02.05.2015 மண் சஞ்சிகை வெள்ளிவிழா
சஞ்சிகை என்றால் படைப்பாளர்கள் படைப்புக்கள், செய்திகள்
விளம்பரங்கள், தாங்கி வருவது என்று மட்டுமே தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள். சிறுவர்,
பெரியோர் என்ற பேதமின்றி படைப்புக்கள் இதில் பதியப்படினும் அவற்றை மீறிய ஒரு மனித
நேயப் பண்பும் இச்சஞ்சிகை அடங்கியிருக்கின்றது என்பதே மேலான உண்மை ஆகிறது.
இருபத்தைந்து வருடங்கள் மண் சஞ்சிகையின் ஆசிரியர் வ.சிவராசா அவர்கள் எவ்வித
உறுப்பினர்களும் இன்றி தனி மனிதனாய் இச்சஞ்சிகையை வெளியிடுகின்றார். உறக்கம்
தொலைத்து இவர் தேடிய, உதவிய உறவுகளோ அநேகம். ஐரோப்பிய மண்ணிலே வளம் படைத்தோரிடமிருந்து
வளம் பெற்று, அதனை இலங்கை மண்ணில் ஆதரவிழந்தோர் வாழும் இல்லங்களுக்கு உபகாரம்
பண்ணி, அவ்விபரங்கள் அத்தனையையும் எவ்வித ஒழிவு மறைவுமின்றி வெளிப்படையாக
சஞ்சிகையில் வெளியிட்டு அளப்பெரிய சாதனை படைத்து வருகின்றார். இவ் இல்லங்களில் வாழும்
அனாதைச் சிறார்கள் தம் கைப்பட எழுது படைப்புக்களை இச் சஞ்சிகையில் வெளிவரும் போது,
அதைப் பார்க்கும் இன்பமோ வெகு ஆனந்தம். இவ்வுலகில் இப்படியும் ஒரு மனிதனா என்று
எண்ணத்தோன்றும்.
இப்பணி தொடக்கி இருபத்தைந்து வருடங்கள் கடந்து
விட்டன. தனி மனிதனாய் சலிப்பின்றி, வேலைப்பழுவுடன் ஒருவர் ஈடுபடுவது என்பது கேட்பவர்களுக்கு
ஒரு சிறிய விடயமாகப் படும், ஆனால் அதை நேர் இருந்து பார்ப்பவர்களுக்கே அவர் நிலைமை
புரியும். இது மட்டுமன்றி இவர் ஜெர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் இருந்து செயல்படுகின்றார்.
இவ்விழா வ.சிவராசா அவர்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி. இவ்விழா சிறப்புடன் நடைபெற மனம்
நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
02.05.2015 ஓகுஸ் நற்பணி மன்றம் நடத்துகின்ற பாராட்டு விழா
கோவைக்கவி வேதா இலங்காத்திலகம் அவர்களுக்கு ஓகுஸ் நற் பணிமன்றம் பாராட்டுவிழா
ஒன்றினை நடத்துகின்றது.
வேதா இலங்காத்திலகம் அவர்கள் எழுத்துடன் ஒன்றிப்போனவர். அவர் எழுதாத நாள்
இல்லை என்றே கூறிவிடலாம். இதை இணைய உலகம் அறியாமல் இல்லை. தனக்கென ஒரு இணையத்தளம்
அமைத்து தம் எண்ணங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். நூல்கள் பல வெளியிட்டதுடன்,
பல இணையத் தளங்களுக்கு தன் படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றார். இவர் காணும்
பொருளெல்லாம் இவர் கவிதைக்குப் பொருளாகும்.
வாழும்போதே வாழ்த்தும் பண்புள்ள ஓகுஸ் டென்மார்க் நற்பணிமன்றம், தமிழோடு வாழும் இவருக்கு
பாராட்டு விழா ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்து இன்றைய நாள் விழா எடுக்கிறது. பண்பட்ட தமிழுடன் படைப்புக்களைப் படைக்கும் வேதா
இலங்காத்திலகம் அவர்கள் மேலும் மேலும் பல படைப்புக்களைத் தந்து புகழ் உச்சத்தை
அடைய வேண்டும் என அவரை மனதார வாழ்த்துகின்றேன்.
03.05.2015 நீர்கொழும்பு விஜயரெட்ணம் பழைய மாணவர்கள் ஒன்று
கூடல்
கல்வி கற்ற இடம் கல்விக்
கோயிலாகும். இக்கோயிலுக்கு ஆராதனை செய்யும் நோக்குடனும், கூடிக் குதூகலித்த
நட்புகள் குடும்பம் கண்ட போது, குடும்பக் கடமைகளில் நாட்டம் கொண்டு நட்புகளை
மறந்திருக்கும் வேளைகளில், இவ்வொன்றுகூடல் இன்பமும் பணியும் கலந்தே அமைய இன்றைய
நாள் நடைபெற இருக்கின்றது. இப்பாடசாலை முன்னாள் ஆசிரியர் என்ற வகையிலும் இம்மாணவர்களுடன்
என்றும் தொடர்பில் இருப்பவர் என்னும் மகிழ்விலும். இந்நிகழ்வின் சிறப்புக்குப்
பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்
ஏற்றி விட்ட ஏணியை ஏற்றிப் பார்க்க நினைக்கும் இம்மாணவர்களை மனதார வாழ்த்தி,
இந்நிகழ்ச்சி மேலும் உச்சம் தொடட்டும் என்றே என் ஆசிகளை வழங்குகின்றேன்.
பாராட்டு விழாக்களும் பண்பான எண்ணங்களும் .........
பதிலளிநீக்குஅனைவருக்கும் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
இந்தப்பதிவினிலேயே தங்களின் பண்பான எண்ணங்களை நன்கு அறிய முடிகிறது.
பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஎமது வாழ்த்துகளும்.
கோவைக்கவி வேதா இலங்காத்திலகம் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி கௌசி- (கௌரி. சிவபாலன்)
பதிலளிநீக்குஇந்த நன்றியை என் சார்பாகவும்
ஓகுஸ் தமிழர் ஒன்றியம் சார்பாகவும் கூறுகிறேன்.
பாராட்டு விழாக்களும் பண்பான எண்ணங்களும் தொடரவேண்டும்.
பதிலளிநீக்குபாராட்டுப் பெறுவோருக்கு எனது வாழ்த்துகள்.
வேதா இலங்காத்திலகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமிக்க மகிழ்வளிக்கும் செய்தி
பதிலளிநீக்குஅவரது பணியும் பாராட்டுக்களும் தொடர
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
இலங்கைத் தமிழர்கள் எங்கிருந்தாலும் ஒற்றுமையுடனும் நட்புடனும் இருக்கின்றனர். அண்மையில் விஜய் டி.வி. நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசாக வென்றஒரு கேஜி தங்கத்தையும் ஆதரவற்றகுழந்தைகள் இல்லங்களுக்கு வழங்கிய கனடா வாழ் சிறுமி ஜெசிகா ஜூட் -மற்றும் அவர் பெற்றோரின் செயலும் நினைவுக்கு வருகிறது/ பண்பான எண்ணக்களுக்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு