பஞ்சுப்பொதி யுடைத்து பால்வெளி வீதிநின்று
பாருலகு காணவென்று பறந்து வந்த பனிக்குழாம்கள்
விண்ணெங்கும் பரந்து வீதியெங்கும் படுக்கை போட்டு
வீடுகளின் கூரைகளில் ஆடைகளாய் அலங்கரித்து
விருட்சங்களின் மேனிகளை வெள்ளாடையாய்ப் போர்த்தி
இலையிழந்த கிளைகளிலே இன்பமாய் அமர்ந்திருக்கும்
நிலையில்லா அழகை ரசிப்பதற்கு ஆயிரங் கண்கள் போதாது
பூமியிலே பிறப்பெடுத்த பச்சைக் குழந்தையென
பாவங்கள் படியாத பரிசுத்த வடிவு கொண்டு
பறந்து வரும் பனிக்குழாம்கள் வீதிக்கு வந்தவுடன்
சகதியும் சேறுமாய் சாக்கடை அசுத்தமாய்
உருமாறி உருக்குலைந்து அருவருக்கும் தோற்றமாய்
உருமாறும் தோற்றமாம்போல் மானுட வாழ்க்கையும்
உருவாகும் போது உன்னதமாய் மாசுமறுவற்றிருக்கும்
பொல்லாத பூமியிலே பொன்னெனப் பிறந்தவுடல்
பூமிக்கு விலக்காகி வாழ்வுக்கு வஞ்சனையாகி
பொல்லாங்கு வாழ்க்கையிலே புகழுக்காய் பொய்யுரைத்து
நிலையில்லா வாழ்வையெண்ணி பேராசை மிகக்கொண்டு
முறையற்ற செயல்களினால் குறையுற்ற பணிசெய்து
அடுத்தவரை ஏமாற்றி அவருழைப்பில் குளிர்காயும்
மானிடப் பிறப்பும் பனியழகுபோல் மாறிவிடும்
மிகவும் அருமையான ஆக்கம். படிக்கும் போதே பனித்துளி மேனியில் பட்டதுபோல என்னை சிலிர்க்க வைத்தது. :)
பதிலளிநீக்கு//அடுத்தவரை ஏமாற்றி அவருழைப்பில் குளிர்காயும்
மானிடப் பிறப்பும் பனியழகுபோல் மாறிவிடும்.//
அருமை. மிக அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அருமையான வரிகள் சகோ பாராட்டுகள்.
பதிலளிநீக்குஎமது ஜெர்மனி பதிவு காணவும்.
மாறும்... மாற வேண்டும்...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஉண்மையான வரிகள்... நன்றாக உள்ளது இரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: காதலும் காவியம்படைக்கட்டும்: என்பக்கம் கவிதையாக வாருங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Super teacher. சந்தம் எல்லாம் நல்லாயிருக்கு.நிலை மாறும் பனித்துளியை மனிதப்பிறப்போடு ஒப்பிட்ட விதம் அருமை. Finishing is as always in your own style.
பதிலளிநீக்கு///முறையற்ற செயல்களினால் குறையுற்ற பணிசெய்து
பதிலளிநீக்குஅடுத்தவரை ஏமாற்றி அவருழைப்பில் குளிர்காயும்///
நன்று சொன்னீர் சகோதரியாரே
இதுபோல் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்