாது பார்த்திருந்திருந்திருப்பேனோ
ஆறாத சோகத்திற்கு காரணம் தான் தேடுகின்றேன்
அழியாத நினைவுகளை ஆறப்போட்டுத் தவிக்கின்றேன்
சித்திரை வரும் பௌர்ணமியின் நித்திரை நான் செய்ததில்லை
தாயே! உன் விரல் தேடித் தவிக்கின்றேன்
நீ அணைத்தெடுக்கும் சுகம் உணர இன்று துடிக்கின்றேன்
தாயின் நினைவலைகளும் சுகமே
பதிலளிநீக்கு