• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 17 மே, 2015

    புலம்பெயர்வில் இளைஞர்கள் புரியும் சாதனைகள்

                           
                         

    அண்மையில் என் மனதை வருடிய நிகழ்வொன்றை உங்கள் முன்னிலையில் கொண்டு வருகின்றேன். 

    காலம் தமிழனை திசை மாறி, கண்டம் மாறி ஓடச் செய்தாலும் தமிழன், செல்லும் இடமெங்கும் தன் திறமையை வெளிக் கொண்டுவந்து தலைநிமிர்ந்து நிற்பான். இதற்கு எடுத்துக்கட்டாக புலம்பெயர்ந்த இளஞ்சந்ததியினர் உலகளாவிய ரீதியிலே புரிகின்ற சாதனைகள் சிறப்பாக அமைகின்றன. 

                 ஜேர்மனிய Geldern நகரிலே நடைபெற்ற பாடசாலை மாணவர்கள் நடத்திய நிகழ்வொன்று என் நெஞ்சத்தை நெருடியது. சிறந்த நெறியாள்கையில் Geldern பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்திய ஒரு நாடகம். இந்நாடகத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராம் பரமானந்தன் என்னும் இளைஞன், தன் குரலாலும் நடிப்பாலும் பலரைக் கவர்ந்திழுத்தார். முற்று முழுதாக ஜேர்மனிய கலாச்சார நாட்டிய நாடக அமைப்பில் பாடல்களாலும் வசனங்களாலும் அமைந்திருந்த இந்த நாடகத்திற்கான பயிற்சி சுமார் 1 வருடமாக  நடைபெற்றது. குரல் பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, ஆடை அலங்காரம் என இதற்கான தயாரிப்பு அற்புதமாக நடைபெற்றது. 40 மாணவர்களில் இப்பாத்திரத்திற்காக ராம் பரமானந்தன் தெரிவுசெய்யப்பட்டிருந்தார் என்பது பெருமைக்குரிய விடயமாகும். இவருக்கு மாத்திரம் 11 பேர் ஆடை, அலங்காரம், ஒலி,ஒளி போன்ற அனைத்து விடயங்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தமை சிறப்பு வாய்ந்ததாக அமைகின்றது. இவர் கர்நாடக இசையையும் கற்று டிப்ளோமா தேர்வில் வெற்றியீட்டியுள்ளார். ஆங்கிலப்பாடல்கள், தமிழ் சினிமாப்பாடல்கள் பாடுவதிலும், நடனங்கள் ஆடுவதிலும், கவிதை எழுதுவதிலும் திறமைசாலி என்பது குறிப்பிடத்தக்கது. 

                    300 ஆயிரம் ஒயிரோக்கள் செலவில் பிரமாண்டமான தயாரிப்பில் வெளியான இந்நாடகத்திற்கு 140 பேர் பணியாற்றியிருந்தார்கள். மேடை ஒழுங்கு, நடிப்பு, நடனம், ஒப்பனை, ஆடை அலங்காரம், ஒலி, ஒளி அமைப்பென  நிகழ்வு களைகட்டியிருந்தது. 7 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்நாடகத்தில் பங்குபற்றிய அனைத்து நடிகர்களும் தமது நடிப்பை மாத்திரமன்றி பாடல்களையும் சிறிதும் களைப்பின்றி அற்புதமாகப் பாடியிருந்தனர். 
                                                    
    ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் முன் மனிதருக்கு மேல் அமானுஸ்ய சக்திகள் வாழ்ந்த காலத்தில் ஒரு அரக்கன் அராஜகம் செய்துவருகின்றான். இவ் அராஜகத்தைத் தாங்கமுடியாத 3 தேவதைகள் தமக்குள்ளே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து அவ் அரக்கனை அழிக்க ஒன்றிணைகின்றனர். இதில் ஒருவர் நெருப்பின் சிவப்பையும், மற்றையவர் பனிபோல் வெள்ளையையும், மூன்றாவது தேவதை கறுப்பு நிறமாகவும் கொண்டவர். இதனால் அவனைக் கொல்ல முடியாத தேவதைகள், அவனை ஒரு மந்திரக்கண்ணாடிக்குள் அடைத்து ஒரு அழகிய மகாராணியின் அரண்மனைக்குள் வைக்கின்றனர். அரக்கனோ மகாராணியின் தூய்மையான மனதை கெட்ட மந்திரங்களால் கறுக்கச் செய்து கொடூரமான இராட்சசி ஆக்குகின்றான். இவரோ அந்நாட்டு பலம் வாய்ந்த மன்னனை இரண்டாம் தாரமாக  திருமணம் செய்கின்றபோது அவரின் அழகான மகளுக்கு சித்தியாகின்றார். மன்னன் இறந்த பின் மன்னன் மகளை மகாராணி சித்திரவதைகள் செய்வதைக் கண்ட தேவதைகள் அவர்களின் நிறங்களுக்கேற்ப கறுத்தமுடி, வெள்ளைமேனி, சிவந்த உதடு வழங்கி மந்திர சக்திகளையும் கொடுக்கின்றனர். அதைக் கண்ட அரக்கன் தன் விடுதலைக்கான வழியை சிறுமியிடம் காண்கின்றான். அவளின் 18 ஆவது பிறந்ததினத்தில் அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் நோக்குடன் சுயம்பரம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றாள். கண்ணாடிக்குள் இருக்கும் அரக்கன், மகாராணியிடம் இளம் சிறுமி உன்னை விட அழகி எனக் கூறி மகாராணிக்குக் கொலைவெறி ஊட்டுகின்றான்.
                                     
            இதிலிருந்து தப்பி காட்டுக்குள் தப்பி ஓடிய இளவரசி ஒரு நாடகக் குழுவிடம் அடைக்கலம் பெறுகின்றாள்.  இந்நாடகத்தில் உண்மை இளவரசன் நடிக்கின்றான். இவ் இளவரசியும் இதில் இணைந்து கொண்டு நடிக்கும் போது அவளில் நாட்டம் கொண்டு இவ்விளவரசன் இவ் இளவரசியை மணக்கின்றான். அதே ஒப்பனையுடன் அரண்மனைக்கு திரும்பி வந்த இளவரசி தன் முகமூடியைக் கழட்டி மகாராணியை வெற்றி கொள்கின்றாள். அப்போது கண்ணாடியிலுள்ள மந்திரம் மறைய விடுதலை பெற்ற அரக்கன் விடுதலை பெற்று வெளியே வருகின்றான்(ராம்). அரக்கன் வெளியே வர நாடகக்குழுவினர் அனைவரும் இறக்கின்றனர். இளவரசி அரக்கனை வென்று மின்சி பாடுகின்றாள்.  இதுவே இந்நாடகத்தின் மூலக் கதையாக அமைந்திருந்தது. இடையிடையே பாடல்கள் நாடகத்திற்கு மெருகேற்றியது. கதாபாத்திரங்கள் தமது குரலாலே மேடையில் பாடி நடித்தது அற்புதமான விடையமாக இருந்தது.  பார்வையாளர்களாக வந்திருந்தவர்களில் oberhausen  நகரைச் சேர்ந்தவர்கள் அந்நகரில் இந்நாடகத்தை நடத்தும்படி கேட்டதற்கமைய இந்நாடகம் அங்கும் மேடையேறுகின்றது. 

                        மேலைத்தேய கற்றல், நடனங்கள், பாடல்கள், நடிப்பு, தொழில் என்று பலபக்கங்களில் தம் திறமைகளை வெளிக்காட்டிவரும் எமது இளந்தலைமுறையினர், எம் பெயர் சொல்ல வரும்காலங்களில் தலைநிமிர்ந்து நிற்பார்கள் என்பதற்கு ராம் பரமானந்தன் நடிப்பில்  காட்டிய நுணுக்கங்களும், ஜேர்மனி மொழியில் பாடிய பாடல்களின் இனிமையும் எடுத்துக்கட்டாக அமைகின்றன. அத்துடன் இந்நிகழ்வுக்கு வந்திருந்த Berlin , Hamburg இசைக்கல்லூரி ஆசிரியர்கள், இவரை தமது இசைக்கல்லூரியில் கல்வி கற்கும் படி பரிந்துள்ளனர். பெற்றோர்க்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்த ராம் பரமானந்தன் பாராட்டப்பட வேண்டியவர். இவர் மேலும் மேலும் வாழும் நாட்டு மக்களுடன் இணைந்து பல மேடைகள் ஏறவேண்டும் என்று தமிழ் இனத்தின் சார்பாக வாழ்த்துகின்றேன்.

    இந் நாடகம் மீண்டும் ஜேர்மனிய ஒபர்கௌசன் நகரில் 10.06.2015 அன்று மேடையேறுகின்றது.

    Theater Oberhausen
    Will-Quadflieg-Platz 1
    46045 Oberhausen


    Minsi பாடலுக்கு ஒரு உதாரணம் 

     https://youtu.be/QmT7XeXNrDo          

    10 கருத்துகள்:

    1. தங்களின் நாடக விமர்சனம் வெகு அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள்.

      //காலம் தமிழனை திசை மாறி, கண்டம் மாறி ஓடச் செய்தாலும் தமிழன், செல்லும் இடமெங்கும் தன் திறமையை வெளிக் கொண்டுவந்து தலைநிமிர்ந்து நிற்பான்.//

      இதனைக்கேட்கவே மிகவும் பெருமையாக உள்ளது.

      //இந்நாடகத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராம் பரமானந்தன் என்னும் இளைஞன், தன் குரலாலும் நடிப்பாலும் பலரைக் கவர்ந்திழுத்தார்.//

      அவருக்கும் நம் வாழ்த்துகள்.

      பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றிகள்.

      பதிலளிநீக்கு
    2. பெயரில்லா17 மே, 2015 அன்று 10:42 AM

      சம்பந்தப் பட்ட அனைவருக்கும், ராம் பரமானந்தன்,
      இவர் தம் பெற்றோர் அனைவருக்கும், தங்களிற்கும்
      அன்பான வாழ்த்துகள்.
      இனையோர் மேற்குலகை வெல்லட்டும்!

      பதிலளிநீக்கு
    3. வணக்கம்
      நிகழ்ச்சியில் பங்குபற்றி அனைவருக்கும் பாராட்டுக்கள்.விமர்சனத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      பதிலளிநீக்கு
    4. விமர்சனம் அருமை....
      அனைவருக்கும் வாழ்த்துகள்....

      பதிலளிநீக்கு
    5. நாடகச் சுருக்கம்
      படைப்பாளிகள் முயற்சி
      தாங்கள் வெளிப்படுத்திய விதம்
      சிறந்த பகிர்வு
      தொடருங்கள்

      பதிலளிநீக்கு
    6. அருமை அருமை
      அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரியாரே

      பதிலளிநீக்கு
    7. ராம் பரமானந்தனுக்கும் அவரது குழுவினருக்கும் மேற்படி நிகழ்ச்சியை இவ்வளவு பொருட்செலவில் நடத்திக்கொண்டிருக்கும் அமைப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ் உணர்வு வெளிப்பாட்டிற்கு ஈடு இணையே இல்லை என்பேன்..

      பதிலளிநீக்கு
    8. இப்படித்தான் ஆழிப்பேரலை தாக்குதலினால் உண்டான பேரழிவில் இருந்து தர்க்கத்துக் கொள்ள உலகம் முழுவதும் தமிழ்கள் கடந்த பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சென்றவர்கள் பழந்தமிழரின் அறிய கலைகளை உலகம் முழுவதும் சென்று சேர்த்து விட்டு தமிழர்களின் கலை என அதை பதிவு செய்ய மறந்தான் . தமிழர்கள் தமிழர்களின் கலைகளை உலகிற்கு பதிவு செய்வோம் சாதித்த இளம் தமிழனை வாழ்த்தி மகிழ்வோம்.

      பதிலளிநீக்கு
    9. http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_26.html/பார்க்கவும்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...